Thursday 12 February 2015

MAYA DIGI MEDIA: தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்ட...

MAYA DIGI MEDIA: தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்ட...: தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்        கூடன்குளம் அணு மின் நிலையம் தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலைய...

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு. பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது, சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது.

இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.

அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

மற்ற நாடுகளின் முதல் எண்கள்

00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு. பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது, சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது.
இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.
அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .
மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

Wednesday 11 February 2015

தமிழ்நாடு குறித்த விபரங்களின் இணைப்புகள்

 தமிழ்நாடு குறித்த விபரங்களின் இணைப்புகள்

1தமிழ்நாடு மாநில குறியீடுகள்
2தமிழ்நாடு அடிப்படை தகவல்கள்
3ஆறுகளும் மாவட்டங்களும்
4தமிழக சபாநாயகர்கள்
5தமிழக முதல்வர்கள்
6மலைகளும் மாவட்டங்களும்
7தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்
8உலகத்தமிழ் மாநாடுகள்
9விளையாட்டு மைதானங்கள்-தேசிய நெடுஞ்சாலைகள்
10தமிழக தொழில் நிறுவனங்கள்
11பாரதரத்னா-நோபல் பரிசு பெற்றவர்கள்
12தமிழகத்தில் அமைந்துள்ள நிறுவனங்கள்
13முக்கிய பத்திரிக்கைகள்
14தமிழக அரசர்களின் சிறப்புப்பெயர்கள்
15மின் உற்பத்தி நிலையங்கள்
16தமிழகத்தின் பெருமைகள்
17தமிழக பல்கலைக்கழகங்கள்
18தமிழகத்தில் நடந்த போர்கள்
19கோயில்களும் கட்டிய அரசர்களும்
20தோன்றிய சங்கங்களும் கட்சிகளும்
21தமிழகத்தின் சிறப்புகள்
22தமிழகத்தின் முதன்மைகள்
23தமிழகத்தின் சிறப்பம்சங்கள்
24தமிழகத்தின் ஏரிகள்
25தமிழகத்தின் நீர்வீழ்ச்சிகள்
26தமிழகத்தின் கோட்டைகள்
27மண் வகைகள்-கனிம வகைகள்
28தமிழக புராதனச் சின்னங்கள்,மலைவாழிடங்கள்,கணவாய்கள்
29தமிழகத்தின் இயற்கை அமைப்பு
30தமிழகத்தின் மக்கள் தொகை 2011

மாநிலக் குறியீடுகள்

மாநிலக் குறியீடுகள்

  
   
                 தமிழ்நாடு மாநிலக் குறியீடுகள்

மாநிலச் சின்னம்           - திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
(இது 108 வைணவ திருத்த தலங்களில் ஒன்றாகும் .1949 ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.தென்னிந்தியாவின் உயர்ந்த கோபுரங்களில் ஒன்று)
மாநில விலங்கு             - நீலகிரி வரையாடு
(மேற்குத்தொடர்சி மலைகளில் சொற்ப எண்ணிக்கையில் வாழ்கிறது)
மாநில மலர்                     -செங்காந்தள் அல்லது கார்த்திகைப்பூ
மாநில பறவை               -மரகதப் புறா
மாநில மரம்                     -பனை மரம்
மாநில விளையாட்டு - கபடி
மாநில பாடல்                - தமிழ்த்தாய் வாழ்த்து
(மனோமணீயம் சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்டது)

