Showing posts with label மனிதஉரிமை. Show all posts
Showing posts with label மனிதஉரிமை. Show all posts

Friday, 11 December 2015

விதைகள் சட்டம் 2004

                                   விதைகள் சட்டம் 2004


விவசாயிகளை பாதுகாக்காது


நாடு முழுதும் பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயிகள் தாங்களே எண்ணற்ற வகையான விதைகளை உற்பத்தி செய்து பாதுகாத்து பராமரித்து பயன்படுத்தி வந்துள்ளனர். சுமார் 4 லட்சம் நெல்வகைகள் உலகின் நீண்ட நெடும் வரலாற்றில் இருந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டாக்டர் ஆர்.எச்.ரிச்சார்யா என்ற நெல் ஆராய்ச்சியாளர் மத்தியப்பிரதேசம், சட்டீ°கர் மாநிலங்களில் மட்டும் சுமார் 20000 வகையான நெல் விதைகளை சேகரித்துள்ளார்.. இன்றும் நமது நாட்டில் 3000 நெல் வகைகள் பயன்பாட்டில் இருப்பதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று பல தானியங்கள், பழங்கள், காய்கறிகள், எண்ணை வித்துக்களின் விதைகளை விவசாயிகள் தங்கள் சொந்த அனுபவத்தில் உற்பத்தி செய்து பயன்படுத்தி வந்துள்ளனர்.


விதைகள், தாவரங்கள் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை பேணவும், விஞ்ஞான ஆய்விற்கு உட்படுத்தவும், விவசாயத் தொழிலாளி, குத்தகை விவசாயி ஆகியோர்களின் அனுப ஞானத்தையும், விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்களையும், இணைக்கவும் அவர்களை நவீன தொழில் நுட்பங்களில் தேர்ந்தவர்களாக ஆக்கவும், மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் ஒரு இசைவான பார்வையும், முரண்படாத கோட்பாடும், அதனை அமுலாக்க சட்டங்களும் அவசியம். ஆங்காங்கு செயல்படும் ஆராய்ச்சி பண்ணைகள் அவசியம். உயிர்க்கரு வங்கிகள், தொழில் நுட்ப வங்கிகள் அவசியம். இவை அனைத்தும் எளிதில் ஏழை விவசாயிகள் அணுகக் கூடிய வகையில் அமைக்கப்படுவது அவசியத்திலும் அவசியம். மத்திய மற்றும் பல மாநில அரசுகளின் பார்வைகள் இப்படி இல்லை. விவசாயத்தை வர்த்தக நோக்கோடும், பெருமுதலாளிகளின் தொழில்களோடும் இணைத்து பணப்புழக்கத்தை பெருக்கும் பார்வையோடும் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே அரசுகள் செயல்படுகின்றன. இப்பொழுது உலகமயக்கொள்கையோடு இணைக்கிற முறையில் சட்டங்களும், அணுகுமுறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தப்பார்வையில் புதிய விதைச்சட்டம் இந்திய அரசால் கொண்டு வரப்பட இருக்கிறது. இச்சட்டம் நமது விவசாயத்தை வளர்க்காது. இதை நம்பி வாழும் விவசாயத் தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகளை வறுமைப் பள்ளத்திலுருந்து மீளவிடாது. அவர்களது உழைப்பின் உபரி முன்னைவிட வேகமாக பறிபோகும். இந்தப்பின்அணியோடு வர இருக்கிற படுபிற்போக்குத்தனமான விதைச்சட்டத்தின் பாதகங்களை ஆராய்வோம்.
இந்திய நாட்டில் 1960ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப் பட்ட பசுமைப் புரட்சியையொட்டி குறுகிய கால - அதிக மகசூல் விதைகளை உற்பத்தி செய்யும் பண்ணைகள் மத்திய - மாநில அரசுகள் மூலம் உருவாக்கப்பட்டன. இதற்னெ 1961ம் ஆண்டு தேசிய விதைகள் கார்ப்பரேஷன் என்பது உருவாக்கப்பட்டது. பின்னர் 1967ம் ஆண்டு உலக வங்கியின் உதவியோடு “தேசிய விதைகள் திட்டம்” (சூயவiடியேட ளுநநனள ஞசடிதநஉவ) என்பது உருவாக்கப்பட்டு, 17 மாநிலங்களில் விதைப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன.
அதுவரை பெரும் பகுதி அரசுத் துறையில் நடைபெற்று வந்த விதை உற்பத்தியில் 1988ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “விதை உற்பத்தி வளர்ச்சியில் புதிய கொள்கை” தனியார் துறையினை ஊக்குவிப்பதாக அமைந்தது. விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கும் வேலையைக் கூட அரசுத்துறை பண்கைள் துவங்கிய காலத்திலிருந்தே ஒழுங்காக செய்யவில்லை. விதைத் தேவையை பூர்த்தி செய்ய எந்த திட்டமும் அதனிடமில்லை. பணக்கார விவசாயிகளுக்கு கிடைக்கும் சலுகையாகவும், ஆளும் கட்சிக்கு அரசியல் விளம்பரமாகவும் அவைகள் இருந்தன. ஏழை விவசாயிகள் சொந்தமாக தயரிக்கும் விதைகளை நம்பியிருக்க நேரிட்டது. இதன் விளைவாக விவசாயிகளிடையே, விதை பரிவர்த்தனை உறவு வலுப்பட்டது. காலப்போக்கில் நிhவாகச் சீர்கேடுகள், ஊழல் ஆய்விற்கு போதுமான நிதி ஒதுக்கீட்டை ஒதுக்காமை, ஆய்வாளர்களை நியமிக்காமை அல்லது ஊக்கம் கொடுக்காமை, இத்தியாதி நடவடிக்கைகளால் அரசே குற்றுயிரும், குலைஉயிருமாக அரசாங்க விதைப்பண்ணை களை ஆக்கிவிட்டது. மறுபக்கம் தரமான விதை தயாரிக்கும் நவீன நுட்பங்கள் ஏழை விவசாயிகளிடம் பரவாததால் விவசாயிகள் தரமான விதையின்றி தவித்தனர். கடன் சுமைக்கும் இது பிரதான காரணமாக ஆனது. தனியார்துறையை நாடி நிற்கத்தள்ளப்பட்டனர். விளம்பர ஏமாற்று தவிர தனியார்துறை வேறு எதையும் செய்யவில்லை. என்றாலும், தங்களது தவிப்பிற்கு “அரசின் திட்டமிட்ட கொள்கையே” என்ற பார்வை விவசாயிகளிடையே பரவாத சூழலில் தனியார் மயக் கொள்கைகளை சந்தடி இல்லாமல் அரசு புகுத்தியது. தானும் விதைகளை தயாரித்து விற்கமுடியும் என்ற பிரமைகளையும் அரசின் நடவடிக்கை வளர்த்தது. பன்னாட்டு கம்பெனிகளை இந்திய விதை வர்த்தகத்தில் அனுமதித்திடவும் உலக வங்கியும் - அமெரிக்காவும் கடன் மற்றும் நிதி உதவியினை இந்திய அரசுக்கு வழங்கின. இக்கொள்கையின் விளைவாக பல பன்னாட்டுக் கம்பெனிகள் - உள்நாட்டுக் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு - விதைகள் உற்பத்தி வர்த்தகம் ஏற்றுமதி - மற்றும் இறக்குமதிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது மான்சாட்டோ, பேயர் உட்பட சுமார் 10 பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் இந்திய விதை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. உள்நாட்டில் சுமார் 400 கம்பெனிகள் விதைகள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. இவைகளில் சுமார் 30 பெரிய நிறுவனங்களாகும். மீதம் உள்ளது சிறிய மற்றும் நடுத்தர வகையை சார்ந்தவை. இவைகளில் அரசுத்துறையில், கூட்டுறவுத்துறையில் 10 நிறுவனங்கள் மட்டும் உள்ளன. ஆகமொத்தத்தில் விதைகள் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் அரசுத்துறையின் பங்கு வெகுவாக குறைத்து பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களின் பங்கு பல மடங்கு உயர்ந்துள்ளன.


