Showing posts with label தமிழக வரலாறு. Show all posts
Showing posts with label தமிழக வரலாறு. Show all posts

Sunday, 18 September 2016

உலகின் முதல் நாகரீகம் தமிழருடையது.-ஆதாரங்கள் உண்டு?

உலகின் முதல் நாகரீகம் தமிழருடையது.-ஆதாரங்கள் உண்டு?

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.



தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது. 
தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார். இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.
இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.


மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.
1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார். 

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.


ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.
ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

தமிழரின் மரபணு மிகவும் பழமையானது !

                 தமிழரின் மரபணு மிகவும் பழமையானது !

 60,000 வருட பழமையான DNA தமிழகத்தில் !

உலகில் தோன்றிய முதல் குடிமக்கள் என்ற பெருமையை தமிழ் நாட்டில், மதுரையை அடுத்த கிராமமாகிய ஜோதிமாணிக்கத்தில் பதினைந்து பேர்களுக்கு கிடைத்திருக்கின்றது. அதில் முதலாவதாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் திரு.விருமாண்டி என்னும் தமிழர் . மேலும் ஆய்வு செய்தபோது, அதே ஜோதிமாணிக்கம் கிராமத்தில் மேலும் பதினான்கு பேர் அத்தகைய DNA வுடன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இன்னும் ஆய்வுக்குட்படாத ஏராளமான தமிழர்களிடத்தில் இத்தகைய DNA இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. கடல்கொண்ட மதுரையிலிருந்து இவர்கள் குடிபெயர்ந்து வந்ததால் இந்த இடத்திற்கும் மதுரை என்று பெயர் வந்திருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.







 
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். திரு. ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை கண்டறிந்து உள்ளார். இவர்களுடைய மரபணுக்கள் 60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பூர்வகுடிகளுடைய மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர்.


திரு.ஆ.விருமாண்டி தேவர்.
“M130″ எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. இதே ரக மரபணு கொண்ட மலை வாழ் மக்கள் இன்றும் ஆஸ்திரேலிய காடுகளில் வாழ்ந்து வருகின்றனர்!.
 

இப்போதைக்கு இந்தியாவில் இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. “THE STORY OF INDIA” என்ற தலைப்பில் “Michael Wood ” என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று விருமாண்டியிடம் விஞ்ஞானிகள் கேட்டபோது, "இந்த உலகில் வாழும் எல்லாருக்கும் ஒரே அப்பாதான் இருக்கமுடியும். நிறமும் மொழியும்தான் மாறுபடும்" என்று கூறினார். (சரியாக சொன்னீர்கள், என்ன இருந்தாலும் அந்த ஒரு உலக தந்தையினுடைய DNA உங்களிடத்தில் அல்லவா இருக்கிறது?) 
மேலும் பல விஞ்ஞானிகள் இவரை ஆய்வுக்கு அழைத்தபோது, தான் ஒரு அந்நியமான மனிதனாக காணப்படுவதை விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்.


வில்லியம் ஸ்காட் எலியாட் என்பவர் வரைந்துள்ள இலெமுரியாவின் வரைபடத்தை ஆய்வு செய்யாமல் ஆய்வாளர்கள் "மனித இனம் ஆதியில் எங்கே இருந்து எங்கே இடம் பெயர்ந்து சென்றது" என்று ஆய்வது அறியாமையிலும் அறியாமையே ஆகும். (எந்த காலத்தில் இடம்பெயர்ந்ததாக கூறுகிறார்களோ அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த உலகவரைபடத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.)


 
உலகின் மிகவும் பழங்குடி மக்களுக்குரிய DNA வை உடைய மக்களின் இருப்பிடங்கள் அனைத்தும் இந்த இலேமுரியாவின் வரைபடத்தின் எல்லைகளின் ஒரு பகுதியாக இருப்பதை ஆய்வாளர்கள் கவனிக்கவேண்டும். மேலும், இதில் ஆப்பிரிக்காவை சார்ந்த பகுதிகள், ஆஸ்திரேலியாவை சார்ந்த பகுதிகள் காடுகள் நிறைந்த பிரதேசமாக இருப்பதையும், அப்படி இருப்பதற்கான தட்ப வெப்ப நிலையினையே பெற்று இருப்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். 

