Showing posts with label sattam. Show all posts
Showing posts with label sattam. Show all posts

Saturday, 27 May 2023

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

 

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

 இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தகவல்

 

இந்தியா முழுவதற்கும் பொதுவான ஒரு குற்ற இயல் சட்டத்தொகுப்பு மிகவும் அவசியம் என்று கருதி கீழ் கண்டவாறு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டம் 1860-ஆம் உருவாக்கப்பட்டது. இதை மெக்காலே பிரபுவும் அவரைச் சேர்ந்த நான்கு சட்ட நிபுணர்களும் உருவாக்கினார்கள் இந்த சட்டத்தில் 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் உள்ளன.

அத்தியாயம் 1 பகுதி 1 முதல் 5 அறிமுகம்

ஐபிசி பிரிவு 1 - பெயரும் எல்லையும்

“இந்தியத் தண்டனைச் சட்ட தொகுப்பு” என்று இந்தச் சட்டம் அழைக்கப்படும். ஜம்மு. காஷ்மீர் பிரிவுகள் நீங்கலாக உள்ள இந்தியா முழுமைக்கும். இந்த சட்டத்துக்கு வரம்பு உண்டு. 

 

ஐபிசி பிரிவு 2 - இந்திய எல்லைக்குள் நடைபெறும் குற்றங்களுக்கு தண்டனை

இந்தியாவில் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் இந்த சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டுள்ளபடி தத்தமது நடவடிக்கைகளுக்கு ஏற்ப தண்டனை பெறுவர். சட்டப்படி செய்ய வேண்டியவற்றைச் செய்யாது விட்டாலும் குற்றமாகும். அவர்களை இந்தச் சட்ட பிடியின்றி வேறு எந்த விதமாகவும் தண்டிக்கலாகாது.

3. வெளி நாடுகளில் செய்யப்பட்ட குற்றங்கள் ( Punishment of offences committed beyond, but whichby law may be tried within India):

    இந்தியாவில் இயற்றப்பட்ட எந்த சட்ட-த்தின் கீழாவது இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற ஒரு குற்றத்துக்காக ஒருவரை குற்றம் சாட்டி விசாரிக்க வேண்டுமென்றால், அவரையும் இந்த கட்டத்தொகுப்பின்படியேதான் விசாரணை நடத்த சேவண்டும். குற்றம் இந்தியாவுக்கு வெளியே செய்யப்பட்டிருந்தாலும், இந்தியாவுக்குள் செய்யப்பட்டிருந்தால் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அப்படியே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4 Extension of code to extra - territorial offences:

இந்தியாவுக்கு உள்ளும், புறமும் உள்ள இந்திய குடிமக்கள் செய்யும் குற்றங்களுக்கும்.

(ii) இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் அல்லது விமானத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கும் இந்த சட்டத்தொகுப்பில் கூறப்பட்டுள்ளவை பொருத்தமாக இருக்கும்

விளக்கம்:

இந்தியாவில் தண்டனை பெறத்தக்க குற்றங்களை இந்தியாவுக்கு வெளியே செய்தாலும் குற்றமாகும்.

ஐபிசி பிரிவு 5 - இந்த சட்டத்தால் பாதிக்கப்பட முடியாத சில சட்டங்கள்.

அத்தியாயம் 2 பகுதி 6 முதல் 52 பொது விளக்கங்கள்

ஐபிசி பிரிவு 6 - விதிவிலக்குகளுக்கு உட்பட்ட சட்டத்தொகுப்பு

குற்றங்கள் ஒவ்வொன்றும் இந்தச் சட்டத்தின் கீழ் அவற்றுக்கு உரிய தண்டனைகளுடன் விளக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குறிய விதிவிலக்குகளும் தரப்பட்டுள்ளன. இந்த விதிவிலக்குகள், ‘பொது விதிவிலக்குகள்’. என்ற அத்தியாயத்தின் கீழ் விளக்கப்பட்டுள்ளன.

எனவே சட்டத்தைப் பயன்படுத்தும் போது விதி விலக்குகளுக்கு உட்படுத்திப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வோர் இடத்திலும் விதிவிலக்குகளை குறிப்படவில்லையே என்று ஒதுக்கிவிடக்கூடாது.

உதாரணம் :

குற்றங்கள் விளக்கி எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்தப் பிரிவிலும் ஏழு வயதுக்குக் குறைவான குழந்தை அந்தக் குற்றங்களை புரிந்தாலும், அதனை குற்றமாகக் கொண்டு தண்டனை அளிக்க முடியாது என்பதைக் குறிப்படவில்லை. ஆனால் சட்ட குறிப்புக்களைப் படிக்கும்போது, ஏழு வயதுக்கு குறைந்த குழந்தை அந்த குற்றத்தை செய்திருப்பினும் அதனை தண்டனைக்கு உரியதாகக் கருதக்கூடாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஐபிசி பிரிவு 7 - ஒருமுறை விளக்கப்பட்ட வெளிப்பாட்டின் பொருள்

ஐபிசி பிரிவு 8 - -அவன் (ர்)-

ஐபிசி பிரிவு 9 - (Number)

ஐபிசி பிரிவு 10 - ஆண், பெண்

ஐபிசி பிரிவு 11 - -நபர்-

ஐபிசி பிரிவு 12 - -பொதுமக்கள்-

ஐபிசி பிரிவு 13 - ராணி- (தவிர்க்கப்பட்டன)

ஐபிசி பிரிவு 14 - அரசு ஊழியர்-

ஐபிசி பிரிவு 15 - பிரிட்டிஷ் இந்தியா(நீக்கியது)

ஐபிசி பிரிவு 16 - இந்திய அரசு (நீக்கியது)

ஐபிசி பிரிவு 17 - -அரசு-

ஐபிசி பிரிவு 18 - -இந்தியா-

ஐபிசி பிரிவு 19 - -நீதிபதி-

ஐபிசி பிரிவு 20 - நீதி மன்றம்

ஐபிசி பிரிவு 21 - பொது ஊழியர்

ஐபிசி பிரிவு 22 - அசையும் பொருட்கள்

ஐபிசி பிரிவு 23 - முறையற்ற ஆதாயம்

ஐபிசி பிரிவு 24 - நேர்மையின்மை

ஐபிசி பிரிவு 25 - மோசடி

ஐபிசி பிரிவு 26 - நம்பத்தகுந்த காரணம்

ஐபிசி பிரிவு 27 - மனைவி, குமாஸ்தா அல்லது வேலைக்காரனிடம் உள்ள சொத்து

ஐபிசி பிரிவு 28 - போலியாகச் செய்தல்

ஐபிசி பிரிவு 29 - ஆவணம்

ஐபிசி பிரிவு 30 - மதிப்புமிக்க பாதுகாப்பு

ஐபிசி பிரிவு 31 - உயில்

ஐபிசி பிரிவு 32 - சட்டவிரோத விலக்குகள்.