தமிழ்நாடு அடிப்படை தகவல்கள்


தமிழ்நாடு அடிப்படை தகவல்கள்

            
தமிழ்நாடு-அடிப்படை தகவல்கள்

தலைநகரம்       சென்னை
மொத்தப் பரப்பளவு1,30,058 ச.கி.மீ
சராசரி மழையளவு958.5 மி.மீ
மக்கள் தொகை7,21,38,958
ஆண்கள்            3,61,58,871
பெண்கள்            3,59,80,087
நகர மக்கள் தொகை3,495 கோடி
கிராம மக்கள் தொகை3,719 கோடி
மக்கள் நெருக்கம்555/  1 ச.கி.மீ
ஆண் பெண் விகிதம்995/1000
எழுத்தறிவு பெற்றவர்5,24,13,116(80.33%)
ஆண்கள்                            2,83,14,595(86.81%)
பெண்கள்           2,40,98,521(73.86%)
மாவட்டங்கள்     32
தாலுகாக்கள்220
கிராமங்கள்15,243
நகரங்கள்1,097
நகராட்சிகள்148
மாநகராட்சிகள்10
சட்டசபை235(234+1)
லோக் சபை39
ராஜ்ய சபை18
மாநில விலங்குவரையாடு(நீலகிரி)
மாநிலப்பறவைமரகதப் புறா
மாநில மரம்பனை
மாநில மலர்செங்காந்தள்
மாநில நடனம்பரத நாட்டியம்
மாநில விளையாட்டுகபடி

தமிழக ஆறுகளும் ஓடும் மாவட்டங்களும்


தமிழக ஆறுகளும் ஓடும் மாவட்டங்களும்


.                       தமிழக ஆறுகளும் ஓடும் மாவட்டங்களும்
ஆறுகள்மாவட்டங்கள்
கூவம்,அடையாறுசென்னை
கூவம்,ஆரணியாறு,கொற்றலையாறுதிருவள்ளூர்
பாலாறு,அடையாறு,செய்யாறுகாஞ்சீபுரம்
தென்பெண்ணை,செய்யாறுதிருவண்ணாமலை
பாலாறு,பொன்னியாறுவேலூர்
கோமுகி ஆறு,பெண்ணாறுவிழுப்புரம்
தென் பெண்ணை,கெடில ஆறுகடலூர்
வெண்ணாறு,காவிரி,வெட்டாறுநாகப்பட்டினம்
காவிரி,குடமுருட்டி,பாமணியாறுதிருவாரூர்
காவிரி,குடமுருட்டி,பாமணியாறு,கொள்ளிடம்தஞ்சாவூர்
கொள்ளிடம்பெரம்பலூர்
காவிரி,கொள்ளிடம்திருச்சிராப்பள்ளி
காவிரி,நொய்யல்,உப்பாறுநாமக்கல்
காவிரி,வசிட்டா நதிசேலம்
காவிரி,தென்பெண்ணை,தொப்பையாறுதருமபுரி
தென்பெண்ணை,தொப்பையாறுகிருஷ்ணகிரி
காவிரி,நொய்யல்,அமராவதி,பவானிஈரோடு
அமராவதி,சிறுவாணிகோயம்புத்தூர்
அமராவதி,நொய்யல்கரூர்
மருதா ஆறு,சண்முகா ஆறுதிண்டுக்கல்
வைகை,பெரியாறுமதுரை
வைகை,பெரியாறு,சுருளியாறு,மஞ்சளாறுதேனி
கௌசிக ஆறு,குண்டாறு,வைப்பாறு,அர்ஜூனா ஆறுவிருது நகர்
மணிமுத்தாறு,தாமிரபரணி,கொடுமுடியாறுதிருநெல்வேலி
கோதையாறு,பழையாறுகன்னியாகுமரி
தாமிரபரணி,மணிமுத்தாறுதூத்துக்குடி

தமிழக சபாநாயகர்களின் பட்டியல்


தமிழக சபாநாயகர்களின் பட்டியல்

       தமிழ் நாட்டின் சபாநாயகர்கள்

என்.கோபால மேனன்1952-1957
கிருஷ்ணாராவ்1957-1962
எஸ்.செல்லப்பாண்டியன்1962-1969
ஏஸ்.பி.ஆதித்யன்1967-1969
புலவர்.க.கோவிந்தன்1969-1972
கே.ஏ.மதியழகன்1972-1976
முனு ஆதி1977-1980
க.இராசாராம்1980-1985
பி.எச்.பாண்டியன்1985-1988
மு.தமிழ்க்குடிமகன்1989-1991
சேடப்பட்டி முத்தையா1991-1996
பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்1996-2001
காளிமுத்து2001-2006
ஆவுடையப்பன்2006-2011
ஜெயக்குமார்2011 முதல்

