Tuesday 22 June 2021

அயோடின்உப்பு...மெல்லகொல்லும்_விஷம்..!!!

அயோடின்உப்பு...மெல்லகொல்லும்_விஷம்..!!! 

 


#உப்பைப் பற்றிய உன்னத பதிவை பகிர்வதில் பெருமிதம்..
ஒரு கூட்டம், இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.
அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது..
டாக்டர் இர்வின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்.
மேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர்.
பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்.
ஒருமுறை இவரை நூலகத்தில் வைத்துப் பேசியிருக்கிறேன்.
சதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்: “இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள்.
* காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள்.
* வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன.
* இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம்.
நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.
* பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன.
சென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது.
தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன.
* பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன.
* வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை.
உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.ஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம்.
அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம்.
அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை?” – ஒரு பண முதலை கேட்டது. ஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம்.
இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும். நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும்.
அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர்.
அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம். அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன?”
உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு” ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின.
இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது.
எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன.
கல்லுப்பின் பயன்பாடு அறவே நின்றுவிட்டது. சரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது. பெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன.
அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.
இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குமுன் திரண்டார்கள்.
மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்:
“பொது மக்களே! நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா?
நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்?
#ஃபெரஸ்சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் #உப்புத்தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?”.
“ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள் இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.” “நாம் வாங்கும் பொடி உப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக #அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் #புற்றுநோயை வரவேற்கும்.” ‘
2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுன் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார்.
ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள்.
அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.” “ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?.
இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் #செயற்கைஉப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான்.
போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.” கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன.
இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு #இதயநோய் வந்ததா? #சர்க்கரைநோய் வந்ததா? #சிறுநீரகக் கோளாறுதான் வந்ததா? #உடல்பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.
நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன.
வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.
போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.” சுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள்.
அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர். இதை எல்லாத் தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள்.
ஆனால் எதிலும் ஒளிபரப்பவில்லை! இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது! மக்களாகிய நாம் தான் திருந்த வேண்டும்…!
காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான்!!
மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க!
‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன?
இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க!!
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை *""#Ora_Science""*என்று சொல்வாங்க!!
*எதிர்மறை சக்தி (Negative Energy) & நேர்மறை சக்தி (Positive Energy)*..... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது!!!
உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற *சக்தி கொண்ட ஒரு பொருள்!!!*
கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ; அல்லது பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும்!!!
*இது மாயமோ, மந்திரமோ இல்லை!! முற்றிலும் அறிவியல்!!*
உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது; அதுவே *அதிர்வுகளாக* (Vibration) வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும்!!! எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும்!!!
ஒரு விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம்!! இதுவும் *அறிவியல்தான்!!*
இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க!! அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க!! அப்படி வாங்கினால், கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும்!!! இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு.......!!!!!!
#பொடிஉப்பைத் தவிர்ப்போம்… #கல்உப்பைப் பயன் படுத்துவோம் !!!

டாக்டர்களின் எதிரி யார்??? *#நிலக்கடலை* தான்... சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!!

டாக்டர்களின் எதிரி யார்???
நிலக்கடலை* தான்...
சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!!

 

 
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.
நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.
★ நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
★ பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
★ இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
★ இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
★ ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
★ மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.
★ கொழுப்பை குறைக்கும்:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது.
நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
★ அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.
எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
★ கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*
★ பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு.
நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
.
பகிருங்கள் பலரும் தெரிந்துகொள்ளட்டும்... கடலை அதிக கொலஸ்ட்ராலை உண்டுபண்ணும் என்ற வதந்தியை பரப்பிவிட்டு, தந்திரமாக நம் சத்தான நாட்டு நிலக்கடலையை வெளிநாட்டினர் அனைத்து உணவிலும் பயன்படுத்தி நலமோடு வாழுகின்றனர்...

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...