அரசியல் மற்றும் சமூகம்
*2014-ல் பொதுத்துறை வங்கிகள் தனியார்மைய மாக்கப்படும்*
*அனைத்து விமானநிலையங்களும் தனியார் வசம் கொடுக்கப்படும்*
இதற்கான ஏற்பாடுகள் & வரைமுறைகள் முழுமையாக முடிந்து விட்டது 2014-ல் இது முழுமையாக நடைமுறை படுத்தப்படும்.
முதலில் தனியார் மயமாக்கல் என்பது என்ன..???
அரசு இயந்திரம் தன்னால் நிர்வகிக்க முடியாத ஒரு நிறுவனத்தை தனியார் வசம் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டும் கொடுத்து லாபம் ஈட்ட எடுக்கும் ஒரு சட்ட நடவடிக்கை.
ஆனால் அரசு இன்று எதை எல்லாம் தனியாரின் கைகளில் கொடுத்து இருக்கிறது???
#கல்வி#
#மருத்துவம்#
#பெட்ரோலியத்துறை#
#நெடுஞ்சாலைத்துறை#
#ஆயுள்காப்பீடு (இன்சுரன்ஸ்)#
#வங்கிகள்#
இன்னும் இந்தப் பட்டியல் இருக்கிறது இப்படி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் அனைத்து துறைகளையும் தனியார்வசம் கொடுத்து விட்டால் நாட்டின் பணவீக்கம் 80 என்ன 200 ரூபாய் கூட ஆகலாம்.
*ஒரு சில துறைகளை தனியாரிடம் கொடுத்து விட்டு. மக்கள் பயன்பெறும் பொதுத்துறை நிறுவனங்களான கல்வி, மருத்துவம், பெட்ரோலியம், ஆயுள் காப்பீடு போன்றவைகளை அரசு நடத்தி இருக்கலாம்.
*வளர்ந்த நாடுகளில் எல்லாம் மேலே கூறிய அனைத்து துறைகளும் அரசின் கட்டுப்பாட்டிலே இயங்கி வருகிறது. அப்படி இயங்கியதால் மட்டுமே அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அந்நாட்டுகளில் வளர்ந்து இருக்கிறது.
#நம்முடைய இப்போதைய இந்த அரசியல், பொருளாதரம் மற்றும் சமூக அமைப்பு #
*லட்சாதிபதியை கோடிஸ்வரனாக மாற்றுகிறது,
*நடுத்தர மக்களை ஏழைகளாக மாற்றுகிறது,
*ஏழைகளை ஒருவேளை சோற்றுக்கு போராட வைக்கிறது.
*இதற்கு கீழ் நிலையில் இருப்பவர்களை பற்றி சொல்லவே வேண்டாம் ஏன் என்றால் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் மாநகர டிராபிக் சிக்னலிலும் தினமும் இவர்களை கடந்தே நாம்போக வேண்டும்.
*சுதந்திரம் பெற்று இந்த 67-ஆண்டுகளில் நம்நாடு முன்னேறவில்லை என்பதற்கு இவர்களே உயிருள்ள சாட்சிகள்.
*உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் உலகின் தலைசிறந்த 200 பல்கலைழகங்களில் ஒன்று கூட இந்தியாவில் இருந்து தேர்வாகவில்லை.
*ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியா முதல் 5 இடத்திற்குள் வருகிறது
*எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் வருகிறது.
*சுகாதரமான நாடுகளின் பட்டியலில் 157-வது இடத்தில் இருக்கிறது
இதெல்லாம் நமக்கு சிறப்பா?? ஒரு கனம் சிந்தியுங்கள் நம்நாடு எதை நோக்கி பயனிக்கிறது நம் சமூகம் என்ன நிலைக்கு இதனால் தள்ளப்படும் தெரியுமா???
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்து விடுவேன் என்ற பாரதியின் வாக்கு பொய்யாகி. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் அவனை கொன்றுவிடுங்கள் என்ற நிலை மிக விரைவிலேயே வரும். மனிதம் மறந்தால் நாம் மனிதர்களாய் வாழ தகுதியற்றவர்கள்.
பணம் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியம் ஆனால் நம் சமூகம் என்பது வெறும் பணத்தால் மட்டும் கட்டமைக்கப்பட்டது அல்ல உறவுகள், சாதி, பாரம்பரியம், பண்பாடு இவை அனைத்தையும் சேர்த்து பின்னப்பட்டது
இன்று நாம் பணத்தேடலில் அனைத்தையும் இழக்கிறோம். நமக்கென்று தனி வரலாறு இருக்கிறது. நமக்கென்று உலக வரலாற்றில் தனி அடையாளம் இருக்கிறது. அடையாளத்தை இழந்து ஆடம்பரத்தை எதிர்பார்ப்பது அவமானம்.
மாளிகை வீடு, கோடிகோடியாய் பணம், தங்கத் தட்டில் சோறு, இவையெல்லாம் கொடுத்து தனியாய் யாரும் இல்லாத காட்டில் வாழவேண்டும் என்றால் நம்மால் முடியுமா???
கண்டிப்பாக முடியாது. வெற்றியை கொண்டாட நமக்கு உறவுகள் & நட்புகள் வேண்டும், அப்படி யாரும் இல்லாத வெற்றி தோல்வியை விட கேவலமானது. நான் ஜெயித்தேன் என்பதை விட யாரும் தோற்கவில்லை என்பதே சாலச்சிறந்தது.
அதற்க்காக உங்களை எல்லாம் புத்தனாகவோ, காந்தியாகவோ மாறச் சொல்லவில்லை நம் சமூகம் எதை நோக்கி பயனிக்கிறது என்பதை உங்கள் கண்முன் நிறுத்தும் ஒரு சிறு முயற்ச்சியே இந்தப் பதிவு.
இறக்கத்தான் பிறந்ததோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் என்ற அன்னை தெரசாவின் வரிகளை பின்பற்றினேலே போதும்.
சமூகம் அரசியல் மீதான என் குரல் பதிவுகளின் வழியாக ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்
No comments:
Post a Comment