என்னதான் லாப வெறிகொண்ட தனியார் நிறுவனங்களின் பகீரத தலையீடு இருந்த போதிலும், தற்போதும் சுமார் 70 சதம் விதைகள் விவசாயிகள் மூலமே உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சிறு,குறு விவசாயிகளின் கைக்கு எட்டாத துhரத்தில் விதைச்சந்தை உள்ளது. இதனால் தரக்குறைவான விதைகளே விவசாயிகள் பெற முடியும் என்ற நிலையும் உள்ளது. இந்த ஊனத்தை இன்றைய நிலையில் அரசு கவனம் செலுத்த வேண்டியது இப்பொழுது நடைமுறையில் இருக்கும், சிறு, குறு விவசாயி களிடையே இருக்கம் விதை பரிவர்த்தன முறைகளை பலப்படுத்தும் முறைகளே, தரமான விதைகளை தயாரிக்கும், நவீன தொழில் நுட்பங்களை, இந்த விவசாயிகள் அறிய வழிவகுத்தல், ஆங்காங்கு அதிக செலவில்லாமல் பெறக்கூடிய ஆலோசனை மையங்கள், விதை பாதுகாப்பு பெட்டகங்கள், குளிர்சாதன வசதிகள், வாகன வசதிகள், சாலை வசதிகள் போன்ற ஏற்பாட்டை வளர விட வேண்டுமே தவிர, பன்னாட்டு நிறுவனங்களின் விதை விற்பனை ஆக்கிரமிப்பல்ல; அதற்கு பாதுகாப்பல்ல, அவர்கள் வந்தாலும், அவர்களளோடு சந்தையில் போட்டி போடக்கூடிய தொழில் நுட்பத் திறனுள்ளவர்களாக விவசாயிகளை ஆக்குவதே விதைச்சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆகமொத்தத்தில் விதைகளை உற்பத்தி செய்வது பாதுகாப்பது, பராமரிப்பது, பயன்படுத்துவது, பரிமாறிக்கொள்வது என்பது சிறு, குறு விவசாயிகள்தத்தளிப்பைத் தவிர்க்க உருவாக்கிக் கொண்ட இயல்பான உரிமையாகும், ஒத்துழைப்பு பண்பாடாகும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவசாயிகளின் இன்று அனுபவித்து வரும் இந்த பாரம்பரியமான தாங்களாக உருவாக்கிக் கொண்டஉரிமைக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தோடு ஒரு மசோதா தயாரரய் இருக்கிறது.


இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் “விதைகள் சட்டம் 2004” என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இம்மசோதா அதே வடிவத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு சட்டமாக்கப்படுமாயின், விவசாயிகளின் மேற்கண்ட பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுவதுடன், இவ்வுரிமைகள் அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்களாக்கப்படும். விதைகள் உற்பத்தி - விநியோகம் அனைத்தும் பன்னாட்டு - உள்நாட்டு நிறுவனங்களின் அதிகார வரம்புக்குட்பட்டவையாக மாற்றப்பட்டு விடும். இந்திய அரசு விரும்பினால் கூட தலையிட முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.


விதைகளை மையமாகக் கொண்டு வேளாண்மை தொடர்பான பல சட்டங்கள் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அமுலில் உள்ளன. விதைகள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் தனியார் சம்பெனிகளின் அதிகரிப்பு காரணமாக விதைகளின் தரத்தையும், உற்பத்தி மற்றும் விநியோகத்தையும் முறைப்படுத்துவதற்கு இத்தகைய சட்டங்கள் அவசியப்பட்டன. இவ்வகையில் நிறைவேற்றப்பட்டதே 1966ம் ஆண்டின் விதைகள் சட்டம். இச்சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டு இன்றைய தேவைக்குப் பொறுத்தமான சட்டமாக மாற்ற வேண்டியது அவசியமானதுதான். ஆனால், மத்திய அரசின் புதிய விதைகள் சட்டம் இதற்கு நேர் எதிரான நோக்கங்கள் கொண்டதாகும்.
காட் பேச்சுவார்த்தை முடிவின் படி மேற்கொள்ளப்பட்ட வேளாண்மை தொடர்பான ஒப்பந்தம் (ஹடிஹ), உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டுப்பாடுகள், அதனைத் தொடர்ந்து இந்திய அரசு செயல்படுத்தி வரும் உலகமய, தாரளமய, தனியார் மயக் கொள்கைகளின் விளைவாக இந்திய நாட்டின் பாரம்பரிய விவசாயத்தில் பன்னாட்டு, உள்நாட்டு பகாசுரக் கம்பெனிகளின் படையெடுப்புகள் அதிகரித்து வருவது அறிந்ததே. விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் வேளாண் வர்த்தகத்தை தங்களது முழுக்கட்டுப் பாட்டில் கொண்டு வர வேண்டுமென்ற கனவை நினைவாக்க, விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகம் என்ற “தண்டு வடத்தைக்” கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே முடியும் என்பதைப் பன்னாட்டுக் கம்பெனிகளும், ஏகாதிபத்திய நாடுகளும் புரிந்து வைத்துள்ளன. இந்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள, இக்கம்பெனிகள் துடியாய் துடித்துக் கொண்டுள்ளன.


வேண்டாத சனியனை விருந்துக்கு அழைத்ததைப்போல் இந்திய அரசு ஏற்றுக்கொண்ட றுகூடீ நிபந்தனைகளின் படி, ஏற்கனவே உருவாக்கப்பட்ட விதைகள் சட்டம் 1996, காப்புரிமைச்சட்டம் உட்பட பல சட்டங்களை அடிப்படையில் மாற்றி இயற்ற வேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தின் அடுத்த கட்டமே மத்திய அரசு சமர்ப்பித்துள்ள புதிய விதைகள் சட்டம் 2004, “விதைத் தொழில் வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கவும் ... விதைகள் ஏற்றுமதி, இறக்குமதிக்கான வழிவகைகளை உருவாக்குவது” சட்டத்தின் நோக்கம் என இந்திய விவசாயத்துறை விளக்கமளித்துள்ளதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.


சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து விதைகளும், மத்திய அரசால் உருவாக்கப்படும், தேசிய பதிவு ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமென இச்சட்டம் கட்டாயப்படுத்துகிறது. விதைகளைப் பதிவு செய்வதற்கு மத்திய அரசால் அமைக்கப்படும் மத்திய விதைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விதைகள் பதிவு அல்லது நிராகரிக்கும் விவகாரத்தில் இக்குழுவின் முடிவே இறுதியானது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விதைகள் அல்லது நடவு பயிர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். பதிவு செய்யப்படாத விதைகள் அல்லது நடவுப் பயிர்களை விற்பனை செய்வது, பயன்படுத்துவது, பாதுகாப்பது, பரிமாறிக்கொள்வது அனைத்தும் முற்றிலுமாகத் தடைசெய்யப்படுகிறது.
சாதாரண விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் விதைகளையோ அல்லது மரக்கன்றுகளையோ மத்திய அரசுக்கு அனுப்பி பதிவு செய்வது சாத்தியமான ஒன்றல்ல. அப்படியானால் அவர்கள் விதைகளை உற்பத்தி செய்வது சட்டவிரோமானதாகும். செல்வாக்குபடைத்த விதைக்கம்பெனிகள் மட்டுமே தங்களது விதைகளை பதிவு செய்யவும், அவ்விதைகளை மார்க்கெட்டில் விற்கவும் முடியும். இதன்படி வராலாற்றுக் காலந்தொட்டு விவசாயிகளுக்கு விதைகள் மீதிருந்த உரிமை தட்டிப்பறிக்கப்பட்டு விட்டது. தங்களுக்குத் தேவையான விதைகளுக்கு விதைக்கம் பெனிகளிடம் கையேந்தி நிற்கும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இனி தனது வயலில் என்ன சாகுபடி செய்வது என தீர்மானிக்கும் உரிமைகளைக் கூட விவசாயிகள் இழந்து விட்டார்கள். விதைகள் வழங்குவதை தங்கள் கையில் வைத்துக் கொண்டுள்ள நிறுவனங்கள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கிராமத்து விவசாயிகளது தலைவிதியை தீர்மானிக்க முடியும். இதனால் உணவு உற்பத்தி குறைந்து பஞ்சமும், பட்டினிச்சாவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
விதைகளுக்கான விலைகளை தீர்மானிப்பது குறித்து சட்டத்தில் எந்த வரைமுறையும் இல்லை.


