Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Sunday, 18 September 2016

மூல நோய்க்கு எளிய வைத்தியம்.!

                     மூல நோய்க்கு எளிய வைத்தியம்.!

மூல நோயை விரட்ட:
🌀 வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா... பனைவெல்லம் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும்.

தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும்.
மூல நோய் பாதித்தவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் மருத்துவர் சசிக்குமார்.


கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக மாறலாம் என்றும் எச்சரிக்கிறார். அவர் கூறியதாவது: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் தடிமன் ஆவதுதான் மூலமாக உருவெடுக்கிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும்.
அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம்.
மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலப் பிரச்னையை உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும். ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளியேற்றம் ஆகிய சுழற்சியில் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும்.
முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். இல்லையென்றால் மீண்டும் வளர்ந்து மிரட்டும்.
முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது. இதில் ஏற்படும் கொப்பளங்கள் புரையோடி குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.
🌀 பாதுகாப்பு முறை:
நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது. குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. கேரட் ஜூஸ் தினமும் குடிப்பது நல்ல பலனைத் தரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாறு குடித்தால் ஓரளவு தீர்வு காணலாம். அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது வலி குறையும்.
🔳 ரெசிபி
 கருணைக்கிழங்கு குழம்பு:
கருணைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு உரித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். வேக வைத்த கருணைக்கிழங்கை உதிர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கவும். மூலத்தால் உண்டாகும் புண்களை கருணைக் கிழங்கு குணப்படுத்தும்.
 வெந்தயக் கீரை கட்லட்:
கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து நெய்யில் வதக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ரொட்டித்தூள், வதக்கிய வெந்தயக் கீரை, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உலர்வாக பிசைந்து கொள்ளவும். இதை வடை போல தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் வார்த்து வேக வைத்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது.
 பூண்டு சாதம்:
பூண்டு 100 கிராம் அளவுக்கு எடுத்து உரித்து பொடியாக நறுக்கவும். இதை நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை தனியாக உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இத்துடன் வதக்கிய பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த பாசுமதி அரிசி சாதத்தையும் சேர்த்துக் கிளறவும். பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
🔳 உணவுக் கட்டுப்பாடு. (பத்தியம்)
🔺உணவுதான் மூலத்துக்கு தீர்வு. தினமும் இரண்டு வேளை உணவில் கீரை சேர்க்க வேண்டும்.
🔺முளை கட்டிய பயறு வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம்.
🔺அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
🔺இரவு நேரத்தில் பூண்டை உரித்து பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம்.
🔺தினமும் பூண்டு பால் சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
🔺வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்க்க வேண்டும்.
🔺கத்தரிக்காய், தேங்காய், கருவாடு மசாலா உணவுகள் தவிர்க்கவும்.
🔺சில்லி சிக்கன், சில்லி மீன் என எண்ணெயில் பொரித்த, பொரிக்காத அசைவ வகைகள், முட்டை வேண்டாம்.
🔺 சுத்த சைவமாக மாறிவிடுவது நல்லது. கீரைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.
பாட்டி வைத்தியம்
 அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது செருகி வைத்துக் கொண்டால் மூல வேதனை, வலி குறையும்.
 அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.
 அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்கட்டு உடையும்.
 அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
 ஆகாயத் தாமரை இலையை அரைத்து கட்டினால் வெளிமூலம், மூலக்கட்டி போன்றவை குணமாகும்.
 ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும்.
 ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்கட்டு தீரும்.
 அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி வைத்து கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் குணமடையும்.
 மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.
 ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
 இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விடுதலை பெறலாம்.
 இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும்.
 இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு குணமாகும்.

Saturday, 12 March 2016

உங்களுக்கு தொப்பை இருக்கிறதா?

                                        
                                      உங்களுக்கு தொப்பை இருக்கிறதா?


உங்களுக்கு தொப்பை இருக்கிறதா? அது அறவே அகல வேண்டுமா? இதை படியுங்கள்.

உணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு. அறுசுவைகளால் ஆனதே இந்த உடல்.

