Showing posts with label குமரிக்கண்டம். Show all posts
Showing posts with label குமரிக்கண்டம். Show all posts

Sunday, 18 September 2016

உலகின் மிகப்பெரிய வழிபடுதலம்!

                     உலகின் மிகப்பெரிய வழிபடுதலம்!


உலகின் மிகப்பெரிய கோவில் எனும்போது இந்து சமையத்தை மட்டுமே குறிக்கிறது. அனால், உலகின் மிகப்பெரிய வழிபடுதலம்  என்று சொன்னாலும் இதுதான்.
தமிழ் மன்னன் இரண்டாம் சூரிய வர்மன்
கடந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவினால் கூட - இன்று வரை - இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை! வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று விமானத்தில் இருந்து படம் எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் ?




இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இதைப் போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால்,  எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில், நமது முன்னோர்களின் மதிநுட்பத்தால் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளதாம். இதன் சிறப்பு: கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது.

 கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் கோவிலானது தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் மிகப்பெரிய வழபாட்டு தளமாக செயல்பட்டுவந்தது. இரண்டாம் சூரியவர்மன் என அழைக்கப்பட்ட சோழ மன்னன் கட்டிய இந்த கோவிலானது இன்றளவும் உலகின் மிகப்பெரிய வழிபடுதலமாக உள்ளது. இவருக்கும், அதே காலகட்டத்தில் (கி.பி. 1114) தமிழகத்தில் வாழ்ந்த சோழப்பேரரசர் குலோத்துங்க சோழனுக்குமிடையே குழுவினர்களை பரிமாறிக்கொண்ட உறவு இருந்ததாக வரலாறு கூறுகிறது. ( இவர் சோழ மன்னர்களின் வழியில் வந்தவர் என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.)


நம் தமிழ் மன்னன் ''சூர்யவர்மன்'' கட்டிய உலகின் மிக பெரிய கோயில்.("அங்கோர் வாட்" )

இவர் இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினார். இந்த இடம் தான் அவரின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் என்னவென்றால், "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயில்தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே மிகவும் பெரியது! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். 

இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். மீண்டும்,  இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது.

இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது. அவர் புத்தமதத்தை பின்பற்றியவராக இருந்தபடியால், பின்னர் இந்த கோயிலானது  கொஞ்சம் கொஞ்சமாக புத்தர்களின் வழிபாடு தளமாக மாறியது. இப்படியாக ஆரம்ப கால புத்தமத வளர்ச்சிக்கு அடித்தளமாய் அமைந்தது. இறுதி வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது. பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது, அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதிலமடையத்தொடங்கியது.  தீட்டிய மரத்தில் கூர் பார்கின்ற கதையாக இன்று புத்த மதத்தை சேர்ந்தவர்கள் தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவது நினைவுகூறத்தக்கது.

 தாங்கள் மேலும் அறியவும், (நன்றியுடனும்) கீழ்கண்ட இணைப்புகளை சமர்ப்பிக்கிறேன்.

http://en.wikipedia.org/wiki/Suryavarman_II)

http://en.wikipedia.org/wiki/Angkor_Wat

http://kalakalapputamilchat.forumotions.in/t112-topic

உலகின் முதல் அணைக்கட்டு...!

                     உலகின் முதல் அணைக்கட்டு...!

நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டி விவசாயத்தை மேம்படுத்தும் யுக்தியை உலகிற்கே அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள் என்பதற்கு, கி.பி. 150 இல் கட்டப்பட்டு இன்றுவரை நிலைத்திருக்கும் "தி கிராண்ட் அணைகட்" என்று ஆங்கில ஆய்வாளர் சர்.ஆர்தர் காட்டன் அவர்களால் புகழப்பட்ட 'கரிகாலன் கட்டிய கல்லணை' சான்றாக இருக்கிறது. (இவ்வாறு அணைகட்டும் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியதனால்தான் அண்டையிலுள்ள இந்தியர்களுடன் தண்ணீருக்காக பிரச்சினை எற்படுகிறதா?)

பாறைகளை உடைப்பதற்கு வெடிமருந்து பொருட்களும், அதிக பளுவான எடைகளை சுமப்பதற்கு 'கிரேன்' போன்ற தொழில் நுட்பக்கருவிகளும், பொறியியல் வரைபடங்கள் போட கம்ப்யூட்டர் போன்ற தொழில் நுட்ப உதவிகளும் எதுவும் இல்லாதிருந்த இரண்டாம் நூற்றாண்டு காலத்திலேயே, ஓடிக்கொண்டிருந்த ஒரு பெரிய நதியின் குறுக்கே  இப்படிப்பட்ட பிரமாண்டமான ஒரு அணைக்கட்டு  கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து உலக பொறியியல் வல்லுனர்கள் வியக்கிறார்கள்...! மேலும், இதுவே உலகில் வெற்றிகரமாக கட்டப்பட்ட முதல் அணைக்கட்டு ஆகும்...!  தஞ்சையை இந்தியாவின் நெற்களஞ்சியமாக மாற்ற உதவியதும் இக்கல்லணையே...!



அதைக்காட்டிலும் பெரிய சிறப்பு என்னவென்றால், இதில் பயன்படுத்தப் பட்டுள்ள மாற்றுப்பாதை (By-pass technology) திட்டமாகும். இது நவீன விஞ்ஞானத்திற்கு இணையானதாகும். கல்லணை கட்டுவதற்கு வேண்டியிருந்திருக்கக்கூடிய பொறியியல் திறனை எண்ணி இன்றும் பல நாட்டுப் பொறியாளர்கள் மெச்சுகிறார்கள்.
இது திருச்சிக்குக் கிழக்கே எட்டாவது மைலில் கட்டப்பட்டுள்ளது.
வெள்ளம் கொள்ளுமிடம் போதாமல் திருச்சிக்கு மேற்கே பத்து மைல் தொலைவில் எலமனூறுக்கு அருகில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது.

 பிரிந்து போகும் கொள்ளிடம், மீண்டும்காவிரியுடன் கலக்கும் நோக்கத்துடன், திருச்சிக்குக் கிழக்குக் கல்லணைக்கருகில் காவிரியின் அருகே வருகிறது.
கல்லணையில் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையே ஒருவித இணைப்பு ஏற்படுகிறது. ஆனால் தாழ்ந்து உள்ள கொள்ளிடமும், உயர்ந்துவிட்ட காவிரியும் இயற்கை விதியின்படியே ஒன்றாக முடிவதில்லை. இந்தக் காவிரி, கொள்ளிடம் ஆகியவற்றின் ஊடலின் பின் நிகழ்ந்த கூடலில் பிறந்ததுதான் திருவால்கமும், திருஆனைக்காவும் அமைந்திருக்கும் திருவால்கத்றே. திருவால்கத்தின் மேல்முனையில் காவிரியும், கொள்ளிடமும் பிரியுமிடத்தில் மேலணை இருக்கிறது.



