Showing posts with label வேட்டுவர் வரலாறு. Show all posts
Showing posts with label வேட்டுவர் வரலாறு. Show all posts

Thursday, 19 August 2021

தமிழின் தொன்மைக்கு ஏது ஆண்டுகள்

 

                                தமிழின் தொன்மைக்கு ஏது ஆண்டுகள்
 
    பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர்.இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற்றிலுமாகவே அழிந்தது.
முதல் பெருஞ்சுனாமி கி.மு. 60,000 ஆண்டுகளை ஒட்டி நிகழ்ந்ததாக ஆய்வறிஞர்கள் கூறினார்கள். இதற்கு அஞ்சியே குமரிக் கண்டத் தமிழர்கள் கட்டுமரங்களில் ஏறி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆசிய கண்டங்களுக்குக் குடியேறினர். இதனால் அந்தக் கண்டத்து இன்றைய மக்களிடம் திரியாத தமிழ்ச் சொற்களும், திரிந்த தமிழ்ச் சொற்களும் பற்பல இலக்கணக் கூறுகளும் இன்றும் அழியாத நிலையில் உள்ளன.
ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ;
நீ...நீங்கள் என்பதை, நீ, நிங்க என்கின்றனர். நான், நாம் ( நாங்கள் ) என்பதை நா, நாங்க என்கின்றனர். கண் ஐம்புலன்களில் சிறந்த தலையாய புலன் என்பதால், அதனை புலன் என்கின்றனர்.
என் கண் - நா புலன், உன் கண் - நின் புலன், அவன் கண் - அவன் புலன் என்கின்றனர். பிரதி பெயர்கள் நாடு விட்டு நாடு போகாது. மேலும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் கடந்த 50,000 - 30,000 ஆண்டுகளை ஒட்டியோ அல்லது அதன் பின்னரோ தமிழகத்துடன் தொடர்பு இல்லை.
ஆப்பிரிக்கப் பழங்குடிகள் :
எள் + நெய் என்பதுதான் எண்ணேய் ஆயிற்று. எனவே OIL என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் நெய் என்பதே ஆகும். தமிழகத்தில் நெய் என்ற சொல் பசுவின் நெய் என்றாகிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் வழக்கு மொழிகளில் நெய் என்பதே ஆயில். உண் என்ர வினைச் சொல் எகிப்து மொழியில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது.
 
தென் அமெரிக்கத் தமிழர் :
 
அன்னை என்ற அற்புதத் தமிழ்ச் சொல், தென் அமெரிக்காவில் ஒரு மொழியான இன்கா மொழியில் உள்ளது. சரி என்று நாம் கூறுவதைம் அவர்கள் கரி ( ச = க ) என்கின்றனர். நம் பயிர் பச்சைகளுக்குக் கடவுளாகப் பச்சை அம்மன் என்று நாம் கூறுவதைப் போல், அவர்களும் தம் பயிர்க் கடவுளாகப் பச்சை அம்மன் என்றே வைத்துள்ளனர். 60,000 - 50,000 ஆண்டுகளாக நமக்கும் தென் அமெரிக்காவின் பல குடி மக்களுக்கும் தொடர்பு எதுவும் இருந்ததில்லை.
எனவே 60,000 ஆண்டுகளுக்கு மு8ன்னரே தமிழ் செம்மையான செம்மொழியாக இருந்தது என்றால் தமிழின் வயது ( 1,00,000 ) ஓர் இலட்சம் ஆண்டுகள் என்று கணிக்கலாம். வெறும் சொல் ஆராய்ச்சிச் சான்றுகள் மட்டுமில்லை; கரி, அணு ஆய்வுகளும் ஆண்டுக் கணக்கை உறுதி செய்கின்றன.

