தமிழகத்தின் இயற்கை அமைப்பு
வணக்கம் தோழர்களே.. தமிழகத்தின் இயற்கை அமைப்பைப் பற்றி கட்டாயம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
தமிழகத்தின் இயற்கை அமைப்பு
தமிழகம் 8' 5' வட அட்ச ரேகை முதல் 13' 35' வட அட்ச ரேகை வரையிலும், 76' 15' கிழக்கௌ தீர்க்க ரேகை முதல் 80' 20; கிழக்கு தீர்க்க ரேகை வரையிலும் பரவிக் கிடக்கிறது.
தெற்கு எல்லையான கன்னியாகுமரியில் வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடல் என மூன்றும் சங்கமிக்கிறது.
இந்திய பரப்பளவில் தமிழகம் 4 சதவீதத்தைப் பெற்றுள்ளது.
பரப்பளவில் இந்தியாவின் 11 வது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும்.
வடக்கு | ஆந்திரமாநிலம்,கர்நாடக மாநிலம் |
மேற்கு | கேரள மாநிலம் |
கிழக்கு | வங்காள விரிகுடா |
தெற்கு | இந்தியப்பெருங்கடல் |
தமிழக எல்லை முனைகள்
வடக்கு | புலிகாட் ஏரி(பழவேற்காடு) |
மேற்கு | ஆனைமலைக் குன்றுகள் |
கிழக்கு | கோடியக்கரை |
தெற்கு | கன்னியாகுமரி |
தமிழகத்திலுள்ள மலைகள்
மேற்குத்தொடர்ச்சி மலைகள் | கிழக்குத் தொடர்ச்சி மலைகள் |
நீலகிரி மலை | ஜவ்வாது மலை |
ஆனைமலை | கல்வராயன் மலை |
பழனி மலை | சேர்வராயன் மலை |
கொடைக்கானல் | பச்சை மலை |
குற்றாலம் | கொல்லிமலை |
மகேந்திரகிரி | ஏலகிரி மலை |
அகத்தியர் மலை | செஞ்சி மலை |
ஏலக்காய் மலை | செயின்ட் தாமஸ் குன்றுகள் |
சிவகிரி | பல்லாவரம் மலைகள் |
வருஷநாடு மலை | வண்டலூர் |
No comments:
Post a Comment