Showing posts with label தமிழனின் வரலாறு. Show all posts
Showing posts with label தமிழனின் வரலாறு. Show all posts

Sunday, 18 September 2016

சுனாமி வெளிப்படுத்திய மிகப்பழமையான கோவில்!

சுனாமி வெளிப்படுத்திய மிகப்பழமையான கோவில்!

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே (வாளொடு) முன்தோன்றி மூத்தகுடி: 
மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விஷயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில்.
இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம்.

தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விஷயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது.

படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல.

தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப் பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), 


அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது.

அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்க பெற்றுள்ளது.

கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம்.

கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே....என்பதன் விளக்கம்?

கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே....என்பதன் விளக்கம்?

இது தான் பாடல்…

“பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர்-கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்தகுடி”.
– புறப்பொருள் வெண்பா மாலை எனும் இலக்கண
நூலில் எழுதப்பட்ட பாடல் இது. எழுதியவர்
ஐயனாரிதனார்.



பாடலின் பொருள் : பூமி தோன்றிய பின் நீர் விலகி நிலம் தெரிந்த போது முதலில் தெரிந்தது மலைகள்(குறிஞ்சி நிலம்) தான். அத்தகைய மலைகளில் தோன்றிய மனிதர்கள், தங்கள் ஆயுதங்களாக கற்களைப் பயன்படுத்தினர் ( கையகலக் கல்) அதன் பிறகு, விளை பொருட்களை உருவாக்கும் நிலங்களை (மருத நிலம் - மண்) கண்டுணரும் முன்னரே, உலோகத்தால் ஆன வாளோடு திரிந்தவர்கள் தான் தமிழர்கள். 

அதாவது, விவசாயம் கண்டுபிடிக்கும் முன்னரே முல்லை நிலத்திலேயே 
உலோகப் பயன்பாட்டினைக் கண்டுபிடித்த அறிவாளி என்ற பொருளிலே தான் சொல்லியிருக்கிறார்.
கல் தோன்றி அது மண்ணாக மாற்றமடையும் முன்னரே தமிழன் தோன்றி விட்டான் என்ற பொருளில் திரித்து விடும் தமிழ்க் கயவர்கள் இருக்கும் வரை பழம் பெருமை பேசியே வீணாப் போக வேண்டியது தான் நாம். மற்ற இனத்தவர்களுக்கு முன்னமே உலோகம் கண்டு பிடிக்கும் அளவுக்கு இருந்த தமிழினம் இன்று வெட்டிப் பெருமை பேசுவதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் தப்புத் தப்பாக.
பெரிய கொடுமை என்னவென்றால், நோவா காலத்து கடற்கோளினால் உலகம் அழிந்து பின் கடல் நீர் வற்றும் போது மலைகள் தான் முதலில் தெரிந்தன இன்னும் வடிந்து மண்
தெரிவதற்கு முன்னமே வாளோடு தமிழன் திரிந்ததாக இன்றைக்கும் பெரிய கவியாகப் போற்றப்படும் ஒரு பெரியவர் எழுதியிருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய வழிபடுதலம்!

                     உலகின் மிகப்பெரிய வழிபடுதலம்!


உலகின் மிகப்பெரிய கோவில் எனும்போது இந்து சமையத்தை மட்டுமே குறிக்கிறது. அனால், உலகின் மிகப்பெரிய வழிபடுதலம்  என்று சொன்னாலும் இதுதான்.
தமிழ் மன்னன் இரண்டாம் சூரிய வர்மன்
கடந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவினால் கூட - இன்று வரை - இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை! வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று விமானத்தில் இருந்து படம் எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் ?




இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இதைப் போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால்,  எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில், நமது முன்னோர்களின் மதிநுட்பத்தால் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளதாம். இதன் சிறப்பு: கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது.

 கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் கோவிலானது தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் மிகப்பெரிய வழபாட்டு தளமாக செயல்பட்டுவந்தது. இரண்டாம் சூரியவர்மன் என அழைக்கப்பட்ட சோழ மன்னன் கட்டிய இந்த கோவிலானது இன்றளவும் உலகின் மிகப்பெரிய வழிபடுதலமாக உள்ளது. இவருக்கும், அதே காலகட்டத்தில் (கி.பி. 1114) தமிழகத்தில் வாழ்ந்த சோழப்பேரரசர் குலோத்துங்க சோழனுக்குமிடையே குழுவினர்களை பரிமாறிக்கொண்ட உறவு இருந்ததாக வரலாறு கூறுகிறது. ( இவர் சோழ மன்னர்களின் வழியில் வந்தவர் என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.)


நம் தமிழ் மன்னன் ''சூர்யவர்மன்'' கட்டிய உலகின் மிக பெரிய கோயில்.("அங்கோர் வாட்" )

இவர் இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினார். இந்த இடம் தான் அவரின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் என்னவென்றால், "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயில்தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே மிகவும் பெரியது! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். 

இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். மீண்டும்,  இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது.

இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது. அவர் புத்தமதத்தை பின்பற்றியவராக இருந்தபடியால், பின்னர் இந்த கோயிலானது  கொஞ்சம் கொஞ்சமாக புத்தர்களின் வழிபாடு தளமாக மாறியது. இப்படியாக ஆரம்ப கால புத்தமத வளர்ச்சிக்கு அடித்தளமாய் அமைந்தது. இறுதி வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது. பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது, அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதிலமடையத்தொடங்கியது.  தீட்டிய மரத்தில் கூர் பார்கின்ற கதையாக இன்று புத்த மதத்தை சேர்ந்தவர்கள் தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவது நினைவுகூறத்தக்கது.

 தாங்கள் மேலும் அறியவும், (நன்றியுடனும்) கீழ்கண்ட இணைப்புகளை சமர்ப்பிக்கிறேன்.

http://en.wikipedia.org/wiki/Suryavarman_II)

http://en.wikipedia.org/wiki/Angkor_Wat

http://kalakalapputamilchat.forumotions.in/t112-topic

தமிழரின் இலெமுரியா கண்டம்..!!!

                        தமிழரின் இலெமுரியா கண்டம்..!!!

தமிழா... உன் கதை என்ன?...யானை சிறுத்து கட்டெறும்பாய் ஆனதோ என்று கூறுவதும் மிகக் குறைவான உதாரணமாகும். மலையே தேய்ந்து மடுவாகி அதில் காட்டாற்று வெள்ளம் ஒடிக்கொண்டிருக்கிறது...இந்த உதாரணமே பொருத்தமானது...!

உலகில் இராட்சதர்கள் என்று இருந்ததாக பழைய வரலாறுகள் சொல்லுகிறது. பைபிளில் ஆதியாகமத்திலும்  சொல்லப்படுகின்றது. அவர்களெல்லாரும் ஜலப்பிரளயம் வந்த போது அழிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அவர்கள் நீக்ரோ இனத்தவர்களாக இருக்கலாம் என்று ஆய்வு செய்தவர்களும் கடையை மூடிவிட்டார்கள்.


இது தொடர்பான உலக ஆய்வாளர்களின் (ஆங்கில)கட்டுரைகளைக் காண இப்படத்தின் மீது  சொடுக்கவும்.
இராமாயணத்திலும் கூட தென்னிந்தியாவில் இராட்சதர்கள் வாழ்ந்தாக சொல்லப்படுவதோடு அல்லாமல். தமிழனும் சிவபக்தனுமான அரசன் இராவணனும் அவனது குடும்பத்தினரும் கூட இராட்சதர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். நமக்கு தெரிந்த நமது வரலாறு தெளிவாகவே இருக்கின்ற நிலையில் நம்மையும் நம்முடன் வாழ்ந்த ஒரு சில திராவிட இனத்தவர்களையும் தவிர வேறு யாரும் தென் இந்தியாவிலோ இலமுரியாவிலோ வாழ்ந்ததாக சரித்திரமில்லை. அப்படியானால்...உலகின் முதல் இனமாய் உருவெடுத்து, முயற்சியும் பயிற்சியும் கூடி இராட்சத இனமாய் உலகை அச்சுறுத்திய இனம் நமது தமிழினமே என்பதைப் பண்டைய வரலாறுகள் தெளிவாகவே சொல்லுகிறது.