    எம்மொழியும் எம் மொழி : உலக மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் 'அகில மொழி' யின் அற்புதங்கள்.
உலக அறிஞர்கள் பார்வையில் "பன்மொழி அறிஞர்" சாத்தூர் சேகரன் பற்றி இப்படித்தான் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள், "தமிழைப் பற்றி இது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறிடவில்லை. எனவே சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் கருத்து இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாற்றல் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தை நம்பத்தூண்டுகிறது" -
சமஸ்கிருதத்துறை தலைவர், லண்டன் பல்கலைக்கழகம், லண்டன்.
"நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை. ஹிப்ரு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உண்டு என்று. உங்கள் உரையால் பல புதிய உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறீர்கள்"
- நூலகர், ஹிப்ரு பல்கலைக்கழகம், ஜெருசேலம், இஸ்ரேல்.
"பிரமிட் கட்டியவர்களான எங்கள் முன்னோர்கள் தமிழர்களா? தமிழர்கள்தான் உலக முழுவதும் பரவி இருந்தார்களா? வியப்பிறகுரிய செய்திகளைச் சொல்கிறீர்கள்"
- கெய்ரோ அருங்காட்சியகம், கெய்ரோ, எகிப்து.
"தமிழ் மொழியின் நீள அகலம் பற்றி உலகம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். உண்மையை வெளிக்கொணர நீங்கள் ஆற்றும் பணி அருமையானது. உங்களோடு இணைந்து பணியாற்ற நான் பெருமிதம் கொள்கிறேன்"
- டாக்டர் ஹக்பாக்ஸ், மெக்சிக்கன் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா.
"இந்திய மொழிகளை மட்டுமல்ல உலக மொழிகளை எல்லாம் அறிந்திருப்பதுடன் அவற்றின் வேர்ச்சொற்களை எல்லாம் கடகடவென கூறுவதை வியக்கிறேன். நான் சீனமொழி அறிந்தவன். ஆனால் நீங்கள் சீனமொழி தமிழ் மொழி உறவு கூறியதைக் கேட்டு மலைத்து நிற்கிறேன்"
- டாக்டர் அருணபாரதி, பெனாரஸ் பல்கலைக்கழகம், காசி.
இவர்களைப் போல இன்னும் பல்வேறு நாட்டு அறிஞர்கள் நம் தமிழரை அதுவும் ஒரு தமிழ்மொழி அறிஞரை புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த" மதுரையில் அகிலமொழி பயிலரங்கத்திற்கு பிரதிமாதம் வந்திருந்து தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், அதன் இலக்கணங்களையும், ஆதாரங்களுடன் தமிழ்ச் சொற்கள் அதிக மாற்றமின்றி எப்படி பிறமொழி சொற்களாகின்றன என்றும்... தமிழே உலகமொழிகளின் தாய்மொழி
என்பதற்கும் பல்வேறு உதாரணங்களை அந்த 72 வயது இளைஞர் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் பொங்கு தமிழாக கீழ்க்கண்டவாறு மேற்கொள்காட்டி எடுத்துரைக்கிறார்.
களி (மண்) - Clay. பிறப்பு - Birth. பொறு - Bear. நாடுதல் - நாடு (ஜெர்மன்). கண் - கண் (சீனா). உப்பர் - ஊப்பர் (இந்தி).
தமிழ் சொற்களில் நடு எழுத்து மறைந்து உருவான சொற்கள்
"நாமம் - நாம் (இந்தி). தாழ்வு - தாவு (தெலுங்கு).
தமிழ் எதிர்மறை முன் ஒட்டுக்களுடன் புதிய சொற்கள்
இம் - Immoral. இல் - Illegal. நிர் - Nil. அன் - Unused. அவ/அப - Abuse.
தமிழ் சொற்களின் முன் எழுத்து விலகி புதிய சொற்கள் உருவாகின்றன.
பதின் - Ten. உருண்டை - Round. உருளை - Roll. அம்மா - மா (இந்தி). நிறங்கள் - றங் (இந்தி). உராய் - Rub. அரிசி - Rice
காரணப் பெயராகிய புதிய சொற்கள்
தேங்குதல் - Tank. ஈனுதல் - Earn என்றும்
திசை எட்டும் என்ற தலைப்பின் வாயிலாக தமிழ்மொழி பயன்பாடு தமிழரின் நாகரீகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.
* சித்திரை முதல் நாள் வருடப்பிறப்பாக இஸ்ரேல்-லில் கொண்டாடப்படுகிறது.
* உணவில் வாசனைப் பொருட்களை அரேபியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
* பச்சை அம்மன் வழிபாடு என்ற பெயரில் தென் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* பல்லாங்குழி விளையாட்டு இன்றும் ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* தமிழகத்தில் நாம் கொண்டாடும் பொங்கல் தினத்தில் அதே நேரம் "ஹொங்கரோ ஹொங்கர்" என ஜப்பானி-ல் சூரியனை வணங்கி குரலிட்டு கொண்டாடுகிறார்கள்.
* கண்-கண் காண் - காண் காண மகேந்திர + வர்ம + பல்லவர் போல மா+சே+துங் சீனாவில் பேசப்படுகிறது.
* சேவல் சண்டை, திருமண சீர் வரிசை, மஞ்சள் துணி பயன்பாடு தாய்லாந்து-ல் இன்னும் இருக்கிறது.
ஆற்று மீன் என்பதை நறு நீரு மீன் என்று ஆஸ்திரேலியா பழங்குடியின மொழியில் பேசப்படுகிறது.
* மேலும் தமிழ் சொற்களின் முன் S என்ற எழுத்து சேர்ந்து ஆங்கில சொற்கள் எப்படி உருவாகின்றன.
S பேச்சு - Speech. S மெது - Smooth. S உடன் - Sudden. S நாகம் - Snake
* தமிழ் சொற்களின் முன் எழுத்துக்கள் மாறி உருவான சொற்கள்
எட்டு - ஆட் (இந்தி) பத்து - ஹத்து (கன்னடம்) கடை - கெடா (மலாய்) பூங்கொத்து - கொத் (ஜெர்மன்)
* இலக்கிய வழக்காக மலையைக் கல் என்பர். வடபெருங்கல் என்பது இமயமலையைக் குறிக்கிறது.
கல்லூர், குண்டுக்கல், கர்நாடகம்
(கல்அறை) கல்லறா - கேரளம்
கல்லூர் - ஆந்திரம்
கல்முனை - இலங்கை
கல்லினா பாட் - ரஷ்யா
* மலை என்ற தண்டமிழ்ச் சொல்லை மலைய, மலய, மாலயா என்று வட இந்திய மொழிகள் திரித்துப் பயன்படுத்துகின்றன. இமயமலை - ஹிமாலயா என்று மலையா (ஒருநாடு) மலேயா என்றும்
* மலை / மலா ஆகி லாம என மாறுகிறது. பிறழ் விதிப்படி ய ர ல ள ழ போன்ற (LIQUID) இடையினம் தம்முள் மாறிக் கொள்வதால் லகரம் இங்கு யகரமாகிறது.
* மன் என்பதிலிருந்துதான் மனு, மனிதன், மனுசன் போன்று பல சொற்கள் உண்டாகின. பல மக்கட் பெயர்களும் கிடைத்தன.
ஹிப்ரு மொழி
மனுஏல் - மனுவேல்
தமிழ்ப் பெயர்
கருமன் / கருத்திருமன்
தருமன் / திருமன்
வட இந்தியப் பெயர்
பீமன் இராமன்
இவ்வாறு "உலக ஊர்ப் பெயர்களாக ஐந்து லட்சம் பெயர்களை ஆராய்ந்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.
உலக மக்கட் பெயர்களாக லட்சம் பெயர்களை எடுத்து ஆராய்ந்ந்து பார்த்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.
இதைப் போலவே இன்னும் தமிழ்மொழியில் அம்மா அப்பா என்ற நாவில் தவழும் சொல் உலகில் 200 மொழிகளுக்கும் மேல் பயன்படுத்தப்படுகிறது என்று தமிழ் தன் சிந்தனையைச் சிறகுகளாக இன்னும் விரித்துக் கொள்வதுபோல எடுத்துக் கூறுகிறார்.
"கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன்" ஆகும். அப்போது அங்கு இலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்து குடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது.
கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோ இந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் இலத்தீன் கிரீட் தொடர் பற்றாக இருந்தது. எனினும் திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது.
"ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது?
(1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள். குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேறினர். எனவேதான், திருவிடமொழி உலகமெங்கும் உள்ளது. அப்போதைய திருவிடமொழி பழந்தமிழே!
(2) மங்கோலியர், சீனர், மத்திய கிழக்கு மக்களான ஹிப்ருக்கள், அரபிய மற்றும் சிலாவியர், ரோமானியர், ஜெர்மானியர், மலேசிய பாலினேசியர், இந்தோ ஆரியர், தென் அமெரிக்கர், ஆப்பிரிக்க மக்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் - இங்ஙனம் உலக மக்கள் பிரிவினர் யாவருமே திருவிடரே! கடல் கோளால் வந்தோரும் நில அதிர்வாலும் வந்தோருமாக உலகின் பல பாகங்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முறைகளில் குடியேறியவர் திருவிடரே!
(3) திருவிடர்கள் சிந்துவெளி நாகரீகம் அமைத்தனர். அதன் மேலும் மேற்கே குடியேறத் தொடங்கி பாபிலோனியா மொசபப்டடோமியா வழியே ஈரான் ஈராக் ஆகிய பல பகுதிகளிலும் குடியேறினர். ஆக திருவிடர் தென்னிந்தியாவில் இருந்தே வடஇந்தியா போய் அங்கிருந்து உலக நாடுகள் யாவற்றிற்கும் சென்றிருக்க முடியும். எனவே திருவிட மொழியாம் தமிழ் உலகெங்கும் அடித்தளமாக அமைப்பு முறையாக இலக்கு கருவியாக இயக்கும் ஆற்றலாக விளங்குகின்றது என்று உலகளாவிய தமிழ் என்று, தான் எழுதியிருக்கும் நூலின் மூலமாகவும் விளக்கத்தை தந்திருக்கும் தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் சாட்சிக் களத்திற்காக விதைத்திருப்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.
தமிழ் எழுத்துக்கள் எப்படி எப்படி மாறும் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. அதற்கு உட்பட்டே மாறுகிறது.
ஆகவே என்னோடு இந்த ஆய்வுகள் நின்றுவிடாமல் தொடர வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் இந்தத் தமிழ்மொழியை இளைஞர்கள் குழு மூலம் மக்களை ஒன்று திரட்டி பெரும் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று தன் ஆசையை பழுத்த ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியதைக் கண்டு தமிழே நெகிழ்ந்ததைப் போல அவ்வப்போது தெரிவித்து வருகிறார்". இப்பேற்பட்டவர் ஒரு தமிழாசிரியிராக இருப்பாரா? பேராசிரியராக இருக்கலாம்? இல்லை தமிழ்த்துறை தலைவராகத்தான் இருக்க வேண்டும்? இத்தனை தமிழ் சார்ந்த் தகவல்களை சொன்னவர் ஏன் ஒரு பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கக்கூடாது? என்று நினைப்போர்க்கு...
இவர் அப்படி எந்த பதவியிலும் இல்லை
ஆனால் அத்தனை தகுதிகளையும் கொண்ட இன்னொரு தமிழ்தாத்தா என்று சொல்லும் அளவிற்கு தமிழ் மொழிப்புலமை சாத்தூர் சேகரன் அய்யாவிடம் புதைந்து கிடக்கிறது.
சரி இவர் என்ன படித்திருக்கக் கூடும்? எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (ஆங்), எம்.ஏ. (வரலாறு), எம்.ஏ. (சமூகம்), எம்.ஏ. (அரசியல்), எம்.ஏ. (வரலாறு), எம்.பில். (வரலாறு), எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (மொழி) இது முழுக்க முழுக்க அவர் படித்து முடித்துவிட்ட பட்டங்கள். இன்றும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்...