ஐபிசி பிரிவு 33 - செயல் செய்யாது இருத்தல்

ஐபிசி பிரிவு 34 - கூட்டு நோக்கம்

ஐபிசி பிரிவு 35 - எப்போது, அத்தகைய ஒரு செயல் ஒரு குற்றமுறு தெரிதலுடன் அல்லது உள்நோக்கத்துடன் அது செய்யப்பட்ட காரணத்தால் குற்றமாகிறது

ஐபிசி பிரிவு 36 - பகுதியளவு செயலினால் மற்றும் பகுதியளவு செய்வன செய்யாமையால் ஏற்படுத்தப்பட்ட விளைவு

ஐபிசி பிரிவு 37 - ஒரு குற்றமாக அமைகிற பல்வேறு செயல்களில் ஒன்றைச் செய்வதால் ஒத்துழைத்தல்

ஐபிசி பிரிவு 38 - குற்றமுறு செயலில் சம்பந்தப்பட்டிருக்கிற நபர்கள், வௌ;வேறான குற்றங்களுக்கு குற்றவாளிகள் ஆகலாம்

ஐபிசி பிரிவு 39 - தன்னிச்சைப்படி

ஐபிசி பிரிவு 40 - குற்றம்

ஐபிசி பிரிவு 41 - சிறப்பு சட்டம்

ஐபிசி பிரிவு 42 - உள்ளூர் சட்டம்

ஐபிசி பிரிவு 43 - "சட்டவிரோத”, "சட்டபூர்வமாக செய்ய வேண்டியது".

ஐபிசி பிரிவு 44 - தீங்கு

ஐபிசி பிரிவு 45 - உயிர்

ஐபிசி பிரிவு 46 - மரணம்

ஐபிசி பிரிவு 47 - விலங்கு

ஐபிசி பிரிவு 48 - கலம்

ஐபிசி பிரிவு 49 - வருடம், மாதம்

ஐபிசி பிரிவு 50 - சட்டப்பிரிவு

ஐபிசி பிரிவு 51 - சத்திய பிரமாணம்

ஐபிசி பிரிவு 52 – நல்லெண்ணம்

ஐபிசி பிரிவு 52A – புகலிடமளித்தல்

அத்தியாயம் 3 பகுதி 53 முதல் 75 தண்டனைகள்

ஐபிசி பிரிவு 53 - தண்டனைகள்.

ஐபிசி பிரிவு 53A - நாடு கடத்தலுக்குப் பொருள் விளக்கம்

ஐபிசி பிரிவு 54 - மரண தண்டனைவிதிப்பைக் குறைத்தல்

ஐபிசி பிரிவு 55 - வாழ்க்கைக்கு சிறைத் தண்டனை

ஐபிசி பிரிவு 55A - “உரிய அரசாங்கத்தின்” பொருள் வரையறை

ஐபிசி பிரிவு 56 - ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் அடிமைத்தன வேலைவாங்கும் தண்டனைவிதிப்பு பத்து வருடங்களுக்கு மேற்பட்ட ஆனால் ஆயுள் வரை நீட்டிக்கப்படாத கால அளவிலான தண்டனை விதிப்பிற்கான விலக்கு

ஐபிசி பிரிவு 57 - தண்டனை கால அளவுகளின் பகுதிகள்

ஐபிசி பிரிவு 58 - [நீக்கியது]

ஐபிசி பிரிவு 59 - [நீக்கியது]

ஐபிசி பிரிவு 60 - தண்டனை விதிப்பானது (சிறைத்தண்டனையின் குறிப்பிட்ட நேர்வுகளில்) முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ கடுங்காவல் அல்லது சாதாரணமாக இருக்கலாம்

ஐபிசி பிரிவு 61 - [நீக்கியது]

ஐபிசி பிரிவு 62 - [நீக்கியது]

ஐபிசி பிரிவு 63 - அபராதத்தொகை

ஐபிசி பிரிவு 64 - அபராதம் செலுத்தப்படாததற்கான சிறைத்தண்டனைவிதிப்பு

ஐபிசி பிரிவு 65 - அபராதத் தொகையை செலுத்துவதற்கு சிறைதண்டனை வரம்புக்குட்பட்டது

ஐபிசி பிரிவு 66 - அபராதம் செலுத்தப்படாததற்கான சிறைத்தண்டனையின் வகை

ஐபிசி பிரிவு 67 - அபராதம் மட்டுமே உள்ள தண்டனைக்கு, அபராதம் செலுத்தப்படாதபோது செய்யப்படும் சிறைத்தண்டனை

ஐபிசி பிரிவு 68 - அபராதம் செலுத்தப்படுகையில் முடிவிற்கு வரும் சிறைத்தண்டனை

ஐபிசி பிரிவு 69 - அபராதப் பகுதியின் சமஅளவு செலுத்தப்படுகையில் முடிவிற்கு வரும் சிறைத்தண்டனை

ஐபிசி பிரிவு 70 - ஆறு வருடங்களுக்குள், அல்லது சிறைத்தண்டனையின்போது அபராதம் வசூலிக்கத்தக்கது மரணம், சொத்தை வசூலிக்கப்படுவதற்கு உள்ளாவதிலிருந்து விடுவிக்காது

ஐபிசி பிரிவு 71 - பல குற்றங்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டதற்கு தண்டனை வரம்பு.

ஐபிசி பிரிவு 72 - பல்வேறு குற்றங்களில் எந்நக் குற்றத்திற்கு குற்றவாளி என சந்தேகமாக இருப்பதாக தீர்ப்புரை தெரிவிக்கையில் அக்குற்றங்களில் ஒன்றிற்குக் குற்றவாளியாகும் நபருக்குத்தண்டனை

ஐபிசி பிரிவு 73 - தனிமைச் சிறைவைப்பு

ஐபிசி பிரிவு 74 - தனிச் சிறைச்சாலையின் வரம்பு.

ஐபிசி பிரிவு 75 - முந்தைய தண்டனைக்குப் பின்னர் அத்தியாயம் XII அல்லது அத்தியாயம் XVII இன் கீழ் சில குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

அத்தியாயம் 4 பகுதி 76 முதல் 106 தனியார் பாதுகாப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்

ஐபிசி பிரிவு 76 - குற்றம், குற்றமாகாது சந்தர்ப்பங்கள்

ஐபிசி பிரிவு 77 - சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவரை நீதிபதி தண்டிக்கிறார். தனக்கு ஒரு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற நல்லெண்ணத்துடன் தண்டனை கொடுக்கலாம். அதற்காக அந்த நீதிபதியை குற்றம்சாட்ட முடியாது

ஐபிசி பிரிவு 78 - ஒரு உத்திரவு அல்லது தீர்ப்பு நீதிமன்றத்தால் வெளியிடப்படுகிறது. அந்த தீர்ப்பு அல்லது உத்திரவு அமலில் இருக்கும்போது அதனை ஒட்டி செய்யப்படும் காரியங்கள் குற்றம் என்று கொள்ள அதிகாரம் கூட இல்லாதிருக்கலாம்.

ஐபிசி பிரிவு 79 - சட்டத்தின் கீழ் உரிமைப்பெற்று கடமையாற்றுவோர் நல்லெண்ணத்துடன் தவறுதலாக ஒரு காரியத்தை சரியானது என்று எண்ணி குற்றம் புரிந்திருந்தால் அதுவும் குற்றமாகாது.

