Showing posts with label பண்டைத் தமிழரின் வாழ்க்கை. Show all posts
Showing posts with label பண்டைத் தமிழரின் வாழ்க்கை. Show all posts

Thursday, 19 August 2021

பழந்தமிழர்_அளவைகளில் சில

 

                                            பழந்தமிழர் அளவைகளில் சில
 
◆ முகத்தல்அளவைகள் :
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.
◆ நிறுத்தல் அளவைகள்
மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.
ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
◆ கால அளவுகள்
இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.
வயலும்வரப்போடு பயணியுங்கள் பழந்தமிழர்களின் விடயங்களை அறிந்துகொள்ள..!!!!!

 

பாரம்பரிய அரிசி வகைகள்

                                             பாரம்பரிய அரிசி வகைகள்

    பாரம்பர்ய அரிசி வகைகளில் எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்?*
1. *கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. *பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. *காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. *கருத்தக்கார் அரிசி* :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. *காலாநமக் அரிசி* :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. *மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. *அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.
9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. *தங்கச்சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகும்.
11. *கருங்குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. *கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. *கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.
14. *குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.
15. *கிச்சிலி சம்பா அரிசி* :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. *நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.
17. *சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18. *தூய மல்லி அரிசி* :
உடல் உள் உறுப்புகள் வலுவாகும்.
19. *குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.
20. *சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21. *பிசினி அரிசி* :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
22. *சூரக்குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23. *வாலான் சம்பா அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24. *வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்
25. *திணை*
உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.
26. *வரகு*
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்
27. *சாமை*
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.
28. *குதிரைவாலி*
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.
39. *கை குத்தல்*
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
30. *சிவப்பு காட்டு அரிசி*
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
31. *சிவப்பு அரிசி*
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
32. *குள்ளகார் அரிசி*
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.
33.மாப்பிளை சம்பா :
உடலை பலபடுத்தும் மாமருந்து . திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.
34.கவுணி அரிசி :
புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி. இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் .
35.சிவப்பு கவுணி அரிசி :
புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி. இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது . குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் .
36.பூங்கார் அரிசி :
மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி . தாய்பால் சுரக்கும் .
37.கட்ட சம்பா அரிசி :
நோய் எதிர்ப்பு சக்தி தரும் .
38.சிங்கினி கார் அரிசி :
எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி. உடல் நலம் பெற உதவும் .
39.இலுப்பைபூ சம்பா அரிசி :
சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். மூட்டு வலி,பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து . நரம்பு பிரச்சனையின் மருந்து .
40.காட்டுயானம் அரிசி :
இந்த அரிசியில் கஞ்சி வைத்து கறிவேப்பில்லை போட்டு மூடி வைத்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் . இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது .
41.சூரகுருவை அரிசி :
நோய் எதிர்ப்பு சக்தி தரும் .
42.பனங்காட்டு குடவாழை அரிசி :
தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி . அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும் .
43.கருடன் சம்பா :
நோய் எதிர்ப்பு சக்தி தரும். சாப்பாடு மற்றும் பலகார அரிசி .
44.கருங்குறுவை அரிசி :
இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம் இது ஒரு மாமருந்து. இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும் . அது யானைக்கால் நோய்க்கான மருந்து . குஷ்டதிற்க்கும் , விஷகடிக்கும் மாமருந்து. உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது . இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊரவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும் . இதற்க்கு 'அன்ன காடி 'என்று பெயர் .இது காலராவிர்க்கான மருந்து . இது கிரியா ஊக்கியாக உள்ளது .
45.கார் அரிசி :
சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான் களுக்கும் மருந்தாகும்.
46.தங்க சம்பா :
இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு திறனும் கொடுக்கும்.
47.தூயமல்லி அரிசி :
மேல குறிப்பிட்ட எல்லா அரிசிகளும் சிவப்பரிசி . கட்ட சம்பா தவிர்த்து . தூய மல்லி அரிசியானது இன்னும் மல்லிகை போல் பளபள வென இருக்ககூடியது .மக்கள் எதிர்ப்பார்க்கும் எல்லா குணங்களும் கொண்ட ஒரு அரிசி . தெவிட்டாத , நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிசி .
48.கல்லுண்டைச்சம்பா -
இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.
49.காடைச்சம்பா -
இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
50.காளான் சம்பா -
உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.
51.கிச்சிலிச்சம்பா -
பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.
52.குறுஞ்சம்பா -
பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.
53.கைவரை சம்பா -
உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.
54.சீதாபோகம் -
உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.
55.புழுகுச்சம்பா -
இந்த அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.
56.மணக்கத்தை -
தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.
57.மணிச்சம்பா -
அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.
58.மல்லிகை சம்பா -
நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.
59.மிளகு சம்பா -
உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.
60.மைச்சம்பா -
வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.
61.வளைத்தடிச் சம்பா -
வாத, பித்த தொந்தரவு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.
62.வாலான் அரிசி -
மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், கொழுமையும் உண்டாக்கும்.
63.மூங்கில் அரிசி -
மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம்
உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.
64.கார் அரிசி
அரிசியை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.
65.குண்டு சம்பா
அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.
66.குன்றுமணிச் சம்பா
அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.
67.சீரகச் சம்பா
சிறுவாத நோய்களைக் குணமாக்கும், இனிப்புள்ளது. சாப்பிட தூண்டும்.
68.கோரைச் சம்பா
அரிசி வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும். குளிர்ச்சி தரும். உட்சூடு, நமைச்சல், அதிமூத்திரம் இவைகளை நீக்கும்
69.ஈர்க்கு சம்பா
சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.
70.நவரா அரிசி
நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவாக கருதப்படுகிறது. நரம்பு தசைக் கோளாறுகளை குணப்படுத்தப் கேரள பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்பு சிகிச்சையான (Navarakizhi) பயன்படுத்தப்படுக்கிறது. மூட்டுகளின் விறைப்பை நீக்குகிறது, உடற்கழிவுகளை சுத்தம் செய்கிறது மற்றும் இரத்த ஓட்டம் சீராக உதவுகிறது.
இந்த பாரம்பரிய அரிசி எதுவும் உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ இல்லாமலேயே வளரக்கூடியது. மேற்காணும் அரிசி வகைகள் தானாக வளரக்கூடியது . தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இந்த அரிசியை உன்னுபவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது .
பாரம்பரிய அரிசி உண்போம் . ஆரோக்கியத்தை பேணி, ஆயுளை அதிகரிப்போம்.
(தொகுப்பாளர் ரா. பொன்னம்பலம் அவர்களின் 'நெல் அதிகாரம் 'என்ற புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது )

Sunday, 18 September 2016

தமிழ் ஆராய்ச்சி பற்றிய தகவல்

                                  தமிழ் ஆராய்ச்சி பற்றிய தகவல்

http://valuable-information.blogspot.in/2015/04/blog-post_20.html

Tuesday, 14 July 2015

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன???

மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.

" உன்னிலும் என்னிலும் இருக்கும் ஈசன், ஈயெறும் புடலிலும் இருக்கிறான்" எனபது நினைவு கூறத்தக்கவை. ஆயிரம் உயர்களுக்கு உணவளித்த அந்த மகிழ்ச்சி, உணவளித்தவரின் உள்ளம், உடல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அல்லவா?

கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும். யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்றபோது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது. அதனால், வருபவர் கோபம் தணிந்துதான் வீட்டுக்குள்ளே வருவார். இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள்.

பழங்கால தமிழ் கணிதம்

           

                 பழங்கால தமிழ் கணிதம்....      



கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. அக்கால தமிழ் பாடல்கள் நம்முடைய புலவர்களின் கணித அறிவினை பரைசாற்றுகிறது.

தமிழ் இலக்கமுறை

தமிழ் இலக்கம்அரேபிய இலக்கம்சொல்
0சுழியம்
1ஒன்று
2இரண்டு
3மூன்று
4நான்கு
5ஐந்து
6ஆறு
7ஏழு
8எட்டு
9தொண்டு/ஒன்பது
10பத்து
௯௰90தொன்பது
100நூறு
௯௱900தொன்னூறு
1,000ஆயிரம்
௯௲9000தொள்ளாயிரம்
௰௲10,000பத்தாயிரம்
௱௲100,000நூறாயிரம்
௰௱௲10,00,000பத்து நூறாயிரம்
௱௱௲100,00,000கோடி
௰௱௱௲10,00,00,000அற்புதம் (பத்து கோடி)
௱௱௱௲100,00,00,000நிகர்புதம் (நூறு கோடி)
௲௱௱௲1000,00,00,000கும்பம் (ஆயிரம் கோடி)
௰௲௱௱௲10,000,00,00,000கணம் (பத்து ஆயிரம் கோடி)
௱௲௱௱௲100,000,00,00,000கற்பம் (நூறு ஆயிரம் கோடி)
௰௱௲௱௱௲10,00,000,00,00,000நிகற்பம் (ஆயிரம் ஆயிரம் கோடி)
௱௱௲௱௱௲100,00,000,00,00,000பதுமம் (கோடி கோடி)
௲௱௲௱௱௲1000,00,000,00,00,000சங்கம்
௰௲௱௲௱௱௲10,000,00,000,00,00,000வெல்லம்
௱௲௱௲௱௱௲100,000,00,000,00,00,000அன்னியம்
௰௱௲௱௲௱௱௲10,00,000,00,000,00,00,000அர்த்தம்
௱௱௲௱௲௱௱௲100,00,000,00,000,00,00,000பரார்த்தம்
௲௱௲௱௲௱௱௲1000,00,000,00,000,00,00,000பூரியம்
௰௲௱௲௱௲௱௱௲10,000,00,000,00,000,00,00,000முக்கோடி
௱௲௱௲௱௲௱௱௲100,000,00,000,00,000,00,00,000மஹாயுகம்
பலா பழத்தினை வெட்டாமலேயே, அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை காண, பழம்பெரும் கணித நூலான, கணக்கதிகாரத்தில் ஒரு பாடல் உள்ளது.
"பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி –வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை"
உரை: ஒரு பலாப்பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவென்று கண்டுபிடிக்கலாமோ எனின் அதற்குச் சொல்லுமாறு: காம்பைச் சுற்றிலும் எண்ணிப் பார்க்க, ௱ முள்ளுக் கண்டது. இதை ௬ ஆல் பெருக்க, ௱ X ௬ = ௬௱ , இத ௫-க்கீய, ௱ X ௫ = ௫௱, ௨௰ X ௫ = ௱, ஆக ௱ ஐயும் ௨௰ ஐயும் கூட்ட ஈவு ௱௨௰ சுளை என்று சொல்வது.

விளக்கம்:

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணிக்கையை 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.
அதாவது,
பலா பழத்திலுள்ள முற்களின் எண்ணிக்கை : 100
இதை 100 X 6 = 600,
பின்பு இந்த 600 ஐ 5 ஆல் வகுக்க, 100 X 5 = 500 , 20 X 5 = 100, ஆக 100 ஐயும் 20 ஐயும் கூட்ட 120 ஈவாக வருகிறது, இதுவே சுளையின் எண்ணிக்கையாகும்.

ஒருமுறை தமிழ் புலவர் ஒருவர், ஒளவையாரை அடியே என்று அழைப்பதற்காக "ஒரு காலடி. நாலிலை பந்தலடி." என்று விடுகதை போட, கோபமான ஒளவையார் கீழ்கண்ட சிலேடை பாடலை பாடினார்.
"எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது. "
அதாவது, புலவர் கேட்டது. ஒரு கால் அடியாகவும், நான்கு இலையை கொண்டுள்ளதுமான ஆரைக் கீரையை. அதற்கு ஔவியாரின் பதிலில்,
தமிழில் "அ" என்ற எழுத்து "எட்டு" என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் "வ" என்பது கால் பங்கைக் (1/4) குறிக்கும். அப்படியானால் "எட்டேகால்" என்பது "அவ" என்றாகிறது. முதல் சொற்றொடர் "அவ லட்சணமே" என்று பொருள் தருகிறது.
எமன் ஏறிவரும் வாகனமாகிய எருமைக் கடாவே! அளவு கடந்த ஒழுங்கீனமான, மூதேவியைத் தாங்கி வரும் வாகனமாகிய கழுதையே! மேலே கூரையில்லாத குட்டிச் சுவரே! குரங்கே, அது ஆரைக்கீரையடா நீ போட்ட பிசியின் (நொடி அல்லது விடுகதை) விடை

பூசணிக்காயை உடைக்காமல், அதிலுள்ள விதைகளின் எண்ணிக்கையை காணவும் இந்த கணக்கதிகாரத்தில் ஒரு பாடல் உள்ளது.
"கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"
ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.
அதாவது, கீற்றுகளின் எண்ணிக்கை = X என்க.
இதை மூன்று, ஆறு, ஐந்து ஆகியவற்றால் பெருக்க. 3*6*5*X = 90X ஆகிறது. இதை பாதியாக்கினால் 45X ஆகிறது. பின்னர் மூன்றால் பெருக்க 135X ஆகிறது. இதை சுலபமாக சொல்வதென்றால் கீற்றுகளின் எண்ணிக்கையை 135 ஆல் பெருக்கினால் விதைகளின் எண்ணிக்கை கிடைக்கும்.

தாலி கட்டுவது ஏன்

                 தாலி கட்டுவது ஏன்...?

 

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

ிருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்

Tuesday, 2 June 2015

உறவுகள் புனிதமானது தெய்விகமானது சொர்க்கமானது

உறவுகள் புனிதமானது தெய்விகமானது சொர்க்கமானது.

            உறவுகள் புனிதமானது தெய்விகமானது
                           சொர்க்கமானது.
                                 காதல்
உலகில் உள்ள சீவன்கள் எல்லாம் (மிருகம் உள்பட.) மற்ற உறவுகளை விட காதலுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கிறார்கள். ஏன்ஒவ்வொரு ஜீவனும் மற்ற ஜீவன்கள் தன்னை அங்கீகரிக்க வேண்டும்ஆதரிக்க வேண்டும்புகழ வேண்டும் என்று துடிக்கின்றன. காதலர்கள் தங்கள் ஒருவருக் கொருவர் அன்பு செலுத்த வேண்டும் உயிரையும் கொடுக்க தயாராய் இருக்க வேண்டும் என்றும், தங்கள் நன்றாக அனுபவிக்க பட வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட வயதிலிருந்து துடிக்கின்றனஇது இயற்க்கை.யாராலும் மாற்றி அமைக்க முடியாது. இவ் உலகின் வரலாற்றில் எத்தனைப் பேர் அந்த காதலின் உண்மை பொருள் அறிந்து ஆண்டு அனுபவித்த வர்களின் எண்ணிகை வெகு வெகு சொற்பம்ஏன்?உண்மை காதலைப் பற்றி அறிந்து அனுபவித்தவர்கள் சொற்ப்பத்திலும் சொற்பம்.
                                            சங்க கால காதல்.
தமிழர்கள் என்றால் சங்க காலம், சங்ககால இலக்கியம் பற்றித்தான் அதிகமாக பேசுகிறார்கள்அதனால் நாமும் அக்கால காதலைப் பற்றி சற்று நினைவு கூறுவோம். அக்காலத்தில் ஆண்கள் அழகாகவும் வீரமாகவும்பல கலைகள் கற்றவர்களாகவும்ஆரோக்கியம் உள்ளவர்களாகவும்செல்வ செழிப்பில் சிறந்தவர்களாகவும் வாழ்ந்தார்கள்.
பெண்கள் என்றால் அச்சம், ஞானம்மடம்பயிர்ப்பு உள்ளவர்களாகவும் ஆடல் பாடல்விடுகதைஒப்பனைஅலங்காரம்நளினம்சமையல் மருத்துவம் முதலியவைகளில் சிறந்து விளங்கினர். இருபாலரும் உண்மையான அன்புகாதலின் பொருள் அறிந்தவர்கள்அன்பின் முகட்டை தொட துடித்தவர்கள். தமிழர்கள் களவு மனம்கற்ப்பு மனம் என்ற இரண்டையும் கடை பிடித்து வாழ்ந்தவர்கள்.  களவு மனம் என்றால் திருமனத்திற்கு முன் காதலிப்பதுகற்ப்பு மனம் என்றால் திருமணம் செய்து கொண்டு வாழ்வது.