"இது மட்டுமில்லாமல் உலகமெங்கும் பயணம் செய்து அந்தந்த நாடுகளில் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களிடம் பேசி, பழகி, ஆய்வு செய்திருப்பதால் உலக மொழிகள் 120 தெரியும். மேலும் இலக்கணப் பூர்வமாகவும், விதிமுறைப்படியும் 200 மொழிகளில் ஆய்வு செய்து வரும் சாத்தூர் சேகரன் அய்யா 200 மொழி நூல்களும் எழுதியிருக்கிறார். பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்".
"உலக அரங்கங்களிலும். பல்கலைக்கழகங்களிலும், மொழி ஆய்வுக் கூடங்களிலும், புதிய மொழி கொள்கைகளை முழங்குகின்ற தமிழ் மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் இதுவரை 10,000 பாடல்கள், 400 நவீனங்கள், 40 காப்பியங்கள், 200 சிறுகதைகள் எழுதியிருப்பதோடு, 50 நாடகங்களையும் இவரே எழுதி இயக்கியும் இருக்கிறார். பல்வேறு இதழ்களிலும் இவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. இன்னும் இவரது எழுத்துக்களில் 40 நூல்கள் வெளிவர இருக்கிறது.
தமிழ்மொழியைப் பற்றி, தமிழ் மொழியின் ஆதி, அந்தம், ஆச்சர்யங்களையும் சொல்லும்போது பிரமிடுகளை தாண்டிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ் மொழிக்காகவே தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன், தான் அடுத்தடுத்து தமிழ்ச்சங்கங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என்று அழைத்தவர்களின் இடம் நோக்கி... தன் கையோடு கொண்டு செல்லும் தமிழ் மொழியைப் போல கணத்த சூட்கேஸ்-உடன் தமிழோடு தானும் சேர்ந்தே பயணிக்கிறார்.
தமிழ்தான் என் மூச்சு, தமிழர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று உரக்க பேசுகின்ற எத்தனையோ தலைவர்களுக்குக்கிடையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, குறித்த முழு பார்வையை வளரும் இளம் தலைமுறையினர்க்கு வாரி வழங்குவதற்காக ஒரு சப்தமில்லா சாம்ராஜயத்தையே நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில் சாத்தூர் சேகரன் அய்யாவின் 40 வருட உழைப்பைச் சிந்தாமல் சிதறாமல் மாணவ - மாணவியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், அவர்களைச் சாத்தூர் சேகரனின் தமிழ் வாரிசுகளாகவும் உருவாக்கி, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பேசக்கூடிய ஊக்கத்தையும் தந்து உலக நாடுகளில் போய்ப் பேசுகின்ற தனித்தன்மையை எம்மொழியும் எம் மொழி என்ற கொள்கை முழக்கத்துடன் அகிலமொழி எனும் அமைப்பை தமிழ்நாட்டில் மாநகர் மதுரையில் துவங்கி அதற்கு வேராகவும் நீராகவும் விளங்குகின்ற கோ மற்றும் அவருக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழ் நெஞ்சங்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.
உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அய்யாவையும் 'அகிலமொழி' யின் மாணவர்களையும் உற்று நோக்க வேண்டும். தமிழைச் செழிக்கச் செய்ய நாமனைவரும் அரும்பாடு படவேண்டும்.
தமிழைக் கன்னித் தமிழ் என்கிறோம் ஏன்? உலகின் முதன் மொழி தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்கிறார் அமெரிக்க மொழி அறிஞர் சுவாடேசு. உலகின் தாய்மொழிக்கான வாய்ப்பு தமிழுக்கு உள்ளது என்றும் உறுதி கூறுகிறார். பாவாணர் போன்றோரும் இதனை அறுதியிடுகின்றனர். எனது கள ஆய்வும் இதனையே உறுதி செய்கிறது. இதனால்தான் எனது நூல்களில் தமிழ்ச் சொற்களின் வழித்தோன்றலாக உலகின் பெரிய 400 மொழிகளில் ஒப்புமையைக் காட்டமுடிகிறது. தமிழின் இத்தகைய வீச்சிற்கும், வீழாத தன்மைக்கும் காரணங்கள் யாவை?
இன்ன எழுத்தில்தான் தொடங்க வேண்டும், இன்ன எழுத்தில்தான் சொற்கள் முடிவடைய வேண்டும். உச்சரிக்கக் கடினமான சொற்கள் இருத்தல் கூடாது. என்றெல்லாம் நமது முன்னோர்கள் வரையறை செய்து வைத்திருந்தனர். மேலும் மொழி என்பது பாமரர் சொத்து என்பதை ஒரு சட்டமாகவே வைத்திருந்தனர். சிறுவர் எளிதில் கற்றுணர மொழிச்சட்டம் அல்லது இலக்கணம் ஒரு தடையாக இருத்தல் ஆகாது என்று திட்டமிட்டிருந்தனர். எனவே மறபு மீறலை ஒரு மரபாகவும் வைத்திருந்தனர்.
தமிழ் நாகரிகம் என்ற வரையறை ஒரு பரந்து பட்ட பொருளில்தான் இயங்குமே தவிர, ஒரு சிறு எல்லைக்குள் நிலைபெறவில்லை.
கன்னித்தமிழ் எங்ஙனம் அவ்வப்போது தோன்றிய இறுக்கமான சூழ்நிலைகளையும் எதிர்ப்பான சூழ்நிலைகளையும் தகர்த்தெறிந்து மீண்டும் மீண்டும் தன்னை இளமைப்படுத்திக் கொண்டு வருகிறதோ அவ்வாறே தமிழ் நாகரிகம் என்பதுவும் அழிக்கப்பட முடியாத ஒன்று என்று தன்னை அடிக்கடி நிலைநாட்டி வந்திருக்கிறது.
தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள் :
1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.
2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.
3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர - சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும், மந்திர தந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம்.
4. தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்.
5. அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?
6. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி - ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.
7. பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.
8. மருத்துவத் துறையிலும், அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர். மருத்துவ சேவைக்குச் சென்றனர். முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர். இயற்கை வளமும், மூலிகைத் தளமும் இதற்கு உதவின.
9. கல்வி கற்பதிலும், தமிழர்கள் திகழ்ந்தனர். சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள். கொரிய மொழிக்கு தமிழை ஒட்டிய எழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள். சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள்.
10. உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள். சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும் தமிழர்களே.
11. கடல் கடந்து பெரும் படையுடன் உலகை வலம் வந்தவர் தமிழரே. 1000, 1500, ஆண்டுகளுக்குப் பின்னரே பிறநாட்டினர் கடலை எட்டிப் பார்த்தனர். 2000, 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் ஆட்சியை அமைத்தவர்களுள் தமிழரே முதல்வர்.
12. பழந்தமிழர் குடியேறாத நாடில்லை. தீவில்லை. இட்சிங் என்ற சீனத்துறவி கி.பி. 2 ஆம் நூற்றாண்டினர். இவரது கூற்றுப்படி, சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் (50,000 காலனிகளா) இருந்தன.
13. தமிழரின் வணிகக் கப்பல்கள் செல்லாத நாடு இல்லை. தீவுகள் இல்லை. பழந்தமிழருக்குக் கடல் ஒரு விளையாட்டுத் திடல். உலக நதிகள், மலைகள், கடல்கள், ஊர்கள் யாவற்றிற்கும் தமிழனே பெயரிட்டான். மக்கட் பெயர்களும் தமிழாகவே உள்ளன.
14. ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான். அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான். சாவகம் சென்று பவளத்திற்கும் வாசனைப் பொருளுக்கும் மாற்றினான். இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரி வரை சென்று பட்டிற்குத் தங்கம் பெற்றான். தமிழ் வணிகனின் கதை அஞ்சா நெஞ்சுரத்தின் விதை. அவனியில் அவன் கல்வியையும், சமயத்தையும் தத்துவத்தையும் பரப்பியவன். வாளெடுக்காமலும், வேல் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் விதைத்தவன். இன்றும் உலகில் நிலைத்துள்ள நாகரிகம் தமிழன் நாகரிகமே. அற்பத் தமிழன் இந்த அரிய உண்மையை உணராமல் இருப்பதுவும் பறர்க்கு உணர்த்தாமல் இருப்பதுவுமே இன்றைய சாபக்கேடு.
15. அறநூலகத்திற்குப் பின், சமயத்தை ஒரு நிறுவனமாக ஏற்றுச் செயல்பட்டதில் தமிழனே முன்னோடியாக நிலை பெற்றான். புத்த சமயத்தைப் பரப்பியதிலும் சமண சமயத்தைப் பரப்பியதிலும் தமிழனே முன் நிற்கிறான். இன்று உலகெங்கும் இருப்பது தமிழன் பரப்பிய புத்த மகாயானமே (பெருவழி) சீனாவில், சப்பானில், கொரியாவில், இந்தோ சீனநாடுகளில், பர்மாவில், இருப்பன மகாயானமே. புத்தர் பரப்பிய சிறு வழி (ஹீனயானம்) அழிந்துவிட்டது.
16. பக்தி இயக்கம் தமிழகத்தில் உருவாகி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வட இந்தியாவில் (கி.பி 1200- 1500) பரவியது. இதன் எதிரொலி கிறித்துவத்தில் கி.பி.1700 க்குப் பின்னரே வெளிப்பட்டது. இசுலாமில் கி.பி.1200 க்குப் பின் (சரியாகச் சொல்வதானால் கி.பி. 1400 க்குப் பின்னரே) மதநெறியாகியது. சோமபானத்தையும், சுராபானத்தையும் மாந்தி மாந்தி - ஐயோ எங்களைக் காப்பாற்று, சோமா, தமிழரிடமிருந்து எங்களைக் காப்பாற்று - என்று அறியாமையின் உச்சத்தை, பேதமையின் பிதற்றலை, தமிழ் நாகரிகம் எஞ்ஞான்றும் அரங்கேற்றியதில்லை. (Edited)
17. குதிரைக்கறி முதல் எல்லாக்கறி வகைகளையும் தின்று வந்த ஆரிய அநாகரிகரை சைவநெறியில் ஈடுபடுத்தி நாகரிகப்படுத்தியது தமிழ் நாகரிகமே. தோலாடை கட்டியும், மரவுரி தரித்தும் அரை நிர்வாணமாகத் திரிந்த ஆரியருக்கு ஆடை கொடுத்து நாகரிகப்படுத்தியது தமிழர் நாகரிகம். இல்லாத கடவுளான சோமன், சுரா, உசா, இந்திரன் போன்ற கற்பனைக் கடவுளை ஆரியர் கைவிட்டனர். தமிழரின் சமயங்களை சிவன், சக்தி, மயிலவன் ஆகியோரை வழிபட வைத்தது தமிழ் நாகரிகமே. வட இந்தியாவில் அம்மணமாகத் திரிந்து பனியிலும், குளிரிலும் வாடி வதங்கிய ஆரியருக்கு இருப்பிடம் தந்து வாழ வைத்தது தமிழ் நாகரிகமே.
18. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காடு தென்னிந்தியாவில் உள்ளன. இதில் பாதிக்கு மேல் 40 விழுக்காடு தமிழகத்தில் உள்ளன. இதில் பாதி 20 விழுக்காடு ஆரியருக்குத் தானமளித்த ஈனச் செய்திகள்தான் உள்ளன. நன்றி என்பதற்கு அர்த்தம் தெரியாத ஆரிய அறிவிலிகள், தமிழரது படைப்புகளைத் தமது என்று உரிமை கொண்டாம் அற்பத்தனத்தை இனியும் சகிக்கத்தான் வேண்டுமா? சிதம்பரம் கோவில் கட்டியவன் சோழ அரசன். கட்டியோர் தமிழகக் குடிபடைகள். இன்று, உள்ளிருந்து கொட்டம் அடிப்பது மட்டுமின்றி, தமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடாது என்று சொல்வது, தமிழ் நாகரிகத்தையே அவமதிப்பது ஆகும்.