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும்
குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க
வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம்.


File:Map of Lemuria.jpg
மிகச்சிறந்த மனித இன ஆய்வாளருக்கான விருது பெற்ற திரு.வில்லியம் ஸ்காட் எல்லியாட் என்பவர் அட்லாண்டிக் பெருங்கடலின் கதை எனும் தமது நூலில் வெளியிட்ட மறைந்த இலமுரியா எனும் பகுதியில் வெளியிட்டுள்ள இலமுரியா கண்டத்தின் படம். (இதைப்பற்றி மேலும் அறிந்துக்கொள்ள இப்படத்தின் மீது க்ளிக் செய்யவும்.

              திரு. இராமச்சந்திர தீட்சிதர் அவர்களுடைய வரலாற்று ஆய்வு நூல்கள் மூலமாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” மூலமாகவும்  தமிழர் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்றும், பேசிய மொழி தமிழ் மொழியே என்றும் உறுதிப்படுத்தப் படுகிறது..

           பழந்தமிழர் வாழ்ந்த நாடாகிய குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்கா- வையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் வரலாற்றின் தந்தை என்று போற்றப்படும் கிரேக்க பேரறிஞர்: ஹிரோடோடஸ் (Herodotus).
கிரேக்க பேரறிஞர்: ஹிரோடோடஸ் (காலம்: கி.மு. 484 - 420)

 இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. வில்லியம் ஸ்காட் எல்லியாட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர். இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில்
தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம்
அல்லது நாவலன் தீவு எனப்பட்ட பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு,
ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவர் தான் தமிழர். அவர்கள் கையாண்ட நாகரிகத்தை பிற்கால ஆய்வாளர்கள்  திராவிட நாகரிகம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இது திராவிடம் என்ற பகுப்பு (பிரிவினை) தோன்றுவதற்கு முன்னரே இருந்த ஒன்றாகும்.!

அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக சில வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் மனித இனத்தின் மூதாதையர் வாழ்ந்தனர் எனவும் தெரிவிக்கின்றனர். (கடல் கொண்ட இலமுரியாவிற்கும் கம்போடியாவிற்கும் அக்கால உலகவரைபடத்தில் இணைப்பு இருப்பதை திரு.வில்லியம் ஸ்காட் அவர்களைப் போல இந்த ஆய்வாளர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் நாம் கருத்திற்கொள்ளவேண்டும்.)  இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்ததாகவும். இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்றும்  “குமரிப் பெருங்கண்டம்”. என்றும் அழைக்கப்பட்ட இடத்திற்கு மிகவும் அருகாமையில் இருந்தது என்பது முடிபு.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இக்கண்டமானது , ஒரு
காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் உலகமாகவே இருந்தது...!
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர்,
தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட
நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”.

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு,
ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை,
கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்”
ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம்.
திரு. வில்லியம் ஸ்காட் எல்லியாட் அவர்கள் எழுதிய நூலை படிக்க இந்த படத்தின் மீது சொடுக்கவும்.
இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே..(நன்றி திரு.ராஜா பொன்ராஜ் அவர்களுக்கு...!)


I feel that we are potentially missing huge chunks of our history simply because the oceans rose during the last of the ice age melt off and reclaimed the land on which the earliest signs of human development once stood. - See more at: http://www.abovetopsecret.com/forum/thread503696/pg1#sthash.YPAXxm3N.dpuf
I feel that we are potentially missing huge chunks of our history simply because the oceans rose during the last of the ice age melt off and reclaimed the land on which the earliest signs of human development once stood. - See more at: http://www.abovetopsecret.com/forum/thread503696/pg1#sthash.YPAXxm3N.dpuf
மனித இனம் தோன்றிய இடமும் பண்டைய வரலாறும் கடலுக்கடியில்தான் இருப்பதாக உலக-வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதைப்பற்றிய கூற்றும், தொடர்பியும் / link (இங்கே) கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


"I feel that we are potentially missing huge chunks of our history simply because the oceans rose during the last of the ice age melt off and reclaimed the land on which the earliest signs of human development once stood." - See more at: http://www.abovetopsecret.com/forum/thread503696/pg1#sthash.YPAXxm3N.dpuf

உலகின் முதல் அணைக்கட்டு...!