ஒரு தலைவனும் ஒரு தலைவியும் ஒரு விழாவில் சந்தித்து கண்களால் கண்டு மனத்தால் ஒன்றி  காதல் அரும்பு விட தொடங்கி விடும்.  அது வளர்ந்தது (முழுமையாக தெரிந்து கொள்ள சலன படத்தை காணவும்.) தங்களையே மறக்கும் அளவு போய்விட்டதுஊரார்க்கு இது தெரிய வந்ததுபெண்ணின் பெற்றோர்களுக்கும் தெரிய வந்ததுஇதை வெறுத்து மறுத்த பெற்றோர்கள் தன மகளை ஓரு தனி அறையில போட்டு பூட்டி வைத்தனர்அதற்க்கு காப்பு சிறை எனப் பெயர்இதனை அறிந்த தலைவன் தன காதலி காப்பு சிறையில் வைக்கப் பட்டதை அறிந்துஅவன் பட்ட துன்பமும் துயரமும் யாருக்கு தெரியும் (800 கோடி பேரில் 70 பேருக்காவது தெரியுமா என்பாத்து  சந்தகமே.) காதலி காப்பு சிறையிலிருந்து மீட்டு வந்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து மடல் ஏற தீர்மானித்து விட்டான் தலைவன் .

                                                   மடலேறுதல்

தனி மனிதன் இழுக்க கூடிய இருவர் அமரக்கூடிய முகடு இல்லாத கை வண்டியினை கற்பனை செய்து கொள்ளுங்கள்.  அதில் இரண்டு சக்கரங்கள் இருக்கும்அந்த சங்கரங்களை சுற்றிலும் பனை மரத்தின் ஒலையின் அடி கருக்கை (அது கருப்பு முட்களை கொண்டதாக இருக்கும்கட்டி விடுவார்கள்அந்த வண்டியின் மத்தியில் இரண்டு கம்புகளை கட்டி அதில் காதலன் ஏறி நின்று யேசுவை சிலுவையில் அறைந்தது போல் கட்டி விடுவார்கள்அந்த வண்டியினை ஒருவன் காப்பு சிறை வைக்கப் பட்ட தன் காதலின் ஊரின் தெருக்களில் இழுத்து கொண்டு செல்வான்அப்போது வண்டியின் சக்கரத்தில் கட்டப்பட்ட கருக்களின் முட்கள் தலைவனின் உடலில் பட்டு அவன் உடலில் இருந்து ரத்தம் சிதறி கொட்டிக் கொண்டு வரும்அப்போது முச்சந்தில் நின்று கொண்டு தான் காதலித்த பெண்ணின் பெயரை கூறி அவள் காப்பு சிறையில் வைத்துள்ளதை பறை சாற்றுவான்.இதை அறிந்த மக்கள் அந்த காதலர்களை முறையாக ஒன்று சேர்க்க முயற்சி செய்வார்கள்.

                     காவியசரித்திர காதல்கள்

 உலக வரலாற்றி யலாகட்டும்காவியக்த்தியலாகட்டும் ஒரு சில காதலர்களை மட்டும் தான் பார்க்க முடிகிறதுஅம்பிகாவதி,அமராவதிரோமியோ ஜூலியட்கோவலன்கண்ணகிலைலா மஜுனுபோன்ற காதலர்கள் ஆவர்காதல் என்றால் உலகம் முழுதும் இவர்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்ஆனால்உண்மையாக வாழ்ந்தவர்கள் நிலையிலிருந்து பார்த்தால் இவர்கள் முமையான வாழ்க்கை வாழ்ந்தவர்களோ காதலில் வெற்றி பெற்றவர்களோ அல்லகாதலில்தோல்வி அடைந்து மரணத்தை தழுவியவர்கள் ஆவர்.