Wednesday, 11 August 2021

வேர்ச்சொற்கள்

 

                                                               வேர்ச்சொற்கள்

1,வேட்டு=வேள்வி;விரும்பி;விருப்பம்;வேட்டுவர் குடி
வேட்டு என்ற வேர்ச்சொல்லில் இருந்து வேட்டுவர் என்ற சொல் உருவானது .போரை விரும்பி (போர் வேட்டு ) செய்தவர்களை வேட்டுவர் என்று அழைக்க பட்டது .தொல்காப்பியர் இவர்களை வேட்டுவ குடியினர் என்று அழைத்தார் .சங்க காலத்தில் வேட்டுவ குடியினரை நாண்(வில்லில் இருக்கும் கயிறு ) உடை மாக்கள் ,வேள் மாக்கள்,வேந்து மாக்கள் அழைக்க பட்டனர் .
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு ஆங்கு - பெரும் 43
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு - பெரும் 449
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட - முல் 26
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு/வேறு பல் பூளையொடு உழிஞை சூடி - பட் 234,235
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு - நற் 111/5
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து - நற் 165/4
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர் - நற் 205/2
கொடும் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த - நற் 211/3
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் - நற் 252/10
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு/கடும் சூல் வயவொடு கானல் எய்தாது - நற் 263/4,5
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு/வயவர் மகளிர் என்றி ஆயின் - நற் 276/2,3
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட - நற் 285/6
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு - நற் 332/2
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி - குறு 154/3
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் - குறு 178/3
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி - பரி 5/41
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி - கலி 93/16
தொல்_வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல் - கலி 118/3
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை - அகம் 3/5
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை - அகம் 144/14
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர் - அகம் 157/4
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் - அகம் 187/22
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு/எயிறு தீ பிறப்ப திருகி - அகம் 217/18,19
இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த - அகம் 238/4
நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த - அகம் 249/15
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த - அகம் 276/1
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை - அகம் 285/11
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு - அகம் 361/12
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ - அகம் 387/9
வயவு_உறு மகளிர் வேட்டு உணின் அல்லது - புறம் 20/14
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு - புறம் 52/4
வழு இன்று எய்தியும் அமையாய் செரு வேட்டு/இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி - புறம் 99/8,9
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து - புறம் 190/8
கடும் தெறல் செம் தீ வேட்டு/புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே புறம் 251/6,7
மண் நாண புகழ் வேட்டு/நீர் நாண நெய் வழங்கி - புறம் 384/15,16
வேட்டும் (1)
எண் நாண பல வேட்டும்/மண் நாண புகழ் பரப்பியும் - புறம் 166/22,23
2,வேட்டம்=வேட்டை
வேட்டம்(வேட்டை ) என்ற சொல் வேட்டை தொழிலை குறிக்கும் சொல் .
வேட்டம் என்ற வேர் சொல்லில் இருந்து வேட ,வேடர் ,வேடுவர் போன்ற சொற்கள் பிறந்தது .
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு - பொரு 142
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் - பெரும் 111
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து - நெடு 129
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாது - பட் 92
வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்ப - நற் 38/1
கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து - நற் 49/5
எமரும் வேட்டம் புக்கனர் அதனால் - நற் 67/9
மாயா வேட்டம் போகிய கணவன் - நற் 103/7
வேட்டம் வாயாது எமர் வாரலரே - நற் 215/12
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் - நற் 331/7
நடுநாள் வேட்டம் போகி வைகறை - நற் 388/5
வீ அகம் புலம்ப வேட்டம் போகிய - கலி 46/1
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என - அகம் 70/1
கோட்டு_மீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் - அகம் 170/11
வேட்டம் போகிய குறவன் காட்ட - அகம் 182/6
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த - அகம் 193/3
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி - அகம் 196/4
பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய - அகம் 282/1
விசைத்த வில்லர் வேட்டம் போகி - அகம் 284/9
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே - அகம் 388/26
அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர் - அகம் 389/13
நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர் - புறம் 31/5
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் - புறம் 152/6
வேட்டல்=வேள்வி
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் - பதி 24/6
கபிலை கண்ணிய வேள்வி நிலையும் - பொருள். புறத்:35/6

வேட்டுவரின் கொற்றவை வழிபாடு

 