ஐபிசி பிரிவு 80 - சட்ட ரீதியான முறையில் சட்ட ரீதியான வழிகளைப் பற்றி சட்டத்திற்கு உட்பட்ட ஒரு காரியம் கருத்துடனும் கவனத்துடனும் நடைபெறுகின்றது. அப்படி காரியம் ஆகும்போது குற்ற கருத்தும் குற்றத்தைப்பற்றி தெளிவும் இல்லாமல் எதிர்பாராத விதமாக நிகழும் விபத்து அல்லது துன்பத்தை குற்றமாக கொள்ளக் கூடாது

ஐபிசி பிரிவு 81 - ஒருவருக்கு தீங்கு இழைக்க வேண்டும் என்ற குற்ற கருத்து இல்லாமல், நல்லெண்ணத்துடன் ஒரு மனிதர் அல்லது சொத்துக்கு தீங்கு ஏற்படுவதை தடுக்க அல்லது தவிர்க்க ஒரு காரியம் நடைபெறுகிறது. அப்போது தீங்கு ஏற்படும் என அறிந்தும் அந்த காரியத்தை செய்தால் அது குற்றமாகாது

ஐபிசி பிரிவு 82 - 7 வயதுக்குட்பட்ட குழந்தை எந்த காரியத்தை செய்தாலும் அது குற்றம் ஆகாது.

ஐபிசி பிரிவு 83 - தன்னுடைய நடவடிக்கைகளின் காரண காரியங்களை புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அறிவு முதிர்ச்சி பெறாத 7 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செய்வதை குற்றம் என்று கொள்ள முடியாது.

ஐபிசி பிரிவு 84 - சித்தசுவாதீனமற்ற நிலையில் தான் செய்வது என்னவென்று புரிந்துகொள்ள முடியாத நிலையில் ஒருவர் புரியும் செயல் குற்றமாகாது.

ஐபிசி பிரிவு 85 - மது போதை ஊட்டப்பட்ட ஒருவர் தான் செய்வதை இன்னதென்று பகுத்தறிய முடியாத சூழ்நிலையில் செய்யக்கூடிய எதனையும் குற்றமாக கொள்ள முடியாது. ஏனெனில் தான் செய்யும் காரியம் சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது சட்டத்திற்கு எதிரானதா என்பதை அவரால் அப்போது அறிய முடியாது. இதில் உள்ள முக்கியமான நிபந்தனை என்னவென்றால் மதுபோதையை அவரது விருப்பத்துக்கு மாறாக பிறர் ஊட்டியிருக்க வேண்டும். அல்லது உண்ட பொருள் போதை தரத்தக்கது என அறியாமல் உண்டிருக்க வேண்டும்

ஐபிசி பிரிவு 86 - மதுமயக்கத்திலிருக்கும் ஒருவரால் புரியப்பட்ட ஒரு குறிப்பிட்ட உள்நோக்கம் அல்லது தெரிதல் தேவைபடுகின்ற குற்றம்

ஐபிசி பிரிவு 87 - மரணம் அல்லது கொடுங்காயத்தை விளைவிக்க எண்ணப்படாத மற்றும்அனேகமாக விளைவிக்கும் எனத் தெரியா சம்மந்தத்தால் செய்யப்பட்ட செயல்.

ஐபிசி பிரிவு 88 - மரணத்தை விளைவிக்க எண்ணப்படாத நபருடைய நலனுக்காக நன்னம்பிக்கையில் சம்மத்ததால் செய்யப்பட்ட செயல்

ஐபிசி பிரிவு 89 - காப்பாளரால் அல்லது காப்பாளரின் சம்மத்தால், குழந்தை அல்லது மனநலம் குன்றிய நபரின் நலனுக்காக நன்னம்பிக்கையில் செய்யப்பட்டசெயல்

ஐபிசி பிரிவு 90 - பயம் அல்லது தவறான எண்ணத்தின் கீழ் கொடுக்கப்பட்டதாகத் தெரியும் சம்மதம்

ஐபிசி பிரிவு 91 - எச்செயல்கள் தீங்கு விளைவிக்கப்பட்டதற்குத் தனியாகவோ குற்றங்களாகுமோ அச்செயல்களின் நீக்கம்

ஐபிசி பிரிவு 92 - சம்மதமின்றி ஒரு நபரின் நலனுக்காக நன்னம்பிக்கையில் செய்யப்பட்ட செயல்

ஐபிசி பிரிவு 93 - நன்னம்பிக்கையில் தெரிவிக்கப்பட்ட தகவல்

ஐபிசி பிரிவு 94 - எந்தவொரு செயலுக்கு அச்சுறுத்தல்களால் ஒரு நபர் கட்டாயப்படுத்தப்பட்டாரோ அச்செயல்

ஐபிசி பிரிவு 95 - மிகச்சிறிய தீங்கை விளைவிக்கிற செயல்

ஐபிசி பிரிவு 96 - சில நேரங்களில் நம்மை பிறரிடமிருந்து காப்பாற்றி கொள்வதற்காக சில காரியங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் பிறருக்கு தீங்கு கூட ஏற்படலாம். அந்த தீங்கு சொத்துக்கு நஷ்டம் உண்டாக்குவதற்காகவோ உடலுக்கு காயம

ஐபிசி பிரிவு 97 - உடலையும், உடைமையும் தற்காத்து கொள்ளும் உரிமை

ஐபிசி பிரிவு 98 - திறமையின் காரணமாகவும் அறிவு தெளிவடையாத காரணத்தாலும் புத்தி சுவாதீனமில்லாததாலும், போதையின் விளைவாகவும் ஒருவர் புரியும் குற்றச்செயலை குற்றமாக கருத இயலாவிட்டாலும் அத்தகைய நபர்களிடமிருந்து, நம்மை காப்பாற்றிக்கொள்ளும் உரிமஈ நமக்கு இருக்கிறது

ஐபிசி பிரிவு 99 - தற்காப்புரிமை இல்லாமல் போகும் சந்தர்ப்பங்கள்

ஐபிசி பிரிவு 100 - தற்காப்பு உரிமையைப் பயன்பதுதும் காலத்து இறப்பு ஏற்படும் சந்தர்ப்பங்கள்

ஐபிசி பிரிவு 101 - அத்தகைய உரிமை, மரணம் அல்லாத ஏதாவதொரு பிற தீங்கை விளைவிப்பதற்கு எப்போது நீட்டிக்கிறது

ஐபிசி பிரிவு 102 - தற்காப்பு உரிமை ஆரம்பிக்கும் மற்றும் நீடிக்கும் காலம்

ஐபிசி பிரிவு 103 - சொத்துக்கு அழிவு ஏற்படும்போது தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் மரணம் ஏற்படும் சந்தர்ப்பங்கள்

ஐபிசி பிரிவு 104 - சொத்துக்கு அழிவு ஏற்படும்போது தற்காப்புரிமையைப் பயன்படுத்துவதால் மரணம் ஏற்படக்கூடாத சந்தர்ப்பங்கள்

ஐபிசி பிரிவு 105 - சொத்துக்கு தற்காப்புரிமை ஏற்படும் மற்றும் நீடிக்கும் காலம்

ஐபிசி பிரிவு 106 - தற்காப்பு உரிமையை கையாளும் போது நம் அருகில் இருப்பவருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்