தமிழக முதல்வர்கள் பட்டியல்


தமிழக முதல்வர்கள் பட்டியல்


                                        தமிழக முதல்வர்கள் பட்டியல் 


அ.சுப்புராயுலு செட்டியார்1920-1921
பனகல் ராஜா1921-1926
டாக்டர்.பி.சுப்புராயன்1926-1930
பி.முனுசாமி நாயுடு1930-1932
பொப்பிலி ராஜா1932-1937
பி.டி.இராஜன்1936(ஆகஸ்ட்)
பொப்பிலி ராஜா1937(ஏப்ரல்)
வெங்கட ரெட்டி நாயுடு1937
சி.ராஜகோபாலாச்சாரி
1937-1939
டி.பிரகாசம்1946-1947
ஓ.பி.ராமசாமி செட்டியார்1947-1949
பி.எஸ்.குமாரசாமி ராஜா1949-1952
சி.ராஜாகோபாலாச்சாரி1952-1954
கு.காமராஜர்
1954-1963
எம்.பக்தவச்சலம்1963-1967
சி.என்.அண்ணாத்துரை
1967-1969
மு.கருணாநிதி
1969-1976
எம்.ஜி.ராமச்சந்திரன்
1977-1987
ஜானகி ராமச்சந்திரன்1988(ஜனவரி)
மு.கருணாநிதி1989-1991
ஜெ.ஜெயலலிதா
1991-1996
மு.கருணாநிதி1996-2001
ஜெ.ஜெயலலிதா2001 (செப்டம்பர் வரை)
ஓ.பன்னீர் செல்வம்2002 மார்ச் 23 வரை
ஜெ.ஜெயலலிதா2002-2006
மு.கருணாநிதி2006-2011
ஜெ.ஜெயலலிதா2011 முதல்

தமிழக மலைகளும் அதன் மாவட்டங்களும்

               

             தமிழக மலைகளும் அதன் மாவட்டங்களும்       


மலைகளும் மாவட்டங்களும்


ஜவ்வாது மலைவேலூர்
ஏலகிரிவேலூர்
இரத்தின கிரிவேலூர்
வள்ளி மலைவேலூர்
சென்னிமலைஈரோடு
சிவன் மலைஈரோடு
சாக்குன்றுகள்சேலம்
சேர்வராயன் மலைசேலம்
கஞ்ச மலைசேலம்
கொல்லி மலைநாமக்கல்
பச்சை மலைபெரம்பலூர்
தீர்த்த மலைதர்மபுரி
செஞ்சி மலைவிழுப்புரம்
கல்வராயன் மலைவிழுப்புரம்
பழனி மலைதிண்டுக்கல்
கொடைக்கானல் மலைதிண்டுக்கல்
குற்றால மலைதிருநெல்வேலி
மகேந்திர கிரி மலைதிருநெல்வேலி
அகத்தியர் மலைதிருநெல்வேலி

தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்


தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்



     
        குரூப் 2,குரூப் 4 மர்றும் குரூப் 1 போன்ற தேர்வுகளில் அடிக்கடி தமிழ்நாட்டிலுள்ள சரணாலயங்களைப்பற்றியும் தேசிய பூங்காக்கள் பற்றியும்  வினாக்கள் வருகின்றன.எனவே அவற்றை இனறைய பதிவில் பார்ப்போம்.

தமிழக தேசிய பூங்காக்களும் வன விலங்கு சரணாலயங்களும்

தேசியப் பூங்காகிண்டி,சென்னை
அ.அண்ணா உயிரியல்பூங்காவண்டலூர்
கடல் தேசியப்பூங்காமன்னார் வளைகுடா(தூத்துக்குடி)
இந்திராகாந்தி தேசியப்பூங்காஆனைமலை(கோயம்புத்தூர்
விலங்குகள் சரணாலயம்முதுமலை(நீலகிரி)

முக்கூர்த்தி(நீலகிரி)

களக்காடு(திருநெல்வேலி)

முண்டந்துறை

வல்லநாடு(துத்துக்குடி)
சாம்பல் நிற அணில்திருவில்லிபுத்தூர்
பறவைகள் சரணாலயம் வேடந்தாங்கல்(காஞ்சி புரம்)

கோடியக்கரை(நாகப்பட்டினம்)

பழவேற்காடு(திருவள்ளூர்)