                            வேட்டுவரின் கொற்றவை வழிபாடு

    ஆரம்பத்தில் வெட்சி போரின் (ஆநிரை கவர்தல் ,ஆநிரை மீட்டல் ) வெற்றி கடவுளாக வேட்டுவ குடியினர் வழிபட்டார்கள் .
கொற்றவை நிலையும் அ திணை புறனே - பொருள். புறத்:4/2
தமிழகத்தை ஆண்ட அரச பரம்பரையினர் பெண்தெய்வத்தையே குல தெய்வமாக(கொற்றவை ) வணங்கி வந்தனர்.
தஞ்சை மற்றும் வல்லம் பகுதிகளை பல்லவர்களிடம் இருந்து கைப்பற்றிய பிறகு விஜயாலய சோழன் தஞ்சையில் நிசும்பசூதினியை(கொற்றவை ) பிரதிஷ்டை செய்தான். இதை பற்றி திருவாலான்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் அறியமுடிகிறது. அந்த செப்பேட்டில் உள்ள வாசகங்கள் என்னவென்றால்
“தஞ்சாபுரீம் சௌத சுதாங்காராகாம
ஐக்ராஹ ரந்தும் ரவி வம்ச தீப:
தத:பிரதிஷ்டாப்ய நிசும்ப சூதனீம்
சுராசுரை:அர்ச்சித பாத பங்கஜாம்
சது : சமுத்ராம்பர மேகலாம் புவம்
ரஹாஜ தேவோ தத்பராசதந”
சும்பன் நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற தேவியை தஞ்சை நகரில் பிரதிஷ்டை செய்தான். தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்பட்ட பாதங்களுடைய அத்தேவியின் அருளால்,நான்கு கடல்கள் ஆகிய ஆடையை அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை, ஒரு மாலையை அணிவது போலச் சுலபமாக ஆண்டு வந்தான் என்று கூறுகிறது திருவாலான்காட்டு செப்பேடு.
தஞ்சையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிசும்பசூதினி எட்டு கைகளை உடையவர். 8 கரங்களில் சூலம், வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம் தரித்துள்ளார். ஓர் இடது கரம் கீழ் இருக்கும் அசுரனை காட்டுகிறது, வலது கால் துண்டிக்க பட்ட ஒரு தலையின் மேல் ஊன்றியுள்ளது.சும்பன், நிசும்பன் ஆகோயோரை வதைக்கும் காட்சியில் உள்ளார்.
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை
இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் - மது 12/64,65
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இ - மது 12/87
கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் - மது 12/127
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர்
அரசு உவா அழைப்ப கோடு அறுத்து இயற்றிய
அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து
நிறம் படு குருதி புறம்படின் அல்லது
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇ
கேடு இல ஆக பெரும நின் புகழே பதி:79/12-19
வெல்லும் போரினைக் கொண்ட வேந்தர்களின் முரசுகளின் முகப்பைக் கிழித்து, அவருடைய
பட்டத்து யானை கதறக்கதற அதனுடைய கொம்புகளை அறுத்தெடுத்துச் செய்த
அச்சம் தரும் தன்மையையுடைய கட்டிலின் மேலிருந்து
தும்பைப் போரின் தன்மை பொருந்திய போரைச் செய்ததால் உடல் சோர்வினில் ஓய்ந்திருக்க,
மார்பினைக் கிழித்து வரும் குருதி மேலே பட்டாலல்லது
பலியுணவை ஏற்றுக்கொள்ளாத அச்சம்தரும் இயல்பினையுடைய
கடவுளான கொற்றவை இருக்கும் அயிரை மலையைப் போல நிலைபெற்று
அழியாதது ஆகுக பெருமானே! உன் புகழ்!
குருதி விதிர்த்த குவவு சோற்று குன்றோடு
உரு கெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய
கொற்றம் எய்திய பெரியோர் மருக
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில் பதி:88/11-15
இரத்தம் கலந்து குவிக்கப்பட்டிருக்கும் குன்று போன்ற சோற்றுக் குவியலுடன்
அச்சந்தரும் இயல்புடைய அயிரை மலையிலுள்ள கொற்றவையைப் போற்றிப்பாடி,
முடியுடை வேந்தரும், குறுநில மன்னரும் பின்னால் நின்று பணிந்துகொள்ள,
வெற்றி எய்திய பெருமக்களின் வழிவந்தவனே!
அகன்ற பிடரிமயிரினை உடைய சிங்கம் போன்ற வீரம் பொருந்திய குருசிலே!
உரு கெழு மரபின் அயிரை பரவியும் பதி:90/19
அச்சந்தரும் மரபினையுடைய அயிரை மலையிலிருக்கும் கொற்றவையைப் போற்றித் துதித்தும்,
முழு_முதல் மிசைய கோடு-தொறும் துவன்றும்
அயிரை நெடு வரை போல
தொலையாது ஆக நீ வாழும் நாளே பதி:70/25-27
மிகப் பெரிதான உச்சியையுடைய மலைச் சிகரமெங்கும் நிறைந்து விளங்கும்
அயிரை என்னும் நெடிய மலையைப் போல
குறையாது பெருகுவதாக நீ வாழும் நாள்கள்.
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய
நேர் உயர் நெடு வரை அயிரை பொருந பதி:21/28-29
புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போரிடாதவாறு குறுக்கிட்டுக்கிடக்கும்
நேராக உயர்ந்த நெடிய மலையான அயிரை என்னும் மலைக்குத் தலைவனே!
………………ஓங்கு புகழ்க்
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால் அகம்:345/3-4
ஓங்கு புகழ் காண் அமர் செல்வி - மிக்க புகழ் வாய்ந்த கொற்றவை, அருளிலின் - அருள் கூர்ந்து அளித்தலின்
களிறு வழங்கு அதர கானத்து அல்கி
இலை இல் மராத்த எவ்வம் தாங்கி 50
வலை வலந்து அன்ன மெல் நிழல் மருங்கில்
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை பொரு: 49-52
யானை உலாவரும் வழிகளை உடைய காட்டிடத்தே தங்கி,
இலையில்லாத மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி, 50
வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில்,
காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துவிட்ட பின்பு
‘பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு’ கலி:89/8
பெரிய காட்டிலிருக்கும் கொற்றவைக்குப் பேய் வந்து குறி சொன்னாற்போல
‘கொற்றவை கோலம்கொண்டு ஓர் பெண் ‘பரிபாடல் : 11
சிலம்பின் வேட்டுவவரி வேட்டுவ குடியினரின் கொற்றவை வழிபாடு குறித்த தகவல்களின் களஞ்சியமாக இளங்கோவடிகளால் படைக்கப்பட்டுள்ளது. வேட்டுவ குடியினரின் வீரத்தையும் ,வாழ்கை முறையும் ,போர் கடவுளான கொற்றவையை வழிபாடும் பாங்கை அற்புதமாக கூறுகிறார் இளங்கோ அடிகள் .
மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூல மேந்தி
கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல் (சிலம்பு. வேட்டுவவரி, 54-66)
“பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியள், நெற்றியைத் திறந்து விழித்த இமையாத கண்ணினள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப் போன்ற ஒளிவீசும் நகையுடையவள், நஞ்சு உண்டதால் கறுத்த கண்டமுடையவள், கொடிய சினமுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணினைப் பூட்டி நீண்ட மேருவாகிய வில்லை வளைத்தவள், துளையமைந்த பொருந்திய பல்லையுடைய நச்சரவினைக் கச்சாக அணிந்த மார்பினள், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலிலே சிலம்பும், வலக்காலிலே வீரக் கழலும் ஒலிக்கும் சிற்றடிகளை உடையவள், எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு திரண்ட தோளுடன் திகழ்ந்த மகிடாசுரனைக் கொன்று அவனது தலைமேல் நிற்பவள்”

வேள் ஆய்வு

 வேள் ஆய்வு

    இறை (ஒரு குழு தலைவர் ),ஊராளி (ஒரு ஊரை ஆள்பவன் ), வேள்(குறு நில பரப்பை ஆள்பவன் ), வேந்து (பெரு நில பரப்பை ஆள்பவன் ) ஆகிய சொற்கள் வேட்டுவ குடியினரின் அரசியல் அதிகாரத்தின் ஏணிப்படிகள் ஆகும் .
கோ என்ற சொல் வேளிரையும் ,வேந்தரையும் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டது .கிழார் என்ற சொல் உரியவர் ,உரிமையுடையவர் என்ற பொருளில் பயன்படுத்த பட்டது .(மனை கிழத்தி -மனைக்கு உரியவள் ,காம கிழத்தி -காமத்துக்கு உரியவள் .கிழார் என்ற சொல் அரசியல் அதிகாரத்தின் தொடக்கம் கிடையாது ). அரசியல் அதிகாரத்தின் தொடக்கம் இறை (ஒரு குல தலைவன் ) நிலையில் இருந்து ஆரம்பிக்கிறது .ஊரையும் ,நாட்டையையும் உருவாக்குபவன் (ஆக்குதல் =மன்) மன்னன் என்றழைக்க பட்டான்.
சாளுக்கியரை ‘வேள் குலத்தார்’ என்றும், சாளுக்கிய நாட்டை ’வேள் புலம்’ என்றும் கி.பி. 11ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.(South Indian Inscriptions, Vol. V, no. 633; Vol. III, no. 160 ) .சாளுக்கியரை(தெலுங்கு வேள் ) ' நிஷாத ராஜன்'(வேட்டுவ மன்னன் ) பல்லவர் கால செப்பேடுகள் கூறுகிறது .
செங்கம் பகுதிகளை வேணாடு (வேள் +நாடு ) என்றழைக்க பட்டதை கல்வெட்டுகள் கூறுகிறது .இப்பகுதிகளை தமிழ் வேட்டுவ குடியினர் ஆண்டார்கள் என்பதை கல்வெட்டுகள் மற்றும் சங்க இலக்கியங்கள் (மலை படுகடாம்) உறுதி படுத்துகிறது .
செங்கோட்டை பகுதிகளை ஆண்ட ஆய் வேள் நாட்டை வேணாடு என்று அழைக்க பட்டது .ஆய் வேளை எயினர் (வேட்டுவர் ) என்றழைக்க பட்டத்தை வேள்வி குடி செப்பேடுகள் உறுதிப்படுத்துகிறது .
இருங்கோ வேள் ஊரில் வேட்டுவ குடியினர் வாழ்ந்தார்கள் என்று சங்க இலக்கியங்கள் கூறுகிறது .இருக்கு வேள் குடுமி வேட்டுவ குடியை சேர்ந்தவன் என்பதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .கிபி 11 ஆம் நூற்றாண்டுகளில் இருக்கு வேள் வம்சாவளியினரை நிஷாத ராஜன் (வேட்டுவ மன்னன் ) என்றழைக்க பட்டத்தை கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .
ஆதித்த சோழன் தெலுங்கு வேளுக்கு 'செம்பியன் தமிழவேள் என்னுங் குலப் பெயரும்' (S.I.I. III,no 221).என்ற பட்டத்தை கொடுத்தான் .
ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப் பெயர்
ஆவயின் வருஉம் கிழவரும் உளரே
(தொல்,அகம் 21 )
அருஞ்சொற்பொருள்:
ஆடுஉத் =ஆண் பால் பெயர் ;திணைப் பெயர் =குடிப்பெயர் ;ஆவயின்=முற்கூறிய ;வருஉம்=வரும் ;உளரே =இருக்கிறார்கள்
கிழவர்=உரியவர்
உரை :
ஆயர் குடியை சேர்ந்த ஆண் பெயர் ஆயர் .வேட்டுவ குடியை சேர்ந்த ஆண் பெயர் வேட்டுவர் .ஆயரிலும், வேட்டுவரிலும் உரியவர்கள்( ஆட்சிக்கு உரியவர்கள் (வேட்டுவர் ), முல்லை நிலத்துக்கு உரியவர்கள் (ஆயர் ) இருக்கிறார்கள்.
தொல்காப்பியத்தில் வேட்டுவ குடியினர் ஆட்சிக்கு உரியவர்களாக தொல்காப்பியர் கூறுகிறார்.
சங்க காலத்தில் வெளியன் (ஒளியன்) என்ற சொல் இயர்பெயர் . இச் சொல்லை புலவர்களும் ,வேளிர்களும் ,கூலிப்படை தலைவர்களும் இயர்பெய ராக வைத்து கொண்டார்கள் . ஆதன் (கிரேக்க சொல் ), கீரன் ,சாத்தன் ,அந்துவன் ,வெளியன்,அந்தை,கொற்றன் போன்ற பெயர்கள் சங்க கால மக்கள் இயர்பெய ராக வைத்து கொண்டார்கள்
வேள் ஆரம்பத்தில் வேட்டுவ குடிக்கு உரிய அரச பதவியாக இருந்தது.கால போக்கில் வேட்டுவ குடியை சேர்ந்த மன்னர்களின் அரசு அதிகாரிக்கு வேள் (வேளான்,வில்லவன் மூவேந்த வேளான்,மீனவன் மூவேந்த வேளான்,செம்பியன் மூவேந்த வேளான், மூவேந்த வேளான்) பட்ட பெயராக கொடுக்க பட்டத்தை கல்வெட்டுகள் கூறுகிறது .
எனவே, வேட்டுவ குலத்தவர்க்குரிய ‘வேள்’ அரசு பதவியுடன் தொடர்புடையதே தவிர, ஒளி,வேளாண்மை,விருந்தோம்பல் ,கொடை,உதவி,வேளாண் என்ற கருத்தோட்டத்துடன் தொடர்புடையதன்று.