அத்தியாயம் 5 பகுதி 107 முதல் 120 உடந்தை

ஐபிசி பிரிவு 107 - குற்ற உடந்தை

ஐபிசி பிரிவு 108 - தூண்டுபவர்

ஐபிசி பிரிவு 108A - இந்தியாவிற்கு வெளியேயான குற்றங்களில் இந்தியாவின் தூண்டுதல்

ஐபிசி பிரிவு 109 - தூண்டிவிடப்பட்ட செயல் அதன் விளைவால் புரியப்பட்டால், மற்றும் அதனினின் தண்டனைக்கான வெளிப்படையான ஷரத்து செய்யப்படாமல் இருக்கும்போது, தூண்டுதலுக்கான தண்டனை

ஐபிசி பிரிவு 110 - தூண்டிய நபரின் உள்நோக்கமின்றி, வேறுபட்ட உள்நோக்கத்துடன் தூண்டப்பட்ட நபர் செயலைச் செய்தால், தூண்டுதலுக்கான தண்டனை

ஐபிசி பிரிவு 111 - ஒரு செயல் தூண்டிவிடப்பட்டு மற்றும் வேறொரு செயல் செய்யப்பட்டபோது, தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளதால்

ஐபிசி பிரிவு 112 - தூண்டிவிடப்பட்ட செயலுக்காக மற்றும் செய்யப்பட்ட செயலுக்காக, தூண்டிவிட்டவர் எப்போது ஒட்டுமொத்த தண்டனைக்குள்ளாக வேண்டும்

ஐபிசி பிரிவு 113 - தூண்டிவிட்டவரால் எண்ணப்பட்ட விளைவிலிருந்து, தூண்டப்பட்ட செயலால் ஏற்படுத்தப்பட்ட வேறுபட்ட ஒரு விளைவிற்காக, தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளதால்

ஐபிசி பிரிவு 114 - குற்றம் புரியப்படும்போது தூண்டியவர் உடனிருத்தல்

ஐபிசி பிரிவு 115 - மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்திற்குக் தூண்டுதல்

ஐபிசி பிரிவு 116 - சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தின் தூண்டுதல்

ஐபிசி பிரிவு 117 - பொதுமக்களால் அல்லது பத்திற்கும் மேற்பட்ட நபர்களால் குற்றம் புரியத் தூண்டுதல்

ஐபிசி பிரிவு 118 - மரணதண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தைப் புரிவதற்கான திட்டத்தை மறைத்தல்

ஐபிசி பிரிவு 119 - எந்தஒரு குற்றம் புரியப்படுவதைத் தடுப்பது பொதுப்பணியாளரின் கடமையோ, அக்குற்றம் புரியப்படுவதற்கான திட்டத்தை அவர் மறைத்தல்

ஐபிசி பிரிவு 120 - சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தைப் புரிவதற்கான திட்டத்தை மறைத்தல்

அத்தியாயம் 5எ பகுதி 120எ முதல் 120பி குற்றவியல் சதி

ஐபிசி பிரிவு 120A - குற்றச் சதியின் பொருள் விளக்கம்:

ஐபிசி பிரிவு 120B - குற்றச் சதிக்கு தண்டனை

அத்தியாயம் 6 பகுதி 121 முதல் 130 அரசுக்கு எதிரான குற்றங்கள்

ஐபிசி பிரிவு 121 - இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தல் அல்லது போர் தொடுப்பதற்கு முயற்சித்தல் அல்லது போர் தொடுக்கத் தூண்டுதல்

ஐபிசி பிரிவு 121A - சட்டப்பிரிவு 121 ஆல் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்களைப் புரிவதற்குச் சதி

ஐபிசி பிரிவு 122 - இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் உள்நோக்கத்துடன் ஆயுதங்கள், முதலானவற்றைச் சேகரித்தல்

ஐபிசி பிரிவு 123 - போர் தொடுப்பதற்கான திட்டத்திற்கு உதவி செய்யும் உள்நோக்கத்துடன் மறைத்தல்

ஐபிசி பிரிவு 124 - ஏதாவதொரு சட்டபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டாயப்படுத்தும் அல்லது தடுக்கும் உள்நோக்கத்துடன் குடியரசுத்தலைவர், ஆளுநர் முதலானவர்களைத் தாக்குதல்

ஐபிசி பிரிவு 124A - ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி

ஐபிசி பிரிவு 125 - இந்திய அரசாங்கத்துடன் கூட்டாக எந்த ஆசிய சக்திக்கும் எதிரான போரை நடத்துதல்.

ஐபிசி பிரிவு 126 - இந்திய அரசாங்கத்துடன் அமைதி உறவில் உள்ள நாட்டின் எல்லை பகுதிகளின்மீது கொள்ளை புரிதல்

ஐபிசி பிரிவு 127 - சட்டப் பிரிவுகள் 125 மற்றும் 126 களில் குறிப்பிடப்பட்டுள்ள போர் அல்லது கொள்ளையடித்தலில் எடுக்கப்பட்ட சொத்தைப் பெறுதல்

ஐபிசி பிரிவு 128 - நாட்டின் அல்லது போரின் கைதி தப்பிப்பதற்கு, பொதுப் பணியாளர் தன்னிச்சையாக அனுமதித்தல்

ஐபிசி பிரிவு 129 - அத்தகைய கைதி தப்பிப்பதற்கு பொதுப் பணியாளர் கவனக்குறைவாக அனுமதித்தல்

ஐபிசி பிரிவு 130 - அத்தகைய கைதியின் தப்பித்தல், மீட்டல் அல்லது புகலிடத்திற்கு உதவுதல்

அத்தியாயம் 7 பகுதி 131 முதல் 140 இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்

ஐபிசி பிரிவு 131 - கலகம் செய்யத் தூண்டுதல் அல்லது ஒரு தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரை அவரது அலுவலிலிருந்து கீழ்ப்படியாமைக்கு இசையைச் செய்ய முயற்சித்தல்

ஐபிசி பிரிவு 132 - கலகத்தைத் தூண்டி, அதன் விளைவில் கலகம் புரியப்படுதல்

ஐபிசி பிரிவு 133 - தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரால், அவரது மேனிலை அலுவலர் அவரின் அலுவலகப் பணியாற்றும் போது, தாக்கப்பட தூண்டுதல்

ஐபிசி பிரிவு 134 - அத்தகைய தாக்குதலைத் தாண்டி, தாக்குதல் புரியப்பட்டால்

ஐபிசி பிரிவு 135 - தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரர் பணியை விட்டோடுவதற்குத் தூண்டுதல்

ஐபிசி பிரிவு 136 - பணியை விட்டோடியவர்க்குப் புகலிடமளித்தல்

ஐபிசி பிரிவு 137 - பணியை விட்டோடியவர், தலைவரின் கவனக்குறைவால் வணிகக் கப்பலில் மறைத்து வைக்கப்படல்

ஐபிசி பிரிவு 138 - தரைப் படை, கடற்படை அல்லது விமானப் படை வீரரால் கீழ்ப்படியாமை செயலுக்குத் தூண்டுதல்