எனவே, பதிவு செய்துள்ள கம்பெனி விதைகளின் விலைகளை பலமடங்கு உயர்த்தி விவசாயிகளை கொள்ளையடிக்க முடியும். ஏற்கனவே பல்முனை சுரண்டலுக்குள்ளாகியுள்ள விவசாயிகள் இனி விதை கொள்ளைக்கும் பலியாக வேண்டும்.
விதைகளை பதிவு செய்வதில் மத்திய விதைக்குழுவின் முடிவே இறுதியானது என்பது பெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் ஏற்பாடாகும். ஏற்கனவே மான்சாட்டோ கம்பெனி தனது மரபணு விதைகளை பல நாடுகளில் அறிமுகப்படுத்த கோடிக்கணக்கான டாலர் லஞ்சம் கொடுத்த சம்பவங்கள் அம்பலமாகியுள்ளன. சமீபத்தில் இந்தோனேசியா அதிகாரிகளுககு 7 லட்சம் டாலர் கையூட்டு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையூட்டுகள் வழங்குவதும் - கையூட்டுகளைப் பெற்றுக்கொண்டு தரமற்ற விதைகளைப் பதிவு செய்து இந்திய விவசாயத்தை நாசப்படுத்துவதும் இனி அன்றாட நிகழ்ச்சிகளாகிவிடும்.
ஒருமுறை பதிவு செய்யப்பட்ட விதை ஆண்டு பயிராக இருப்பின் 15 ஆண்டுகளுக்கும், நீண்ட காலப் பயிர்களாக இருப்பின் 18 ஆண்டுகளுக்கும் பதிவு பெற்றவர் உரிமம் கொண்டாட முடியும். பதிவு பெற்றவர் மேற்கண்ட பதிவுக்காலத்துக்குப் பின்னர் மீண்டும் இதே காலத்துக்கு மறுபதிவு செய்து கொள்ளவும் முடியும். இக்காலம் முழுவதற்கும் பதிவு பெற்றவரின் உரிமையில் வேறுயாரும் தலையிட முடியாது என திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி விதைகள் பதிவு பெற்றவரின் தனிச் சொத்தாக மாறிவிடும்.
அரசு மற்றும் தனியார் விதை பரிசோதனை மையங்களை விதைகளின் தரத்தை தீர்மானிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் தரம் குறைந்த விதைகளுக்கும் முறையற்ற சான்றிதழ்களை தனியார் பரிசோதனை மையங் களிலிருந்து பெற்றுக் கொள்ள வழி ஏற்படும். விதை நிறுவனங்களே இத்தகைய சோதனை மையங்களை ஏற்படுத்திக் கொள்வது அந்நிறுவனங்களுக்கு எளிதானதாகும்.
அடுத்த ஆபத்து விதை சான்றிதழ் வழங்கும் பணியிலிருந்து படிப்படியாக அரசு வாப° வாங்கிக் கொள்ளும் என்பது தான். விதை உற்பத்தி செய்யும் தனிநபர் அல்லது நிறுவனம் நாளடைவில் தங்களது விதைகளுக்கான சான்றிதழ்களை (ளுநநன ஊநசவகைiஉயவiடிn) அவர்களே வழங்கிக் கொள்ள முடியும் என்பது விதை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சர்வ சுதந்திர பாத்யதையாகும். விதைகளின் தரத்தைப் பரிசோதிக்கவும், சான்றிதழ் வழங்குவதையும் கூட அரசு நிறுவனங்களின் மூலம் தான் நடத்த வேண்டு மென்பதை இச்சட்டம் கட்டாயப்டுத்தவில்லை என்பதிலிருந்தே இச்சட்டம் யார் நலனை பாதுகாக்க முன்மொழியப்பட்டுள்ளது என்பது விளங்கும்.
மிகவும் கொடுமையானது என்னவெனில் வழக்கமாக விவசாயிகள் பயன்படுத்தி வரும் விதைகளையும் ஒருவர் தன் பெயரில் பதிவு செய்துகொள்ள சட்டத்தில் வழிவகையுள்ளது. இவ்வாறு பதிவு செய்யக் கூடாது என மத்திய விதைக்குழுவிற்கு மனு செய்வதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. அதேபோன்று தவறுதலாக பதிவு செய்யப்பட்ட விதையின் பதிவினை ரத்து செய்ய வேண்டுமென யாரும் கோரவும் முடியாது. ஆம்! பதிவு செய்யப்படும் விதை கம்பெனிகளுக்கு முன்னால் பல்லிளிக்க வேண்டிய பரிதாப நிலை விவசாய தேசத்துக்கு.


“விதைகளின் தரத்தை பாதுகாப்பதற்கே” சட்டம் என முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தரத்தை பாது காப்பதற்கான பொறுத்தமான சரத்துக்கள் சட்டத்தில் இல்லாதது வினோதமானதாகும். தரமற்ற விதைகளை விநியோகித்து அதனால் பயிர்கள் அழிந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து உரிய நட்ட ஈடு பெறவும் சட்டத்தில் வழியில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் படி நீதி மன்றம் மூலம் நிவாரணம் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நொந்து நுhலாகிப்போயியுள்ள விவசாயிகள் நீதிமன்றத்தின்நெடிய படிக்கட்டுகளில் ஏறி நட்ட ஈடுகோரி அலைவது எப்படி சாத்தியமாகும்? அதிலும் செல்வாக்கு படைத்த விதைக்கம்பெனி களை எதிர்த்து அப்பாவி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது, நீதி பெறுவது அவ்வளவு எளிதானதல்ல.
கடந்த ஆண்டுகளில் மான்சாட்டோ கம்பெனியின் பி.டி.பருத்தி விதைகளால் சாகுபடிகள் அழிந்து நாடுமுழுவதும் பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலையில் மாண்டது நாடறிந்ததே. புதிய சட்டம் இந்த பரிகாரத்திற்கே நடைமுறையில் இடமளித்துள்ளது.
இச்சட்டத்தை அமுல்படுத்திட பகுதிவாரியாக விதை ஆய்வாளர்கள் (ளுநநன ஐளேயீநஉவடிசள) நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு தங்கு தடையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பூட்டிய வீடுகளையும் - குடோன்களையும் கூட பூட்டுக்களை உடைத்து சோதனை செய்யும் அதிகாரம் இவர்களுக்கு உள்ளது. தீவிரவாதி களின் வீடுகளைக் கூட பூட்டை உடைத்து சோதனை செய்வதற்கு சட்டம் ஒழுங்கு காவல் துறை நீதிமன்றம் மூலம் தேடுதல் வாரண்ட் பெற வேண்டும். ஆனால் விதை இன்°பெக்டர்கள் அத்தகைய நிபந்தனை ஏதுமின்றி தானடித்தமூப்பாக யாருடைய வீடுகளையும் உடைத்து சோதனையிட முடியும். விவசாயிகளை மிரட்டி சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் கட்டிப்போடவே இத்தகைய முரட்டு அதிகாரங்கள் விதை இன்°பெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பழைய சட்டத்தில் மத்திய விதைக்குழுவில் மாநிலங்களுககு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய சட்டத்தில் மாநிலங்கள் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் மண்டலத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதானது மாநிலங்களுககான உரிமைகளைக்கூடத் தட்டிப் பறிப்பதாகும்.
சட்டத்தை மீறி பதிவு செய்யப்படாத விதைகள் நடுபவர்கள் விற்பனையில் ஈடுபட்டால் ரூ.50000 வரை அபராதமும் - 6 மாதம் சிறைத் தண்டனைகள் வழங்கிட முடியும். அதாவது, பதிவு செய்யாத ஒருபடி நெல் விதையை அடுத்த வீட்டு விவசாயிக்கு விற்றாலோ அல்லது வீட்டுத் தோட்டத்தில் முளைத்த ஒரு வாழைக்கன்றையோ, தென்னங்கன்றையோ விற்பனை செய்தாலோ, அவர் கதி அதோ கதிதான். இத்தகைய தேச விரோத குற்றங்களை (!?) கண்டுபிடித்து வழக்கு போட்டு உள்ளே தள்ளுவதற்கு விதை இன்°பெக்டர்கள் சுற்றிக் கொண்டே இருப்பார்கள் (இவர்களுக்கு வேறு எந்த வேரலயும் கிடையாது). இத்தகைய விவசாய விரோத, தேச விரோத அம்சங்கள் பல இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன. ஏழை, சிறு, குறு விவசாயிகள் பெரும் பகுதியாக உள்ள இந்திய திருநாட்டில் எந்த சட்டமும் இவர்களது பாதுகாப்பை மையமாகக் கொண்டதாகவே இருக்க வேண்டும். ஆனால் புதிய சட்டம் பன்னாட்டு, உள்நாட்டு விதை கம்பெனிகளை பாதுகாப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. விவசாயிகள் பாதுகாப்பு பற்றி குறிப்பிடும் சில சரத்துக்களும் நடைமுறை சாத்தியமற்றதாகவே உள்ளது.