மேலணை என்பது உண்மையில் அணையேயல்ல. நீரொமுங்கி என அழைக்கப்படும் ரெகுலேட்டர் தான். வெள்ளம் வரும்போது மேலணை ரெகுலேட்டரைத் திறந்து வெள்ளத்தைக் கொள்ளிடத்திற்குள் வடித்து விடுவார்கள். அன்று கரிகாலன் கட்டினானே அந்தக் கல்லணைதான் இது. 
காவிரியின் கல்லணை இருக்கும் இடத்தில் காவிரியின் பக்கத்திலேயே கொள்ளிடமும் ஓடுகிறது. காவிரி உயர் மட்டம்; கொள்ளிடம் பள்ளம்; கரிகாலன் கல்லணை கட்டுவதற்குமுன், காவிரி தன் வடகரையை உடைத்துக் கொண்டு கொள்ளிடத்திற்கு வழிந்து விடுவதும், வெள்ளம் வடிந்தபின் உழவர்கள் உடைந்த கரையைச் செப்பனிடுவதும், அடுத்த வெள்ளத்தில் கரை மீண்டும் உடைந்து விடுவதும் மிகச் சாதாரணமாக நடந்து கொண்டு இருந்திருக்க வேண்டும்.
 
இவற்றையெல்லாம் நீக்குவிக்கும் நோக்கத்துடன் கரிகாலன் திட்டமிட்டுக் கல்லணையை அமைத்த பொறியியல் ஆற்றல் சிந்தனை வியப்பை ஏற்படுத்துகிறது. காவிரிக் கரை வழக்கமாக உடையும் இடத்தில் ஏற்பட்டிருந்த வடிகாலுக்குக் குறுக்கே மாபெரும் கற்களைக் கொண்டு மணல் அடித்தளத்தின் மேலேயே அணையை அமைத்தான்.   காவிரி உள்ளளவும் அக்கற்கள் நிலைத்திருக்கும்படி அணையைக் கட்டினான்.
கீழே காவிரியிலும் அதனின்று பிரியும் வெண்ணாற்றிலும் பாசனத் தண்ணீரை எளிதில் தள்ளுவதற்கு வேண்டிய உயரத்துக்கு, அணையை எழுப்பியுள்ளான் கரிகாலன். ஆற்றைத் தோண்டி, பாறையைக் கண்டு அதன்மேல் அணையைக் கட்டுவது போல் அன்று மணலையே அடித்தளமாகக் கொண்டு அணை கட்டுவது அதற்குத் தனித் திறமை வேண்டும். மேல் நாட்டவருக்குக்கூட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்வரை இதில் அதிக அனுபவம் கிடையாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், காவிரித் தலைப்பிலும் நீரொமுங்கி மதகுகள் அமைத்-தார்கள். இதனால் காவிரியிலும், வெண்ணாற்றி-லும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண்டாயிற்று. கரிகாலன் அமைத்த கற்களின் மேலேயே கல்லணைக்கு ஒரு நீரொமுங்கி கட்டினார்கள்.

கல்லணை ஓரத்தில் மணற் போக்கிகளும் அமைத்தார்கள். இவ்வமைப்புகளால், காவிரியிலும் வெள்ளாற்றிலும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண்டாயிற்று. கொள்ளிடத்திலுள்ள அணைக்கரையில் பாசனத்துக்கு, கல்லணை மணற் போக்கிகள் வழியாகத் தண்ணீரை அனுப்பவும் முடிகிறது. வெள்ளத்தை மீண்டும் ஒரு முறை கொள்ளிடத்திற்குள் வடிப்பதும் இயலுகிறது. பின்னர், 1934இல் மேட்டூர் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்திய பொழுது, புதிய கல்லணைக் கால்வாய் தலைமதகுக்காக வெண்ணாற்றுத் தலை மதகுக்கு அதன் தெற்கில் ஒரு நீரொமுங்கி அமைத்தனர்.
இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளாக விரிவு அடைந்துள்ள கல்லணை அமைப்புகள் தாம் தஞ்சைப்பாசனத்திற்கு வழிவகுத்த தலைவாசலாக அமைந்துள்ளன. கல்லணையிலிருந்து சுமார் 20 மைல் வரை, காவிரியும், கொள்ளிடமும் அருகருகே ஓடுகின்றன. கீழே போகப் போகக் காவிரி மீண்டும் குடமுருட்டி, அரசலாறு, மன்னியாறு, வீரசோழளாறு என்று பிரிந்து கொண்டே போகிறது.
கல்லணையிலேயே பிரிந்த வெண்ணாறும், வடவாறு, வெட்டாறு, வெள்ளையாறு, கோரையாறு, பாமினியாறு, முள்ளியாறு என்று பிரிந்து கொண்டே போகிறது.
சுமார் 3,000 சதுர மைல் பகுதியைச் செழிக்கச் செய்துவிட்டு, கிளைகளில் சில மீண்டும் ஒன்று சேர்கின்றன; சேர்ந்து இனிப் பயன்படுத்த முடியாது என்றுள்ள கடை கோடிக் கழிவு நீரையும் மழைத் தண்ணீரையும் சுமந்து கொண்டு கடலில் கலந்து விடுகின்றன.
கல்லணைக்கு வேண்டிய பெரிய கற்களையெல்லாம் திருவெறும்பூர்ப் பகுதியிலிருந்து கொண்டு வந்து தடுத்துக் கட்டினான் என்று கூறுகின்றனர்..

கடல் ஆய்வாளர் திரு.ஒரிசா.பாலு...!

கடல் ஆய்வாளர் திரு.ஒரிசா.பாலு...!

இது விஞ்ஞான யுகம்தானே?. இன்றைய விஞ்ஞானிகள் கடல் நீரோட்டத்தை பற்றி எந்த அளவிற்கு அறிவார்கள்?
அதை நாடுவிட்டு நாடு செல்வதற்கு (கடல் வழி போக்குவரத்திற்கு) சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அறிவார்களா?
இதை நமது முன்னோகள் எந்தகாலத்தில் அறிந்து வைத்திருந்தார்கள், பயன்படுத்தினார்கள் என்பதைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
இந்தியாவின் தலை சிறந்த கடல் ஆய்வாளர்களுள் ஒருவரான திரு.சிவஞானம் பால சுப்பிரமணி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்.



ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.


முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர்.
பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான்.
ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன.
பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது.
பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன.
பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் பாலசுப்பிரமணி.
உலகெங்கும் பத்தொன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழ் பெயரில் உள்ளது : 

இவரது முகநூல் பக்கத்தை பார்வையிட பின்வரும் இணைப்பிற்கு செல்லவும். 
Sivagnanam Bala Subramani 
இவரது திறமையான ஆய்வுகளுக்காக பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Tuesday, 2 June 2015

குமரிக்கண்டம்

குமரிக்கண்டம்

 
 
 
இளைய சமுதாயம்

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ
்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!
தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !
இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !
முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !
நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !
தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்