ஐபிசி பிரிவு 138A - இந்திய கடல்சார் பணிக்குப் பொருந்தக் கூடிய பின்வருகின்ற சட்டப்பிரிவுகள்

ஐபிசி பிரிவு 139 - குறிப்பிட்ட சட்டங்களுக்கு உட்படும் நபர்கள்

ஐபிசி பிரிவு 140 - தரைப் படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப் படை வீரரால்பயன்படுத்தப்படும் சீருடையை அணிதல் அல்லது அடையாள சின்னத்தைக் கொண்டு செல்லல்

அத்தியாயம் 8 பகுதி 141 முதல் 160 பொதுமக்களின் அமைதிக்கு எதிரான குற்றங்கள்

ஐபிசி பிரிவு 141 - சட்ட விரோதமான கூட்டம்

ஐபிசி பிரிவு 142 - சட்ட விரோதமான கூட்டத்தில் உறுப்பினராதல்

ஐபிசி பிரிவு 143 - சட்ட விரோதமான கூட்டத்தில் சேர்ந்திருப்பதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 144 - சட்ட விரோதமான கூட்டத்தில் பயங்கரமான ஆயுதங்களுடன் இருப்பதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 145 - களைந்து செல்லும்படி உத்தரவிட்டும் சட்ட விரோதமான கூட்டத்தில் இருப்பதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 146 - கலகம்

ஐபிசி பிரிவு 147 - கலகம் செய்வதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 148 - பயங்கர ஆயுதங்களுடன் கலகம் செய்வதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 149 - சட்ட விரோதமான கும்பலில் உள்ள ஒவ்வொருவருக்கும் தண்டனை

ஐபிசி பிரிவு 150 - சட்டவிரோதமான கூட்டத்தில் சேர நபர்களை பணியமர்த்தல் அல்லது சேர்த்தல்.

ஐபிசி பிரிவு 151 - ஐந்து அல்லது அதற்கு மேலான நபர்கள் அதை கலைக்கக் கட்டளையிடப்பட்ட பின்னர் கூடுவது அல்லது தொடர்வது.

ஐபிசி பிரிவு 152 - கழக கூட்டத்தை அடக்க முற்படும்போது போது ஊழியரை தாக்குவது அல்லது தடுப்பதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 153 - கலகம் செய்வதற்கு தூண்டிவிடுவதற்கான தண்டனை, கலகம் நடந்தாலும், நடக்காவிட்டாலும்

ஐபிசி பிரிவு 153A - சாதி, மத, இன மொழி, சமயம் சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டிவிடுதல்

ஐபிசி பிரிவு 153AA - எந்தவொரு ஊர்வலத்திலும் ஆயுதங்களைக் கையாளுதல் அல்லது ஆயுதங்களைக் கொண்டு எவ்வித வெகுஜன பயிற்சி அல்லது வெகுஜன பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுவதையோ அல்லது எடுத்துக்கொள்வதையோ தண்டிப்பதற்கான தண்டனையாகும்.

ஐபிசி பிரிவு 153B - பேச்சு, எழுத்து அல்லது சைகையால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவித்தல்

ஐபிசி பிரிவு 154 - கலகம் நடந்த இடத்தில் சொந்தக்காரர் அல்லது குடியிருப்பவருக்கு தண்டனை

ஐபிசி பிரிவு 155 - ஒரு இடத்தின் சொந்தக்காரருக்கு ஆதரவாக கலகம் நடத்துவதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 156 - கலகம் நடந்த இடத்தின் சொந்தக்காரருக்கு ஆதரவாக இருந்த அகேன் அல்லது அந்த இடத்தின் வசிப்பவருக்கான தண்டனை

ஐபிசி பிரிவு 157 - சட்டவிரோதமான கூட்டத்திற்கு என்று அமர்த்தப்பட்டு புகலிடம் கொடுப்பதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 158 - சட்ட விரோதமான அல்லது கலகக் கூட்டத்திற்கு என்று அமர்த்தப் பட்டவருக்கான தண்டனை

ஐபிசி பிரிவு 159 - அமைதிக்கு பங்கம் விளைவித்தல்

ஐபிசி பிரிவு 160 - பங்கம் விளைவித்ததற்காக தண்டனை

அத்தியாயம் 9 பகுதி 161 முதல் 171 அரசாங்க ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்

ஐபிசி பிரிவு 161 - பொது ஊழியர்கள் ஒரு கடமையை நிறைவேற்ற ஊதியத்தைத் தவிர கையூட்டு பெறுதல்

ஐபிசி பிரிவு 162 - ஊழல் அல்லது சட்டவிரோதமான வழிகளால், பொதுப் பணியாளரை செய்ய வைக்கும் பொருட்டு கையூட்டைப் பெறுதல்

ஐபிசி பிரிவு 163 - பொதுப் பணியாளரிடம், தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்துவதற்காக கையூட்டு பெறுதல்

ஐபிசி பிரிவு 164 - சட்டப்பிரிவு 162 அல்லது 163 இல் பொருள் விளக்கப்பட்டுள்ள குற்றங்கள், பொதுப் பணியாளரால் தூண்டப்பட்டதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 165 - விலை உயர்ந்த பொருட்களை பொதுஊழியர்கள் ஒரு கடமையை நிறைவேற்றியதற்காக கையூட்டாகப் பெறுதல்

ஐபிசி பிரிவு 165A - கையூட்டு பெறுவதற்கு குற்ற உடந்தையாக இருப்பதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 166 - யாரேனும் ஒரு நபருக்குத் தீங்கு விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பொதுப் பணியாளர் சட்டத்திற்குக் கீழ்ப்படியாதிருத்தல்

ஐபிசி பிரிவு 167 - பொது ஊழியர் காயப்படுத்தும் நோக்கத்துடன் தவறான ஆவணத்தை வடிவமைத்தல்.

ஐபிசி பிரிவு 168 - பொது ஊழியர் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடுதல்.

ஐபிசி பிரிவு 169 - பொதுப் பணியாளர் சட்டத்திற்கு முரணான சொத்தை வாங்குதல் அல்லது ஏலத்தில் எடுத்தல்

ஐபிசி பிரிவு 170 - பொது ஊழியராக நடித்தல்

ஐபிசி பிரிவு 171 - பொது ஊழியருடைய சீருடை அல்லது அடையாள அட்டை ஆகியவற்றை பொது ஊழியர் அல்லாதவர் ஏமாற்றும் எண்ணத்தில் அணிதல்.

ஐபிசி பிரிவு 171A - "வேட்பாளர் ", "தேர்தல் உரிமை" இவற்றின் பொருள் வரையறை

ஐபிசி பிரிவு 171B - லஞ்சம்.

ஐபிசி பிரிவு 171C - தேர்தலில் தகாத செல்வாக்கை உபயோகித்தல்

ஐபிசி பிரிவு 171D - தேர்தலில் ஆள்மாறாட்டம்

ஐபிசி பிரிவு 171E - லஞ்சம் தொடர்பான தண்டனைகள்

அத்தியாயம் 10 பகுதி 172 முதல் 190 அரசாங்க ஊழியர்களின் சட்டப்பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்

ஐபிசி பிரிவு 171F - தேர்தலில் தவறான செல்வாக்கு அல்லது ஆள்மாறாட்டத்திற்கு தண்டனை.