விவசாயிகள் விதை உற்பத்தி உரிமையை பாதுகாக்கும் வகையில் 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், “பயிர்வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம்” (ஞடயவே ஏயசவைநைள ஞசடிவநஉவiடிn யனே குயசஅநசள சுiபாவ ஹஉவ - 2001) நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இச்சட்டத்தில் விவசாயிகளுக்கு சில குறைந்த பட்ச பாதுகாப்புகள் அளிக்கப்பட்டிருந்தன. இச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சுமார் 3 1/2 ஆண்டுகளுக்குப் பின்னரும், இச்சட்டத்தை மத்திய அரசு அரசிதழில் பதிவு செய்து அமுலாக்குவ தற்கான ஏற்பாடுகள் இன்று வரை மேற்கொள்ளப்பட வில்லை. இது பாராளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவ தாகும். இந்திய அரசால் முன்மொழியப்பட்டு சட்டமாக்கப்பட்ட பி.வி.பி.எப்.ஆர் (ஞஏஞகுசு ஹஉவ) சட்டத்தை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, இதற்கு நேர் எதிர் மறையான விதைகள் சட்டத்தை அதே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது இந்திய அரசின் உண்மை சொரூபத்தை தோலுரித்துக் காட்டுவதாகும்.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ள இச்சட்டம் நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. விவசாயிகள், விவசாய சங்கங்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக விஞ்ஞானிகள், இடதுசாரி கட்சிகள் போன்ற அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுவடைந்து வருகின்றன. எனவே, இந்த சட்டத்தில் கீழ்க்கண்ட திருத்தங்களைச் சேர்ப்பது அவசியமான தாகும். மசோதாவை அப்படியே நிறைவேற்றுதை எதிர்த்தும், கீழ்க்கண்ட திருத்தங்களை வற்புறுத்தியும், நாடுதழுவிய மேலும் வலுவான மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
விவசாயத் தொழிலாளர் சங்கமும், விவசாயிகள் சங்கமும், விவசாயிகளிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கியக் கடமையாகக் கருத வேண்டும்; தொழிலாளர் விவசாயி களின் கூட்டு முயற்சிக்கு வழிகாண வேண்டும். தங்களது வறுமைக்கும், கடன் தொல்லைக்கும் அடிப்படை இயற்கை அல்ல; கிரகங்களின் சேட்டையுமல்ல; அரசுகளின் கடைக்கண் பார்வை நம்மீது விழாததுமல்ல; அரசுகளின் திட்டமிட்ட அரசியல் பார்வையும், கொள்கையும், சுரண்டும் வர்க்க சார்புத் தன்மையேடு இருப்பதே காரணம் என்பதை உணர வைக்கும் ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். பெரும் திரளாக விவசாயிகள் பங்கேற்கும் இயக்கங்களே அரசைப்பணிய வைக்கும் என்ற உண்மையை சங்கங்களின் தலைவர்கள் உணர வேண்டும். இன்று சின்னத்திரை, பத்திரிக்கை இவைகளின் மூலம் பப்ளிசிட்டி போதும், மக்களின் பங்கேற்பு முக்கியமல்ல என்ற கருத்து பரவலாக உள்ளதை பலகீனமாகப் பார்க்க வேண்டும். மக்கள் திரளும் போது பப்ளிசிட்டி தானாகக் கிடைக்கும், அரசும் பயப்படும். இல்லையெனில் போட்டி டி.வி சேனல் மூலம் மக்களை குழப்பிவிடும். இந்த உணர்வோடு, கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்காக வலுவான இயக்கம் நடத்திட நம்மால் இயன்றதை எல்லாம் செய்வோம்.
1. விவசாயிகள் பாரம்பரிய உரிமைகள் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் இச்சட்டத்தில் விலக்கு அளித்திட வேண்டும்.
2. தற்போது விவசாயிகள் பயன்படுத்தும் அனைத்து விதைகளையும் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். விதைகளை பதிவு செய்யக் கூடாது எனவும், செய்யப்பட்ட பதிவினை ரத்து செய்திட கோருவதற்கு மக்களுக்கு உரிமை அளிக்கப்பட வேண்டும். பதிவு பெற்றவர் பதிவு செய்த விதையின் மீது உரிமை கொண்டாடுவதற்கான காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைப்பதுடன் - மறு பதிவுக்கு வாய்ப்புகள் ரத்து செய்யப்பட வேண்டும்.
3. மோசமான விதைகளால் ஏற்படும் சாகுபடி இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட விதை நிறுவனம், விதையினை வழங்கும் ஏஜெண்டுகள் முழு நட்ட ஈட்டினை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு குறுகிய கால வரம்புக்குள் வழங்கிட வேண்டும்.
4. விதை இன்°பெக்டர்களின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
5. மத்திய விதைகள் குழுவில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதிகள் வழங்கிட வேண்டும்.
6. விதைகள் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் தனி நபர்களுக்கோ, நிறுவங்களுக்கோ வழங்கக் கூடாது. சான்றிதழ் வழங்கும் ஆணையம் மத்திய - மாநில விதைகள் குழுவின் ஆலோசனையுடன் மாநில அரசுகள் அமைத்திட வேண்டும்.
7. விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாப்பது சட்டத்தின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.

Wednesday, 4 February 2015

கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...

கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...

அன்பார்ந்த நண்பர்களே. தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஒருநாள் கொண்டாட்டத்திற்காக கிரெடிட் கார்டை கவனமில்லாமல் கையாண்டால் அது பல நாட்களுக்கு பிரசினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...


1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.


2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.


3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாக படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.


4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.


5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.

6. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.


7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள்.? தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.


8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளை களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.


9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப் பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கு புகார் செய்யுங்கள்.


10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள்.


11. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.


12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.


13. எந்த பிரசினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரை பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.


14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (available balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.


15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரசினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.


16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் "ஸ்வாகா" செய்து விடும் அபாயம் உள்ளது.


17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத்தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.

18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.

19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை இந்த வலைப்பூவிலோ அல்லது www.creditcardwatch.org என்ற இணைய தளத்திலோ பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.


(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் www.creditcardwatch.org என்ற இணையதளத்தை பார்க்கவும்)

மனித உரிமைகளை கொல்லும் மத்திய, மாநில அரசுகள்!

மனித உரிமைகளை கொல்லும் மத்திய, மாநில அரசுகள்!