Wednesday, 4 February 2015

குமரிக்கண்டம்

“மூ” கண்டமும் “குமரிக்கண்டமும்” ஒன்றா? – Lemuria 01


ஆரம்பத்தில் லெமூரியா (lemuria) தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் காணப்படுகின்றமையால் ஓர் சிறந்த உண்மைத்தன்மை மிக்க ஆராச்சிக்கட்டுரையாக என்னால் அதைகொண்டுசெல்வது கடினமான காரியம். அதேவேளை இப் பதிவினை வாசிக்க வந்திருக்கும் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் லெமூரியா கண்டம் பற்றி தெரிந்திருக்கும். எனவே அவர்களும் தமக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டாக வழங்கும் பட்சத்தில் இத்தொடரானது பயன் மிக்கதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
——————————————————————————————–
“லெமூரியா” என கூகிலில் தேட ஆரம்பித்ததுமே லெமூரியாவின் இருப்பிடம்( இருந்த இடம்) தொடர்பான முரண்பாடுமிக்க தகவல்கள் வர ஆரம்பிக்கின்றன. அதாவது “மூ (mu)” எனும் பெயருடன் பசுபிக் சமுத்திரத்தில் காணப்பட்ட கண்டமே லெமூரியா என பொருள்படும் வகையில் தகவல்கள் காணப்படுகின்றன. அதே வேளை சில படங்கள் இந்து சமுத்திரத்தில் இருந்த கண்டம்தான் “லெமூரியா” என கூறுகின்றன. இங்கு நானும் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய கண்டம் பற்றியே எழுதவுள்ளேன். காரணம், உலக வரைபடத்தில் காணப்படும் வடஅமெரிக்க தென்னமெரிக்க கண்டங்கள் இலகுவாக அப்பிரிக்க ஐரொப்பிய கண்டங்களுடன் இனைக்க கூடிய வாறு காணப்படுகின்றன. (கற்பனை செய்து பாருங்கள், தென் அமெரிக்காவின் வலப்பக்கத்திலுள்ள கூர்ப்பகுதி ஆபிரிக்காவின் இடப்பக்கத்திலுள்ள குழிந்த பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும். அதே வேளை ஆபிரிக்காவின் இடப்பக்க முனைப்பகுதி வட தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும்.) ஆகவே, என்னை பொறுத்த வரையில் இவ் இடைப்பட்ட பகுதியில் கண்டம் இருந்திருக்க சாத்தியமில்லை. ( அவுஸ்ரேலியாக்கண்டத்தை ஆபிரிக்கா அல்லது ஆசியா கண்டத்துடன் பொருத்தி பார்ப்பது கச்சிதமானதாக இல்லை)
இன்னொரு காரணமாக, பூமியுடன் ஒரு பாரிய விண்கல் மோதிய போது பசுபிக் சமுத்திரத்தில் இருந்து பிளவுபட்டு போன ஒரு பகுதியே காலப்போக்கில் ஈர்ப்பு விசையின் காரண‌மாக சந்திரனாக உரு மாறியதாக விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு கருத்து நிலவிவருகிறது. சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் சில கணிமங்கள் பசுபிக் சமுத்திரத்திலும் உள்ளனவாம். ( இது பூமியில் உயிரினம் தோன்ற முன்னர் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இன்னொரு சாரார் இவ் மோதலே டைனோசரின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் மனித சமுதாயம் அப்போது தோன்றி இருக்கவில்லை என்பது தெளிவு.) பதிவு நீளமாகுகிறது மற்றைய ஆச்சரிய தகவல்களை பின்னர் பார்க்கலாம்…. இது ஒரு கலந்துரையாடல்…. உங்களது கருத்துக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன

கண்ட நகர்வும் லெமூரியாவும்! – Lemuria 02



போனபதிவில், மூ மற்றும் லெமூரியா பற்றி பேசிய அதேவேளை லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன்.
ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள சரிவுகள் ஒன்றை ஒன்றுடன் இணைக்க கூடியதாக இருக்கின்றதாம்.) இது நிகழ்காலத்தில் பார்த்தறியக்கூடிய ஒரு விடையம்.
ஆகவே, இந்து சமுத்திரத்தில் தான் லெமூரியா இருந்திருக்கும் என்பது தெளிவாகுகிறது. (மாற்றுக்கருத்துக்கள் அல்லது இந்து சமுத்திரத்தில் இருந்தமைக்கான வெறு சான்றுகள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.)
இனி “லெமூரியா” எப்படி அழிந்திருக்கும் என பார்க்கப்போனால் எனக்கு பல காரண்ங்கள் தோன்றுகின்றன…
அவ‌ற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம். (இத்தொடரை நான் உடனுக்குடன் ரைப் பண்ணுவதால் சில சமையங்களில் ஒரு ஒழுங்குமுறை காணப்படாது. அதையெல்லாம் பெரிய விடையமாக எடுக்காதீர்கள்!(???))
கண்ட நகர்வு இதை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள்…
அதாவது பூமியில் பல தட்டுக்கள் காணப்படுகின்றன (அந்த தட்டுக்களின் மேல் தான் நாம் வாழும் நாடுகள், கடல்கள் என்ப இருக்கின்றன.) அந்த தட்டுக்கள் நிலையாக இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளன. என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விடையம். ஆனால் இன்னொரு முக்கியமான விஷையம் என்னவென்றால்… அத்தட்டுக்கள் சாதாரண‌மாக நகராமல் ஒரு சிறிய(!!!???) மேல் கீழான அசைவினையும் கொண்டுள்ளன. ( நாங்கள் விளையாடிய “ஸீஸோ” விளையாட்டுமாதிரி) அத்தோடு ஒவ்வொரு தட்டிற்கும் இந்த நகர்வுவேகம்,அசைவு வேகம் என்பன மாறுபட்டிருக்கின்றது.
(மேற் கூறியதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்)
இந்த தட்டுக்களின் நகர்வினாலேயே இமைய மலையின் உயரம் வருடா வருடம் ஒரு சிறிய அதிகரிப்பை காட்டுகிறது. (என்னை பொறுத்தவரையில் எவெறெஸ்ட் சிகரத்தில் உயர அதிகரிப்பு தெரிய வாய்ப்பில்லை. காரணம், புவி வெப்பமடைவதன் காரணமாக பனி உருகுகிறது… ஆகவே நகர்வினால் ஏற்படுத்தப்படும் உயர்வு கணிக்க முடியாதிருக்கலாம்) இங்கு இமயமலையின் கீழ் இரு தட்டுக்கள் பொருந்தியுள்ளன என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
இந்த இமயமலை தோன்றியதே இரண்டு தட்டுக்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதியதால் தான்!
(இமயமலைப்பகுதியிலுள்ள பாறைகளில் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது நம்பாதவர்களுக்காக)
சுனாமி ஏற்பட்டதும் இரு தட்டுக்களின் முறுகல் தான்!
இன்றைய பதிவு சொல்ல வந்த விடையத்தை(எவ்வாறு அழிந்தது) சொல்லமுதலே நீள்மாகிவிட்டது.
ஒன்றை விளக்க வெளிக்கிடும் போது பல பாதைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அப்போது தான் நாம் சொல்லவருவது ஒரு நம்பகத்தன்மையானதாக இருக்கும்.
இது ஒரு கலந்துரையாடல்…. உங்களது கருத்துக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன! ( ஏன் என்றால் நான் ஒன்றும் பெரிய அறிவாளி இல்லை! வாசிச்சது, கேட்டது , ஜோசித்தது எல்லாம் சேர்ந்து தான் இந்த ஆக்கம். அதனால், இத்தொடரை பிரயோசனமாக்குவதற்கு உங்களது பங்களிப்பு நிச்சயம் தேவை!)