ஐபிசி பிரிவு 171G - தேர்தல் தொடர்பாக தவறான அறிக்கை.

ஐபிசி பிரிவு 171H - தேர்தலில் சட்டவிரோத பணம் செலுத்துதல்

ஐபிசி பிரிவு 171I - தேர்தல் கணக்குகளை வைத்திருக்கத் தவறியது.

ஐபிசி பிரிவு 172 - நீதிமன்ற அழைப்பாணைக்கு கட்டுப்படாமல் தலைமறைவாதல்

ஐபிசி பிரிவு 173 - அழைப்பாணையை தவிர்த்தல்

ஐபிசி பிரிவு 174 - பொது ஊழியர்களிடமிருந்து உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் வருகையை தவிர்த்தல்.

ஐபிசி பிரிவு 174A - 1974 ஆம் ஆண்டின் 2 ஆம் பிரிவின் 82 வது பிரிவின் கீழ் அதிகாரப்பூர்வ உத்தரவுக்கு இணங்காமல் வராதிருத்தல்.

ஐபிசி பிரிவு 175 - ஆவணங்களை வழங்குவதற்கு சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தப்படுபவர் சமர்பிக்காமல் தவிர்த்தல்

ஐபிசி பிரிவு 176 - பொது ஊழியருக்கு அறிவிப்பு அல்லது தகவலை வழங்குவதற்கு சட்டபூர்வமாக கட்டாயப்படுத்திய நபரால் வழங்கப்படாமல் இருத்தல்.

ஐபிசி பிரிவு 177 - பொய்யான தகவலை நிறுவுதல்.

ஐபிசி பிரிவு 178 - பொது ஊழியரால் உத்தேசிக்கப்படும் போது அது உறுதிமொழி செய்ய மறுத்தல்.

ஐபிசி பிரிவு 179 - பொது ஊழியருக்கு விடையளிக்க மறுத்தல்

ஐபிசி பிரிவு 180 - அறிக்கை கையொப்பமிட மறுத்தல்

ஐபிசி பிரிவு 181 - சட்டப்பூர்வமான பொது ஊழியருக்கு தவறான அறிக்கை மூலம் உறுதி அளித்தல்.

ஐபிசி பிரிவு 182 - ஒருவரை துன்பப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு பொது ஊழியரிடம் பொய்யான தகவலை கொடுத்து செயல்பட செய்தல்

ஐபிசி பிரிவு 183 - ஒரு பொது ஊழியரின் சட்டபூர்வமான அதிகாரம் மூலம் சொத்துக்களை எடுத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு.

ஐபிசி பிரிவு 184 - பொதுப் பணியாளரின் அதிகாரத்தினால் விற்பனைக்குரிய சொத்தின் விற்பனையைத் தடுத்தல்

ஐபிசி பிரிவு 185 - பொதுப் பணியாளரின் அதிகாரத்தினால் விற்பனைக்குரிய சொத்தை சட்டவிரோதமாக வாங்குதல் அல்லது ஏலத்தில் எடுத்தல்

ஐபிசி பிரிவு 186 - பொது ஊழியரை தம்முடைய செயலைச் செய்யவிடாமல் தடுத்தல்

ஐபிசி பிரிவு 187 - பொதுப்பணியாளருக்கு, உதவி செய்ய சட்டத்தினால் கடமைப்பட்டிருக்கும் போது உதவி செய்யாமலிருத்தல்

ஐபிசி பிரிவு 188 - பொதுப் பணியாளரால், முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்ப்படியாமை

ஐபிசி பிரிவு 189 - பொதுப் பணியாளருக்கு தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்தல்

ஐபிசி பிரிவு 190 - பொதுப் பணியாளரிடம் இருந்து பாதுகாப்பு கோரமலிருப்பதைத் தூண்டுவதற்க்காக, நபருக்கு தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்தல்

அத்தியாயம் 11 பகுதி 191 முதல் 229 பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்

ஐபிசி பிரிவு 191 - பொய் சாட்சியம் அளித்தல்

ஐபிசி பிரிவு 192 - பொய் சாட்சியம் புனைதல்

ஐபிசி பிரிவு 193 - பொய் சாட்சியத்திற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 194 - மரண தண்டனை தண்டிப்பைப்பெறும் உள்நோக்கத்துடன், பொய்யான சாட்சியத்தை அளித்தல் அல்லது புனைதல்

ஐபிசி பிரிவு 195 - ஆயுள் சிறைத்தண்டனை அல்லது சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்திற்கான தண்டிப்பைப்பெரும் உள்நோக்கத்துடன், பொய்யான சாட்சியத்தை அளித்தல் அல்லது புனைதல்

ஐபிசி பிரிவு 195A - பொய்யான சாட்சியம் அளிக்க யாரேனும் ஒரு நபரை அச்சுறுத்தல்

ஐபிசி பிரிவு 196 - பொய் சாட்சியம் எனதெரிந்தே அதைப் பயன்படுத்துதல்

ஐபிசி பிரிவு 197 - பொய்யான சான்றிதழை அளித்தல் அல்லது அதில் கையொப்பமிடல்

ஐபிசி பிரிவு 198 - பொய்யானதெனத் தெரிந்தே ஒரு சான்றிதழை உண்மையானது போன்று பயன்படுத்துதல்

ஐபிசி பிரிவு 199 - சட்டப்படி சாட்சியமாக பெறத்தக்க சாற்றுரையில் பொய்யான வாக்குமூலம் கொடுத்தல்

ஐபிசி பிரிவு 200 - அது பொய்யானதென தெரிந்த அத்தகைய சாற்றுரையை உண்மையானது போன்று பயன்படுத்துதல்

ஐபிசி பிரிவு 201 - குற்றவாளியை மறைக்க சாட்சியத்தை மறைத்தல் அல்லது பொய் தகவல் கொடுத்தல்.

ஐபிசி பிரிவு 202 - குற்றம் பற்றிய தகவலைத் தர கடமைப்பட்டுள்ள நபர், உள்நோக்கத்துடன் தராதிருத்தல்

ஐபிசி பிரிவு 203 - புரியப்பட்ட ஒரு குற்றத்தின் பொருட்டு பொய்யான தகவலை அளித்தல்

ஐபிசி பிரிவு 204 - சாட்சியமாகத் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்க (ஆவணம் அல்லது மின்னணுப் பதிவை) அழித்தல்

ஐபிசி பிரிவு 205 - உரிமையியல் அல்லது குற்ற வழக்குத் தொடர்வில், செயல் அல்லது செயல் நடவடிக்கைக்காக பொய்யாக ஆள்மாறட்டம் செய்தல்

ஐபிசி பிரிவு 206 - பறிமுதல் செய்தல் அல்லது நிறைவேற்றுதலின் பொருட்டு, சொத்து கைப்பற்றப்படுவதைத் தடுப்பதற்கு, அதை மோசடியாக அகற்றுதல் அல்லது மறைத்தல்

ஐபிசி பிரிவு 207 - பறிமுதல் செய்தல் அல்லது நிறைவேற்றுதல் வாயிலாக சொத்து கைப்பற்றப்படுதலைத் தடுக்க மோசடியாக உரிமை கோரல்