இலெமுரியாவின் மையப்பகுதியாக இருந்த இந்தியாவை ஒட்டிய தமிழர் பகுதிகளே உயரினம் உற்பத்தியாவதற்கு உரிய தட்பவெப்ப நிலையை கொண்டுள்ளதை ஆய்வில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், பிற வரலாற்று ஆதாரங்களையும், தமிழர் நூல்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது உலகில் 'ஜலபிரளயம்' (பைபிளில் கூறப்படுகின்ற உலகப்பேரழிவு) வருவதற்கு முன்னதாகவே இங்கு நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்துள்ளனர். (பைபிளில் "வெறும் கட்டுக்கதைகள் -பரிசுத்த ஆவியினால் உரைக்கப்பட்டவை அல்ல"- என்று நீக்கப்பட்ட பகுதிகளிலும் கூட இந்த இலெமுரியா கண்டத்தை பற்றிய வரலாறு இருக்கும் என்று கருதி சமீபகால ஆய்வாளர்கள் அவற்றை தேடிக்கண்டுபிடித்து ஆய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.)

உலகிற்கே மூதாதையர்களாக இருந்த தமிழர்களைப்பற்றி உலகறியச் செய்வதன் மூலமாக மனித இனத்தின் வரலாறு இனிமேலாவது வெளிச்சத்திற்கு வரும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை!

தமிழ் முன்னோர்களின் விஞ்ஞான அறிவு

               தமிழ் முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .


கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. 
ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.
தமிழர் பெருமையை பரப்ப இதை share செய்யுங்கள்.
>>>>https://www.facebook.com/Vivasayi

காவிரிப்பூம்பட்டினம்....உலகின் மிகப்பழமையான நகரம்....!

  காவிரிப்பூம்பட்டினம்....உலகின் மிகப்பழமையான நகரம்....!



"மாநகர் கடல்கொள    அறவண ரடிகளும் தாயரும் ஆங்குவிட்டு
இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும்"    (மணிமேகலை 28 அடி 80-81

பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நிற்க வைக்கப்பட்டிருந்த  துறைமுகம்.- காவிரிபூம்பட்டினம் !
கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம்.!


காவிரிபுகும்பட்டினம் என்பதே காவிரிபூம்பட்டினம் என மருவிற்று. காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்ததிருந்ததுதான் இந்த அழகிய நகரம்!! காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்!! இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது !!.


இங்குள்ள சிவன் கோயில் பல்லவன் வழிபட்டதன் காரணமாகப் “பல்லவனீச்சரம்” என்று சுட்டப்பட்டது.ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் (காவிரிப்பூம்பட்டினம், புகார்) பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம்

மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது வருடா வருடம் தவறாமல் "இந்திர விழா" கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.


கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின எனவும், பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை எனவும் உலக ஆராய்ச்சியாளர்கள் முடிவு தெரிவிக்கிறார்கள்.   கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.


 வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போனார்கள். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறினார்கள்.


"இணையதளத்தில் கூகுள் மேப்பில் நீங்கள் பார்க்கலாம். இந்தியாவைச் சுற்றியிருக்கும் கடலோரப் பகுதி சில மைல் தூரம் வெளிர்நீல நிறத்திலும் அதைத்தாண்டிய பகுதிகள் கருநீல நிறத்திலும் இருக்கும். வெளிர்நீலப் பகுதிகள் ஆழம் குறைவானவை. அங்கே நிலம் மூழ்கியுள்ளது என்பதற்கு இன்று கூட பெரிய சான்று இருக்கிறது.

தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும்போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. இந்த ஆய்வில் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச், 8,9ல் கடலில் மூழ்கியவர்கள் இரும்பு பீரங்கி, ஈயக்குண்டைக் கண்டுபிடித்தார்கள். எஸ்.ஆர்.ராவ் தலைமையில் வானகிரி பக்கத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்புடைய ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
 
 
 1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட  வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் 2 மீ. உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர். அது புழுதியும் சேறுமாக மூடப்பட்டிருந்தது.  பின்னர் நிதிப்பற்றாக்குறையால் அகழாய்வு தடைபட்டது.