                                சினிமாக் காதல் 

பெரிய திரை சின்ன திரை எதுவாகட்டும்அதில் கதை ஆசிரியர்,பாடல் ஆசிரியர்வசன கர்த்தாஇயக்குனர்கள்நடிகர்கள் இவர்கள் பின்னணி எப்படி பட்டது என்று சற்று திரும்பி பார்த்தால் 90 சதம்தாய்தந்தை பேச்சை கேட்காமலும்ஊர் சுற்றி கொண்டிருந் தவர்களும்சரியாக வளர்க்கப் படாதவர்களும்நல்ல முறை யான படிப்பறிவு இல்லாதவர்களும்வாழ்க்கை என்றால் என்ன வென்று அறியாதவர்களாய் வீட்டை விட்டு ஒடி வந்தவர்களாய் இருக்கிறார்கள். பெரும் பாண்மையான தயாரிப்பாளர்கள் காம களியாட்டங்களில் ஆர்வம் உள்ளவர்களாகவும்அழகி நடிகைகளின் உள்ளாடைகளை அதிக விலைக்கு வாங்கி முகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு படம் தயாரித்தால் எப்படி இருக்கும் அவர்களுடைய அறிவுபுத்தி தகுதியினைப் பொறுத்து அமையும். எட்டிக் காயிணைப் பார்த்து நீ இனிப்பாய் இரு என்றால் அது இனிப்பாய் இருக்குமாஅது போலத்தான் இதுவும்.
கதாநாயகன்கதாநாயகிகள் எப்படி இருக்கிறார்கள் என்றால் .கதாநாயகன் தெரு பொரிக்காகவும்ஊர் சுற்றி திரிபவனாகவும்.வேலை வெட்டி இல்லாதவனாகவும்சிப்பி தலையனாகவும்,பெற்றோர் பேச்சை கேட்ட்காதவனாகவும். பெரியோர்களை கொச்சையான வார்த்தைகளால் திட்டுபவனாகவும்குறிக்கோள் அற்றவனாகவும்பணக்கார பெண்களை சுற்றிக் கொண்டுசாயம் போன பேண்டு சட்டை அணித்து கொண்டும் கோமாளி கூத்துகளை செய்து கொண்டும்அப்பா அம்மா செலவில் கடனுக்கு ஒரு பைக்கு வாங்கி கொண்டு அவளை சுற்றிக் கொண்டு தன் வலையில் சிக்க வைப் பதையே தொழிலாக கொண்டுள்ளான். நாயகிகள் என்றால் அரை குறையாக உடை அணிந்து கொண்டுசிறி தளவு கூட பெண்மை தன்மை இல்லாமலும்தமிழ் மொழியே தெரியாதவள் போலும்சமையல் செய்வது என்றால் கேவலம் என்பது போலவும்,தலை முடியினை பேய் போல் தலை விரிகோலமாக போட்டுக் கொண்டு திரிபவளாகவும்நடனம் என்ற பெயரால் பேய் ஆட்டம் ஆடிக் கொண்டும்காதலனை வாடா போடா என்று நடு தெருவில் கத்துபவளாகவும்ஆண்பிள்ளை போன்று பேண்டு சட்டை அணித்து கொண்டு அடக்கம் அற்றவளாய்பேய்,பிசாசு போல் நடனம் ஆடுபவளாக காட்சி அளிக்கிறாள்தன பெற்றோர் அண்டையிலிருந்து கொண்டு தன் நாத்தனார்கொழுந்தன் மாமியார் மாமனார் இவர்களை பழி வாங்கி நடு தெருவுக்கு கொண்டு வருவதே தன் லட்சியமாக கொண்டு வாழ்பவளாக வலம் வருகிறாள்..
சினிமா உலகம் இன்னும் ஆயிரம்பல்லாயிரம் ஆண்டுகளானாலும் இப்படித்தான் இருக்கும்அதை திருத்த முயற்சி செய்ய முயல் பவனும். நல்ல மாற்றத்தை எத்ர்பார்ப்பவனும்விமர்சனம் செய்து கொண்டு இருப்பவனும் உலகத்தைப் பற்றியும்இயற்கையினைப்பற்றியும் அறியாதவர் ஆவர்அது அப்படித்தான் இருக்கும்அதை கொண்டு கூவம் ஆற்றிலே  கொட்டி விடுங்கள்கழுதையினை கழுதையாக பார்க்காமல் குதிரையாக பார்ப்பது யார் தவறு.
                          இன்றைய காதல்
கணவன் மனைவியிடையே ஒற்றுமை இல்லாதவர்கள், புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவர்கள்சுய நலம் கொண்டவர்கள், அகங்காரம் பிடித்தவர்கள் பொறுப்பு அற்றவர்கள்இவர்களின் செயலால்ஏமாற்றம் அடைத்த பிள்ளைகள்.பெண்பிள்ளையாக இருந்தால்எவனாவது ஒருவன் தன்னை பார்த்தால் போதும் அவனை மடக்கி போட்டு விடவேண்டும் என்று அதிலே இறங்கி விடுகிறார்கள். ஆண் பிள்ளையாக இருந்தால் அப்பா அம்மாவை மிரட்டியோகடன் வாங்கியோ அல்லது நண்பன் பைக்கை ஒசாக பெற்றோ கோமாளி சேட்டைகளை செய்து கொண்டு பணக்கார பெண் பிள்ளைகளை தன் வலையில் சிக்க வைக்கும் நாசகார வேளையில் இடுபடுகிறான்இதைத்தான் காதல் என்று பட்டி மன்றம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள் (படித்த மேதாவிகள் கூட.)சினிமாவாகட்டும்கதை யாகட்டும் காதல் என்றால் ஏழைப்  பெண்ணை பணக்காரன் பிள்ளை விரும்புவதும் அல்லது பண்க்கார பெண் பிள்ளை ஏழை பையனை காமம் கொள்வதும்,, பின் பிரிவதும்அல்லது கீழ் சாதி பையன் அல்லது பெண் பிள்ளை மேல் சாதிகார பையனையோ அல்லது பெண் பிள்ளையோ காமம் கொண்டு அதற்காக காலத்தை கடத்தி ஊரை விட்டு ஓடி கடைசியில் நாசமாய் போவதைத்தான் காதல் என்று நிலை. பல  கோடி கணக்கான பணம் செல வழித்து படமெடுத்து சமுதாயத்தை சீரழித்துக் கொண்டு இருக்கின்றனர். புராண காலமாகட்டும் வரலாற்று காலமாகட்டும்.இது வரை சாதி மத மொழி இன வேறு பாடு அற்ற சமுதாயம் இருந்ததாக தெரிய வில்லைஇவைகளுக்கு இடையே சண்டை சச்சிர்வு கொலை கொள்ளை போர் இவைகள் நடந்து கொண்டு வந்திருக்கின்றன நடந்து கொண்டு இருக்கின்றனஇனியும் நடந்து கொண்டு தான் இருக்கும்இது இயற்க்கைஇதை கடவுளாலும்  கூட மாற்றி அமைக்க முடியாது.ஒரு இந்து சித்தப்பன் வீட்டில் பெண் எடுப்பேன் என்றாலோ  அல்லது ஒரு முஸ்லிம் மாமா வீட்டில் பெண் எடுத்தாலோ  சமுதாயத்தில் அவன் நிலை என்ன வென்று சிந்தித்து பாருங்கள். சத்தியமாக சாதி மத இன்ன மொழி சாங்கியம் சடங்கு சட்ட திட்டங்கள் கிடையாது. யாருக்கு என்றால் ஞானி சாது யோகிமுனி சித்தர் அறிவர் இவர்களுக்கு மட்டும்தான்இவர்கள் எல்லாம் கடவுள் நிலையில் இருப்பவர்கள்இவர்களுக்கு எல்லாம் ஒன்றேஆனால் சாதாரண மனிதர் களுக்கு மேற்கண்ட அனைத்தும் உண்டு உண்மையும் சத்தியமும் கூட
அமெரிக்காவில் சென்று நான் இந்தியன் அதனால் கீப் லெப்ட்டில் வாகனம் ஓட்டுவேன் என்றும். ஒரு அமெரிக்கன் இந்தியாவில் வந்து கீப் ரைட்டில் ஓட்டுவேன் என்றாலோ எப்படி இருக்கும் என்று சற்று சிந்தத்து பாருங்கள் அது போலத்தான் ஒரு முஸ்லிம் மாமன் வீட்டி பெண் எடுப்பேன் ஒரு இந்து சித்தப்பன் வீட்டில் பெண் எடுப்பேன் என்றால் இந்த சமுதாயமும் சட்டமும் ஏற்றுக் கொள்ளுமா சிந்திப்பீர்.அதன் விளைவை சற்றுமனக் கண் முன் கொண்டு வாருங்கள்.அதனால் காமபசியாலும்வறுமையினை போக்கும் குறுக்கு வழியினாலும் கலப்பு திருமணம் செய்து கொண்டு கஷ்டப் பட்டுக் கொண்டு தன்னை பெற்று எடுத்து இவ்வளவு நாள் வளர்த்து.வந்த தாய்தந்தைசகோதரர்சகோதரிகளை விட்டு விட்டு வந்து சுற்றத்தையும் சாதி சனகளுக்கு அவமானத்தையும், துன்பத்தையும் கொடுத்து கடைசில் நாசமாய் போவதற்காகவம் கலப்பு திருமணம் செய்ய வேண்டும்.. சிந்திப்பீர்