தலையூர் காளி மன்னன்

 

                                                தலையூர் காளி மன்னன் 

    கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் ஆண்ட பரம்பரை எனவும் உயர்ந்த சாதியினர் என கூறி கொள்வதற்கும்,தமிழ் மண்ணை ஆண்ட வேட்டுவ குடியினரை (வேட்டுவ கவுண்டர் ) இழிவுபடுத்தி பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்காகவும் ஒரு கற்பனை கதபாத்திரத்தை (தலையூர் காளி மன்னன் ) உருவாக்கினார்கள் .
'வாங்கலான் பாட்டனவன் வாழ்வு சிறுகாற்புலியூர்
தீங்கு செய்த செல்லத்தான் சிற்றப்பன் -ஓங்கு தந்தை
நாமமொழி குன்றனையன் நன்னுநகர் சிற்றலை
தாமரை நாட்சியார் தாய் , என்னும் வெண்பா கிடைத்து இருக்கிறது என்று தி .அ முத்துசாமி கோனார் (கிபி 1858-1944)அவர்கள் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .
கொங்கு வெள்ளாள இனத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் சண்டை சக்கரவுகள் இருந்ததையும் ,அந்த குடும்பத்தினர் கொங்கு நாட்டில் கிழங்கு நாட்டு (வேட்டமங்கலம் ,நொய்யல் ,மறவாபாளையம்,துக்காச்சி ,வடிஉடையமங்கலம் ,ஆவுடையார் பாறை பகுதிகள் ) திருகாபுலியூர் (சிறுகாற்புலியூர்) என்னும் ஊரை சேர்ந்தவர்கள் என்பதையும் இந்த வெண்பா உறுதிபடுத்துகிறது . தங்காய் என்னும் தங்கை தன் மூத்தோரை அண்ணன்மார் என்றதால் இப்பெயர் வந்தது .
இந்த சண்டை சக்கரவுகள் 60 ஆண்டுகளுக்கு முன் நடந்தது தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .ஆக இந்த சண்டை சக்கரவுகள் ஏறக்குறைய கிபி 1870 ஆம் ஆண்டுகளில் நடந்து இருக்க வேண்டும் .நடந்த நிகழ்வுகளை வெண்பாவாக பாடியுள்ளார்கள் .
'கொங்கு நாட்டினராகிய இவர்களை பொன்னிவள நாடு என்று யாரோ ஒருவர் பாடி அச்சிட்டுயுள்ளார்கள் ' என்று தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார்.
வேட்டுவ இனத்தின் மீது வெறுப்பு உணர்வு கொண்ட ஒரு சாதி வெறி பிடித்த வெள்ளாளனாள் பாடி அச்சிட பட்டு இருக்க வேண்டும் .இதனால்தான் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலுக்கு ஆசிரியர் பெயர் இல்லாமல் அச்சிட பட்டு இருக்கிறது .
கிபி 1934-40 இந்த காலகட்டங்களில் 4855 வரிகள் ,128 பக்கங்களை கொண்டு 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலை அச்சிட பட்டு இருக்க வேண்டும்.
கொங்கு கிழங்கு நாட்டு திருகா புலியூர் என்ற ஊரை சேர்ந்த ஒரு வெள்ளாள குடும்பத்தில் நடந்த சண்டை சக்கரவுகளை ,வேட்டுவ இனத்துக்கும் ,வெள்ளாள இனத்துக்கும் நடந்த சண்டையாக 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது .மேலும் திருகா புலியூர் என்ற ஊரில் உழவு தொழில் செய்து வந்த பொன்னர் ,சங்கர் இவர்கள் பொன்னி வள நாட்டை சேர்ந்தவர்களாகவும்,மன்னர்களாகவும் கூறபடுகிறது .மேலும் வேட்டுவ குலத்தவர்களை கெட்டவர்களாகவும் ,பன்றி வளர்ப்பவர்களாகவும் ,நாய் பிடிப்பவர்களாகவும் ,பெண் பித்தர்களாகவும் ,நாகரிகம் இல்லாதவர்களாகவும் ,மோசமானவர்களாகவும் கூறபடுகிறது.
தமிழ் மண்ணை ஆண்ட வேட்டுவ குலத்தவர்களை இழிவுபடுத்தவும் ,உழவு தொழில் செய்த கொங்கு வெள்ளாளர்களை ஆண்ட பரம்பரையினர் என கூறி கொள்ளவும் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூல் உருவாக்க பட்டு உள்ளது . இந்த நூலை அடிப்படையாக வைத்து அண்ணன்மார் சாமி கதை ,குன்னுடையன் கதை ,தங்காள் கதை என பலநூல்களை எழுதி விட்டு இந்த நூல்கள் ஏட்டு பிரதியில் இருந்து எடுத்து எழுத பட்டதாக பச்சை பொய்யை கூறி இருக்கிறார்கள் . 'வெட்ட வெட்ட தலையும் ' என பொன்னர் ,வேட்டுவருக்கு வரம் கொடுத்ததை உண்மை என மக்களை நம்ப வைப்பதற்கு 'வெட்ட வெட்ட தலைக்கும் வேட்டுவ படை ' எனும் போலிபழமொழிகளை மக்கள் மத்தியில் பரப்பி விட்டு இருக்கிறார்கள் .
அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு ,அண்ணன்மார்(பொன்னர் -சங்கர் ) களை தொடர்பு படுத்தி வுள்ளர்கள் .
மணப்பாறை பகுதியில் இருந்த அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை முத்தரையர் இனத்தினர் ஆரம்பத்தில் வழிபட்டு வந்தார்கள் .காலபோக்கில் இறந்த முத்தரையர் இனத்தை சேர்ந்த முன்னோர்களுக்கு அந்த கோயில்களில் முத்தரையர் இனத்தினர் கற்களை நட்டு வழிபட்டு வந்தார்கள். கொங்கு வெள்ளாளர்கள் உருவாக்கிய கட்டு கதையை (பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ) அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு தொடர்பு படுத்திய பிறகு முத்தரையர் இனத்தை சேர்ந்த கற்களை பொன்னர் -சங்கர் உடைய கற்களாக எழுதி கொண்டார்கள் .
அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கதை :
அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) பர்வத ராஜா குலத்தை சேர்ந்தவர்கள் .இவர்களுடைய தங்கை பெயர் லோக்கமதா .பல்லவர்கள் உதவியோடு ஜைனர்கள் பர்வத ராஜா குலத்திற்கு தீங்கு செய்து வந்தார்கள் .இதனால் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) தீங்கு செய்தவர்களை அளிப்பார்கள் .பிறகு பாண்டிய நாட்டில் விசர் என்னுமிடத்தில் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) மற்றும் லோக்கமதா இவர்களுக்கு சிலை வைத்து வழிபட்டதை பற்றி கூறுகிறது என்று மு அருணாசலம் தனது நாட்டுபுறபாடல் எனும் நூலில் (கிபி 1976) கூறியுள்ளார் .
வசந்தபுரம் ,கவுண்டம்பாளையம் ,எழுமாத்தூர் போன்ற இடங்களில் உள்ள அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை வேட்டுவ இனத்தினர் வழிபட்டு வருகிறார்கள் .

