Sunday, 8 February 2015

தமிழன் ஒரு ஏமாளி

தமிழன் ஒரு ஏமாளிதமிழன் ஒரு ஏமாளி


#உங்களுக்கெல்லாம் தெரியுமா நண்பர்களே நாம் பயன்படுத்தும் சிம் கார்டில் இருந்து, ரீசார்ச் கூப்பன் வரையில் 
தமிழ்நாட்டில் தான் அதிகவிலையில் விற்க்கிறார்கள். BSNL, AIRTEL, AIRCEL, VODOFONE, IDEA, DOCOMO இப்படி அனைத்து
#Reacharge coupens, Rate Cutter, Booster Pack என அனைத்துமே தமிழகத்தில் தான் அதிகவிலை.

எடுத்துகாட்டாக: கர்நாடகா & கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் 30-ரூபாயில் இருந்து Full Talk time.
ஒரு மாததிற்கு Rate Cutter 25-ரூபாயில் இருந்து ஆரம்பிகிறது தமிழ்நாட்டில் ரேட்கட்டர் ஒரு மாதத்திற்க்கு 60-ரூபாக்கு மேல் தான்.
இந்த மொள்ளாமாரி தனத்தை அனைத்து நட்வொர்க் கம்பெனிகளும் செய்கிறது.

#பாரத ஸ்டேட் பேங்க் SBI (State Bank Of India)
இதன் மாநிலம் சார்ந்த கிளைகள் அந்ததந்த மாநிலத்தின் பெயரிலேயே இருக்கிறது உதாரணம் இதோ.
#SBM (State Bank Of Mysore)
#SBH (State Bank Of Hydrabad)
#SBT (State Bank Of Tiravangore)
#SBP (State Bank Of Punjab)
ஏன் State Bank Of Tamilnadu இல்லை. 

இதில் மிகவும் கொடுமை என்னவென்றால்.
மேலே கூறிய அனைத்து மாநிலப் பெயர் கொண்ட வங்கிகளுக்கும் தமிழகத்தில் கிளைகள் இருக்கிறது.

#கெயில் நிறுவனம் ஆந்திராவில் இருந்து கர்நாடகவிற்கு கேஸ் (Gas) எடுத்துச் செல்ல தமிழக விவசாய நிலங்களின் வழியாக எடுத்து செல்கிறது.
இதனால் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகளின் விளைச்சல் நிலம் வீணடிக்கப்பட்டுள்ளது.

#விவசாயிகள் நீதிமன்றத்தில் முறையிட்டதற்கு???

#கேஸ் குழாய் பதிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று தீர்ப்பு வழங்கி பணமுதலாளிகளை காப்பாற்றி இருக்கிறது.

#இதே கெயில் நிறுவனம் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் விவசாயிகளின் மிரட்டலுக்கு பணிந்து “தேசியநெடுஞ்சாலைகளின் ஓரமாக குழாய்களை பதித்து செல்கிறது.

#சென்னை மாநகரின் காவல் ஆணையர் (City Commisioner) கேரளத்தை சேர்ந்த ஜார்ஜ் அவர்கள்.

#கேரளாவில் இப்படி ஒரு தமிழனை உயர்பதவிகளில் வைப்பார்களா????

இந்த கட்டூரையின் மூலம் நான் தெளிவு படுத்த விரும்புவது.
தமிழர்கள் மற்ற மாநில மக்களுக்கு எதிரிகள் அல்ல ஆனால் மற்ற மாநிலங்கள் எங்களை சமமாக மதிப்பது இல்லை என்பதே உண்மை.
மற்ற மொழிபேசும் மாநில நண்பர்களை நாங்கள் கேட்டுகொளவது ஒன்றுதான். தமிழன் என்பதை மறந்து மேலே கூறியதை மனசாட்சியுடன் கொஞ்சம் படித்து உணர்ந்து பாருங்கள்.

எங்களின் வலி உங்களுக்கும் புரியும்...
மற்ற மாநிலத்தவருக்கு இது சாதாரணம்..
ஆனால் தமிழனுக்கோ சதா...ரணம்

சமூகம் அரசியல் மீதான என் குரல் பதிவுகளின் வழியாக ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...