ஒரு தேசத்திற்கு இறையாண்மை எந்த அளவிற்கு முக்கியமானதோ, அதே அளவிற்கு அந்நாட்டு குடிமக்களுக்கு மனித உரிமைகளும் முக்கியமானது. குடிமக்களின் மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படாத ஒரு நாடு எவ்வளவு ஆயுதங்களை வைத்திருந்தாலும் இறையாண்மை பெற்ற நாடாக செயல்பட முடியாது.

மனித உரிமை என்ற விரிந்த பொருளைக் கொண்டது. ஆனால் பொதுமக்கள் மனித உரிமைகளை முழுமையாக புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக மனித உரிமைகள் குறித்த கருத்துகள் மக்களை சென்றடைய விடாமல் தடுப்பதில் அரசு அமைப்புகள் முனைந்து நிற்கின்றன.

தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாக நிற்பதே மனிதஉரிமை ஆர்வலர்களின் செயல்பாடு என்ற கருத்து ஆட்சியில் இருப்போராலும், பெரும்பாலான ஊடகங்களாலும் மக்களிடம் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. இதையடுத்து மனித உரிமைகள் என்ற கருத்து சமூகத்தில் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் மனிதர்கள் தோன்றிய நாள் முதலாகவே மனித உரிமை கருத்தியல் வெவ்வேறு மனித இனங்களிலும், மனிதக் குழுக்களிலும்  பேசப்பட்டு வந்துள்ளது. தமிழ் இலக்கியத்திலும்கூட  பல்வேறு இடங்களில் மனித உரிமைக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன. இதன் மிக எளிய உதாரணமாக“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...” என்ற திருக்குறளைக் கூறலாம்.

எனினும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே மனித உரிமைக் கோட்பாடுகளின்  அரசியல்ரீதியான முக்கியத்துவத்தை உலகம் அறிந்து கொண்டது. 

உலக நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்களில் சாமானிய மக்கள் படும் அவஸ்தைகளை கண்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் அவையை உருவாக்கினர். அங்கு நடந்த நீண்ட விவாதங்களின் விளைவாக1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் நாள் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்டது.

இந்த பிரகடனத்தின்படி, “மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும்” ஆகும். இந்த உரிமைகள் "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத,மறுக்க முடியாத சில உரிமைகளாக" கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம்,சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள்,மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியான உரிமைகளாகக்கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக்கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை,சுதந்திரம்கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்சட்டத்தின் முன் சமநிலை,நகர்வுச் சுதந்திரம்பண்பாட்டு உரிமைஉணவுக்கான உரிமைகல்விஉரிமை என்பன முக்கியமானவை.

மனித குல வரலாற்றின் இந்த முக்கியமான அம்சத்தை உள்வாங்கிய இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கார், இந்த பிரகடனத்தில் உள்ள ஏராளமான அம்சங்களை இந்திய அரசியல் சட்டத்திலேயே இணைத்துள்ளார்.

எனினும் இன்றுவரை இந்தியாவையும், இந்தியாவின் மாநிலங்களை ஆட்சி செய்த அரசுகள் அம்பேத்கார் திட்டமிட்ட இந்தியாவை உருவாக்குவதில் பத்து சதவீதம்கூட செயல்படவில்லை என்பதே உண்மை. சமூக, பொருளாதார உரிமைகள் குறித்த விவகாரங்களில் மிகவும் அலட்சியமாக செயல்படும் இந்த அரசுகள், அடிப்படை உரிமைகளைக்கூட திட்டமிட்டு மீறியே வருகின்றன.

உதாரணமாக, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 20(3)ன் படி “குற்றம் சாட்டப்பட்ட எந்த நபரையும், தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல பிரிவு 20(1), “சட்டப்படி குற்றம் எனக்கருதப்படும் செயலுக்காக, அந்த சட்டத்தை மீறிச் செய்ததற்காக அன்றி, எந்த நபரும் தண்டிக்கப்படக்கூடாது. அந்த குற்றத்துக்காக சட்டப்படி விதிக்கப்பட்ட தண்டனையைவிட அதிகமான தண்டனையை விதிக்கக்கூடாது!” என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு அரசு இயங்கவேண்டிய விதத்தை கூறவேண்டிய அரசியல் அமைப்புச் சட்டம் எதற்காக இதுபோன்ற விவகாரங்களை விளக்க வேண்டும் என்ற சந்தேகம் எழலாம். ஆனால் அரசு அமைப்புகள் இவ்வாறுதான் இயங்கும் என்பது நமது அரசியல் சட்ட சிற்பிகளுக்கு அன்றே தெரிந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபரை, தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்று அரசியல் அமைப்புச் சட்டமே எச்சரித்துள்ளது. ஆனால், ஒரு குற்றச்செயலை செய்ததாக சந்தேகப்படும் அல்லது அகப்படும் நபர்களை சித்திரவதை செய்து அந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்துவதே அனைத்துக் காவல்நிலையங்களிலும் அன்றாட நிகழ்வாக உள்ளது. அதேபோல குற்றநிகழ்வுகளில் குற்றம் சாட்டப்பட்டோரையும் அரசு அமைப்புகளை விமர்சனம் செய்வோரையும் விசாரணையின்றியே “என்கவுண்டர்” போன்ற முறைகளில் தீர்த்துக்கட்டும் சட்டவிரோதப் போக்கும் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன.

குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதை முதன்மை கடமையாக மேற்கொள்ள வேண்டிய அரசே, மனித உரிமைகளை மறுக்கும் – மீறும் முதன்மை அமைப்பாக இருப்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பான்மையான உலக நாடுகளில் வழக்கமாக உள்ளது.  இந்நிலையை மாற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையும், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் மேற்கொண்ட மிகநீண்ட நடவடிக்கைகளின் விளைவாக இந்தியாவில் “மனித உரிமை பாதுகாப்புச் சட்டம்” கடந்த 1993ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் தேசிய மற்றும் மாநில உரிமை ஆணையங்களை அமைப்பது இந்த சட்டத்தின்படி வலியுறுத்தப்பட்டது. அரசு அமைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அமைப்புகளை நாடி தீர்வு பெறுவதற்கு வழிவகை செய்யும் நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் நடைமுறையில் இந்த அமைப்பு எந்தவிதமான அதிகாரங்களும் அற்று, பதவி ஓய்வு பெற்ற சிலருக்கு மறுவாழ்க்கை கொடுக்கும் அமைப்பாக மட்டுமே செயல்படுகிறது.

மனித உரிமை ஆணையங்களுக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை ஆயுதப்படையினரின் அத்துமீறல்கள் குறித்த புகார்களே! ஆனால் அந்தப் புகார்களை விசாரிப்பதற்கு காவல்துறையினரையே பயன்படுத்த வேண்டிய நிலையில்தான் மனித உரிமை ஆணையங்கள் இருக்கின்றன.

தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில மனித உரிமை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் தலைமை  ஏற்று நடத்தும் இந்த ஆணையங்களின் அதிகாரம் மிகவும் சொற்பமானவை. மனித உரிமை மீறலில் ஒரு அதிகாரி ஈடுபட்டார் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டால்கூட அவர்களை தண்டிக்கும் அதிகாரம் இந்த ஆணையங்களுக்கு கிடையாது. அவர்களை தண்டிக்குமாறு அவர்கள் பணியாற்றும் துறைகளுக்கு இந்த மனித உரிமை ஆணையங்கள் பரிந்துரை செய்யலாம். அதை ஏற்பதும், மறுப்பதும் அந்தத்துறையின் விருப்புரிமையே.

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்ட பொடா சட்டத்தை அதன் துவக்க நிலையிலேயே தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ. எஸ். ஆனந்த் கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி“பொடா” சட்டம் கொண்டுவரப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் கருத்தை மத்திய அரசு எந்த அளவுக்கு கருத்தில் கொள்கிறது என்பதற்கு இதையே உதாரணமாக கொள்ளலாம்.