                     உலகின் முதல் அணைக்கட்டு...!

நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டி விவசாயத்தை மேம்படுத்தும் யுக்தியை உலகிற்கே அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள் என்பதற்கு, கி.பி. 150 இல் கட்டப்பட்டு இன்றுவரை நிலைத்திருக்கும் "தி கிராண்ட் அணைகட்" என்று ஆங்கில ஆய்வாளர் சர்.ஆர்தர் காட்டன் அவர்களால் புகழப்பட்ட 'கரிகாலன் கட்டிய கல்லணை' சான்றாக இருக்கிறது. (இவ்வாறு அணைகட்டும் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியதனால்தான் அண்டையிலுள்ள இந்தியர்களுடன் தண்ணீருக்காக பிரச்சினை எற்படுகிறதா?)

பாறைகளை உடைப்பதற்கு வெடிமருந்து பொருட்களும், அதிக பளுவான எடைகளை சுமப்பதற்கு 'கிரேன்' போன்ற தொழில் நுட்பக்கருவிகளும், பொறியியல் வரைபடங்கள் போட கம்ப்யூட்டர் போன்ற தொழில் நுட்ப உதவிகளும் எதுவும் இல்லாதிருந்த இரண்டாம் நூற்றாண்டு காலத்திலேயே, ஓடிக்கொண்டிருந்த ஒரு பெரிய நதியின் குறுக்கே  இப்படிப்பட்ட பிரமாண்டமான ஒரு அணைக்கட்டு  கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து உலக பொறியியல் வல்லுனர்கள் வியக்கிறார்கள்...! மேலும், இதுவே உலகில் வெற்றிகரமாக கட்டப்பட்ட முதல் அணைக்கட்டு ஆகும்...!  தஞ்சையை இந்தியாவின் நெற்களஞ்சியமாக மாற்ற உதவியதும் இக்கல்லணையே...!



அதைக்காட்டிலும் பெரிய சிறப்பு என்னவென்றால், இதில் பயன்படுத்தப் பட்டுள்ள மாற்றுப்பாதை (By-pass technology) திட்டமாகும். இது நவீன விஞ்ஞானத்திற்கு இணையானதாகும். கல்லணை கட்டுவதற்கு வேண்டியிருந்திருக்கக்கூடிய பொறியியல் திறனை எண்ணி இன்றும் பல நாட்டுப் பொறியாளர்கள் மெச்சுகிறார்கள்.
இது திருச்சிக்குக் கிழக்கே எட்டாவது மைலில் கட்டப்பட்டுள்ளது.
வெள்ளம் கொள்ளுமிடம் போதாமல் திருச்சிக்கு மேற்கே பத்து மைல் தொலைவில் எலமனூறுக்கு அருகில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது.

 பிரிந்து போகும் கொள்ளிடம், மீண்டும்காவிரியுடன் கலக்கும் நோக்கத்துடன், திருச்சிக்குக் கிழக்குக் கல்லணைக்கருகில் காவிரியின் அருகே வருகிறது.
கல்லணையில் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையே ஒருவித இணைப்பு ஏற்படுகிறது. ஆனால் தாழ்ந்து உள்ள கொள்ளிடமும், உயர்ந்துவிட்ட காவிரியும் இயற்கை விதியின்படியே ஒன்றாக முடிவதில்லை. இந்தக் காவிரி, கொள்ளிடம் ஆகியவற்றின் ஊடலின் பின் நிகழ்ந்த கூடலில் பிறந்ததுதான் திருவால்கமும், திருஆனைக்காவும் அமைந்திருக்கும் திருவால்கத்றே. திருவால்கத்தின் மேல்முனையில் காவிரியும், கொள்ளிடமும் பிரியுமிடத்தில் மேலணை இருக்கிறது.