கிரஹாம் ஹான்காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை.

இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்த  கிரஹாம் ஹான்காக் என்பவர், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றி விவரங்களைக் கேட்டறிந்தார்.

கிரஹாம் ஹான்காக்
நிதிப்பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சேர்ந்த "சானல் 4" என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த "லர்னிங் சானல்" என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001-ம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
  

அந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன "சைடு ஸ்கேன் சோனார்" என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற்பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது.பின்னர், அக்காட்சிகளை கிரஹாம் ஹான்காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.


 
 இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக், அந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இந்த நகரம் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கி இருக்கக்கூடும் என ஹான்காக் கருதினார்.தனது ஆராய்ச்சியைப் பற்றிய விவரங்களை அவர், இங்கிலாந்தின் புகழ்பெற்ற டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறைப் பேராசிரியர் கிளன் மில்னே என்பவரிடம் தெரிவித்தார். இதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிளன் மில்னே, ஹான்காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.


சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக்கூடும் என்றும், அதனை வைத்துப் பார்க்கும் போது இந்த நகரம் 11,500 ஆண்டு கால பழமை வாய்ந்தது என்ற முடிவினை அறிவித்தார்.

இரண்டாம் மூன்றாம் கட்ட ஆய்வு, கடல் மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது குளோபல் ப்ராஸசிங் சிஸ்டம் எனப்படும் ஜி.பி.எஸ். உட்பட ஐந்து வகையான கருவிகள் பயன்படுத்தப்பட்டன. Side scan sonar Fisher என்ற கருவியின் மூலம் கடலுக்கு அடியில் நிலப்பரப்பில் என்ன இருக்கிறது என்பதையும் (கட்டடம், மண் படிவங்கள், கப்பலின் சிதைந்த பகுதிகள் போன்றவை), Eco மூலம் அது எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதையும், –Mini Ranger  மூலம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்யமுடியும்.

கடைசியாக எஸ்.ஆர்.ராவ் தலைமையில் கடலுக்கு அடியில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த டைவர்ஸ் (கடலில் மூழ்குபவர்கள்) உடன் நானும் டைவிங் செய்தேன்.
தொல்லியல் நிபுணர் செல்வராஜ்.
இந்தக் கடலாய்வின்போது கடலுக்கு அடியில் 45 மீட்டர் நீளத்தில் 7 மீட்டர் தூரத்தில் மண்படிவங்களைக் கண்டறிந்தோம். ஒரு படிவத்தை ஆய்வு செய்தபோது, அது 2 மீட்டர் சுற்றளவுக்குப் புழுதிகளால் மூடப்பட்டிருந்தது. கரையிலிருந்து நாலரை கி.மீ. தூரத்தில் 67 அடி ஆழத்தில் மனிதர்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றளவும் இருக்கின்றன. செம்பூரான் கற்களை வைத்து அடுக்கிக் கட்டப்பட்ட கட்டடங்கள் அப்போது கண்டறியப்பட்டன. எங்களது ஆய்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தமிழக கடலாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது" என்கிறார் தொல்லியல் நிபுணர் செல்வராஜ்.

இந்த ஆராய்ச்சி, தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான "மெசபடோமியா" பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது என தெரிவிக்கிறது.

இதன்மூலம் உலகில் நவீன நாகரிகம், பூம்புகார் நகரில் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது தெளிவாகிறது.

பூம்புகாரில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் அண்டர்வேர்ல்டு என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒளிபரப்பப் பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர் உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இப் படங்களை, கடந்தவாரம் பெங்களூரில் நடந்த கண்காட்சியில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.