வேளிர்கள்

 

வேளிர்கள் 
 
ஆயர்களுக்கு உரிமையுடைய ஆநிரைகளைக் திருடர்கள் மற்றும் பகைவர்கள் கவர்ந்து சென்று விடுவார்கள் . வேட்டுவ குடியை சேர்ந்த தலைவர் கவர்ந்த சென்றவர்களோடு சண்டையிட்டு ஆநிரைகளை மீட்டு ஆயர் குடியிடம் கொடுத்தார்கள் . ஆயர் குடியினர் ஆநிரைகளை மீட்டு கொடுத்த வேட்டுவ குடி தலைவர்களை விரும்பி தங்களது தலைவர்களாக ஏற்று கொண்டார்கள் .பிறகு அந்த வேட்டுவ குடி தலைவரை வேள் என்று அழைக்க பட்டான்.
·இதன் தொடர்ச்சியாக பூசல் நிகழும் போது மட்டுமின்றி, பூசல் நிகழாத காலங்களிலும் வேட்டுவ குடித்தலைவன் ஆயர்களுக்கு தேவைப்பட்டான்.வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்கள் அரச அமைப்பை உருவாக்கினார்கள் .
‘வேட்டுவ குடியை சேர்ந்த தலைவனை பிற மக்களால் தலைவனாக விரும்பி ஏற்றுக்கொள்ளப் பெற்றதையே வேள் என்ற சொல் கூறுகின்றது’
காலப்போக்கில் வேள் என்ற சொல் பட்டமாக மாறிவிட்டது. வேட்டுவ குடித்தலைவரைக் குறிக்கும் சொல்லாக இருந்த வேள் வேந்தனிடம் அதிகாரிகளாக இருந்த அனைவருக்கும் பட்டபெயராக கொடுக்க பட்டது .
வேள் என்ற சொல் ஒளி,வேளாண்மை,விருந்தோம்பல் ,கொடை,உதவி,வேளாண் என்ற கருத்தோட்டத்துடன் தொடர்புடையதன்று.

 வல் வில் ஓரி

    புல்லை வேட்டுவர் குடியை சேர்ந்த மன்னர் வல் வில் ஓரி.
வல் வில் ஓரியின் வம்சவழியினர்(கொல்லி மழவர்) புல்லை வேட்டுவ குலத்தவர்கள் (கொல்லி வேட்டுவர் ) ஆவார்கள் .
வல்வில் என்று அவன் பெயரின் அடைமொழி குறிப்பிடுகிறது. வில்லுக்கு உரிமையுடையவர்கள் யார்? வேட்டுவர்கள். ஓரியைப் பற்றி வன்பரணர் பாடிய பாடல்,
………யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கோர்
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் (புறம் 152)
என்று விறலியர் புகழ்வதாகக் கூறுகின்றது. பல நாடுகளுக்குச் சென்று வருபவர்கள் நாங்கள்; ஆனால் எங்கும் உனக்கு நிகரான வேட்டுவர் எவரும் இல்லை என்பது இதன் பொருள். ஆக வல்வில் ஓரி வேட்டுவர் சாதியைச் சேர்ந்தவன் என்பது உறுதிப்படுகிறது.
வல் வில் ஓரியின் வம்சாவளியினர் கொல்லி மழவர்கள் ஆவார்கள் .
சுந்தர சோழனின் 5ஆவது (கி பி 961) மற்றும் 10ஆவது (கி பி 966) ஆட்சி ஆண்டில் திருச்செங்கோடு செப்பேடுகள் வெளி இடப்பட்டது.(S.I.I Vol 3,part4,No 212,213 ) .
'...கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதி கண்டவர்மன் என்னாட்டு தூசியூர் தென் புல தூநிலம் ----' (திருச்செங்கோடு செப்பேடுகள்)
'....தூசியூர் நகர '(நாமக்கல் .பொம்மசமுத்திரம் கல்வெட்டு .கி பி 947,பராந்தகன் 1)
கொல்லி மழவன் இந்த தூசியூர்ரை சேர்ந்தவன் நாமக்கலில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது .
'..பிரதி கண்டன் தரசோழன்..'
(நாமக்கல் ,கொல்லிமலை கல்வெட்டு ,உத்தம சோழன் ,கி பி 980)
கொல்லி மழவன் பிரதிகண்டன் சுந்தர சோழனை (கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மனின் மகன் ) பிரதிகண்டன் தரசோழன்( சுந்தர சோழன் ) என்று கல்வெட்டுகளில் கூறபட்டு உள்ளது.
கொடும்பாளுரை ஆட்சி செய்த குறுநில மன்னன் சிறிய வேளான் மற்றும் நாமக்கலை ஆட்சி செய்த குறுநில மன்னன் கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மன் இந்த இரண்டு குறுநில மன்னர்களும் சுந்தர சோழனின் 9 ஆம் ஆட்சி ஆண்டு ஈழ படையெடுப்புக்கு(கி பி 965) ஆதரவாக இருந்தார்கள் என்பதை கொடும்பாலூர் கல்வெட்டு (S.I.I Vol 3,part 3 and iv,page 476,Annual report on epigrphy for 1913-14,part 2,paragraph 15) மற்றும் திருச்செங்கோடு செப்பேடுகள் மூலம் அறியலாம் .
'...கொல்லி கிரிக் குடையவர்கள் கூறிய னாடுதனிலே வாசகங் கூறி வைத்து கொண்ட பெரியவர்கள் ...' ( அல்லால இளையான் செப்பேடு)
கொல்லி மலைக்கு உரிமை படைத்தவர்கள் வேட்டுவ குலத்தவர்கள் என்று அல்லால இளையான் செப்பேடு கூறுகிறது .
வேட்டுவ குலங்களில் கொல்லி வேட்டுவ குலம் இருக்கிறது .
வல் வில் ஓரி வேட்டுவ குலத்தை சேந்தவன் என்று புறம் 152 கூறுகிறது .
புல்லை வேட்டுவரில் காவேரி நாடாள்வான் தேசி ஆளபிறந்தான் மும்முடி சோழ சக்கரவர்த்தி ஆன அங்கராயன் என்பவரை பற்றி நாமக்கல் (மழ கொங்கு ) கல்வெட்டு (S.I.I Vol 22,part 1,No-9) கூறுகிறது .
மழ கொங்கு நாட்டை ஆட்சி செய்த வேட்டுவ குறுநில மன்னன்(கொல்லி மழவன் ) புல்லை வேட்டுவ குல தலைவனாக இருந்தவன் . சோழ பேரரசி செம்பியன் மாதேவி புல்லை வேட்டுவ குல தலைவனின் பெண் . கி பி 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாமக்கல் கல்வெட்டு புல்லை வேட்டுவரில் காவேரி நாடாள்வான் என்பவரை பற்றி கூறுகிறது .
கொல்லி மழவனின் வம்சாவளியினர் புல்லை வேட்டுவ குலத்தவர்கள் ஆவார்கள் .இன்று புல்லை வேட்டுவ குலத்தின் குல தெய்வம் ராசா கோயில் (நாமக்கல் ,பள்ளிபாளையம்) ஆகும்

 