கூந்தன்குளம்(திருநெல்வேலி)

வேட்டங்குடி(சிவகங்கை)

சித்ராங்குடி(இராமநாதபுரம்)

கஞ்சிரங்குளம்(இராமநாதபுரம்

வெள்ளோடு(ஈரோடு)

உதயமார்த்தாண்டம்(திருவாரூர்)

வடுவூர்(திருவாரூர்

உலகத்தமிழ் மாநாடுகள்


உலகத்தமிழ் மாநாடுகள்


www.madhumathi.com


மாநாடுநடந்த இடம்நடந்த ஆண்டு          சிறப்பு
முதல் மாநாடுகோலாலம்பூர்         1966மலேசியாவில் நடந்தது
இரண்டாவது மாநாடுசென்னை          1968முதல்வர் அண்ணா
மூன்றாவது மாநாடுபாரீஸ்          1970முதல்வர் கருணாநிதி
நான்காவது மாநாடுயாழ்ப்பாணம்          1974இலங்கை
ஐந்தாவது மாநாடுமதுரை          1981முதல்வர் எம்.ஜி.ஆர்
ஆறாவது மாநாடுகோலாலம்பூர்          1987
ஏழாவது மாநாடுமொரீசியஸ்          1989இ.பெருங்கடல் தீவு
எட்டாவது மாநாடுதஞ்சாவூர்          1996முதல்வர் ஜெயலலிதா
செம்மொழி மாநாடுகோவை          2010முதல்வர் கருணாநிதி

தமிழக விளையாட்டு மைதானங்களும் தேசிய நெடுஞ்சாலைகளும்


தமிழக விளையாட்டு மைதானங்களும் தேசிய நெடுஞ்சாலைகளும்

www.madhumathi.com

தமிழக தேசிய நெடுஞ்சாலைகள்


NH 4சென்னை முதல் மும்பை வரை
NH 5சென்னை முதல் கொல்கத்தா வரை
NH 7கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை
NH 7Aபாளையங்கோட்டை முதல் தூத்துக்குடி வரை
NH 45சென்னை முதல் திண்டுக்கல்  வரை
NH 45 Extதிண்டுக்கல்முதல் தேனி வரை
NH 47சேலம் முதல் (கொச்சி வழி)கன்னியாகுமரி வரை
NH 49மதுரை முதல் இராமேஸ்வரம் வரை
NH 69நாகப்பட்டினம் முதல் கோயம்புத்தூர் வரை



தமிழக விளையாட்டு மைதானங்கள்



சிதம்பரம் ஸ்டேடியம்சென்னை
ராஜரத்தினம் ஸ்டேடியம்சென்னை
மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம்சென்னை
நேரு உள்விளையாட்டு அரங்கம்சென்னை
எம்.ஜி.ஆர் ஸ்டேடியம்மதுரை
நேரு ஸ்டேடியம்கோயம்புத்தூர்
அண்ணா ஸ்டேடியம்உதகமண்டலம்
நேதாஜி ஸ்டேடியம்வேலூர்
காந்தி ஸ்டேடியம்சேலம்
பாரதி ஸ்டேடியம்நெய்வேலி

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்

                    

             தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்


அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலை

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்ஆண்டு
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC)   1949
தமிழ்நாடு செராமிக்ஸ் நிறுவனம் (TACEL)   1951
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO)   1965
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSI)   1965
தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (SIDCO)   1970
தமிழ்நாடு தொழில் அபிவிருத்திக் கழகம் (SIPCOT)   1971
தமிழ்நாடு உப்பு நிறுவனம் (TASCL)   1975
தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் (TANCEM)   1976
தமிழ்நாடு கனிம நிறுவனம் (TAMIN)   1978
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் (TANMAG)   1978
தமிழ்நாடு தொழில் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம்(TACID)   1992

பாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்


பாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்

         உயர்ந்த இரண்டு விருதுகளான பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு போன்றவற்றைப் பெற்ற தமிழர்களைக் காண்போம். 