அதேபோல சர்ச்சைக்குரிய “என்கவுண்டர்” மரணங்கள் குறித்தும் தேசிய மனித உரிமை ஆணையம் திட்டவட்டமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி அனைத்து என்கவுண்டர் சம்பவங்கள் குறித்தும் முறைப்படியான கொலை வழக்கை தொடுத்து விசாரணை நடத்த வேண்டும். ஆனால் விதிவிலக்கான மிகச்சில சம்பவங்களைத் தவிர நாடு முழுவதும் நடைபெறும் என்கவுண்டர் சம்பவங்கள் அனைத்தும் கண்துடைப்பு விசாரணைகளோடு முடிக்கப்படுகின்றன.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் இருக்க வேண்டும். இவர்களோடு மனித உரிமை கோட்பாடுகளில் அறிவும், ஈடுபாடும் கொண்ட மேலும் இருவர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது. அரசு சாராத மனித உரிமை ஆர்வலர்களை மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக்கவே இந்த திட்டம் வகுக்கப்பட்டது. ஆனஆல் நடைமுறையில் அரசுக்கு இணக்கமாக பணிபுரிந்த உயர் அதிகாரிகளுக்கு  மறு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர்களுக்கு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது. இதன் உச்சகட்டமாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2004ம் ஆண்டு பி.சி.சர்மா என்ற ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

மனித உரிமைகளை ஒடுக்குவதாக அதிக அளவில் புகாருக்கு உள்ளாகும் காவல்துறையில் இருந்து ஒரு உயரதிகாரியை தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக நியமனம் செய்வதற்கு நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்புகள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டு அவருக்கு பல்வேறு முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டதோடு, கடந்த 2009ம் ஆண்டு அவருடைய ஐந்தாண்டு பணிக்காலம் முடிந்தவுடன் மேலும் ஐந்தாண்டு காலத்திற்கு பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த 1996ம் ஆண்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. இங்கும் மனித உரிமைச் செயல்பாடுகளில் ஈடுபடும் உண்மையான ஆர்வலர்கள் யாருக்கும் உறுப்பினர் வாய்ப்பளிக்கப்படவில்லை. அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு பணி ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கே உறுப்பினர் வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அதிமுக ஆட்சிக்காலத்திலோ மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு உறுப்பினர்களே நியமிக்கப்படாமல் அந்த ஆணையம் முடக்கப்பட்டது.

மேலும், மாநில மனித உரிமை ஆணையத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த புகார்களை விசாரிக்கும் பொறுப்பு காவல்துறையினரிடமே ஒப்படைக்கப்படுகிறது. அந்த  காவல்துறை அதிகாரிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறையினரிடம் சித்திரவதையின் சான்று தெரியாமல் எச்சரிக்கையாக செயல்படுமாறு - அதாவது வெளிக்காயம் படாமல் சித்திரவதை செய்யுமாறு அறிவுரை கூறுவதை வழக்கமாக  கொண்டுள்ளனர் என்று  கூறப்படுகிறது.

தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை கல்வி வாயிலாகவும் மற்ற வழிமுறைகள் வாயிலாகவும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.

தேசிய மனித உரிமை ஆணையமோ, மனித உரிமைகளை மீறும் அரசுத்துறையினருக்கே ஏதேதோ பயிற்சிகளை கொடுப்பதாக இணையதளம் மூலம் கூறுகிறது. மக்களிடம் பணியாற்றுவதற்கான திட்டங்கள் அந்த அமைப்பிடம் இருப்பதாக தெரியவில்லை.

தமிழ்நாடு அரசோ மனித உரிமை என்ற சொல்லையே தடை செய்யும் முயற்சியில் உள்ளது. “மனித உரிமை என்ற சொல்லை பயன்படுத்தி யாரும் அமைப்புகளை ஏற்படுத்தக்கூடாது: இதுவரை அந்தப் பெயரில் செயல்பட்டு வரும் அமைப்புகளும் பெயரை உடனடியாக மாற்றவேண்டும்” என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

மனித உரிமை அமைப்புகள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகளிடம் தவறாக நடப்பதாக அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. நியாயமாக நடந்துகொள்ளும் எந்த துறையும், எந்த அதிகாரியும் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரசு அமைப்புகளே, அம்மக்களின் மனித உரிமைகளை மீறும்போது சமூக ஆர்வம் கொண்ட குடிமக்கள் திரண்டு மனித உரிமை அமைப்புகளை உருவாக்கி மனித உரிமை கலாசாரத்தை வளர்த்தெடுப்பது இயல்பானது. இத்தகைய முயற்சிகளை அரசு அமைப்புகள் அனைத்து உதவிகளையும் செய்து ஆதரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் வலியுறுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ மனித உரிமை கோட்பாட்டின் மாண்புகள் மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் மனித உரிமை என்ற பெயரைத் தாங்கிய அமைப்புகள் செயல்படக்கூடாது என்பது போன்ற கருப்புச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

குடிமக்களின் மனித உரிமைகளை வழங்க மறுக்கும் ஒரு அரசு குடியரசாக செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை. அவ்வாறான அரசுகள் மற்ற நாட்டு அரசுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், மற்ற சக்திகளுக்கும் குற்றேவல் புரியும் கூலிப்படை அமைப்புகளாகவே செயல்படும். எனவே ஒரு நாட்டின் இறையாண்மையை தீர்மானிக்கும் அம்சங்களில் முக்கிய அம்சமாக அந்நாட்டு குடிமக்களுக்கு அனுமதிக்கப்படும் மனித உரிமைகளே முக்கிய அளவுகோலாகும்.

மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு அரசுகள் விதிக்கும் தடைகளை எல்லாம் தாண்டி மனித உரிமைக் கோட்பாடுகளை கற்றுக்கொள்வதும், மனித உரிமைக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பதுமே நமது உரிமைகளை பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய முதன்மை கடமையாகும்.

மனித உரிமைகள்

மனித உரிமைகள் - ஒரு அறிமுகம்

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது வளர்ந்த மற்றும் பலம் மிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியானது சமூக சிந்தனையாளர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆவணம் ஒன்றை உருவாக்கியது.

1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் "அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்" அறிமுகம் செய்யப்பட்டது.  உடனடியாக 58 உலக நாடுகள் இந்த பிரகடனத்தை அங்கீகாரம் செய்தன.

இந்த மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் உள்ளன.


1. சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.

3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.

5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை

7. பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.

8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.

10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை

11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.

12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.

14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.

15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.

16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.

17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.

20. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.

21. அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை

23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.

24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.

25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.

அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.

தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.

26. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.

27. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

28. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.

29. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.

30. இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.



ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தின் இணைய தளத்தில் இந்த பிரகடனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பும் உள்ளது. 


இந்த மனித உரிமைப் பிரகடனத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் பணியில் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.


எனினும் மனித உரிமைகள் குறித்து அனைத்து மக்களிடமும், போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை.

மனித உரிமைகள் குறி்த்து மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேலும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கவும் உதவும். இதற்கான பணியில் கல்வி அறிவு பெற்ற அனைவரும் பங்கேற்க வேண்டும்.

மூன்றாம் பாலினம்

                                                    மூன்றாம் பாலினம்

நிறம்இனம்பால்பிறப்புமொழி போன்றவைகளை முன்னரே தீர்மானித்து எவரும் இப்புவியில் பிறப்பதில்லை. அதுபோலவேதான் ஒரு திருநங்கையாகப் பிறக்க வேண்டும் என எவரும் விரும்பிபிறப்பதில்லை. எப்படி பெண்ஆண் பிறப்போ அதுபோலத்தான் திருநங்கை’ பிறப்பும். அதற்கு எவரும் எவ்விதத்திலும் பொறுப்பாக முடியாது. ஆனால் இங்கே, தன் சக ஆண் பெண்ணைப் போல எந்த உரிமையையும் திருநங்கைகளால் அனுபவிக்க இயலாத துர்பாக்கிய நிலையே நீடித்து வருகிறது.