லெமுரியா அழிந்தது எப்படி? தப்பியது யார்? – Lemuria 03



இங்குள்ள படத்தை அவதானிக்கவும் குமரிக்கண்டம் இருந்ததாக நான் கூறும் இடத்தின் மத்தியில் 4 புவித்தட்டுக்கள் ஒன்றுடனொன்று இனைந்திருப்பதை அவதானிக்க முடியும். இந்த நான்கு தட்டுக்களிலும் ஏற்பட்ட எதிர் எதிர் திசைகளிலான அசைவே குமரிக்கண்டம் பிளவு பட்டு நீரினுள் மூள்கிப்போக காரண‌மாக இருக்கும். இங்கு முக்கியமாக நோக்க வேண்டிய இன்னொரு விடையம் என்னவென்றால் இத்தட்டுக்கள் விலகியது என்பதை விட நான்கும் உள்னோக்கி குவிந்தது என்பதே ஏற்றுக்கொள்ளத்தக்கது.
இலங்கை, மடகஸ்கார் போன்ற நாடுகள் உன்மையில் குமரிக்கண்டத்தை சேர்ந்த நாடுகளே! இவை குமரிக்கண்டத்தின் எல்லைப்பகுதிகளில் காண‌ப்பட்ட மலைப்பிரதேச நாடுகளாகும். என‌வேதான் லெமூரியா மூழ்கியபோதும் இவ் நாடுகள் தப்பிபிழைத்துள்ளன. ( இதை, தட்டுக்கள் உள்னோக்கி குவிந்துள்ளன என்பதற்கான ஒரு சான்றாக கொள்ள முடியும்). இங்கு “இந்த நான்கு தட்டுக்களும் திடீரென ஒரே நாளில் தமது மாற்றத்தை வெளிப்படுத்தி இருக்குமா?” எனும் கேள்வி எழுகிறது. அவ்வாறு ஒரே நாளில் நடைபெற்றிருப்பதற்கு புவியியலில் சாத்தியமில்லை. “அப்படியானால் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் எங்கே? அவை பிறபகுதிகளுக்கு குடிபெயரவில்லையா?” எனும் தொடர் கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக அங்கிருந்த மனித சமுதாயம் எங்கே? எனும் ஒரு பெரிய கேள்வி எழுகிறது. ( இங்கு, மனித சாமுதாயத்தின் தொட்டிலாக லெமூரியா கருதப்படுவது நினைவுகூறத்தக்கது.)
இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் “பொரிக்ஷா” எனும் ரஷ்ஷிய சிறுவன், தான் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாகவும்; அப்போது அடிக்கடி தான் பூமிக்கு வந்து போய் இருப்பதாகவும்; பூமியில் குமரிக்கண்டபகுதியில் அறிவில் மேம்பட்ட 9 அடி உயரம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்தார்கள் என‌வும் கூறியுள்ளான். சிறுவனின் உண்மைத்தன்மை இன்னும் ஆறியப்படவில்லை. ஆனால், எமது புராணங்களில் 9 அடி மனிதர்களை பற்றி பல பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அரக்கர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்).
அத்துடன் பரிமாண வழர்ச்சி படியை பார்க்கும் போது சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு படி காணாமல் போயுள்ளது. ( இது பரிமாண கொள்கையின் தந்தையான சார்ல்ஸ் டாவினால் ஏத்துக்கொள்ளப்பட்ட கருத்து.) இப்போது சமீபத்தில் சீன ஆய்வாளர்களால் இந்தோனேஷிய பகுதியில் ஒரு வித்தியாசமான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது நியான்டர்தார்ஸ் களினுடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 

அழிந்து போன உயிரினம் லெமூரியாவில் வாழ்ந்ததா? – Lemuria 04



போன பகுதியில் நியான்டர்தார்ஸ் ( neanderthal ) பற்றி எழுதியிருந்தேன், ஆனால் நியான்டர்தார்ஸ் வாழ்ந்த காலப்பகுதி லெமூரியாவிற்கு முன்னரானது என கருத்து நிலவி வருகிறதே… அது பற்றி இன்று பார்ப்போம். :)
சமீபத்தில் சீன ஆராச்சியாள‌ர்களால் இந்தோனேசிய பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நியான்டர்தார்ஸினுடையதாக இருக்கலாம் என கருதப்பட்டது. நியான்டர்தார்ஸ் என்றழைக்கப்படும் உயிரினம் சுமார் 40 லட்சம் ( நான் குறிப்பிட்ட காலம் பிழையாக இருக்கலாம், சரியானது தெரிந்தவர்கள் பின் குறிப்பிடவும்.) ஆண்டுகளுக்கு முன் வரை மனிதனுடன் வாழ்ந்த உயிரினம். மனிதன் பரிமாண வளர்ச்சி பெற்ற அதே மூதாதையரிடமிருந்தே அவ் உயிரினமும் தோன்றியிருந்தது. உருவ அமைப்பிலும் மனிதனை ஒத்திருந்தாளும்; சில முக்கிய வேறுபாடுகள் காணப்பட்டன. அதாவது, தலை சாதாரன மனித தலையை விட சற்று பெரிதாகவும், நெஞ்சுப்பகுதி சற்று முன்னோக்கி நீண்டதாகவும், முக்கியமாக மனிதனை விட உடல் வலு மிக்கவைகளாக‌ காணப்பட்டாலும் மூளைவளர்ச்சி ஒப்பீட்டு ரீதியில் மிக குறந்ததாக இருந்துள்ளது. வழமை போலவே இவ் உயிரினமும் ஆதி மனிதனின் வேட்டையில் முற்றாக ஒழிக்கப்பட்டது. ( நியான்டர்தார்ஸ்ஸின் உடலில் 13 சோடி விலா எலும்புகள் காணப்பட்டுள்ளன. இன்றும் மனிதரில் 5% ஆனோருக்கு 13 சோடி விலா எலும்புகள் உள்ளனவாம். அப்படியானால்… இனக்கலப்பு நடந்திருக்கலாம்… (சாதாரண மனிதரில் 12 சோடி விலா எலும்புகளே இருக்கும்.))
ஏன் நியான்டர்தார்ஸ் பற்றி சொல்ல வந்தேன் என்றால்…
நமது புராணங்களில் (இராமாயணம்) ஹனுமார் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை அவர்கள் மனிதர்களுடன் (ராமர் முதலானோர்) இருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக ஹனுமார் நியான்டர்தார்ஸ் இனத்தை சேர்ந்தவர் என சொல்ல வரவில்லை, மனிதன் பூரண பரிமாண வழர்ச்சியை எட்டமுன் நியான்டர்தார்ஸ்+ஆதி மனிதன் இக்கு இடைப்பட்ட ஒரு உயிரினம் இருந்துள்ளது. ( டாவினின் பரிமாண படியில் காணாமல் போனது இதுவாக இருக்கலாம்.) அந்த இனத்தின் மிஞ்சிய குழுவே வாலி,சுக்ரீவனுடைவது. எமது புராணங்களில் கூட மனிதனுடையதும் குரங்கினதும் உடலமைப்பை இணைத்தது போன்றே இவர்களது உடல்வாகு சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இராமாயணம், மகாபாரதம் என்பவை வெறும் இலக்கியமோ புராணமோஇல்லை. அவை உண்மையில் நடந்த வரலாறு.(பிற்காலங்களில் இட்டுக்கட்டப்பட்டு புராணமாக்கப்பட்டு விட்டது. ஏன்…??? அது பிறகு…)
முக்கியமாக அது லெமூரியாக்கண்டத்தில் வாழ்ந்த அறிவுமிக்க, உயர்ந்த நாகரீகம்மிக்க மனிதர்களுக்கிடையே நடந்த வரலாற்று சம்பவங்கள்.
மேருமலை போன்றவை வெறும் கற்பனையல்ல. அவை அனைத்தும் லெமூரியாக்கண்டத்தின் மத்தியில் பெரும் சுவர் போன்று அமைந்திருந்த மலைகள். ( இன்றைய கிறீன் விச்சுக்கும் அதற்கும் தொடர்புண்டு; அதை பின்னர் பார்க்கலாம்…)
லெமூரியா கண்டத்தின் மத்தியில் தொடர்ச்சியான நீண்டமலைத்தொடர் காணப்பட்டுள்ளது. ( இந்து சமுத்திரத்தின் ஆழங்களை ஆராயும் போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட ஒரு நீண்ட தூரத்துக்கு கடலின் ஆழம் குறைவாகவுள்ளது.)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                                                               