                                      கலப்பு திரு மனமும் தீர்வும் 
சினிமாவாகட்டும்,  கதை யாகட்டும் காதல் என்றால் ஏழைப் பெண்ணை பணக்காரன் பிள்ளை விரும்புவதும் அல்லது பண்க்கார பெண் பிள்ளை  ஏழை  பையனை காமம் கொள்வதும்,, பின் பிரிவதும்  அல்லது கீழ் சாதி பையன் அல்லது பெண் பிள்ளை மேல் சாதிகார பையனையோ  அல்லது பெண் பிள்ளையோ காமம் கொண்டு அதற்காக  காலத்தை கடத்தி ஊ ரை விட்டு ஓடி கடைசில் நாசமாய் போவதைத்தான் காதல் என்று நிலை நாட்ட கோடி கணக்கான பணம் செலவழித்து  படமெடுத்து சமுதாயத்தை சீரழித்துக்  கொண்டு இருக்கின்றனர்.
புராண காலமாகட்டும் வரலாற்று காலமாகட்டும். இது வரை  சாதி மத மொழி இன வேறு பாடு அற்ற  சமுதாயம் இருந்ததாக தெரிய வில்லை. இவை களுக்கு இடையே சண்டை சச்சிர்வு கொலை கொள்ளை போர் இவைகள் நடந்து கொண்டு வந்திருக்கின்றன  நடந்து கொண்டு இருக்கின்றன. இனியும் நடந்து கொண்டு தான் இருக்கும். இது இயற்க்கை. இதை கடவுளாலும்  கூ ட மாற்றி  அமைக்க முடியாது.
உண்மைஎன்றாலும், ஒரு ஐந்து சித்தப்பன் வீ ட்டில் பெண் எடுப்பேன் என்றால் யிலே சத்தியமாக சாதி மத இன்ன மொழி சாங்கியம் சடங்கு சட்ட திட்டங்கள் கிடையாது.  யாருக்கு என்றால் ஞானி சாது யோகி, முனி சித்தர் அறிவர் இவர்களுக்கு மட்டும்தான். இவர்கள் எல்லாம் கடவுள் நிலையில் இருப்பவர்கள்.  இவர்களுக்கு எல்லாம் ஒன்றே. ஆனால் சாதாரண மனிதர் களுக்கு மேற்கண்ட அனைத்தும் உண்டு  உண்மையும்  சத்தியமும் கூட
 அமெரிக்காவில் சென்று நான் இந்தியன் அதனால் கீப்  லெப்ட்டில் வாகனம் ஊட்டுவேன் என்றும் ஒரு முஸ்லிம் மாமன் வீட்டி பெண் எடுப்பேன்  ஒரு இந்து சித்தப்பன் வீ ட்டில் பெண் எடுப்பேன் என்றால் இந்த சமுதாயமும் சட்டமும் ஏற்றுக் கொள்ளுமா சிந்திப்பீர். அதன் விளைவை சற்று மனக் கண் முன் கொண்டு வாருங்கள்.
அதனால் காம பசியாலும், வறுமையினை போக்கும் குறுக்கு  வழி யினாலும் கலப்பு திருமணம் செய்து கொண்டு கஷ்டப் பட்டுக் கொண்டு தன்னை பெ ற்று எடுத்து இவ்வளவு நாள் வளர்த்து.வந்த தாய், தந்தை, சகோதரர், சகோதரிகளை விட்டு விட்டு வந்து சுற்றத்தைய்ம் சாதி சனகளுக்கு அவமானத்தையும் துன்பத்தையும் கொடுத்து கடைசில் நாசமாய் போவதற்காகவம்  கலப்பு திருமணம் செய்ய வேண்டும்.. சிந்திப்பீர்.

         கலப்பு திருமணம்  செய்துகொள்ளலாம். யார்யார்?.
அறிவாளிகள், உலகத்தை நன்றாக புரிந்தவர்கள்தன்நம்பிக்கை உள்ளவர்கள் உண்மையான அன்புள்ளம் கொண்டவர்கள்,உண்மையான வாழ்க்கை கல்வி கற்றவர்கள்நிறைவான வாழ்க்கைவாழ துடிப்பவர்கள்சமுதாய அக்கறை உள்ளவர்கள்தங்கள் பெற்றோரை விட் அறிவிலும் அனுபவத்திலும்சிறந்த நிலையில் உள்ள கருத்து ஒருமித்த இரு பாலரும் எந்த நிலையில் இருப்பினும்.எந்த சாதி மத மொழி கலப்பினர்களாக இருப்பினும் கலப்பு திரு மனம் செய்து கொள்ளலாம்தவறில்லை.
ஆனால் அவர்கள் தன் பெற்றோர் சுற்றம்சாதி சனங்களை விட்டு சற்று விலகி வாழ வேண்டும்தங்கள் பெற்றோரிட மிருந்து எந்த விதத்திலும் கால் காசு கூட பெற முயற்சி செய்யாமல்தங்கள் சொந்த முயற்சியால் நல்ல முறையில் வாழ்ந்துநல்ல பிள்ளைகளை பெற்றுவளர்த்துகடைசியில் தங்கள் பெற்றோர் களுக்கும் சுற்றத்துக்கும் சமுதாயத்திற்கும் நன்மை செய்பவர்களாக வாழ்த்து காட்டினாள் அவர்களை எல்லா பெற்றோர்களும் சமுதாயமும் வாழ்த்தி வரவேற்கும்.  மற்றும்
பொறுப்பற்றவர்கள்கீழ் மக்கள்சதா தண்ணீர் அடித்து விட்டு தெருவில் கிடப்பவர்கள், தன்நம்பிக்கை அற்றவர்கள்சமுதாய அக்கறை அற்றவர்கள்குடும்ப பொறுப்பு அற்றவர்கள்,இவர்களிடையே கலப்பு திருமணம் மற்றும் எது வேண்டு மானாலும் செய்து கொள்ளலாம்இவர்கள் தான் சமுதாய சீரழிவுக்கு காரணமானவர்கள். இவர்கள் தான் கொள்ளை கொலை செய்யும் நபருக்கு கை கூலி களாக செல்பவர்கள்இவர்களுக்கு பிறக்கும் குழந்தை கள்தான் சமுதாய சீர்அழிவுக்கு காரணமான அரசியல் வாதிகள் அதிகாரிகள்ஆன்மிகம்கலைகல்வி சட்டம் போன்ற துறையில் உள்ள தீய சக்திகளை பெற்று தள்ளு கின்றவர்கள்.
  நல்ல குழந்தைகளை வளர்க்கும்வழி .
ஒருவருக்கு மாதாபிதாகுருதெய்ய்வம் முதன்மை என்பார்கள்.முதலில் அம்மா அடுத்தது அப்பா பிறகு தான் குரு .இன்று நல்ல குரு கிடைப்பது மிக மிக அரிது. எல்லா துறையிலும் போலி குருக்களும்வியாபார குருக்கள் தான்உள்ளனர்.. அதனால் அதை மறந்து விடுவோம். இருப்பது பெற்றோரும் கடவுள் மட்டும் தான். தாய் தந்தை நல்லவர்களாகவும் அவர்களிடையே ஒற்றுமை,உண்மையம்ஒழுக்கமும்நல்ல லட்சியமும் இருந்தால் அவர்கள் குழந்தைகளும் அவர்களைப் போல் நல்லவர்களாக பிறக்கும்,  வளரும். கடவுளும் அவர்கள் செயலுக்கு தாக்கப் படி நல்லதே செய்வார்
அதிலும் முக்கியமானவர் தாய் ஆவாள்அவள் ஒழுக்கம்குடும்ப பொறுப்பு, அறிவு, வாழ்க்கை கல்விநல்ல லட்சியம் உள்ளவளாக இருந்து குழந்தைகளை பொறுப்பாக வளர்த்தால் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகள் நல்லவர்களாக வளர்வார்கள்எந்த தீயசக்திகளும் சூழ் நிலைகளும் ஏன் கடவுளால் கூடஅவர்களை கெடுத்து விட முடியாது. அப்படி பட்ட நல்ல தாய் இல்லாவிட்டால் அவர் குழந்தைகள் கெட்டு குட்டிசுவர்களாகி விடுவார்கள் கடவுளால் கூட அவர்களை காப்பாற்ற முடியாது..