பாரத ரத்னா விருது பெற்ற தமிழர்கள் 

 
வருடம்விருது பெற்றவர்கள்
1954சி.இராசகோபாலாச்சாரி
1954எஸ்.இராதாகிருஷ்ணன்
1954சர்.சி.வி.இராமன்
1976கே.காமராஜ்
1988எம்.ஜி.ஆர்
1998அப்துல் கலாம்
1998எம்.எஸ்.சுப்புலட்சுமி
1998சி.சுப்பிரமணியம்

கே.காமராஜ் அவர்களுக்கும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் மறைந்த பிறகே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்.சி.வி.இராமன்
           நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் 


வருடம்பரிசு பெற்றவர்துறை
1930சர்.சி.வி.ராமன்இயற்பியல்
1983எஸ்.சந்திரசேகர்இயற்பியல்
2009வெங்கட் ராமன்,ராமகிருஷ்ணன்வேதியியல்
         
சர்.சி.வி இராமன் அவர்கள் விருது பெற்ற ஆராய்ச்சி இராமன் விளைவு(1888-1975)

               எஸ்.சந்திரசேகர் அவர்கள் விருது பெற்ற ஆராய்ச்சி
சந்திரசேகர் எல்லை(1910-1995)

தமிழகத்தில் அமைந்துள்ள நிறுவனங்கள்


தமிழகத்தில் அமைந்துள்ள நிறுவனங்கள்


தமிழகத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள்


மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அடையாறு,சென்னை
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்சென்னை
காசநோய் ஆராய்ச்சி நிலையம்சென்னை
மத்திய கடல்சார் உயிரின ஆராய்ச்சி நிலையம்சென்னை
மத்திய ஆராய்ச்சிக்கூடம்சென்னை
காடு ஆராய்ச்சி நிறுவனம்கோயம்புத்தூர்
தென்னிந்திய டெக்ஸ்டைல்ஸ்கோயம்புத்தூர்

தமிழகத்தில் அமைந்துள்ள முக்கிய நிறுவனங்கள் 
நெய்வேலி நிலக்கரி கழகம்

நிறுவனங்கள்தொ.இடம்ஆண்டு
ரயில் பெட்டி தொழிற்சாலைபெரம்பூர்(சென்னை)1955
நெய்வேலி லிக்னைட் கழகம்நெய்வேலி1956
இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ்சென்னை1960
பாரத் கனரக தொழிற்சாலைதிருச்சி1960
துப்பாக்கி தொழிற்சாலைதிருச்சி1960
இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்உதக மண்டலம்1960
கனரக வாகன தொழிற்சாலைஆவடி(சென்னை)1961
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைமணலி(சென்னை1965
சென்னை உரத் தொழிற்சாலைசென்னை1966
சேலம் உருக்காலைசேலம1977

தமிழகத்தில் வெளிவந்த முக்கிய பத்திரிக்கைகள்


தமிழகத்தில் வெளிவந்த முக்கிய பத்திரிக்கைகள்


பத்திரிக்கைவெளியிட்டவர்
தேசபக்தன்திரு.வி.க
நவசக்திதிரு.வி.க
பிரபஞ்ச மித்தின்சுப்பிரமணிய சிவா
இந்திய தேசாந்திரிசுப்பிரமணிய சிவா
பாலபாரதிவ.வே.சு.ஐயர்
தமிழ்நாடுவரதராசுலு நாயுடு
இந்தியாகாங்கிரஸ்
இந்தியா(அரசியல்)பாரதியார்
விஜயாபாரதியார்
தினத்தந்திஆதித்தனார்
ஜனசக்தி
ஜீவானந்தம்
சுதந்திரச் சங்குசங்கு கணேசன்
குயில்பாரதிதாசன்
விமோசனம்இராஜாஜி
திராவிட நாடுஅறிஞர் அண்ணா
உதய சூரியன்வெங்கடராயலு நாயுடு
சுயராஜ்ஜியாஇராஜாஜி
திராவிடன்நீதிக்கட்சி
குடியரசுதந்தை பெரியார்
புரட்சிதந்தை பெரியார்
விடுதலைதந்தை பெரியார்
பகுத்தறிவுதந்தை பெரியார்
இந்துஎஸ்.சுப்பிரமணிய ஐயர்
சுதேசமித்திரன்ஜி.சுப்பிரமணிய ஐயர்
கல்கிரா.கிருஷ்ணமூர்த்தி
மணிக்கொடிசீனிவாசன்
முரசொலிகலைஞர் கருணாநிதி