மேலணை என்பது உண்மையில் அணையேயல்ல. நீரொமுங்கி என அழைக்கப்படும் ரெகுலேட்டர் தான். வெள்ளம் வரும்போது மேலணை ரெகுலேட்டரைத் திறந்து வெள்ளத்தைக் கொள்ளிடத்திற்குள் வடித்து விடுவார்கள். அன்று கரிகாலன் கட்டினானே அந்தக் கல்லணைதான் இது. 
காவிரியின் கல்லணை இருக்கும் இடத்தில் காவிரியின் பக்கத்திலேயே கொள்ளிடமும் ஓடுகிறது. காவிரி உயர் மட்டம்; கொள்ளிடம் பள்ளம்; கரிகாலன் கல்லணை கட்டுவதற்குமுன், காவிரி தன் வடகரையை உடைத்துக் கொண்டு கொள்ளிடத்திற்கு வழிந்து விடுவதும், வெள்ளம் வடிந்தபின் உழவர்கள் உடைந்த கரையைச் செப்பனிடுவதும், அடுத்த வெள்ளத்தில் கரை மீண்டும் உடைந்து விடுவதும் மிகச் சாதாரணமாக நடந்து கொண்டு இருந்திருக்க வேண்டும்.
 
இவற்றையெல்லாம் நீக்குவிக்கும் நோக்கத்துடன் கரிகாலன் திட்டமிட்டுக் கல்லணையை அமைத்த பொறியியல் ஆற்றல் சிந்தனை வியப்பை ஏற்படுத்துகிறது. காவிரிக் கரை வழக்கமாக உடையும் இடத்தில் ஏற்பட்டிருந்த வடிகாலுக்குக் குறுக்கே மாபெரும் கற்களைக் கொண்டு மணல் அடித்தளத்தின் மேலேயே அணையை அமைத்தான்.   காவிரி உள்ளளவும் அக்கற்கள் நிலைத்திருக்கும்படி அணையைக் கட்டினான்.
கீழே காவிரியிலும் அதனின்று பிரியும் வெண்ணாற்றிலும் பாசனத் தண்ணீரை எளிதில் தள்ளுவதற்கு வேண்டிய உயரத்துக்கு, அணையை எழுப்பியுள்ளான் கரிகாலன். ஆற்றைத் தோண்டி, பாறையைக் கண்டு அதன்மேல் அணையைக் கட்டுவது போல் அன்று மணலையே அடித்தளமாகக் கொண்டு அணை கட்டுவது அதற்குத் தனித் திறமை வேண்டும். மேல் நாட்டவருக்குக்கூட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்வரை இதில் அதிக அனுபவம் கிடையாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், காவிரித் தலைப்பிலும் நீரொமுங்கி மதகுகள் அமைத்-தார்கள். இதனால் காவிரியிலும், வெண்ணாற்றி-லும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண்டாயிற்று. கரிகாலன் அமைத்த கற்களின் மேலேயே கல்லணைக்கு ஒரு நீரொமுங்கி கட்டினார்கள்.