மொழிஇனம்நிறம்பிறப்புபால்சமயம்சாதிபோன்றவைகளின் அடிப்படையில் எவ்வித பாகுபடுத்தலும் கூடாது” என தனிச்சரத்தை இந்திய அரசியலைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அது கடந்த 64 ஆண்டுகள் பூர்த்தியான பிறகும் இன்றளவும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பதற்கு நம் கண்முன்னர் நிற்கும் காட்சியேசமூகத்தில் திருநங்கைகள் குறித்த ஒதுக்கலாகும்.

சமூகத்தில் ஒரு பெண் கேலிக்குள்ளாக்கப்படும் போது சிலரேனும் உடனே தட்டிக் கேட்கும் நிலை காணப்படும் சூழலில் திருநங்கைகள் பொது இடங்களில் வைத்து பாலியல் சீண்டல்களுக்கே உள்ளாக்கப்பட்டாலும் எவரும் அதை பொருட்படுத்துவதில்லை. அது ஒரு சாதாரண நிகழ்வாகவே பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. அதேபோல, விலங்குகளுக்குக் கூட இங்கே அளித்து வரும்காப்பீட்டுத் திட்டங்கள் திருநங்கைகளுக்கு வழங்கப்படுதற்கு எண்ணற்றத் தடைகள் உள்ளன.

ஆனால், திருநங்கைகள் தற்போது மெல்ல மெல்ல, ஊடகம், திரைத்துறை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வெளிபடுத்ததுவங்கிவிட்டனர். இருப்பினும் அவர்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில் தங்களை மூன்றாம் பாலினத்தவர் என்று சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்பது திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். 

இந்நிலையில், தேசிய சட்டப் பணிகள் மையம் மற்றும் உரிமை ஆர்வலர் லக்‌ஷ்மி நாராயண் திரிபாதி மற்றும் திருநங்கைகள் சிலர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுக்களில், “நாங்கள் இரு பாலினத்திலும் சேராததால் எங்களுக்கு கல்விவேலைவாய்ப்பு போன்றவை மறுக்கப்படுகிறது. பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டு சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறோம். ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசின் அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. காவல்துறையினரால்   காரணமில்லாமல் துன்புறுத்தப்படுகிறோம். எனவே, அரசியல் சட்டப்படி எங்களுக்கும் வாழ உரிமை உண்டு என்பதால்எங்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க வேண்டும்” என்று கோரியிருந்தனர். 

அந்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய குழுமம் கடந்த ஏப்பிரல் மாதம்   ம் நாள், “அரசியல் சட்டப்படி வாழும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதையும்உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஏற்க முடியாது. இந்தியாவில்பழங்காலம் தொட்டே இரு பாலினத்திலும் சேராதவர்கள் இருந்து வந்துள்ளனர். அவர்கள் ஹிஜ்ராஅரவாணி,திருநங்கை” போன்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றனர். சமூகத்தில் முந்தைய காலங்களில் திருநங்கைகள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆனால் தற்போது அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதுடன்பல்வேறு இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர்.  ஒருவர் மருத்துவ ரீதியாக தன் பாலினத்தை மாற்றிக் கொண்டால்மாற்றப்பட்ட பாலினத்தில் இருக்கும் உரிமை அவருக்கு உண்டு. அவ்விதம் மாறியவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். எனவே, ‘மூன்றாம்பாலினம்’ என்ற பிரிவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறோம்.

திருநங்கைகளை சமூகத்தில் பின்தங்கியவர்களாகக் கருதிஉரிய சலுகைகள்,கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு இதர பிற்படுத்தபட்டோர் பிரிவில் சேர்த்து உரிய இட ஒதுக்கீடு போன்றவைகளையும், வாக்காளர் அட்டை,பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்பட அனைத்துச் சலுகைகளையும் நடுவணரசும், மாநில அரசுகளும்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சினைகளை கவனிக்க நிபுணர் குழுஅமைக்கப்பட்டுள்ளதாக நடுவணரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவானது  அவர்களது பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை அளிக்க வேண்டும். அவற்றை நடுவணரசும், மாநில அரசுகளும் ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும். மேலும்மருத்துவரீதியாக அவர்களை பாலின சோதனைக்கு உட்படுத்துவது சட்ட விரோதம் என்றும், தன்பாலினசேர்க்கையாளர்கள்இருபாலின சேர்க்கையாளர்களுக்கு இந்த உத்தரவுபொருந்தாது என்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு  தீர்ப்பினை வழங்கியுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட நாளில் திடீரென ஒரு ஆணோபெண்ணோ திருநங்கையாக உருமாற்றம் அடைந்து விடுவதில்லை. உடல்ரீதியாக ஆணாகபெண்ணாக இருந்துகொண்டு மனரீதியாகஉணர்வுரீதியாக எதிர்பாலின உணர்ச்சிகளைஉணர்பவர்களே திருநங்கைகள். தங்கள் பருவவயதை அடையும்போது இதர ஆண்,பெண்ணிடமிருந்து தான் வேறுபட்டுள்ளோம் என்றும்எதிர்பாலினத்திற்குரியஉணர்ச்சிகளைக் கொண்டுள்ளோம் என்றும் உணர்கிறார்கள். ஆணின்/பெண்ணின் உடலில் சிறைபடுத்தப்பட்டு பெண்ணாக/ஆணாக உணர்பவர்கள் திருநங்கைகள் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் திருநங்கைகள் சிலரும்பிறரும் இது திருநங்கை என்பதற்கான சரியான விளக்கமல்ல என்று கூறுகின்றனர். திருநங்கைகள் பெரும்பாலும் ஆணாகவே பிறப்பதன் காரணமாக அவர்களுக்கு இயற்கையாகவே கருப்பை கிடையாது. அதன் காரணமாய் அவர்களால் மறு உற்பத்தி செய்ய இயலாமல் போகிறது.

பெரும்பாலான திருநங்கைகள் ஆணாகப்பிறந்து பெண்ணாக உணர்பவர்களே. குடும்ப உறுப்பினர்களால் கண்டறியப்பட்டுதிருநங்கையாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர் அல்லது தாங்கள் எதிர்பாலின உணர்ச்சிகளை உணர்வதை அறிந்தவுடன் வீட்டில் சொல்ல பயந்து வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதன்காரணமாக திருநங்கைகள் அனைவராலும் தான்பிறந்த குடும்பத்துடனும்உள்ளூரிலும் வாழ இயலாமல் வெளியூருக்குச் சென்றுவாழ வேண்டிய நிர்பந்தச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். புனேமும்பை,கொல்கத்தாசென்னைபெங்களுர்கோழிக்கோடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறுநகரங்களுக்குச் சென்று அங்குள்ள திருநங்கைகளுடன் சேர்ந்து வசித்துவருகின்றனர்.