Lemuria 05


போனபதிவில் லெமூரியாவையும் இராமாயணத்தையும் ஒப்பிட்டு பார்த்திருந்தோம். அங்கு ஒரு சிக்கல் எழுகிறது…
அதாவது, இராமாயணத்தில் தற்போதைய பாக்கு நீரினையை கடந்தே இராமர் இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் பார்க்கும் போது, லெமூரியா கண்டத்தில் இராமாயணம் நடந்தது என்பது பொய்யாகிறது. எனினும், இன்றைய மதுரையல்ல உண்மையான மதுரை. கடல் கோல்கள்,கடலரிப்புக்கள் காரணமாக மாற்றமடைந்த 3வது மதுரையே இன்றைய மதுரை. ( நிரூபிக்கபட்டது). அதே போல், இந்தியாவிலிருக்கும் “திருநெல்வேலி” எனும் நகர் பெயர் இலங்கையிலும் ஒரு பிரதேசத்துக்குண்டு.
(சற்று திரிபடைந்து, மொழி நடைக்கேற்ப‌ “தின்ன வேலி” என கூறப்படுகிறது.) அதா போல் தான் வத்தளங்குன்று போன்ற பிரதேசங்களும்.
இவ்வாறு தாம் வாழ்ந்த இடங்களின் பெயர்களை புதிதாக வாழப்போகும் இடங்களுக்கு வைப்பது, அக்காலத்தில் உலக மரபு, சம்பிரதாயமாக இருந்துள்ளது. (பல நாடுகளில் இப்படி ஒரே பெயர்கள் இருக்கின்றனவாம்.)
ஆகவே, என்னை பொறுத்த வரையில் இப்போதிருக்கும் இலங்கையல்ல இராமாயணத்தில் கூறப்பட்டது. இப்போது இருப்பது பண்டைய இலங்கையின் மலைப்பகுதி பிரதேசமாகும். ( தற்போதைய இலங்கையின் புவியியல் அமைப்பை பார்த்தாலே தெரியும். இலங்கை ஒரு மலை பிரதேசத்திலிருந்த நாடு என்பது.)
நிரூபிப்பதற்கு சான்றுகள் குறைவாயினும் தொலமியின் 1 வது உலக வரைபடத்தை இதற்கு ஒரு சான்றாக கொள்ளலாம்.
தொலமியின் உலக வரைபடத்தை பார்த்தோமானால், இலங்கை தீவானது 14 மடங்கு பெரிதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளை சரியாக கணிப்பிட்ட தொலமி இலங்கையை தவறுதலாக குறிப்பிட்டிருக்க சந்தர்ப்பமில்லை.
( தொலமியின் வரைபடம் தொடர்பாக பெரிய சர்ச்சையே உள்ளது. 1) தொலமி தாம் கீறியதாக சொல்லும் வரைபடம் உண்மையில் அவர் கீறியதல்ல; அது ஒரு பலங்குடி மக்களிடையே புலக்கத்திலிருந்தது. 2) அது வெளியுலகத்தவரால் வரையப்பட்டது. 3) நாம் தொலமியினது எனக்கூறுவது தொலமியினதே இல்லை. …)
எது எப்படியோ இலங்கை லெமூரியா கண்டத்திலிருந்த ஒரு முக்கிய நாடு.
ஏற்கனவே கூறியிருந்தேன் “லெமூரியா கண்ட‌த்தின் மத்தியில் பாரிய மலைத்தொடர் இருந்தது” என. அதன் கிழக்கு பகுதியிலேயே இலங்கை இருந்துள்ளது. ராமர் முதலானோர் வாழ்ந்தது மேற்கு பகுதியில். மலைத்தொடர்களுக்கிடையே நீரோடைகள் காணப்படுவது சகஜம், அப்படி பட்ட நீரோடையை தாண்டி கிழக்கை நோக்கி படையெடுத்ததே, பாக்கு நீரினை யை கடந்ததாக கொள்ளப்படுகிறது.
பண்டைய அறிவு என்பது. தற்போதைய அறிவியல் விஞ்ஞானத்திற்கு நிகரான ஆனால் முற்று முழுதாக வேறுபட்ட தொழில் நுட்ப ஆறிவாகும். உதாரணமாக நாம் இன்று பயன்படுத்தும் கணித குறியீடான “ஃபை”(22/7) என்பது 16 ம் நூற்றாண்டில்(??) அறியப்பட்ட ஒன்று. (வட்டம் தொடர்பான பாவனைகளுக்கு பாவிக்கப்படுகிறது.)
ஆனால், கி.மு 10000 5000 இடைப்பட்ட எகிப்திய பிரமிட்டுகளில் இத்தொழில் நுட்பம் கச்சிதமாக பாவிக்கப்பட்டுள்ளது!!!
                                   