நாம் இப்போது எந்த வகை உணவு நம் உடலிற்கு உகந்தது இல்லையோ அதைத் தான் அதிகம் உண்கிறோம். நவீன உணவுகள் என்ற பெயரில் அதிக பட்சம் மைதாவால் ஆன நூடுல்ஸ், மக்ரோனி, பாஸ்தா போன்ற உணவுகளை உட்கொள்வதுதான் நாகரீகம் என்ற விளம்பர மோகத்தில் சிக்கியதால் , நம் பழமையான பாரம்பரிய உணவு வகைகளை தீண்ட தகாத பொருட்களை பார்த்து விட்டதை போல எண்ணம் பலருக்கு. அதை உண்டால் நம் தரம் தாழ்ந்து விட்டது போல எண்ணுகிறார்கள்... கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, திணை, சம்பா கோதுமை, மக்காசோளம், பார்லி, குதிரை வாலி, பனங்கற்கண்டு இந்த பெயர்களை எல்லாம் இனி வரும் காலங்களில் பிள்ளைகள் அறியாத விஷயமாக ஆகி விடும்.

இனியும் கூட இந்த வகை பாரம்பரிய உணவுகளை எடுத்து கொள்ளா விட்டால் வாழும் நாட்களை வியாதிகளுடன் நரகமாக வாழ வேண்டியது தான்.

வாரத்திற்கு ஒரு நாள் என பகல் நேரங்களில் கம்பு, புழுங்கலரிசி, தினை, வரகு, சாமை, கோதுமை ரவை, மக்காசோளரவை இவற்றில் சாதம் செய்து பச்சை காய்கறிகள், கீரை வகைகளை குழம்பாக்கி சேர்த்து உண்டு வர சர்க்கரை மட்டும் இல்லை நம் உடம்பில் இருக்கும் மற்ற பிரச்சனைகள் மொத்தமும் குணமாகும். கேரட், வெள்ளரி போன்றவற்றை சாலட் ஆகவும் இதனுடன் சேர்த்து கொள்ளலாம்.

இரவில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பாத்தி மட்டுமே சாப்பிடாமல் கேழ்வரகு அடை, கம்பு அடை, கம்பு இட்லி என்றும் காலையில் வரகரிசிப் பொங்கல், திணை பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி, கம்பங்கூழ், கேழ்வரகுகூழ் என்று சாப்பிட்டால் உடல் எப்போதும் எந்த கோளாறும் இல்லாமல் இயங்கும்.

கம்பு, திணை, வரகு, சாமை, மக்காசோளம், சம்பா கோதுமை, மற்றும் கொள்ளு போன்றவற்றை ரவை போல (அரிசி நொய் போல ) உடைத்து கஞ்சியாக செய்து , இரவு வேளையில் இரண்டு அல்லது மூன்று டம்பளர்கள் குடித்தால் மிகவும் நல்லது .. அனைவருக்கும் ஏற்ற இரவு உணவு இது. பெரும்பாலும் இரவில் வயிறு நிறைய உணவு உண்ணக்கூடாது.. அதிலும் சர்க்கரை வியாதிக்காரர்கள் முழு வயிறு நிறையும் அளவு உண்ணவே கூடாது என்றாலும் கூட, இந்த கஞ்சியை சர்க்கரை வியாதிக்காரர்கள் இரவில் முழு வயிறு நிறையும் அளவு கூட குடிக்கலாம்... இதனால் உடலில் சர்க்கரையின் அளவு ஏறாது..இது இவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாகும்.
இஞ்சி,புதினா, கொத்துமல்லி, பிரண்டை, கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றில் துவையல் செய்து இந்த கஞ்சிக்கு தொட்டும் சாப்பிடலாம்.

கேழ்வரகு தானியங்களில் அதிக சத்துமிக்கது. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் நிறைந்தது.

கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. கால்சியம், இரும்புச் சத்து, நார்ச் உள்ளது. பி 11 வைட்டமின் ரைபோபிளேவின் நயாசின் சத்து உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது. வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் உள்ளது. வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகள் சோள உணவு சாப்பிட கூடாது.

வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. வரகு மாதவிடாய் கோளாறுகளை சரி பண்ணும்.

சாமை மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகமாக்கி ஆண்மை குறைவையும் போக்கும்.

கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் போக்கும்.

பார்லியை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பார்கள். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். மலச்சிக்கலை போக்க வல்லது. காய்ச்சலை தடுக்கும். உடலின் வெப்பநிலையை சீராக்கும். சிறுநீர் தடையில்லாமல் செல்ல உதவும். எலும்புகளுக்கு உறுதி கொடுக்கும். இருமலை நிறுத்தும். குடல் புண்ணை ஆற்றும்.

சுடுநீரை தினமும் குடித்து வந்தால்


                                          
                                 சுடுநீரை தினமும் குடித்து வந்தால்


மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் மருத்துவர்களும் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துரைப்பார்கள்.
அதிலும் சுடுநீர் குடிப்பது நல்லது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதிலும் காலையில் எழுந்ததும் சுடுநீர் குடித்து வந்தால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். குறிப்பாக சுடுநீரை காலையில் வெறும் வயிற்றில் மட்டுமின்றி, நாள் முழுவதும் குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
எடை குறைவு :-
சுடுநீரை தினமும் குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும். எனவே நீங்கள் குண்டாக இருந்தால் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் சுடுநீரை தினமும் தவறாமல் குடித்து வாருங்கள்.
சளி, இருமல் நீங்கும் :-
சுடுநீரைக் குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் சுடுநீர் சளியை முறித்து, சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும். அதுமட்டுமின்றி சுடுநீர் சுவாச பாதையை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.
மாதவிடாய் கால வயிற்றுப்பிடிப்பு :-
சுடுநீரை பெண்கள் தினமும் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்பிடிப்பு போன்றவை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
உடல் சுத்தமாகும் :-
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், சுடுநீர் குடியுங்கள். இதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, வியர்வையின் மூலம் உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். இன்னும்
முதுமையைத் தடுக்கும் :-
எசுடுநீரை ஒருவர் தினமும் குடித்து வந்தால், பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படும்.
செரிமான பிரச்சனை :-
செரிமான பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், குளிர்ந்த நீரை விட சுடுநீர் குடியுங்கள். ஆய்வுகளிலும் உணவை உண்ணும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால், உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே குடலில் படிந்து, அதனால் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே உண்ணும் போது மட்டுமின்றி, அனைத்து நேரங்களிலும் சுடுநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
மலச்சிக்கல் :-
செரிமான பிரச்சனை வந்தால் குடலியக்கத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். குடலியக்கம் சீராக இல்லாவிட்டால் மலச்சிக்கலால் அவஸ்தைப்படக்கூடும். உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், தினமும் சுடுநீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும் :-
சுடுநீர் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே எந்த ஒரு நோயும் அண்டாமல் இருக்கும். எனவே உங்களுக்கு எந்த ஒரு நோயுடன் தாக்காமல் இருக்க சுடுநீரை தினமும் குடியுங்கள்

Tuesday, 2 June 2015

டெங்கு

டெங்கு 


டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி ?

தமிழ் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்து மக்களிடையே போதிய
விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படவில்லை என்றே சொல்லலாம்.

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி?

வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.

இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர். ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

இந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும். அதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம்.


சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் மூலமாகவும், வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவதன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம். அரசு இயந்திரங்களை நம்பாமல், பொதுமக்கள் சுகாதாரமாக, விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு கொசுவை ஒழித்து காய்ச்சல் வராமல் தற்காத்து கொள்ளலாம்

கர்ப்பத்தின் போது

pregnant food

கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!

பசலைக் கீரை

பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

சிக்கன்

கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

அஸ்பாரகஸ்

கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.

வெண்டைக்காய் .

பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

ப்ராக்கோலி

சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

முட்டை

முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

சால்மன்

பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

தயிர்

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.

நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம்

நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் 


நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !

இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை

Sunday, 8 February 2015

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?