 பொதுத்தளங்களில் தொழில் மறுப்புஉழைப்பு மறுப்பு காரணமாக பிச்சையெடுத்தல்பாலியல் தொழிலில் ஈடுபடல்உணவுவிடுதிகள்திருமண நிகழ்வுகளில் நடனமாடுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வருவதனுடன் அதன் மூலமான வருவாயினைக் கொண்டு ஆணாக தொடர்ந்து வாழ்ந்திட விருப்பமில்லாமல் தாயம்மா” எனும் சடங்கின் வாயிலாகவும்,அங்கீகாரம் இல்லாத பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலமாகவும் பெண்ணாக மாறி தங்கள் விருப்பம் போல வாழத் துவங்குகின்றனர். திருநங்கைகள் பலர் ஒன்றிணைந்து ஜமாத்” என்ற பெயரில் பெரும் குழுவாக நாடு முழுவதும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆண்பெண்ணாக உருமாற்றம் அடைவது இந்தியப் புராணங்களில் தொடர்ந்து வரும் நிகழ்வுகளில் ஒன்றாகும். நாரதர் ஒரு குளத்தில் குளித்துவிட்டு கரையேறும் போது பெண்ணாக மாறினார் என்றும்கானகத்தில் உள்ள ஒரு விருட்சக மரத்தின் நிழலில் உறங்கி எழுந்த இளவரசன் பெண்ணாக மாறிவிட்டான் என்றும்மகாபாரதக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணர் மோகினி வடிவம் கொண்டது ஐயப்பன் கதையிலும் இடம்பெற்றுள்ளது. அர்ச்சுனன் கிருஷ்ணருடன் ஒரு முறையாவது பாலுறவு கொள்ளவேண்டும் எனும் நோக்கில் 'அர்ச்சுனிஎன்ற பெயரில் உருமாற்றம் கொண்டான் என்கிறது பத்மபுராணம். பீஷ்மரை யுத்தத்தில் கொள்ளும்'சிகண்டிஎன்பவர் ஒரு திருநங்கைதான். அதுபோலவே வனவாசத்தில் அர்ச்சுனன்'பிருகன்னளைஎன்ற பெயரில் திருநங்கையாக வாழ்ந்ததாகவே கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெரும்பகுதியில் ஆட்சிபுரிந்த கில்ஜி வம்சத்தைச் சேர்ந்த அரசரான அலாவுதீன் கில்ஜி (1296–1316)-ன் ஆட்சிக்காலத்தில் டில்லியில் முக்கியப்பதவிகள் வகித்த அனைவரும் திருநங்கைகளே. கில்ஜியின் அந்தப்புரத்துப் பெண்களாக இருந்தவர்களில் பெரும்பாலனோர் திருநங்கைகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். அடிமையாக இருந்து பின்னர் அலாவுதின் கில்ஜியால் 1000 தினார் விலைக்கு வாங்கப்பட்டு பின்னாளில் அவரது படைத்தளபதியான மாலிக்கபூர்,அடிமைவம்சத்தை நிறுவிய பால்பனின் ஆட்சியில் முதல்வராகப் பொறுப்பு வகித்த இமாதுதீன் ரேயான்கில்ஜி வம்சத்தைச் சேர்ந்த அரசரான குதுப்தீன் முபாரக்கின் பிரியத்திற்குரிய அடிமையும்ஆட்சியில் முக்கிய பொறுப்பும் வகித்த குஷ்ருகான்,சுல்தான் பெரோஸ் துக்ளக்கிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த சுல்த்தான் முகமது ஆட்சியில் முக்கியப்பொறுப்பு வகித்த கருப்பினத்தைச் சேர்ந்த க்வாஜா ஜெகான் மாலிக் சர்வார் என்பவரும் திருநங்கையே என்பதும் வரலாற்றின் வாயிலாக அறியவருகிறது.

 பாலியல் சிறுபான்மையினரான திருநங்கைகள் குறித்து கிறித்தவர்களின் புனித நூலான வேதாகமத்தில் 'அன்னகர்என்றும் குறிப்பிடப்படுகின்றனர். இசுலாம் சமூகத்தில் பிறந்து பின்னர் வரலாற்றில் வெற்றியாளர்களாய் திகழ்ந்த மாலிக்காபூர்,குஸ்ருகான்ஜலாவுதீன்கான் போன்றோர் திருநங்கைகளே. முகலாயர் வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் (1526-1665) அந்தப்புர காவலர்களாக திருநங்கைகளே நியமிக்கப்பட்டுள்ளனர். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான'சீவகசிந்தாமணி'யிலும் வாத்ஸ்யான‌ரின் 'காமசூத்திரத்திலும்திருநங்கைகள் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன.

புராணக்கதையான மகாபாரதத்தில் யுத்தம் துவங்கியபோது பாண்டவர்கள் தங்களின் வெற்றிக்காக ஒரு சுத்தவீரனை பலி கொடுக்க வேண்டி அர்ச்சுனனுக்கும்,நாகவம்சத்தைச் சேர்ந்த உலுபி என்ற பெண்ணுக்கும் பிறந்த திருநங்கையைத் தேர்வு செய்தபோது அவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முன்பாக இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட விரும்பியபோதுஅவர் திருநங்கை என்பதால் அவருக்கு எவரும் பெண் கொடுக்க முன்வராத சூழலில் கிருஷ்ணர் பெண் உருவம் எடுத்து அவரை மணக்கிறார். மறுநாள் திருநங்கை களப்பலிகொடுக்கப்பட்டதும் பெண் உருவிலிருந்த கிருஷ்ணர் தாலி அறுக்கிறார் என்றபுராணக் கதையின் நிகழ்வுதான் அரவாணத் திருவிழாவின் மையமாகும்.

பாலின உணர்ச்சியானது ஆணிலிருந்து பெண்ணுக்கு எவ்வாறு வேறுபடுகிறதோ அதே போலவே திருநங்கைகளுடைய பாலின உணர்ச்சி வேறுபட்டது. இதன்காரணமாக திருநங்கைகள் ஆண்/பெண்ணைவிட குறைவானவர்கள் என்று எவரும் கருதி விடமுடியாது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 திருநங்கைகளுடனான மற்றும் திருநங்கைகளுக்கு இடையேயான புணர்ச்சியானது இயற்கைக்கு முரணான புணர்ச்சியாகதண்டனைக்குரிய குற்றமாகவும் காண்கிறது. இதற்கு முரணாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய சிறப்பு வாய்ந்த தீர்ப்பு பிறகு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பினை   சீராய்வு செய்ய வேண்டி தாக்கல் செய்யப்பட மனு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், 1989ஆம் ஆண்டு பிறந்து, பெண்கள் பள்ளியில் படித்த நங்கை என்பவர் பெண்கள் பிரிவில் காவல்துறையில் தேர்ச்சி பெற்றார். அவருக்கு 2011ஆம் ஆண்டு காவலர் பணி வழங்கப்பட்டது. அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள்அவர் பெண்ணல்ல, திருநங்கை என்று கூறி பணியிலிருந்து நீக்கியுள்ளனர். இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நங்கை வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவித்தனர். பாலினம் பற்றி குறிப்பிடும் போது அவர் தன்னை பெண் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பிறப்பு சான்றிதழிலும் பெண் என்றே கூறப்பட்டுள்ளது. எனவே, அவரை  மீண்டும் வேலையில் தொடர அனுமதிக்குமாறு  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துமூன்று தினங்களுக்குப் பிறகுஏப்ரல் மாதம் 18 ம் நாள் இத்தீர்ப்பு பகரப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக இனி இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாது என்ற சூழல் தற்போது நிலவுகிறது.

துரதிருஷ்டவசமாக திருநங்கைகள் அவர்களது உரிமைகளை பெறுவதற்கான சட்டங்கள் நமது நாட்டில் இன்னும் இயற்றப்படாமல் உள்ளன. நேபாளம்,பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் அவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுதிருநங்கைகள் பாதுகாக்கப்படுகின்றனர். பன்னாட்டு அமைப்புகளில் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது. ஆகையால் சர்வதேச நாடுகளில்திருநங்கைகளுக்கு அளிக்கப்படும் உரிமைகள் இந்தியாவிலும் பின்பற்றப்படவேண்டியது அவசியமாகிறது.


திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக சட்டசமூக ரீதியாக அங்கீகரித்தல்,அயல்நாடுகளில் பாலின மாற்று அறுவைசிகிச்சைக்கு வாய்ப்புகள் உள்ளதுபோல இங்கும் வாய்ப்புகள்தொழில் நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படல்பெயர்மதம் மாற்றுவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் இருப்பது போல பாலினம்மாற்றுவதற்கும் சட்ட அங்கீகாரம் அளித்தல் என்பது போன்ற திருநங்கைகள்மேம்பாடு தொடர்பான செயல்பாடுகளுக்கு அடிப்படையான தனி சட்டத்தினை நடுவணரசும், மாநில அரசுகளும் விரைவில் இயற்றி அது தொடர்பான பணிகளை   முன்னெடுத்தலின் மூலமாக மட்டுமே, திருநங்கைகள் வாழ்வு மேம்படும்.

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...