                                              தாய்தந்தை
ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ முதல் கண்கண்ட தெய்வமாக திகழ்பவர்கள் தாய் தந்தையரே ஆவர்தாய் தந்தை இல்லாமல் ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து ஆளாக முடியாது. நல்ல அல்லது கெட்ட தாய் தந்தை யாரா னாலும். தன் குழந்தைகளை தனக்கு தெரிந்த முடிந்த அளவில் வளர்த்து ஆளாக்கு கின்றனர்இதில் சந்தேகம் இல்லை. இந்த உலகத்தை பார்க்க ஒரு வாய்ப்பு அளித்தவர்கள் பெற்றோர்களே ஆவர். அதனால
ஒரு ஆணோ பெண்ணோ தனக்கு அறிவில் தெளிவு பெற்றவுடன் யாராயினும் அவர்கள் பெற்றோராயினும்சுற்றமாயினும் கணவன் அல்லது மனவியாயினும்ஏன் கடவுளானாலும் தவறான வழி காட்டினால் கடுகு அளவு கூட அதற்ற்கு செவி சய்க்கவோ அதன் வழி செயல் படவோ கூடாதுதவறான வழி காட்டு பவர் யாராயினும்.அவர்கள் விலக்கி வைக்கப் பட வேண்டியவர்கள்
ஒரு ஆண்பிள்ளை தன் பெற்றோர்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும்தன்னை நடுத் தெருவில் விட்டவர் களாயினும் தன்னை பெற்று வளர்த்தமைக்காகநன்றி கடனாக அவர்களுக்கு மரியாதை கொடுத்துஅவர்கள் அந்திம காலத்தில் அவர்களுக்கு உண்ண உணவுஉடுக்க உடைஆரோக்கியமாக இருக்க மருந்துவ வசதி செய்து கொடுப்பது மகனின் கடமையாகும்அவ்வாறு செய்பவன் தான் ஆண் பிள்ளை மனிதன் ஆவான்அதை விடுத்து நியாயம் தர்க்கம் பேசி கொண்டு தன் கடமையினை செய்யாதவன் பேடியாவான் ,நன்றி கெட்ட துரோகியாவான்.
ரு நல்ல தாய் தந்தைக்கு மகனாக பிறந்து நன்றாக வளர்க்கப் பட்டிருந்தால்அந்த மகன் தன் பெற்றோரை தெய்வமாக மதித்து வணங்கி தன் வருவயினை அவர்களிடம் கொடுத்து ஆசி பெற்றால்அவன் தான் மகன். நல்ல பெற்றோர்கள் அதில் கால் காசு எடுக்காமல் தன்னிட முள்ள பொருளையும் சேர்த்து திருப்பி கொடுத்து ஆசிர்வாதம் செய்வர் தான் பெற்றோர் ஆவர்.அவன் கோடி கோடியாய் சம்பாதிப்பான்அவன்தான் உண்மையான மனிதன்.நல்ல பெற்றோருக்கே அன்பும்மரியாதையும் கொடுக்காதவன்சுய நலமிக்க மிருகமாவான்அவன் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டான். அகங்காரம்ஆணவம்தற்பெருமை பிடித்தவன் ஆவான்.பதிரே ஆவான்.
 

                        பெண் பிள்ளையாக இருந்தால்

 

பெண்ணாக பிறந்து விட்டால் பெண்ணை பெற்ற பெற்றோர்கள்அவர்களை நன்றாக வளர்க்க வேண்டும். அந்த பெண் குழந்தைக்கு வாழ்க்கை கல்வி கற்று கொடுக்கப் பட வேண்டும். வாழ்க்கை கல்வினை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். வயிற்று பிழைப்புக்கான கல்வி கொடுத்து பின்னால் அவர்கள் மறைவில்வாழலாம் என்று எண்ணக் கூடாது. சுருக்கமாக வாழ்க்கை கல்வி என்றால்.அவர் அவர்கள் கலை கலாசாரம், பண்பாடு ஒழுக்கம் கடமை அனுபவ கல்வி. அதிலும் மிக முக்கியமான சமையல், குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம். உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்தல், ஒப்பனை, பெண்களுக்கான விளையாட்டுகள். தற்ப்போது உள்ள வயிற்று பிளைப்புபுக்கான கல்வினை விடுத்து, ஒரு தொழில் கல்வி கற்று கொடுக்கலாம். மேலும் அறிவும், ஆற்றலும் இருந்தால் அறுபத்து நான்கு கலைகளில் பலவற்றை கற்று கொடுக்கலாம்.

 (வாழ்க்கை கல்வி என்றால் என்ன வென்று ஒரு பெற்றோருக்கும் ஆசிரியர் களுக்கும் தெரியாதே அவர்கள் எப்படி தன் பிள்ளைகளுக்கு கற்று கொடுப் பார்கள் என்று கேட்கிறிர்களா? எனக்கும் தெரியாது. கடவுளுக்குதான் தெரியும்.) 

பெண் பிள்ளையாக பிறந்து விட்டால் திருமணம் ஆகும் வரை தன் பெற்றோ ருக்கு செல்ல பிள்ளைகள்தான். திருமணம் ஆகும் வரை மேற்கண்ட கலை களை கற்றுக் கொண்டு, தன் தாய் தந்தைக்கு உதவி செய்து கொண்டு, தன் உடன் பிறந்தோர், சுற்றத்தாரிடம் அன்பாக பழகி கொண்டு நல்ல பிள்ளை என்று பெயரோடு வாழ வேண்டும்.தன பெற்றோர்கள் நல்லவராகவும், நன்றாக வாழ்ந்த வராகவும் நல்ல அனுபவ சாலிகளா கவும் இருந்தால் அவர்கள் அறிவுரைப்படி நல்ல கணவரை தேர்ந் தெடுத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். சரியான பெற்றோராக இல்லாமல் இருந்தால், நன்றாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் உதவி உடன் நல்ல கணவரை தேர்ந்து எடுக்க வேண்டும். இவைகள் எதும் அமையாத போது, பலமுறை ஆலோசித்து சிந்தித்து தன் துணைவனைக் தேர்ந்து எடுக்கவேண்டும்.. 

ஒரு பெண்ணை ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டால் அவள் தன் கணவனின் முழுசொத்தாகி விடுகிறாள். ஒரு பெண்ணை ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்தாள். அதற்க்கு கன்னிகா தானம் என்று பெயர். அன்று முதல் அவள் வேறு ஒருவர் உடமையாகி விட்டால். பெற்றோருக்கும் மகளுக்கும் எந்த ஒரு உரிமையும் கிடையாது. மனித நேயத்தை தவிர.
திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு கணவன் தான் கடவுள்.மாமனார் மாமியார் தான்தனது தாய் தந்தையாவார்கள் . கொழுந்தனார், மச்சாண்டார், நாத்தனார் இவர்கள் தான் தன் சகோதரர், சகோதரிகள் ஆவர்.