கல்லணை ஓரத்தில் மணற் போக்கிகளும் அமைத்தார்கள். இவ்வமைப்புகளால், காவிரியிலும் வெள்ளாற்றிலும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண்டாயிற்று. கொள்ளிடத்திலுள்ள அணைக்கரையில் பாசனத்துக்கு, கல்லணை மணற் போக்கிகள் வழியாகத் தண்ணீரை அனுப்பவும் முடிகிறது. வெள்ளத்தை மீண்டும் ஒரு முறை கொள்ளிடத்திற்குள் வடிப்பதும் இயலுகிறது. பின்னர், 1934இல் மேட்டூர் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்திய பொழுது, புதிய கல்லணைக் கால்வாய் தலைமதகுக்காக வெண்ணாற்றுத் தலை மதகுக்கு அதன் தெற்கில் ஒரு நீரொமுங்கி அமைத்தனர்.
இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளாக விரிவு அடைந்துள்ள கல்லணை அமைப்புகள் தாம் தஞ்சைப்பாசனத்திற்கு வழிவகுத்த தலைவாசலாக அமைந்துள்ளன. கல்லணையிலிருந்து சுமார் 20 மைல் வரை, காவிரியும், கொள்ளிடமும் அருகருகே ஓடுகின்றன. கீழே போகப் போகக் காவிரி மீண்டும் குடமுருட்டி, அரசலாறு, மன்னியாறு, வீரசோழளாறு என்று பிரிந்து கொண்டே போகிறது.
கல்லணையிலேயே பிரிந்த வெண்ணாறும், வடவாறு, வெட்டாறு, வெள்ளையாறு, கோரையாறு, பாமினியாறு, முள்ளியாறு என்று பிரிந்து கொண்டே போகிறது.
சுமார் 3,000 சதுர மைல் பகுதியைச் செழிக்கச் செய்துவிட்டு, கிளைகளில் சில மீண்டும் ஒன்று சேர்கின்றன; சேர்ந்து இனிப் பயன்படுத்த முடியாது என்றுள்ள கடை கோடிக் கழிவு நீரையும் மழைத் தண்ணீரையும் சுமந்து கொண்டு கடலில் கலந்து விடுகின்றன.
கல்லணைக்கு வேண்டிய பெரிய கற்களையெல்லாம் திருவெறும்பூர்ப் பகுதியிலிருந்து கொண்டு வந்து தடுத்துக் கட்டினான் என்று கூறுகின்றனர்..

சிந்துசமவெளி நாகரிகம்...!

                          சிந்துசமவெளி நாகரிகம்...!

சிந்துச் சமவெளி நாகரிகம் - தமிழர் நாகரிகமே...!
.
*இது உலகின் மிக தொன்மையான நாகரிகம் 
*மிகப் பெரிய நாகரிகம் 
*பல துறைகளில் சிறந்து விளங்கும் நாகரிகம் 
*இது நம் தமிழர்களின் நாகரிகமே......!




சிந்து சமவெளி மக்கள் பேசிய மொழி தமிழ் என்பதை பல சான்றுகள் மூலம் நிருபித்து காட்டிய தொல்பொருள் ஆய்வாளர் பாதர் ஹிராஸ் அன்னிய தேசத்தவரே... இவர் 1953 ல் ஆணித்தரமாக இந்த வாதத்தை எடுத்து வைத்தார். இவரின் கருத்தை உலக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முதலில் மறுத்தனர். பிறகு, 20 ஆண்டுகளுக்கு பிறகு 1973ல் ரஷ்யா மற்றும் பின்லாந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளுக்கு பிறகு சிந்துவெளிமக்கள் பேசியது தமிழே என உறுதிபட கூறினர்.
.
ஆனால், உலகின் மற்ற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகத்திற்கு நேர்ந்து வருகிறது..

சீன நாகரிகம் சீனருடையது,
கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது
என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை.
தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.
http://www.bbc.co.uk/schools/primaryhistory/indus_valley/the_end_of_the_indus

புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.

சிந்துவெளி நாகரிகம்:

சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.

          


உலகில் தமிழர்களிடம் மட்டுமே உள்ள காங்கேயம் காளை.!

இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.
(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்” புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்

'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.

சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.

புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.

சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.

எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.

சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்

பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.

எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

நதிகள், மலைகளின் பெயர்கள்

நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பஃறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.

தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.

சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:

1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர்.கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.

2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.

3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.

4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.

5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை ற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.

6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.

7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை.
(Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)

9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.

10.சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )

11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது.ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.

12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.

‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷிய, பின்லாந்து, அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.

கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).

சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.

அண்மைக் காலங்களில் டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.

சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (indian Express - Madras - 5 August 1994)

Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வு', 'பெயராய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.


கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன்  அவர்களுடைய ஆய்வு முடிவுகள்.

சிந்துசமவெளியின் முத்திரைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து அடையாளம் கண்டதில் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் துவக்க காலசொற்குறியீடுகள் என்கிற முடிவுக்கு தாம் வந்திருப்பதாக அறிவித்துள்ளார்.