Lemuria 06

ஏலியன்ஸ் (வேற்று கிரக வாசிகள்) பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவை தொடர்பான சம்பவங்களை பார்த்தோமானால்… அவர்கள் பயணிப்பதாக கருதப்படும் பறக்கும் தட்டானது; திடீரென திசைகளை மாற்றத்தக்கதாயும், பறப்பதற்கு ஓடுபாதை தேவையற்ற ஒன்றாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.
அதேவேளை இராமாயணத்திலும் இராவணனின் வாகணமான புட்பக (புஸ்பக வோ தெரியல) விமானம் விபரிக்க பட்டுள்ளதும் இதே முறையில் தான். இராவணனுக்கு 10 தலைகள் என கூறப்பட்டுள்ளது அது அவனது அறிவு மேம் பாட்டை குறித்ததாக இருக்கலாம். காலப்போக்கில்… லெமூரியாவின் பேரழிவின் பின்னர்…அவை மாற்றப்பட்டு கதைகளாகியிருக்கலாம்.
(இன்னும் நாம் ஏலியன்ஸின் பறக்குந்தட்டுக்கு கிட்டக்கூட வரவில்லை… பறக்கும் தட்டின் இயக்கம் பற்றியும் பொரிக்ஷா கூறியுள்ளான்.)
பொரிக்ஷா எனும் ரஷ்ய சிறுவன் ஏற்கனவே… லெமூரியாவில் வாழ்ந்தவர்கள் அறிவாளிகள் என கூறியுள்ளான். (பொரிக்ஷா பற்றி ஏற்கனவே குறிப்பு தந்திருக்குறேன்.)
மேலும் இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளபட்ட சிறிய அளவிலான ஆராச்சியின் போது… சில பாறைப்படிவங்களில் அணு படிவுகள் காணப்பட்டுள்ளன. ( இது “அலெக்ஸான்டர் கொண்ட்ற டேவ்” எனும் பிரபல ஆராச்சியாலரின் தலைமையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது அறியப்பட்டுள்ளது. இது அவரால் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்தது.)
இது பற்றி அவர் குறிப்பிடுகையிலேயே… எம்மை விட அறிவில் மேம் பட்டவர்கள் வாழ்ந்திருக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம் என ஐயம் வெளியிட்டுள்ளார்.
சில நேரம் அது இயற்கையானதாகவும் இருக்கலாம்.
அதே வேளை எகிப்து நதி பகுதிகளிலும், யூப்ரட்டீஸ் நதிகரையிலும் கண்டெடுக்கப்பட்ட புராதன பொருட்களை பார்க்கையில் அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களானது திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்த எழுத்துக்களாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ( முன்னர் சுமேரிய எழுத்துக்கள் என கருதப்பட்டு வந்தது. எனினும் பின்னைய ஆராச்சிகளின் மூலம் அது அதிகமாக திராவிட எழுத்துக்களை, சொற்களை ஒத்துப்போவது அறியப்பட்டது. பொதுவாக இடத்தை குறிப்பதற்கு ஊர் எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது.( இன்னும் பல சொற்றகள் உதாரணமாக போட்டிருந்தார்கள் எனக்கு மறந்துவிட்டது.) ஈரானில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போதும், திராவிட, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அன்றாட பாவணைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
இன்னொரு விடையம்… உலக வரை படத்தில் தெற்கு நோக்கி செல்லச்செல்ல திராவிடத்தன்மை அதிகரிப்பதை காணமுடியும். ( நிரூபனமானது.)
ஆகவே… இந்து சமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்தது… அங்கு திராவிட மொழிக்கு நிகரான மொழி பேசப்பட்டது எனும் வாதம் நிரூபனமாகிறது.

Lemuria 07

                                         
இன்றைய பதிவில் லெமூரியாவில் நாம் பயண்படுத்திய நாட்காட்டி (கலண்டர்) தொடர்பான தகவல்களைப்பார்ப்போம்.
இன்று எவ்வாறு “கிறீன் விச்” எனும் இடம் சர்வதேச நியம நேரமாக‌ (0) தொழிற்படுகிறதோ… அவ்வாறே லெமூரியர்காலத்தில் ஒரு இடம் இருந்துள்ளது. அது இலங்கையில் இருந்த ஒரு இடமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது. காரணம்… நமது காப்பியங்களின் படி 3 இலங்கை இருந்ததாக கூறப்படுகிறது. ( இது நான் ஏற்கனவே கூறி இருந்த மதுரை தொடர்பான சம்பவங்களுடன் ஒத்து போக கூடியது. அதாவது வெவ்வேறு அழிவுகளின் போது… இடம் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டுள்ளது…
இதன் படி பார்க்கையில் தற்போதைய இலங்கை உண்மை இலங்கையின் எஞ்சிய பகுதியே என்பது தெளிவாகின்றது… இது தொடர்பாக முந்தைய பகுதிகளில் ஏற்கனவே கூறியுள்ளேன்.) தென்னிலங்கை… இது இராவணனின் தலை நகரம்… நிரட்ச இலங்கை… இது 0 பாகை புவி அச்ச கோட்டில் ( நில நடு கோடு ) உள்ளது… ( இவை தொடர்பான தகவல்கள் ஐப்பெருங்காப்பியங்களில் உள்ளனவாம் \\\குமரி மந்தன் குறிப்பு\\\ ) இதை தான் மாயனின் சூரிய சித்தார்ந்தம் எனும் நூல் லங்கா புரி என கூறுகிறது.
லங்காபுரி… ரோமபுரி…சித்தபுரி…பத்திராசுவம் எனும் நான்கு… முக்கிய பெரும் நகரங்களும்… ஒன்றுக்கொன்று 90 பாகையில் மேற்காக அமைந்து இருந்ததாக குறிப்புகள் உள்ளன. இந்த நில நடு இலங்கையே முன்னைய காலங்களில் நாடுகளின் நேரங்களை கணிக்கவும் ( இன்றைய கிரீன் விச்)… ஆண்டு கலண்டரை உருவாக்கவும் மைய புள்ளியாக இருந்து இருக்கின்றது. பண்டைய காலங்களில் 5 வகையான கலண்டர்கள் பாவணையில் இருந்து இருக்கிறது… அதில் 2 வகையானது நீண்டகாலம் நிலைத்து நின்றுள்ளது… (1. நிலா ஆண்டு முறை. 2. சூரிய ஆண்டு முறை.) 5 வகையான ஆண்டு முறைகள் இருந்தமையாலேயே… பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு… என வெவ்வேறு… பண்டிகைகளாக கொண்டாடும் முறை நிலவி வந்துள்ளது. ( இன்றும் நிலவுகிறது…) இதில்… இன்றைய ஆண்டு முறையை மிகவும் ஒத்த தாக இருந்தது… சூரிய ஆண்டு + சந்திர ஆண்டு முறையே…
அதாவது… சூரியன் தன்னை தானே… அண்னளவாக சுற்ற 25 1/3 நாள் எடுக்கும்… அதே வேளை பூமியும் சுற்றுவதால் புவியில் இருந்து பார்க்க 27 1/3 நாட்கள் போன்று தோன்றும்… சூரியனில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கரும்புள்ளி ஒவ்வொரு 27 1/3 நாளுக்கும் ஒருக்கா புவியை நோக்கி வருகிறது… ( புவியின் காந்த புலத்தை பாதிக்க தக்கது…) இதை அடிப்படையாக கொண்டே 27 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு பெளர்ணமி நாளில் நிலவுக்கு பின்னர் இருக்கும் நட்சத்திரம்…. அடுத்த பெளர்ணமியில் வருவதில்லை… அடுத்து அதே நட்சத்திரம் வர 12 மாதங்கள் எடுக்கும்… ( வர எடுக்கும் காலத்தை கொண்டே இந்த 12 என்பது கணிக்கப்பட்டது…. தற்போது 10 எவ்வாறு ஒரு அடியாகாக பயண்படுகிறதோ… அவ்வாறே… முன்னர்… 12 பயன்பட்டுள்ளது…. ( முன்னைய அளவு முறைகளை பார்க்கவும்… அனைத்தும் 12 ஐ அடியாக கொண்டுள்ளது…)) இந்த 12 மாதங்களையும் கணிப்பதற்காகவே ( நினைவு வச்சுக்கொள்ளவே) 12 இராசிகள் எனும் நட்சத்திர உருவ முறை பாவனைக்கு வந்தது. ( வேறு காரணங்களும் இருக்கு… அது இந்த தலைப்புக்கு பொருத்த மற்றது.)
இதை கணித்த முறை மிகவும் வியப்பானது… காரணம்… அந்த காலத்தில் எவ்வாறு இவ்வளவு தெளிவாக கணிப்பிட முடிந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது… இந்த ஆண்டு முறை பற்றி மிக விரிவாக குமரிமைந்தன் என்பவர் பதிவிட்டுள்ளார்….
16 ம் நூற்றாண்டில்… போப் கிரகெரி… என்பவராலேயே… இன்றைய ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுக்கு முன்னர் லெமூரிய கலண்டர் படி தை 1 ( இன்றைய ஜனவரி 14) தான் ஆண்டின் தொடக்க நாளாக இருந்தது. ( இது வரலாற்று உண்மை!!??) மதம் அற்ற தமிழர்களின் முறையை பின்பற்றுவதை விரும்பாத… காரணத்தாலேயே… கிரகெரி… ஆண்டு முறையை மாற்றி அமைத்து இருந்தார்…
                                                                                          