சிலப் பதிகாரத்தில் வரும் சாம்பா தேவி கோவிலும் அதன் 
காவல் பூதங்களும் இது கோவலன் கண்ணகி வாழ்ந்த பூம்பூகார் நகரின் எல்லை பகுதியில் இருக்கிறது  ஆனால் யாருடைய கவனிப்பும் இல்லாமல் முட்புதரில் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் வரும் ஓரே கோவில் தமிழ் நாட்டில்இது மட்டும் தான். நம் மக்களின் அறியாமையினால்தான் தமிழனின் வீரமும் வரலாறும் மறைக்கபடுகிறது, அழிக்கப்படுகிறது எது எதற்க்கோ சங்கமும் கட்சியும் நடத்தும் நாம் இது போன்ற வரலாற்றை காப்பற்ற ஒரு அமைப்பு  நடத்துவோம் அப்போது தான் தமிழன் உலகளவில் தலை நிமிர்வான்...!  
மேலும் காவிரிப்பூம்பட்டினத்தின் பழமையை அறிய கீழ்காணும் இணைய தளங்களுக்கு செல்லவும்.


http://tamilsproud.blogspot.in/
http://aarkaytamil.blogspot.in/2014/02/blog-post_9.html
http://www.eegarai.net/t85999-topic
http://esp-fenix.blogspot.in/2012/06/blog-post_24.html
http://ivalbharathi.blogspot.in/2012/07/11500.html

உலகின் மிகப்பெரிய வழிபடுதலம்!

                     உலகின் மிகப்பெரிய வழிபடுதலம்!


உலகின் மிகப்பெரிய கோவில் எனும்போது இந்து சமையத்தை மட்டுமே குறிக்கிறது. அனால், உலகின் மிகப்பெரிய வழிபடுதலம்  என்று சொன்னாலும் இதுதான்.
தமிழ் மன்னன் இரண்டாம் சூரிய வர்மன்
கடந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவினால் கூட - இன்று வரை - இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை! வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று விமானத்தில் இருந்து படம் எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் ?




இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இதைப் போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால்,  எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில், நமது முன்னோர்களின் மதிநுட்பத்தால் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளதாம். இதன் சிறப்பு: கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது.

 கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் கோவிலானது தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் மிகப்பெரிய வழபாட்டு தளமாக செயல்பட்டுவந்தது. இரண்டாம் சூரியவர்மன் என அழைக்கப்பட்ட சோழ மன்னன் கட்டிய இந்த கோவிலானது இன்றளவும் உலகின் மிகப்பெரிய வழிபடுதலமாக உள்ளது. இவருக்கும், அதே காலகட்டத்தில் (கி.பி. 1114) தமிழகத்தில் வாழ்ந்த சோழப்பேரரசர் குலோத்துங்க சோழனுக்குமிடையே குழுவினர்களை பரிமாறிக்கொண்ட உறவு இருந்ததாக வரலாறு கூறுகிறது. ( இவர் சோழ மன்னர்களின் வழியில் வந்தவர் என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.)


நம் தமிழ் மன்னன் ''சூர்யவர்மன்'' கட்டிய உலகின் மிக பெரிய கோயில்.("அங்கோர் வாட்" )

இவர் இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினார். இந்த இடம் தான் அவரின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் என்னவென்றால், "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயில்தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே மிகவும் பெரியது! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். 

இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். மீண்டும்,  இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது.

இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது. அவர் புத்தமதத்தை பின்பற்றியவராக இருந்தபடியால், பின்னர் இந்த கோயிலானது  கொஞ்சம் கொஞ்சமாக புத்தர்களின் வழிபாடு தளமாக மாறியது. இப்படியாக ஆரம்ப கால புத்தமத வளர்ச்சிக்கு அடித்தளமாய் அமைந்தது. இறுதி வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது. பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது, அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதிலமடையத்தொடங்கியது.  தீட்டிய மரத்தில் கூர் பார்கின்ற கதையாக இன்று புத்த மதத்தை சேர்ந்தவர்கள் தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவது நினைவுகூறத்தக்கது.

 தாங்கள் மேலும் அறியவும், (நன்றியுடனும்) கீழ்கண்ட இணைப்புகளை சமர்ப்பிக்கிறேன்.

http://en.wikipedia.org/wiki/Suryavarman_II)

http://en.wikipedia.org/wiki/Angkor_Wat

http://kalakalapputamilchat.forumotions.in/t112-topic

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...