சிந்துவெளி நாகரிகத்தில் '''சுவாஸ்திக்''' சின்னம்.
தமிழ் அறிஞர்கள், "இது தமிழ்மொழி...! இது ஆதி தமிழ் மொழியின் ஓம் 
...! சங்கத் தமிழின் ஓம்...!" என்று ஐயம் திரிபு அற விளக்குகின்றனர்.

இதுவே உலகின் முதல் சின்னம், அல்லது குறியீடு எனுமளவிற்கு மிகப்பழமையானது. 12000 ஆண்டு கால வரலாறு உடையது. இச்சின்னத்தை முதலில் ஆய்வு செய்தவர், தமக்கு விருப்பமான பெயரான சுவஸ்டிகா (swastika) என்பதை, இச்சின்னத்திற்கு சூட்டியிருக்கலாம் என்று (வேறு பெயர்க்காரண வரலாறு இல்லாத காரணத்தால்)
கருதப்படுகிறது.!


இது தொடர்பான தமது சுமார் 50 ஆண்டுகால ஆய்வின் முடிவுகளைத் தொகுத்து அவர் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார். ரிக் வேத வழியிலான சிந்து சமவெளியின் திராவிட தொடர்புக்கான ஆதாரம் (Dravidian Proof of the Indus Script via Rig Veda) என்கிற தலைப்பிலான அவரது ஆய்வுக்கட்டுரையில் சிந்துசமவெளிக் குறியீடுகள் தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்பது உறுதியாகத் தெரியவந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.
சிந்து சமவெளி முத்திரைகள் சொல்லும் செய்திகள், தகவல்கள், பெயர்கள், பொருள் எல்லாமே முந்தைய திராவிட மொழியின் வேர்கள் என்பதை விவரிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்தார். பண்டைய தமிழகத்திற்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்குமான விடுபடாத தொடர்பாகவே இந்த சிந்து சமவெளி எழுத்துருக்களை தாம் உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
சிந்துவெளி மொழி, திராவிட மொழியின் முற்கால வடிவமே
சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தென்னகம் நோக்கி இடம்பெயர்ந்ததால் தென்னிந்தியாவில் அவர்களின் குடியேற்றம் நடந்திருக்கலாம் எனவும் இதன் காரணமாகவே சிந்து திராவிடத்தின் நீட்சி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திராவிட மொழிகளில் காணப்படுவதாகவும் ஐராவதம் மகாதேவன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதற்குச் சான்றாக, சங்க இலக்கியப் பாடல்களில் பல்வேறு சொற்கள் உள்ளதாக தெரிவித்த ஐ. மகாதேவன், பாண்டிய குடிபெயர்களாகிய மாறன், செழியன், வழுதி, பாண்டியன் என்ற சொற்களின் மூலவடிவங்கள் சிந்துவெளி இலச்சினைகளில் ஒருங்கிணைந்த சொற்றொடதொடராக இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
வடஇந்தியாவில் ஆரியர்களும், திராவிடர்களும் கலந்து இந்திய சமுதாயம் தோன்றிய பின்னரே ரிக் வேதம் இயற்றப்பட்டதாக தெரிவிக்கும் ஐராவதம் மகாதேவன், இதற்கான பல சான்றுகளை ரிக் வேதத்தில் தாம் கண்டதாகவும் கூறினார். சிந்துவெளி நாகரிகத்தின் பெயர்களும், பட்டங்களும் ரிக் வேதத்தில் மொழிபெயர்ப்புகளாகக் காணப்படுவதாக ஐ மகாதேவன் தெரிவித்தார்.
குறிப்பாக பாண்டியர்களின் மூதாதையர்களின் பெயர்களும் சிந்து சமவெளியின் குறியீடுகள் குறிப்புணர்த்தும் சொற்களும் ஒத்துப்போவதாக ஐராவதம் மகாதேவன் கூறினார்.

பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந்துணை புரிகின்றன.

ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் சிலர் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்து சமவெளியை "வேதகால நாகரிகம்" என்றும் எழுதியும் பேசியும் வருகின்றனர்.
.
(நாவலன் தீவு) குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் சிந்து சமவெளி வரை பரவி இருந்தனர். சிந்து சமவெளி பகுதியில் இருக்கும் ஊரின் பெயர்கள் எல்லாம் தமிழ் பெயர்கள் தான்......!

