Sunday, 8 February 2015

தமிழனின் இளிச்சவாய்த்தனம்


தமிழனின் இளிச்சவாய்த்தனம் 


    KFC க்கோ MERRYBROWN க்கோ போனா பொரிச்ச சிக்கன் பீஸ்களோட ஒரு கோக்கையும் கொண்டுவந்து வைக்கிறாங்களே ஏன் தெரியுமா?

வயித்துக்குள்ளாற போன சிக்கன் பீஸ் எல்லாம் சீக்கிரம் செரிமானம் ஆகனும்கிறதுக்குத்தான்.. ஆனா இதுல ஒரு பியூட்டி என்னென்ன சிக்கன் துண்டுகளை மட்டுமே செரிக்கவைக்கும் தன்மை கொண்டது கோக்.. ஆனா சிக்கன்ல இருக்கிற கொழுப்பு சாப்பிடறவங்க வயித்துலேயே அப்படியே தங்கறது நிறைய பேருக்குத் தெரியாது..

இது எப்படி இருக்குன்னா டாய்லட்டை ஆசிட் ஊத்தி கழுவி க்ளீன் பண்ற மாதிரி.. ஆசிட்ட ஊத்தினதும் கறை எல்லாம் உடனே போய் பளிச்சென்று ஆவதுபோல, கோக் குடித்தவுடன் சரியான முறையில் சிக்கனில் உள்ள சத்துக்கள் (கொழுப்பு நீங்கலாக) உடலுக்குள் செல்லாமல் அப்படியே வயிற்றுக்குள் போய் விழுந்த உணவை செரிமானத்துவிடச் செய்வது தான் இந்த கோக்கோட வேலை.. கொழுப்பு மட்டும் அப்படியே உடலில் தங்கி பின்னாளில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது தெரியா மல் நிறைய பேரு சிக்கனை 10 மணிக்கு மேல சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போய் தூங்கப்போயிடறாங்க.. அவங்களோட வருங்கால நிலைமை என்னாகும்னு யாரும் யோசிச்சுப் பார்க்கிறதே இல்ல..

இதுபோன்ற மேலை நாட்டு உணவு வகைகள் உடலுக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தும் நாகரீகத்திற்காக பணத்தையும் செலவழித்து உடலையும் கெடுத்துக்கொள்கின்றார்கள் நகர்ப்புறத்தில் இருக்கும் மக்கள்

#  உலகில் 70 விழுக்காடு மக்கள் விரும்பும் உணவுப் பொருள் மசால் தோசை
# பிறந்து மூன்றே மாதம் ஆன சிறு குழந்தைக்கு கூட ஏற்க்கும் மிகச் சிறந்த உணவு என்று ஆவியில் வேகவைத்த “இட்லி” மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது 

இருந்தும் நாம் ஏன் வியாபார ரீதியில் இதனை கொண்டு சென்று வெற்றி அடைய முடியவில்லை??? யோசியுங்கள் சகோதரர்களே....

வெளிநாட்டவன் காய்ந்த மைதா மாவு ரொட்டியை பீட்சா என்று விற்று கோடிக்கனக்கில் பணம் பன்னுகிறான்.
கோக், பெப்சி விற்க்கும் அளவிற்க்கு நாம்மூர் பாணங்களும், இளநீரும் விற்பதில்லையே..
பெரும்பாலான பாரம்பரிய உணவுப் பண்டங்கள், நம்மை விட்டு விலகிச் சென்று கொண்டு இருக்கிறது. 
அடையாளத்தை இழப்பது அவமானம், ஆரோக்கியத்தை தவிர்ப்பது ஆபத்து.

தமிழனின் இளிச்சவாய்த்தனம் உணவுப் பொருள்கள் வியாபாரத்தில் கூட இருக்கிறது...

தமிழ்நாட்டில் தமிழன் பிழைக்க மனம் திறங்கள் உதவிடுங்கள்.. 
மாற்றத்தை நாம் தான் கொண்டுவர வேண்டும்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...