Lemuria 08

                                                            

நூறு… இருனூறு வருடங்களுக்கு முன்னர் கூட, உலகின்…முக்கியமாக ஐரோப்பிய நாடுகளின் சட்டங்கள், தொழில்நுட்ப நுட்பங்கள் என்பன‌ இலத்தீன் மொழியிலேயே இருந்தது. ( ஐரோப்பிய நாடுகளில் பேசப்பட்டுவரும் மொழிகள் பல கிரேக்க மொழியை அடிப்படையாக கொண்டதாகும்.)

இதற்கான காரணம்… குளூக்குறி (?) ( இரகசிய மொழி) / மறை மொழியில் சட்டங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவேயாகும்.
காந்தியடிகள் சட்டம் படித்தபோது கூட, ஸ்பெசலாக கிரேக்க மொழியை கற்க பயிற்சி எடுத்து இருந்தாராம்.
இதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம்,
சமஸ்கிரத மொழிக்கும் தமிழுக்கும் இடையிலான ஒரு தொடர்ப்பை காட்டுவதற்கே.
குமரிக்கண்டத்தில்…
தொழில் நுட்பம், ஆட்சிமுறைகள் என்பன வளர்ச்சியடைந்த போது… அதை ஒரு குறிப்பிட்ட மக்கள் மத்தியில் மட்டும் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருவதற்கு; அன்றைய நடைமுறையிலிருந்த மொழியைவிட இன்னொரு இரகசிய மொழி தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்டதே இந்த சமஸ்கிரத (sanskrit ) மொழியாக இருக்கலாம். ( நன்றி : குமரி மைந்தன்). ஆனால், துரதிஸ்டவசமாக வரலாற்று சம்பவங்கள் கூட சமஸ்கிரத மொழியில் மட்டுமே எழுதப்பட்டதனால் அங்கு பேசப்பட்ட மொழி தொடர்பான சான்றுகள் இல்லாமல் போய்விட்டன. காரணம், மேல்மட்ட மக்களிடையே இந்த இரகசிய மொழி ஒரு தனி மொழியாக உருவாக தொடங்கியமையால் அவர்களால் எழுதப்படும் வரலாற்று குறிப்புகளும் அவ்மொழியிலேயே எழுதப்பட்டு விட்டது.
இன்று கூட உலகில் பேசப்பட்டு வரும் பல மொழிகளில் தமிழ் மொழியின் தன்மையும், அவ் அவ் மொழிகளின் பின்வந்த சொற்களில் சமஸ்கிரதத்தின் தன்மையும் காணப்படுகின்றனவாம்.
அடுத்து, உலகில் எழுத்து உரு இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டும் இருந்துவரும் மொழிகள் தமிழ் உச்சரிப்புடன் மிகவும் நெருக்கமாக இருக்கின்றனவாம்.
அதனால், குமரிக்கண்ட வரலாற்று சம்பவங்களும், தமிழ் மொழியின் தொன்மையான வரலாறுகளும் சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்ட நூல்களிலேயே உள்ளன. முக்கியமாக வேத நூல்களாக கருதப்படும்… இருக்கு, யசூர்,சாமம் முதலிய நூல்களில் குமரிக்கண்ட வரலாறே கதைகளாக கூறப்பட்டுள்ளன என கருதப்படுகிறது.
மகாபாரதம் குமரிக்கண்டத்தில் நடந்த ஒரு வரலாற்று சம்பவம். ( இது சம்பந்தமாக நான் ஏற்கனவே இந்த லெமூரியா தொடர்பதிவுகளில் கூறியிருந்தேன். )
அது சம்பந்தமாக மேலதிகமாக நான் தெரிந்துகொண்ட தகவல்களை இதில் குறிப்பிடுகிறேன்…
மகாபாரதம்…
பாம்பை தமது இலட்சனையாக கொண்ட ஒரு குழுவுக்கும், பருந்தை இலட்சனையாக கொண்ட இன்னொரு குழுவுக்குமிடையே நடந்த உண்மையான ஒரு போரேயாகும். பிற்காலங்களில் இந்த வரலாற்றை பதிவு செய்யும் போது… இது போன்ற ஓர் போர் இன்னொரு முறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக பல இடைச்செருகல்களுடன் ஒரு குழுவை முதன்மையான குழுவாக காட்டி… மக்களுக்கு நீதியை/ நற்கருத்துகளை புகுத்தி ஒரு போர் வெறியற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக மாற்றியமைக்கப்பட்டு இருக்கலாம். ( துரதிஸ்ட வசமாக தொழில் நுட்ப முறைகளும் மறைக்கப்பட்டு இருக்கலாம். :\ )
டெனிக்கன் எனும் பிரபல ஆராச்சியாலர் தனது நூலில் (chariots of god ) கொண்டவானம் எனும் பகுதியை அழிப்பதற்கு கண்ணனும் அர்ச்சுனனும் பயன்படுத்திய சாதனங்கள் இன்றைய அணுவாயுதத்துக்கு நிகரானது என்பதை ஒப்பிட்டுக்காட்டி இருக்கிறாராம். நாகசாகியில் போடப்பட்ட அணு குண்டுடனும் அதன் அழிவுகளுடனும் ஒப்பிட்டுள்ளாராம்.
அசுவத்தாமன் வீசிய ஒரு சாதனம் கருவிலிருந்த குழந்தைகளை கூட அழித்தது என சமஸ்கிரத நூல்களில் குறிப்புக்கள் இருக்கின்றனவாம்.
                                                                           