பண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள்


பண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள்

சேரன் செங்குட்டுவன்கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்
உதியஞ்சேரல்பெருஞ்சோற்றுதியன்
நெடுஞ்சேரலாதன்இமயவரம்பன்,ஆதிராஜன்
முதலாம் பராந்தகன்மதுரை கொண்டான்,மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன்
இராஜாதித்யன்யானை மேல் துஞ்சிய சோழன்
இரண்டாம் பராந்தகன்சுந்தரச் சோழன்
முதலாம் இராஜராஜன்மும்முடிச் சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி, இராஜகேசரி
முதலாம் இராஜேந்திரன்கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டித சோழன், உத்தம சோழன்
முதலாம் குலோத்துங்கன்சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்,
இரண்டாம் குலோத்துங்கன்கிருமி கண்ட சோழன்
மூன்றாம் குலோத்துங்கன்சோழ பாண்டியன்
மாறவர்மன் அவனி சூளாமணிமாறவர்மன், சடய வர்மன்
செழியன் சேந்தன்வானவன்
முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்சோழநாடு கொண்டருளிய
முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன்பொன்வேய்ந்த பெருமாள்
முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன்கொல்லம் கொண்ட பாண்டியன்
நெடுஞ்செழியன்ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையானங்கான செருவென்ற
முதலாம் மகேந்திரவர்மன்சித்திரகாரப் புலி,விசித்திர சித்தன், மத்த விலாசன், போத்தரையன், குணபரன், சத்ருமல்லன், புருஷோத்தமன், சேத்தகாரி
முதலாம் நரசிம்மன்வாதாபி கொண்டான்
இரண்டாம் நரசிம்மவர்மன்ராஜ சிம்மன், ஆகமப் பிரியன்
மூன்றாம் நந்தி வர்மன்காவிரி நாடன், சுழல் நந்தி, சுழற்சிங்கன், தெள்ளாறு எறிந்த நந்தி வர்மன்

தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்

தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்      

கூடன்குளம் அணு மின் நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்:-



அனல் மின் நிலையங்கள்


மேட்டூர் அனல் மின்நிலையம்
தூத்துக்குடி அனல் மின்நிலையம் (தூத்துக்குடி மாவட்டம்)

எண்ணூர் அனல் மின்நிலையம்

நெய்வேலி அனல் மின்நிலையம்



அணு மின் நிலையங்கள்


கல்பாக்கம் அணு மின் நிலையம்
கூடங்குளம் அணு மின் நிலையம் (கட்டப்பட்டு வருகிறது).

நீர் மின் நிலையங்கள்
குந்தா நீர் மின்நிலையம்
காடம்பாறை நீர்மின்நிலையம்
மேட்டூர் நீர் மின் நிலையம்
பெரியாறு நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
சுருளியாறு நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
வைகை நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)

கதவணை மின் நிலையங்கள்

குதிரைக்கல் மேடு கதவணை நீர் மின் நிலையம்

காற்றாலை மின்னுற்பத்தி

கயத்தாறு காற்றாலை மின்னுற்பத்தி (திருநெல்வேலி மாவட்டம்)
ஆரல்வாய்மொழி காற்றாலை மின்னுற்பத்தி (கன்னியாகுமரி மாவட்டம்)
தேனி மாவட்டக் காற்றாலை மின்னுற்பத்தி (தேனி மாவட்டம்)
பாலக்காட்டுக் கணவாய்ப் பகுதியில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள்

சூரிய ஒளி மின்நிலையங்கள்

சிவகங்கையில் உள்ள ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்.

ஐயப்பன் குமரேசன்,
பறக்கை செட்டித் தெரு,
கன்னியாகுமரி மாவட்டம்.