வேட்டுவர் வரலாறு

 வேட்டுவர் வரலாறு

    வேட்டுவர் இனத்தை பற்றி வரலாற்று அறிவு இல்லாதவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் :
கொங்கு வீர பெருங்குடியினரான வேட்டுவரிடையே பல குலங்கள் (கூட்டப் பிரிவுகள்) ஏற்பட்டன. இவை எதனை என்பதை நாம் அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலாது. எனவே தான் வேர் வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை என்ன முடியாது எனும் முதுமொழியும் ஏற்படுள்ளது. நடுகற்கள், கல்வெட்டுகள், செப்பெடுகள், ஓலைசுவடிகள், , இலக்கியம், சோழர் பூர்வ பட்டயம்,சங்க இலக்கியங்கள் ஆகியவை மூலம் அறியப்...படுகின்ற குலங்களின் பெயர்கள் இருக்கிறது . வேட்டுவர்கள் குலபிரிவுகள் அடிப்படையிலும் பல பகுதியாக பிரிந்து வாழ்தனர். சிலர் தாம் எந்த ஊரிலிருந்துகுடி பெயர்ந்தனரோ அந்த மன்னனின் (ஊரின்) பெயரைத் தமது குலத்திற்கு (கூட்டம்) வைத்துக் கொண்டனர். பலர், கொடை வீரம், மாண்பு, விலங்குகள், பறவைகள், மரம், செடி, கோடி, சங்க கால தலைவர்கள், பெண்பாற் புலவர்கள்,நில பெயர்கள் ,கடவுள் பெயர்கள்,பொருள் பெயர்கள் ஆகியவற்றியையும் தமது குலபிரிவுகளாக கொண்டனர். வேட்டுவர் கலிவெண்பா வேட்டுவர் சமுதாயக் குலங்களை அதன் பெருமைகளுடன் தொகுத்து கூறுகிறது .
இன குழுவுக்குள் சகோதர உறவுடைய ஒரே கூட்டத்தை சார்ந்தவர்கள் தம் கூட்டத்தை சார்ந்த பெண்ணை தம் சகோதரியாக கருதி மண உறவு கொள்வதை தவிர்த்து ,புற கூட்டத்தில் இருந்து பெண் கொண்டனர் .இதுவே புறமண முறையாகும்.அந்நியரான பிற இன குழுக்களோடு மண உறவு கொள்வதை தவிர்த்து தம்இன குழுவிற்கு உள்ளாகவே மண உறவு கொண்டனர் .இதுவே அகமண முறையாகும்.
காடை வேட்டுவ குலம் பிளவு பட்டு சிவகாடை வேட்டுவ குலம்,குறுங்காடை வேட்டுவ குலம் ,சாகாடை வேட்டுவ குலம் போன்ற வேட்டுவ குலங்கள் தோன்றிஇருக்கிறது.
அண்ட வேட்டுவ குலம் பிளவு பட்டு அண்டவாணி வேட்டுவ குலம் ,கரு அண்ட வேட்டுவ குலம் போன்ற வேட்டுவ குலங்கள் தோன்றிஇருக்கிறது.
கீர வேட்டுவ குலமும் ,ஆந்தை வேட்டுவ குலமும் இணைந்து கீரந்தை வேட்டுவ குலம் தோன்றி இருக்கிறது.
பூச்சன் வேட்டுவ குலமும் ,ஆந்தை வேட்டுவ குலமும் இணைந்து பூச்சந்தை வேட்டுவ குலம் தோன்றி இருக்கிறது .
இது போல பல வேட்டுவ குலங்கள் இருக்கிறது.
பண்ண வேட்டுவ குலத்தின் குல தெய்வம் பண்ணை அம்மன் (ஏலூர்,நாமக்கல் ) ஆகும் .இன்று பண்ண வேட்டுவ குலத்தினர் ,கரடி வேட்டுவ குலத்தோடு இணைந்து விட்டார்கள் .
இது போல பல வேட்டுவ குலங்கள் இருக்கிறது .
தேவேந்திர வேட்டுவ குலமும் ,பள்ளர் சாதியையும் ஒரே சாதி கிடையாது .பெருமாள் வேட்டுவ குலம்,குமரன் வேட்டுவ குலம் ,சுப்பரமணி வேட்டுவ குலம் ,முட்டை வேட்டுவ குலம் ,மாகாளி வேட்டுவ குலம் ,மோக்காளி வேட்டுவ குலம் ,முட காளி வேட்டுவ குலம் போன்ற வேட்டுவ குலத்தவர்கள் கடவுள் பெயரை தமது கூட்டத்திற்கு வைத்து கொண்டன .
பறை -இசைகருவி பெயர். இசை கருவி பெயரை கூட்ட பெயராக வைத்து கொண்டவர்கள் தான் பறை வேட்டுவ குலம். பறை வேட்டுவ குலமும் ,பறையர் சாதியையும் ஒரே சாதி கிடையாது .
பள்ளம் -சம நிலத்தில் இருக்கும் தாழ்ந்த நிலம். நிலத்தின் பெயரை வைத்து கொண்டவர்கள் தான் பள்ள வேட்டுவ குலம் .பள்ள வேட்டுவ குலமும் ,பள்ளர் சாதியையும் ஒரே சாதி கிடையாது .
குடுமி(குடும அல்லது தென்குடும) வேட்டுவ குலத்துக்கும் ,பள்ளர் சாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கரைய -காவேரி ஆறு கரை பெயர் .இந்த காவேரி ஆறு கரை பெயரை கூட்ட பெயராக கொண்டவர்கள் கரைய வேட்டுவ குலம்.இந்த கரைய வேட்டுவ குலம் மேலை கரைய வேட்டுவ குலம் மற்றும் கீழை வேட்டுவ குலம் என்று பிரிந்து இருந்ததை கல்வெட்டுகள் மூலம் அறியலாம் . கரைய வேட்டுவ குலத்துக்கும் ,மீன் பிடிக்கும் சாதியையும் ஒரே சாதி கிடையாது .
வன்னி வேட்டுவ குலத்துக்கும் ,பள்ளி (வன்னியர் ) க்கும் எந்த சம்பந்தமும் இல்லை .
கள்ளை(கள்ள)-கள் என்று பொருள் .கள்ளை என்ற பெயரை கூட்ட பெயராக வைத்து கொண்டவர்கள் கள்ளை வேட்டுவ குலம் . கள்ளை வேட்டுவ குலமும் ,கள்ளர் சாதியையும் ஒரே சாதி கிடையாது .
உடையார் இனத்தில் 'மலையன் ' என்ற பெயரில் கல்வெட்டு இருக்கிறது . இது போல வேட்டுவ இனத்தில் 'மலைய வேட்டுவ குலம் 'இருப்பதை கல்வெட்டு (1968:226) கூறுகிறது . உடையார் இனமும் ,வேட்டுவ இனமும் ஒரே சாதி கிடையாது .
வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது கூட்டம் அல்லது குலம் கிடையாது .வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது வெள்ளாளர் களை பல கூட்டங்களாக பிரிக்கப்பட்டு சாட்சி கையெழுத்து போட்டவர்களில் ஒருவர் வேட்டுவர் என்று கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது . இன்று வேட்டுவ குலத்துக்கும் ,வெள்ளாள குலத்துக்கும் 20 கூட்ட பெயர்கள் ஒன்றாக இருக்கிறது .இதற்கு காரணம் வெள்ளாளர்கள் ,பெருமைமிக்க வேட்டுவ கூட்ட பெயர்களை பார்த்து அதே கூட்ட பெயர்களை வைத்து கொண்டார்கள் .
உதாரணம்:
'....குறுந் காடை வேட்டுவரில் சின்னன் ..., (ஈரோடு,உஞ்சலுர் கல்வெட்டு ). '...கொங்கத்து எழுமாத்தூர் இருந்து வாழும் சா காட சிற்றன்...'
(செங்கம் நடுகற்கள் 1971/73) இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை . இது போலத்தான் மற்ற குலங்கள்.
அந்துவ வேட்டுவ குலத்தினர் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்தவர்கள் அந்துவ வெள்ளாளர் என அழைக்கபட்டன .
காடை வேட்டுவ குலத்தினர் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்தவர்கள் காடை வெள்ளாளர் என அழைக்கபட்டன .
இதுபோல 20 குலங்கள் இருக்கிறது .
வேட்டுவ குலத்தவர்களும் (வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் ,புன்னம் வேட்டுவ கவுண்டர் ),வெள்ளாள குலத்தவர்களும் (வெள்ளாள கவுண்டர் ) ஒரே சாதி கிடையாது .

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...