திருமணம் செய்து கொண்ட பெண் தன் பெற்றோருக்கு செய்யும் கடமை உதவி எது என்றால், தான் புகுந்த வீ ட்டிற்கு குத்து விளக்காக திகழ்வதும், நன்றாகசீரும்சிறப்புடனும் வாழ்தலே ஆகும். (அதைவிடுத்து ஒரு பெண் தான் புகுந்த வீட்டை விட்டு பிறந்த வீட்டிற்கு சென்று புகுந்த வீட்டில் குழப்பத்தையும். பிரிவினையினைஏற்படுத்தி அந்த வீட்டை நரகமாக்கி கொண்டு இருப்பவள் கடைசில் தான் பிறந்த வீ ட்டிற்க்கும் கொள்ளி கட்டையாய் மாறி, அங்கிருந்தும் அவள் துரத்தி அடிக்கப் பட்டு,நல்ல குடியினை கெடுத்ததும் அல்லாமல்,கடைசில் தானும் நாஸமாக
போபவாள். அவள் பெண்மணியோ குத்து விளக்கோ அல்ல. அவள் ஒரு சமுக விரோதி, வீட்டை கொளுத்தும் கொள்ளிக்கட்டை.நிகரற்ற வில்லியாவாள் )

                                சம்பந்திகள்


ஒரு பெண் பிள்ளையினை தன் மருமகளாக ஏற்று கொண்ட சம்பந்தி தன் மறு மகளை தன் பிள்ளையாக ஏற்று கொள்ள வேண்டும். தன் பெண் பிள்ளைக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று கனவு கண்டாயோ அந்தனையும் தன் மறு மகளுக்கு செய்ய வேண்டும் அவள் தான் உன் குலம் தழைக்க செய்பவள். வீட்டு மகா லட்சுமியும் குல விளக்குமாவாள் . அந்திம காலத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, மருத்துவ செலவு இவைகளை கவனிப்பவள் அவளே. தன் பெற்றோர், உடன் பிறந்தோர், உற்றார் உறவினரை விட்டு தங்களிடம் தஞ்சம் புகுந்தவளை கண் கலங்காமல் பார்த்து கொள்வது மாமனார், மாமியார் கணவன் கடனும். கடமையும், வாழ்கையும் ஆகும். (மிருகங்களுக்கு கூட ஒரு முறையான வாழ்க்கை உள்ளது. மேற் கண்டவிதமாக நடக்காமல் தற் போதிய உலக வழக்குப்படி கொடுமை காரர்களாக நடந்து கொள்ளும் மாமனார் மாமியார்கள் மிருகத்தை காட்டிலும் கொடியவர்களே. பாவிக்களுமாவர். குடும்பத்தை கொல்லும் கோடரி களாகும்.) 

தன் வீட்டிக்கு மகா லட்சுமியாக வந்த மருமகளிடம். அதை கொண்டா இதை கொண்டா நகை கொண்டா நட்டு கொண்டா. உங்க வீட்டிலிருந்து சொத்து கொண்டா, இல்லாவிட்டால் வழக்கு போடு . இல்லாவிட்டால் உன் தாய் வீட்டிற்கு போகாதே என்று மிரட்டி வைக்கும் கணவன், மாமனார், மாமியார் நாத்தனார் இவர்கள் எல்லோரும் எந்த நிலையில் இருப்பினும் தன் நம்ம்பிக்கை அற்றவர்கள் பிச்சைகாரர்கள், பேடிகள், கேடிகள் சமுக விரோதிகள், தாங்களே உண்மையான கணவன் மாணவி அல்லாதவர்கள் சொர்க்கத்தை நரக மாக்கும் கயவர்கள் 4 

பெண்ணை கொடுத்த சம்பந்திகள் தன பெண்ணை கன்னிகா தானம் செய்து கொடுத்த பின் தன பிள்ளை எப்படி பிழைக்கிறாள், என்று பார்க்க வேண்டும், முடிந்தால் மனித நேயத்துடன் எண்ணத்தாலோ, செயலாலோ பொருளாலோ அவர்கள் முன்னுக்கு வர உதவி செய்யலாம் . முடியா விட்டால் அமைதியாக விலகி விடவேண்டும். அதை விடுத்து பெண்ணை கொடுத்து, சம்பந்தி வீட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பதும், அவர்கள் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி குடி கெடுப்பதும், தன் பெண்ணை தனது வீட்டிக்கு அழைத்து வந்து அங்கிருந்து சம்பந்தி வீட்டின் மீது நாட்டாமை செய்ய திட்டமிடுவதும், மறு மகனையும் மகளையும் தன் வீட்டிற்க்கு கூட்டிவந்து, பெண் பிள்ளையினை ஆண் பிள்ளை போலும், மருமகனை பொட்டைனாகவும் ஆக்கும் சம்பந்திகள் தன் சம்பந்தி குடி கெடுத்தது மட்டும் அல்லாமல் தன பெண்ணின் வாழ்கையும் கெடுத்து குட்டி சுவராக்கிய பிச்சைகார கேடிகள் ஆவர் , சமுதாய சீர்கேட்டின் கயவர்களும், காவலர்க்களுமாவர்.
 

                                  கணவன் மனைவி


ஒரு பெண் குழந்தையினை பெற்று விட்டால் மடியில் நெருப்பை கட்டி கொண்டுஇருப்பது போல் என்று சொல்லுவார்கள். தற் காலத்தில் பெண் பிள்ளையினை பெற்று எடுப்பது பாவம் என்று குழந்தையிலே கொன்று விடுகிறார்கள். காரணம் தற் காலத்தில் பெண் பிள்ளை பெற்று வளர்ப்பது என்பது கொடுமையாக தெரிகிறது. பெண் பிள்ளை பெற்றவர்கள் தன் குழந்தையினை மிகவும் செல்லமாக வளர்க்கிறார்கள் ( பணக்காரர், ஏழை யாராக இருப்பினும்) கணவன் வீட்டிற்கு போனால் அங்கு எப்படி இருக்குமோ என்று பயந்து, இங்கியாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று ஏகப்பட்ட சலுகைகளை கொடுத்து வளர்க்கிறார்கள்.

அந்த பெண் பிள்ளை வயதிற்கு வந்ததும் ஏகப்பட்ட சட்ட திட்டங்களை போட்டு வளர்கின்றனர், அங்கே போகாதே இங்கே நிற்காதே என்றும் .பொழுது சாய்ந்ததும் வீட்டை விட்டு வெளியே போக கூடாது என்றும், பாவாடை கணுக்கால் தெரியும் படி கூட கட்ட கூடாது என்று கட்டளை இடுவார்கள். உடல் தெரியும் படி உடை உடுத்தக் கூடாது என்று கண்டிப்பர். உடன் பிறந்த சகோதரன் மாமா உள்பட ஆண் பிள்ளைகள் யாரிடமும் நெருங்கிபழககூடாது என்று மிரட்டி வைப்பார்கள். ( இப்படி இல்லாமல். பொறுப் பற்ற தன்மையிலும், பராரிகளாகவும், எருமை மாடுகளாகவும் வளற்க்கும் பெற்றோகளைப் பற்றி இங்கு நான் பேசவில்லை.)

இவ்வாறு வளர்க் கப்பட்ட பெண்மணி ஒருவளை ஒரு ஆடவன் காதலித்தோ, ஏமாற்றியோ, பெரியோர்களை வைத்து பெண் பார்த்தோ, பணத்திற்காகவோ, சொத்துக்காவோ, அன்பிற்க்காகவோ, அல்லது எதற்காகவோ, திருமணம் செய்து கொள்கிறான். தாலி கட்டிய அன்றோ அல்லது மறு நாளோ முதலிரவு என்ற சாங்கியத்தை செய்கிறார்கள். அவன் நல்லவனா கெட்டவனா, கொடுமை காரண, வஞ்சனைக்காரணா என்று கூட தெரியாமல் தாழி கட்டியதற்காக, தன பெற்றோர், சகோதரர் மாமா இவர்களுகு கெல்லாம் காட்டாத தன் மேனியினை கணவனுக்காக அன்று இரவே நிர்வாண மாக தன்னை அவனக்கு அர்ப்பணம் செய்கிறாள் 

தன்னை பெற்றார், உற்றார்,, சுற்றத்தார் இவர்களை எல்லாம் விட்டு வந்து தன்னை சரணாகதி அடைந்த அந்த பெண்ணை எப்படி நடத்த வேண்டும். எப்படிஎல்லாம்.வாழ வைக்க வேண்டும். பெண் என்றால் பூ போன்றவள். ஒரு நாளை யிலோ ஓரிரு மாதத்திலோ கசக்கி பிழிந்து விடக் கூடாது, இறப்பு வரை உடன் இருப்பவள். அதனால் கட்டு குழையாமல் அவளை வைத்து அனுபவிக்க வேண்டும். அம்மனுக்கு எப்படி அபிசேகம், ஆடை ஆபரணம், அலங்காரம் செய்து அழகு பார்க்கிறோமோ, அதுபோல தன மனைவி யினை அழகு படுத்தி மனம் குளிர வைத்து, அனுபவிக்க வேண்டும்  .அவன் தான் ஆண் பிள்ளை ஆவான். 