போதிதர்மா காஞ்சிபுரம்

                               போதிதர்மா காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான கந்தவர்மன் IV-க்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர்.
இவரின் இயற்பெயர் புத்தவர்மன் (பௌத்தவர்மப் பல்லவன்).

கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்:

1. நந்திவர்மன்
2. குமாரவிஷ்ணு
3. புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)

அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு.

எனவே பல்லவ மன்னன் கந்தவர்மன் IV, மகனின் குருகுல வாழ்க்கைக்காக பிரஜ் என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார்.


இவர் காஞ்சியில் தங்கி பௌத்த சிந்தனைகளைப் பரப்பி வந்தவர்.சிறுவன் போதியின் அபார ஞானத்தைப் பார்த்து பிரமித்த பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக 28வது குருவாக போதியை நியமிக்கிறார்.

காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத் தேர்கிறார். இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு.

காஞ்சியிலிருந்து நாலந்தா சென்று அங்கிருந்து கி.பி.526-ல் தெற்கு சீனாவிற்குச் செல்கிறார் போதி தர்மர்.போதிதர்மாவின் காலம் கி.பி.475-550 என்று பதிவுகள் கூறுகின்றன.

அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் “லியாங் வு டீ”.புத்த மதத்தில் கொண்ட ஈடுபாட்டால் பௌத்த ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப் பேரரசர்.

தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான போதி தர்மரை கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும், அன்போடும் உபசரித்து சீனாவில் தங்கிவிட வேண்டுகிறார்.

அங்கு ஷாஓலின் என்ற இடத்தில் தங்கி பௌத்த மதத்தைப் பரப்பிய போதி தர்மர், தமிழகத்தில் தான் கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர் கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.

போதி தர்மர் வாழ்ந்த இடத்தை சீனாவில் “ஷாஓலின் கோயில்” என்று இன்றைக்கும் வணங்கி வருகிறார்கள்.

அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில் ‘தென் இந்தியாவிலிருந்து வந்த போதி தர்மர் கற்றுத் தந்த கலை குங்ஃபூ’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அவரை சீன மக்கள் “போ-ட்டி-தாமா” என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர்.

போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள்.

ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும்.

இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும். உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார். அத்துடன் அரிய நுட்பக்கலையான வர்ம சாஸ்திரத்தையும் சொல்லிக்கொடுத்தார்.

அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை.

உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளையும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில் காயம் ஏற்படா முறைகளையும் கற்றுக்கொடுத்தார்.

பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.

அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.

போதி தருமன் – 1887ஆம் ஆண்டு யோஷிடோஷி என்ற கலைஞரால் வரையப்பட்ட ஒரு படம்.

கடல் ஆய்வாளர் திரு.ஒரிசா.பாலு...!

கடல் ஆய்வாளர் திரு.ஒரிசா.பாலு...!

இது விஞ்ஞான யுகம்தானே?. இன்றைய விஞ்ஞானிகள் கடல் நீரோட்டத்தை பற்றி எந்த அளவிற்கு அறிவார்கள்?
அதை நாடுவிட்டு நாடு செல்வதற்கு (கடல் வழி போக்குவரத்திற்கு) சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அறிவார்களா?
இதை நமது முன்னோகள் எந்தகாலத்தில் அறிந்து வைத்திருந்தார்கள், பயன்படுத்தினார்கள் என்பதைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
இந்தியாவின் தலை சிறந்த கடல் ஆய்வாளர்களுள் ஒருவரான திரு.சிவஞானம் பால சுப்பிரமணி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்.



ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.


முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர்.
பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான்.
ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன.
பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது.
பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன.
பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் பாலசுப்பிரமணி.
உலகெங்கும் பத்தொன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழ் பெயரில் உள்ளது : 

இவரது முகநூல் பக்கத்தை பார்வையிட பின்வரும் இணைப்பிற்கு செல்லவும். 
Sivagnanam Bala Subramani 
இவரது திறமையான ஆய்வுகளுக்காக பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...