ஐபிசி பிரிவு 208 - தர வேண்டியதில்லாத தொகைக்கு தீர்ப்பாணையை மோசடியாகப் பெறுதல்

ஐபிசி பிரிவு 209 - நேர்மையற்ற முறையில் நீதிமன்றத்தில் பொய்யான உரிமையைக் கோருதல்

ஐபிசி பிரிவு 210 - தர வேண்டியதில்லாத தொகைக்கு மோசடியாக தீர்ப்பாணையைப் பெறுதல்

ஐபிசி பிரிவு 211 - துன்பம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பொய்யான குற்றச்சாட்டை கொடுத்தல்

ஐபிசி பிரிவு 212 - குற்றம் புரிந்தவருக்கு புகலிடம் அளித்தல்

ஐபிசி பிரிவு 213 - ஒரு குற்றம் புரிந்தவரை தண்டனையிலிருந்து தப்பிக்க வைப்பதற்காக வெகுமதி முதலியவற்றைப் பெறுதல்

ஐபிசி பிரிவு 214 - குற்றம் புரிந்தவரைத் தப்பிக்க வைப்பதற்குப் பலனாக வெகுமதியை அளித்தல்அல்லது சொத்தை திரும்ப ஒப்படைத்தல்

ஐபிசி பிரிவு 215 - திருடப்பட்ட சொத்து முதலியனவற்றை மீட்க உதவுவதற்கு வெகுமதியைப் பெறுதல்

ஐபிசி பிரிவு 216 - பாதுகாவலிலிருந்து தப்பிவிட்ட அல்லது கைது செய்யப்பட்ட உத்தரவிட்டிருக்கும் குற்றம் புரிந்தவருக்கு புகலிடம் அளித்தல்

ஐபிசி பிரிவு 216A - கொள்ளைக்காரர்கள் அல்லது கூட்டுக் கொள்ளைக்காரர்களுக்கு புகலிடம் அளிப்பதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 216B - பிரிவுகள் 212, 216 மற்றும் 216-A களில் "புகலிடம் கொடுத்தல்"என்பதன் பொருள் விளக்கம்

ஐபிசி பிரிவு 217 - பொதுப் பணியாளர் சட்டத்தின் கட்டளைக்குக் கீழ்படியாமல், நபரைத் தண்டனையிலிருந்து அல்லது சொத்தைப் பறிமுதலிலிருந்து உள்நோக்கத்துடன் காப்பாற்றுதல்

ஐபிசி பிரிவு 218 - நபரைத் தண்டனையிலிருந்து அல்லது சொத்தைப் பறிமுதலிலிருந்து காப்பாற்றும் உள்நோக்கத்துடன், தவறான பதிவேட்டை அல்லது எழுத்துருவை பொதுப்பணியாளர் ஏற்படுத்துதல்

ஐபிசி பிரிவு 219 - நீதிமன்ற செயல் நடவடிக்கையில் சட்டத்திற்குப் புறம்பாக அறிக்கை முதலியவற்றை, பொதுப் பணியாளர் நேர்மையற்ற முறையில் தாக்கல் செய்தல்

ஐபிசி பிரிவு 220 - அதிகாரம் படைத்த நபரால், தான் சட்டத்திற்கு புறம்பாக செய்கிறோம் என தெரிந்தே விசாரணைக்கு மேல் அனுப்பப்படுத்தல் அல்லது சிறை வைக்கப்படுதல்

ஐபிசி பிரிவு 221 - பொதுஊழியர் வேண்டுமென்றே கைதுசெய்ய வேண்டியவரை கைது செய்யாமல் விடுதல்

ஐபிசி பிரிவு 222 - பொதுஊழியர் வேண்டுமென்றே தண்டனை விதிக்கப்பட்டவரை கைது செய்யாது விடுதல்

ஐபிசி பிரிவு 223 - கவனக்குறைவின் காரணமாக பொது ஊழியர் குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது தண்டனை பெற்றவரை காவலில் இருந்து தப்பி ஓடச் செய்தல்

ஐபிசி பிரிவு 224 - ஒரு நபர் சட்டபூர்வமாகக் கைது செய்யப்படுவது அவரால் எதிர்க்கப்படுதல் அல்லது தடுக்கப்படுதல்

ஐபிசி பிரிவு 225 - மற்றொரு நபர் சட்டபூர்வமாகக் கைது செய்யப்படுவதை எதிர்த்தல் அல்லது தடுத்தல்

ஐபிசி பிரிவு 225A - மற்றபடி குறிப்பிட்டுக் கூறப்படாத வழக்குகளில், பொதுப் பணியாளர் கைது செய்யத் தவறுதல் அல்லது தப்பிக்க எதிர்பின்மையாக இருத்தல்

ஐபிசி பிரிவு 225B - மற்றபடி வகை செய்யப்படாத வழக்குகளில் சட்டபூர்வமான கைது, அல்லது தப்பித்தல் அல்லது மீட்டலை, எதிர்த்தல் அல்லது தடுத்தல்

ஐபிசி பிரிவு 226 - நாடு கடத்துதலிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக திரும்பி வரல்

ஐபிசி பிரிவு 227 - தண்டனைக் கழிப்பின்மீதான நிபந்தனையை மீறுதல்

ஐபிசி பிரிவு 228 - நீதிமன்றச் செயல் நடவடிக்கையின்போது பொதுப் பணியாளரை உள்நோக்கத்துடன் அவமதித்தல் அல்லது குறுக்கிடுதல்

ஐபிசி பிரிவு 228A - குறிப்பிட்ட குற்றங்கள் முதலியனவற்றில், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துதல்

ஐபிசி பிரிவு 229 - ஒரு நீதிச்சான்றாளர் அல்லது மதிப்பீட்டாளராக ஆள்மாறாட்டம் செய்தல்

ஐபிசி பிரிவு 229A - பிணை அல்லது பத்திரத்தின் பேரில் விடுவிக்கப்பட்ட நபர், நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறுதல்

அத்தியாயம் 12 பகுதி 230 முதல் 263 நாணயம் மற்றும் அரசு அஞ்சல்தலைகள் தொடர்பான குற்றங்கள்

ஐபிசி பிரிவு 230 - நாணயம் வரையரை

ஐபிசி பிரிவு 231 - போலி நாணயத்தை உண்டாகுதல்

ஐபிசி பிரிவு 232 - இந்திய நாணயங்களை போலியாக செய்தல்

ஐபிசி பிரிவு 233 - போலி நாணயம் செய்வதற்கான கருவிகளை செய்தல் அல்லது விற்பனை செய்தல்

ஐபிசி பிரிவு 234 - போலி இந்திய நாணயங்களைச் செய்வதற்கான கருவிகளைச் செய்தல் அல்லது விற்பனை செய்தல்

ஐபிசி பிரிவு 235 - போலியாக நாணயங்கள் அல்லது இந்திய நாணயங்கள் தயாரிப்பதற்கான கருவிகள் அல்லது பொருட்கள் வைத்திருத்தல்

ஐபிசி பிரிவு 236 - இந்தியாவிற்கு வெளியே நாணயத்தை போலியாகத் தயாரிக்க இந்தியாவில் தூண்டுதல்

ஐபிசி பிரிவு 237 - கள்ள நாணயத்தின் இறக்குமதி அல்லது ஏற்றுமதி.

