Wednesday 11 February 2015

தமிழகத்தின் பெருமைகள்


தமிழகத்தின் பெருமைகள்

       

www.madhumathi.com
சென்னை மெரீனா கடற்கரை
                   
                                   சென்னையின் பெருமைகள்

 மெரீனா கடற்கரைசென்னையில் உள்ள இந்த கடற்கரை உலகின் நீளமான இரண்டாவது கடற்கரை.இதன் நீளம் 13 கி.மீ.உலகின் நீளமான கடற்கரை ரியோடி ஜெனீவா கடற்கரை ஆகும்.
வைனுபாப்பு தொலைநோக்கிவேலூர் மாவட்டத்தில் காவனூர் என்ற இடத்தில் உள்ளது .இது ஆசியாவிலேயே மிகப்பெரியது.
 திருவள்ளுவர் சிலைகன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஜனவரி 1, 2000 ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரால் திறக்கப்பட்டது.
கோயம்பேடு பேருந்து நிலையம்சென்னையில் உள்ள இந்த பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியது.இது ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.இதன் சிறப்பு.இப்பேருந்து நிலையம்2003 ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவினால் தொடங்கி வைக்கப்பட்டது.
புழல் மத்திய சிறைச்சாலைதிருவள்ளூர் மாவட்டம் புழலில் கட்டப்பட்டுள்ள இந்த சிறைச்சாலை ஆசியாவிலேயே மிகப்பெரியது.இதன் சிறப்பு ஒரே நேரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை சிறையிலடைக்கலாம்.
திருபுரம்வேலூர் அருகிலுள்ள திருபுரம் என்ற இடத்தில் ரூ.300 கோடி செலவில் தங்கத்தினால் ஆன கோயில் கட்டப்பட்டுள்ளது.இதன் முதல் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 24, 2007 அன்று நடந்தது.தமிழகத்தின் தங்க கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலின் தெய்வம் நாராயினி ஆகும்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...