“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?”
“உடல்
உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும்.
நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன்.
 “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்தஇரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே?”
“உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
“உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?”
“ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன?”
“இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).”
 “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்?”
“நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.”
 “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?”
“18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.”
“உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா?”
“ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:-
1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.
2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு
ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம்.
“தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?”
“பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.”
உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா?”
“பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும்,
ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும்.
நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை.
ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.
ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது,  உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.”  “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்?”
“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம்.
ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். 
ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம்.
எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.
ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”
“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?”  “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.
மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றன
நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.”  “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?”
“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.
கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,
குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.
அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது.
இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.
சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” 
“முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது?”
 “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.”
1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார்.
1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார்.
1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட்
என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள்.
1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது.
1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள்.
1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின்“கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார்.
1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார்.
1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது.
1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.

Tuesday, 3 February 2015

மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!

மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!


1. 
சத்தான உணவைச்சாப்பிடுங்கள்

கவனியுங்கள்… ருசியானஉணவு என்று சொல்லவில்லை.சத்தானஇயற்கையானஉணவுவகைகளைச்சாப்பிடும்போது மூளைஎப்போதும் சுறுசுறுப்புநிலையிலேயே இயங்குகிறது.பதப்படுத்தப்பட்டடின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போதுஉடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறதுஇதனால் நாம் செய்யும்செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. 
நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம்பகலில் நாம்செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில்மட்டுமே Refresh அடைகின்றனதூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளைஅவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம்.அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம்இளைஞர்களுக்குஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. 
நடங்கள்ஓடுங்கள்!
தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலைவேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம்இது உங்கள்உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும்மனம் உற்சாகம் பெறும்.ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும்மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத்தோன்றுவதும் இயல்புபத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலைசெய்வீர்கள்.

4. 
ஓய்வெடுங்கள்.
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள்ஓய்வெடுத்தல் என்பதுவேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்லகண்களை மூடி நன்றாகமூச்சை ஆழ்ந்து இழுத்துசற்று நிறுத்திமெல்ல விடுங்கள்கடினமானமிகக்கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல்மேம்போக்காக இருக்கும்அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன்செல்லாமல் தலைவலிஉடல் சோர்வு ஏற்படும்ஒரு மணிநேரக் கடினவேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. 
சிரியுங்கள்
மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு.சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது.சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும்வேறுஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறுவிளைவுகளை ஏற்படுத்தும்எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர்முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும்அது மற்றவர்களை உங்கள்பால்கவர்ந்திழுக்கும்.

6. 
மனம்விட்டுப் பேசுங்கள்
மனம் விட்டுப்பேசுங்கள்உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும்.எல்லோரிடமும்எல்லா நேரமும்தெரிந்த எல்லாவற்றையும்பேசிக்கொண்டிருக்காதீர்கள்யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்திகிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்அவர்கள் சொல்லும்வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. 
உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில்ஒழுங்குபடுத்திட இயலாதுஅது தேவையில்லாததும் கூடமலையைத்தலையால் முட்டி உடைக்கமுடியாதுஆனால் சிறு பாறையைப்பெயர்த்தெடுக்க இயலும்சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறுவேலைகளைச் செய்யுங்கள்மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. 
தெளிவாகச் செய்யுங்கள்
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன்செய்யுங்கள்வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச்செய்யாமல் இருப்பதே மேல்எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும்செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள்நிறுவனத்தை அல்லநிறுவனம்உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும்ஆனால் ஈடுபாட்டுடன்காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்லநல்ல அனுபவத்தையும்கொடுக்கும்.

9. 
விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம்ஒதுக்குங்கள்கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவதுமேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார்விளையாட்டு உடலுக்குமட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. 
மற்றவர்களையும் கவனியுங்கள்
உங்கள் விருப்பங்களையும்உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்காதீர்கள்அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும்நமதுவிருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாதுஉங்களைச்சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள்யாருக்கேனும் உதவிதேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள்பிரதிபலன் எதிர்பாராமல்.உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...