தமிழகத்தின் பெருமைகள்


தமிழகத்தின் பெருமைகள்

       

www.madhumathi.com
சென்னை மெரீனா கடற்கரை
                   
                                   சென்னையின் பெருமைகள்

 மெரீனா கடற்கரைசென்னையில் உள்ள இந்த கடற்கரை உலகின் நீளமான இரண்டாவது கடற்கரை.இதன் நீளம் 13 கி.மீ.உலகின் நீளமான கடற்கரை ரியோடி ஜெனீவா கடற்கரை ஆகும்.
வைனுபாப்பு தொலைநோக்கிவேலூர் மாவட்டத்தில் காவனூர் என்ற இடத்தில் உள்ளது .இது ஆசியாவிலேயே மிகப்பெரியது.
 திருவள்ளுவர் சிலைகன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஜனவரி 1, 2000 ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரால் திறக்கப்பட்டது.
கோயம்பேடு பேருந்து நிலையம்சென்னையில் உள்ள இந்த பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியது.இது ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.இதன் சிறப்பு.இப்பேருந்து நிலையம்2003 ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவினால் தொடங்கி வைக்கப்பட்டது.
புழல் மத்திய சிறைச்சாலைதிருவள்ளூர் மாவட்டம் புழலில் கட்டப்பட்டுள்ள இந்த சிறைச்சாலை ஆசியாவிலேயே மிகப்பெரியது.இதன் சிறப்பு ஒரே நேரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை சிறையிலடைக்கலாம்.
திருபுரம்வேலூர் அருகிலுள்ள திருபுரம் என்ற இடத்தில் ரூ.300 கோடி செலவில் தங்கத்தினால் ஆன கோயில் கட்டப்பட்டுள்ளது.இதன் முதல் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 24, 2007 அன்று நடந்தது.தமிழகத்தின் தங்க கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலின் தெய்வம் நாராயினி ஆகும்.

தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள்


              தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள்


        தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களும் அவை தோன்றிய வருடங்களும் இடங்களும் கீழே பட்டியடப்பட்டிருக்கிறது. 

            
                                   தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் 


சென்னை பல்கலைக்கழகம்  சென்னை1857
அண்ணாமலை பல்கலைக்கழகம் பல்கலைக்கழகம்சிதம்பரம்1929
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்மதுரை1966
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்கோயம்புத்தூர்1971
காந்திகிராமம் பல்கலைக்கழகம்திண்டுக்கல்1976
அண்ணா பல்கலைக்கழகம்சென்னை1978
தமிழ் பல்கலைக்கழகம்தஞ்சாவூர்1981
பாரதியார் பல்கலைக்கழகம்கோயம்புத்தூர்1982
பாரதிதாசன் பல்கலைக்கழகம்திருச்சி1982
அன்னை தெர்சா மகளிர் பல்கலைக்கழகம்கொடைக்கானல்1984
ஆழகப்பா பல்கலைக்கழகம்காரைக்குடி1985
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்சென்னை1987
அவினாசிலிங்கம் பெண்கள் மனையியல் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்
1988
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
சென்னை
1989
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்திருநெல்வேலி1996
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்சென்னை1996
பெரியார் பல்கலைக்கழகம்சேலம்1997
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்சென்னை2001
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்வேலூர்

தமிழகத்தில் நடந்த போர்கள்

                

                   தமிழகத்தில் நடந்த போர்கள்


   மிழக வரலாற்றைப் பற்றி படிக்கும்போது முற்காலத்தில் தமிழகத்தில் நடந்த போர்களைப் பற்றி படிப்பது அவசியமாகும்.


                     தமிழகத்தில் நடந்த போர்கள்

திருப்போர்ப்புறம் போர்சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை /சோழமன்னன் கோச்செங்கனான்
தலையாலங்கானம் போர்பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்/சேரமன்னன் இரும்பொறை+சோழமன்னர் பெருநற்கிள்ளி+5 வேளிர், மன்னர்
புள்ளலூர் போர்பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்/சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி
திருப்புறம்பியம் போர்சோழ மன்னன் விஜயாலயன்/இரண்டாம் வரகுண பாண்டியன்