                                     மனைவி 


ஒரு பெண் மணி ஒரு ஆடவனைமணந்து கொண்ட பின் அவனே கண் கண்ட தெய்வமாகும். அவனே தன்னை காப்பாற்றுபவன்.., உணவு, உடை, இருப்பிடம், பூ, பொட்டு ,பட்டு நகை, நட்டு, பேர், புகழ், கௌரவம், , வீட்டின் தலைமை அல்லது ராணி அந்தஸ்தை அளிப்பவன் தன் கணவன் மற்றும் அந்த வீ ட்டின் குத்து விளக்உதன் காக பூசிக்கப்படுக்கின்ற நிலையில் வைப்பவர்கள் கணவனும் அவனது பெற்றோர்களும், சகதோரன் சகோதரிகள் ஆவர். பெண்ணி  சகோதரன் சகோதரிகள் இவர்களுக்கு திருமணம் ஆனவுடன் இந்த பெண்னை தன் பிறந்த வீட்டில் தன்னை உள்ளே விடமாட்டார்கள் தெரு நாய் போல் நடத்து வார்கள். அதும் தன வீட்டில் இருந்து கொண்டு புகுந்த வீட்டை தன் தாய் தந்தைவோடு சேர்ந்து கொண்டு புகந்த வீட்டைகாட்டி கெடுத்து குட்டி சுவவராக்கி இருந்தால் அவளை தன்வீட்டிற் குள் அனுமதிக்க மாட்டாஏக்கள். அவள் முகத்தில் முழிக்க யாரும் விரும்பமாட்டார்கள். ஏன் என்றால் தன வீட்டையும் அழித்து கெடுத்து குட்டி சுவராக்கி விடுவாள் என்று முன் எக்கரிக்காய் இருப்பார்கள். 

அதனால் திருமணமான பெண்ணிற்கு புகுந்த வீடுதான் சொர்க்கம் அரண்மனையாகும். தன மாமனார் மாமியார் இவர்கள் தான் தன  கணவனை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிவேளையில் அமர்த்தி ஒரு சிறந்த வாழ்வினை கொடுத்தவர்கள் ஆவர்.ஒரு நல்ல ஆண் பிள்ளையினை பெற்று வளர்ப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். அப்படி பட்ட மாமனார், மாமியாரை மருமகலானவள் தன தாய் தந்தைவிட ஒரு படி மேலாக் கவனித்துக் கொள்ள வேண்டும். நல்ல மாமனார், மாமியாராக இருந்தால் அவர்களை தினம் வணங்க வேண்டும். அவர்கள் அறிவுரைகளை கேட்டு  அதன்படி நடந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும். நல்ல மாமனார் மாமியாராக இல்லாவிட்டால் அவர்கள் வார்த்தைகளை கேட்க வேண்டாம். ஆனால் தன் கணவனை பெற்று இவ்வளவு நாள் வளர்த்து ஆளாக்கிய தர்க்கு நன்றி கடனாக அவர்களுக்கு உணவு உடுக்க உடை மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும். கடும் சொற்களை கூராமல் அன்பான ஒரு சில வார்த்தை களையாவது பேசவேண்டும். 

அத்துடன் அல்லாசெய்யாமல் கூ அமல் மல் தன கணவனுடன் பிறந்த சகோதரன், சகோதரிகள் இளம் வயதிலிருந்து தன கணவனுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்திருப்பார்கள், கஷ்ட நஸ்டகளிளுதவி இருப்பார்கள், எவ்வளவு பாசமாக வளர்த்து இருப்பார்கள். அதனால் அவர்கள் முன்னேற்றத்திற்கு முடிந்த வரை மனதாலும், மொழியாலும். பொருளாலும் உதவி செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் உண்மையில் உங்களுக்கு அரணாக திகழ்வார்கள். 

அதை விடுத்து தன் சூழ்சியால் மாமனார்,மாமியார் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களிடமிருந்து தன் கணவனை பிறித்து தன் பெற்றோரிடம் புகுந்த வீட்டின் குடுமிணைகொடுத்து அந்த குடியினை கெடுக்க கூடாது. உதவி . செய்யாமல் கூட இருந்து விடலாம் ஆனால் குடிகெடுக்கும் வேலை மட்டும் செயக் கடாது அது அவளின் பல தலை முறைகளைபாதிக்கும். அப்படிப் பட்ட பெண்மணி தன் கணவன் சம்பாதியத்தில் துணி மணிகள், முகத்திற்கு சாய பௌடர்கள், நகை நட்டுகள் வாங்கி கொண்டு மேலா மினிக்காக மக்கள் நடுவே வளம் வரலாம். மேலும் வயிறைகழுவி கொள்ளலாம் ஆனால் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது. 
கணவனுக்கும் மனைவின் சூழ்சியும் மனநிலையும் தெரியும். குடும்ப கௌரவம்,குழந்தைகள் எதிர்கால வாழ்க்கை, இவைகளை மனதில் கொண்டு தன் பெற்றோர் மற்றோரை பகைத்துக் கொண்டு செய்ய கூடாத தவறுகளை எல்லாம் செய்கிறான். அவன் எப்படி தன் மனவிடம் உண்மையாக இருப்பான்?. இவ்வாறு நடந்து கொள்ளும் அந்த பெண்மணி தன் கணவனுக்கு உண்மையாக இருக்க மாட்டாள். உலகில் இப்படி பட்ட 95 சத மக்கள் தான் போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
 

                                  உலக மக்கள்


உலகில் உள்ள மக்கள் எல்லாம்.தன் உண்மை நிலை தெரியாமல் பரிணாம வளர்சியில் ஓர் அறிவுள்ள புழுவைக் காட்டிலும் மேலாக சிறிதும் வளர வில்லை. ஓர் அறிவு சீவன் முதல் ஐந்து அறிவுள்ள சீவன் வறை உண்ணவும் உறங்கவும் இனவிருத்தி செய்யவும் அதன் கடசி பரிணாம வளர்சியின் எல்லையினை  அடைந்து இயற்கையாக மடிகின்றன . ஆனால் ஆறு அறிவுள்ள மனிதன் சரியாக உண்ணவோ, உறங்கவோ, இனவிருத்தி செய்து வாழ தெரியவில்லை. மக்கள் அகங்காரத்தாலும், ஆணவத்தாலும், பொறாமையாலும் மற்றவர்களை கெடுத்து தான் மட்டும் வாழ வேண்டும் என்ற சுய நலத்தோடும் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். போலியான அலங்காரம் செய்து கொள்வதிலும், உடை உடுத்துவதிலும் ,ஆடம்பரமான வீடு கட்டுவதிலும் போலியான வாழ்க்கை வாழ்வதிலும் காலத்தை கழித்து கடசியில் வேதனையோ டு மரணத்தை தழுவு கிறான். கடவுளாக வாழ வேண்டியவன் கடையினாக வாழ்ந்து மடிகிறான். சீவன் முக்தனாக வாழ் கற்றுக் கொள்ளுங்கள். 


                                    வாழ்த்துக்கள். 

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...