Lemuria 09

                                                                       
எகிப்திய நாகரீகத்தினை பார்த்தால்…
மிகவும் பிந்தங்கிய நிலையிலிருந்து திடீரென ஒரு மேன்மையான நிலையை எட்டியுள்ளமை விளங்குகிறது.
அவர்களின் தொழில் நுட்ப அறிவு திடீரென இவளவு வீரியம்மிக்கதாக மாறியமை… அங்கு ஒரு புதிய சமூகம் குடியேறியிருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் அலெக்ஸ்ஸான்டர் கொஞ்தர்தேவ் எனும் பிரபல தொல்பொருளாராச்சியாலரும் சொல்லி இருக்கிறார். அவர் அந்த சமூகம் தென் பகுதியிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும்… அது லெமூரியா கண்டத்திலிருந்து வந்து குடியேறிய சமூகமாக இருக்க வேண்டும் என்றும் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
( கொந்த்ரதேவ்… லெமூரியா கண்டம் தொடர்பாக நீண்ட கால ஆராச்சியை மேற்கொண்டு சில உண்மைகளை உலகறியச்செய்தவர் என்பதை நான் ஏற்கனவே இந்த தொடரில் எழுதியுள்ளேன்… )
அத்தோடு… வேறு ஆய்வாலர்களும்… மொசபடேனியம்..(???) மற்ற இடங்கள் மறந்துவிட்டன… போன்ற பாதையூடாக எகிப்துக்கும்… இந்திய பகுதிக்கும்… வியாபாரம் நடந்து இருக்கிறதாம்… மேலும்… அரபிக் கடலோரங்களில் எகிப்துக்கு கொண்டுவரப்பட்ட சில பண்டங்கள் காண்டெடுக்கப்பட்டுள்ளன… ( இதில் தமிழ் சுமேரிய எழுத்துக்கள் இருக்கின்றன என இந்த தொடர் பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டேன்…)
அது இருக்கட்டும்… நாங்கள் எங்களது நூல்களில் இதுகள் சம்பந்தமாக ஏதாவது இருக்கா என்று பார்த்தா… சிலது இருக்கு…
மகாபாரத்தில் நகலனின் மகன்… சுக்ராச்சாரியாரின் ம‌களை திருமணம் முடிக்கிறார்.
ஆனால், நகுலனின் மகன்… விடபமன்னனின் மகளின் மூலம் 3 பிள்ளைகளை பெற்றான்.
இதனால், ஆத்திரமடைந்த சுக்ராச்சாரியார் நகுலனின் மகனை வயோதிபமடையச்செய்கிறார். ( இங்கு தவ வலிமை மூலம் முதுமையடைய செய்வதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், அது தவ வலிமையாகவுமிருக்கலாம்… அதைவிட முன்னர் வாழ்ந்த அந்த மேம்பட்ட சமூகம்… விரைவில் முதுமையை ஏற்படுத்துவதற்காக ஏதாவது யுக்திகளை கையாண்டதாகவும் இருக்கலாம்… அந்த யுக்திகள் மறைக்கப்பட்டதுக்கு காரணம் நான் ஏற்கனவே போன பதிவில் சொன்னமாதிரி… அனைத்து மக்களுக்கும் அந்த ரெக்னிக் சென்றடையக்கூடாது என்ற உள்னோக்கமாகவே இருக்கும்.)
பின்னர்…
நகுலனின் மகன்… மீண்டும் இளமையை பெற வேண்டுமென்றால்… தனது மகன்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என பரிகாரம் கூறப்படுகிறது. சுக்ராச்சாரியாரின் மகள் மூலம் பிறந்த பிள்ளைகள் இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கவே… விடபமன்னனின் மகளின் பிள்ளைகளில் ஒருவன் ஒப்பிக்கொள்கிறான். பிறகு… இளமையைப்பெற்ற நகுலனின் மகன்…
தனக்கு உதவ மறுத்த பிள்ளைகளை நாட்டைவிட்டு துரத்துகிறான்…
இவர்களிலிருந்தே யாதவர்களும்… துரியோத‌னின் வம்சமும் உருவாகி இருக்கிறதாம். ( யார்; யார் வழி வந்தவர்கள் என்பது எனக்கு நினைவில்லை/தெரியாது… தெரிந்தவர்கள் கொமென்டில் போடவும்.)
யூதர்களின்… நூலின் படியும்…
ஆபிரஹாம் என்பவருக்கு முதலில் பிள்ளைகள் இல்லை… பின்னர் சேவகி மூலம் பிள்ளைகள் பிறக்கின்றன… நீண்ட கால்த்துக்கு பிறகு… மூத்த மனைவி மூலம் பிள்ளை பிறக்கிறது. மூத்த மகன் வெளியேறுகிறான்… அவன் வழி வந்தவர்கள் அரேபியர்கள்… இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள். என கூறப்பட்டுள்ளதாம். ( நன்றி : குமரி மைந்தன்.)
இந்த ரெண்டிலயுமே… ஒரு குழு நாட்டை விட்டு வெளியேறுகிறது…
இந்த யூதர்களின் “தோரா” நூல்…
எகிப்தில்…. அரசு உரிமை பிரச்சனை காரணமாக, ஒரு தொகை அடிமைகளுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக கருதப்படும் மோஷே (?) வினால் எகிப்திய அரன்மனை நூல்களைப்படித்து எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரம்… மிசிரத்தானம் என்ற சொல்லிற்கு தமிழ் அகராதி… எகிப்து என்று அழைக்கப்படும் நாடு என கூறுகிறது.
அதற்கான விளக்கப்படியும்… நாட்டால் விரட்டப்பட்ட ஒருவன் மிலேச்சம் எனும் தேசத்துக்கு சென்று அம்மக்களுடன் கலந்து அரசனமையால் ஏற்பட்ட பெயர் என விளக்கப்படுகிறதாம்.
——————————————————————————————–
ஆகவே…
இதன் படி பார்க்கும் போது…
லெமூரியா கண்டத்தில் இருந்து அங்குபோய் குடியேறிய மக்கள் கூட்டத்தாலேயே… எகிப்திய நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.
(ஏற்கனவே… லெமூரியாவில் பண்டைய தமிழ் ( தற்போது வெகுவாக மாறி இருக்கிறது ) மொழியே பிரதான மொழியாக இருந்திருக்கலாம் என சில சான்றுகள் மூலம் இப்பதிவில் எழுதி இருந்தேன்… இது அதை மேலும் உறுதிப்படுத்துகிறது.)
ஆனால்… பின்னர் ஏற்பட்ட சுனாமி, கண்ட தாழ்வு, ( அல்லது அணு யுத்தம்(???) ) போன்ற காரணங்களால்… லெமூரியா திடீரென அழிய… எகிப்தியர்கள் முன்னெச்சரிக்கையாக வரலாற்றை திறமையாக பதிந்து வைத்தார்கள். ( அது விளங்கி கொள்ள முடியாத சித்திர எழுத்திலிருப்பது துரதிஸ்டம்.)
மேலே இருக்கும் வரலாற்று சம்பவங்களிலிருந்து இன்னொன்றும் உறுதியாகிறது…
அதாவது… யூதர்களின் தோரா… எகிப்திய நூலகத்திலிருந்து எழுதப்பட்டது என்றால்… எகிப்தை உருவாக்கிய நகுலனின் மக்களின் வம்சத்தினரால்… எகிப்தில் பதியப்பட்ட லெமூரிய (மகாபாரத) வரலாறே… தோராவிலிம் ( இதை கிறிஸ்தவர்கள் “பழைய ஏற்பாடு” என அழைப்பதும் இதைத்தான்.) சில திரிபுகளின் பின்னர் எழுதப்பட்டு இருக்கலாம்…

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...