வெள்ளூர் போர்
சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/பாண்டிய மன்னன் மூன்றாம் ராஜசிம்மன்
தக்கோலம் போர்சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன்
காந்தளூர்ச் சாலை போர்ராஜராஜசோழன்/சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மன்
காளர்பட்டி போர்வீரபாண்டிய கட்டபொம்மன்/ஆங்கிலேயர்கள்
அடையாறு போர்ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்
முதல் கர்நாடகப் போர்ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்
இரண்டாம் கர்நாடகப் போர்ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்
வந்தவாசிப் போர்ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்
மூன்றாம் கர்நாடகப் போர்ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்
ஆம்பூர் போர்முசஃபா ஜங்+சந்தா சாகிப்+பிரெஞ்சுக்காரர்கள்

தமிழக கோயில்களும் கட்டிய அரசர்களும்

            

           தமிழக கோயில்களும் கட்டிய அரசர்களும்

தஞ்சை பெரியகோயில்

                        தமிழக கோயில்களும் கட்டிய அரசர்களும் 

மண்டகப்பட்டு மும்மூர்த்தி கோயில்முதலாம் மகேந்திர வர்மன்
சித்தன்ன வாசல் சமணக் கோயில்முதலாம் மகேந்திர வர்மன்
மகாபலிபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள் (ஒற்றைக்கால் ரதங்கள்)முதலாம் நரசிம்ம வர்மன்
மகாபலிபுரம் கடற்கோயில்இரண்டாம் நரசிம்ம வர்மன்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்இரண்டாம் நரசிம்ம வர்மன்
காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயில்இரண்டாம் பரமேசுவர வர்மன்
திருவதிகை சிவன் கோயில்இரண்டாம் பரமேசுவர வர்மன்
கூரம் கேசவ பெருமாள் கோயில்இரண்டாம் நந்திவர்மன்
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்
(தஞ்சை பெரிய கோயில்)

முதலாம் ராஜராஜன்
கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில்(கங்கை கொண்ட சோழபுரம்) முதலாம் ராசேந்திரன்
ஜெயங்கொண்ட சோழீச்சுரம் கோயில்முதலாம் ராஜாதிராஜன்
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்இரண்டாம் ராஜராஜன்
கும்பகோணம் சூரியனார் கோயில்முதலாம் குலோத்துங்கன்
திருமலை நாயக்கர் மஹால்திருமலை நாயக்கர்
புது மண்டபம்திருமலை நாயக்கர்
மதுரை மீனாட்சி கோயில்நாயக்கர்கள்
மதுரை மீனாட்சி கோயில் வடக்கு கோபுரம்திருமலை நாயக்கர்
மங்கம்மாள் சத்திரம்ராணி மங்கம்மாள்

தமிழகத்தில் தோன்றிய சங்கங்களும் கட்சிகளும்


தமிழகத்தில் தோன்றிய சங்கங்களும் கட்சிகளும்

                              தமிழகத்தில் தோன்றிய சங்கங்கள் 


சங்கங்கள்தோன்றிய வருடம் தோற்றுவித்தவர்கள்
இந்து இலக்கிய சங்கம்            1830-------------
சென்னை சுதேசி இயக்கம்            1852லட்சுமி நரசு செட்டி
இந்து முன்னேற்ற மேன்மை            1853சீனிவாசப் பிள்ளை
மத்திய தேசிய முகமதிய சங்கம்            1883-------------
மதராஸ் மகாஜன சபை            1884அனந்தசார்லு ரெங்கைய நாயுடு
சுயாட்சி இயக்கம்            1916அன்னிபெசன்ட் அம்மையார்
நெல்லை தேசாபிமான சங்கம்            1908வ.உ.சிதம்பரனார்
தென்னிந்திய நல உரிமைச் சங்கம்            1916டி.எம்.நாயர்,தியாகராஜ செட்டியார்

     தமிழகத்தில் தோன்றிய அரசியல் கட்சிகள்

கட்சிகள்தோன்றிய ஆண்டுதோற்றுவித்தவர்கள்
நீதிக்கட்சி               1916டி.எம்.நாயர்,தியாகராஜ செட்டியார்
திராவிடர் கழகம்               1944தந்தை பெரியார்
தி.மு.க               1949அறிஞர் அண்ணாத்துரை
அ.இ.அதி.மு.க               1972எம்.ஜி.ஆர்
பா.ம.க               1990டாக்டர் ராமதாஸ்
ம.தி.மு.க               1994வை.கோ
தே.மு.தி.க               2005விஜயகாந்த்

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...