ஐபிசி பிரிவு 238 - இந்திய நாணயத்தின் போலிகளை, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்தல்

ஐபிசி பிரிவு 239 - போலியான நாணயம் என தெரிந்தே உடைமையில் வைத்திருந்து அதைக்கொடுத்தல்

ஐபிசி பிரிவு 240 - போலியான இந்திய நாணயம் என தெரிந்தே உடைமையில் வைத்திருந்து, அதைக் கொடுத்தல்

ஐபிசி பிரிவு 241 - கொடுப்பவர் உடைமையில் முதன் முதலில் பெற்றபோது, அது போலியான நாணயம் என தெரியாதிருந்து, அதை உண்மையான நாணயம் என கொடுத்தால்

ஐபிசி பிரிவு 242 - நபரின் உடைமையில் வந்தபோதே அது போலியானது என தெரிந்தும், போலியான நாணயத்தை அவர் உடைமையில் வைத்திருத்தல்

ஐபிசி பிரிவு 243 - நபரின் உடைமையில் வந்தபோதே அது போலியானது என தெரிந்தும், போலியான இந்திய நாணயத்தை அவர் உடைமையில் வைத்திருத்தல்

ஐபிசி பிரிவு 244 - நாணய தொழிற்சாலையில் பணிக்கமர்த்தப்பட்ட நபர், சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து வேறுபட்ட எடை அல்லது அமைப்பு முறை கொண்ட நாணயத்தை செய்யப்பட செய்தல்

ஐபிசி பிரிவு 245 - நாணய தொழிற்சாலையிலிருந்து நாணயம் தயாரிக்கும் கருவியை சட்டவிரோரோதமாக எடுத்துச் செல்லல்

ஐபிசி பிரிவு 246 - மோசடியாக அல்லது நேர்மையின்றி, நாணயத்தின் எடையை குறைத்தல் அல்லது அமைப்பு முறையை மாற்றுதல்

ஐபிசி பிரிவு 247 - மோசடியாக அல்லது நேர்மையின்றி இந்திய நாணயத்தின் எடையைக் குறைத்தல் அல்லது அமைப்பு முறையை மாற்றுதல்

ஐபிசி பிரிவு 248 - நாணயத்தின் தோற்றத்தை, அது வேறு விவரிப்பிலான நாணயம் போல் அனுமதிக்கப்பட்ட உள்நோக்கத்துடன் மாற்றியமைத்தல்

ஐபிசி பிரிவு 249 - இந்திய நாணயத்தின் தோற்றத்தை, அது வேறு விவரிப்பிலான நாணயம் போல் அனுமதிக்கப்பட்ட, உள்நோக்கத்துடன் மாற்றியமைத்தல்

ஐபிசி பிரிவு 250 - நாணயம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தெரிந்தே உடமையில் வைக்கப்பட்டிருந்த அதை விநியோகித்தல்

ஐபிசி பிரிவு 251 - இந்திய நாணயம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தெரிந்தே உடமையில் வைக்கப்பட்டிருந்த அதை விநியோகித்தல்

ஐபிசி பிரிவு 252 - நபரின் உடமைக்கு வந்தபோதே, அது மாற்றியமைக்கப்பட்டுள்ள நாணயம் என தெரிந்தும், அதை அவரின் உடமையில் வைத்திருத்தல்

ஐபிசி பிரிவு 253 - நபரின் உடமைக்கு வந்தபோதே, அது மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்திய நாணயம் என தெரிந்தும், அதை அவரின் உடமையில் வைத்திருத்தல்

ஐபிசி பிரிவு 254 - கொடுப்பவர் உடமையில் முதன் முதலில் பெற்ற போது மாற்றியமைக்கப்பட்டுள்ள நாணயம் என தெரியாதிருந்து, அதை உண்மையானது என கொடுத்தல்

ஐபிசி பிரிவு 255 - அரசாங்க முத்திரையை போலியாகத் தயாரித்தல்

ஐபிசி பிரிவு 256 - அரசாங்க முத்திரையை போலியாகத் தயாரிப்பதற்காக, உபகரணம் அல்லது பொருளை உடமையில் வைத்திருத்தல்

ஐபிசி பிரிவு 257 - அரசாங்க முத்திரையை போலியாகத் தயாரிப்பதற்கு, உபகரணத்தைத் தயாரித்தல் அல்லது விற்றல்

ஐபிசி பிரிவு 258 - போலியான அரசாங்க முத்திரையை விற்றல்

ஐபிசி பிரிவு 259 - போலியான அரசாங்க முத்திரையை உடமையில் வைத்திருத்தல்

ஐபிசி பிரிவு 260 - போலியானது என தெரிந்த ஒரு அரசாங்க முத்திரையை உண்மையானதுபோல் பயன்படுத்துதல்

ஐபிசி பிரிவு 261 - அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன், அரசு முத்திரையைக் கொண்டிருக்கிற பொருளிலிருந்து எழுதப்பட்டதை மறைத்தல், அல்லது பயன்படுத்தப்பட்ட ஒரு முத்திரையை ஆவணத்திலிருந்து அகற்றுதல்

ஐபிசி பிரிவு 262 - முன்னரே பயன்படுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிந்த அரசாங்க முத்திரையைப் பயன்படுத்துதல்

ஐபிசி பிரிவு 263 - முத்திரை பயன்படுத்தப்பட்டுவிட்டது என்பதை உணர்த்தும் குறியை அழித்தல்

ஐபிசி பிரிவு 263A - பொய்யான முத்திரைகளுக்குத் தடை

அத்தியாயம் 13 பகுதி 264 முதல் 267 எடை மற்றும் அளவுகள் தொடர்பான குற்றங்கள்

ஐபிசி பிரிவு 264 - எடை தெரிவிப்பதற்கான பொய்யான உபகரணத்தை மோசடியாகப் பயன்படுத்துதல்

ஐபிசி பிரிவு 265 - பொய்யான எடையை அல்லது அளவையை மோசடியாகப் பயன்படுத்துதல்

ஐபிசி பிரிவு 266 - பொய்யான எடை அல்லது அளவையை, உடமையில் வைத்திருத்தல்

ஐபிசி பிரிவு 267 - பொய்யான எடை அல்லது அளவையைத் தயாரித்தல் அல்லது விற்றல்

அத்தியாயம் 14 பகுதி 268 முதல் 294 பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரிகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்

ஐபிசி பிரிவு 268 - பொதுத் தொல்லை

ஐபிசி பிரிவு 269 - உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய கவனக்குறைவான செயல்

ஐபிசி பிரிவு 270 - உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய தீய எண்ணத்திலான செயல்

ஐபிசி பிரிவு 271 - தொற்றுத்தடை தனிமை விதிக்கு கீழ்ப்படியாமை

ஐபிசி பிரிவு 272 - விற்பனைக்காக எண்ணப்பட்ட உணவு அல்லது பானத்தில் கலப்படம்

ஐபிசி பிரிவு 273 - கேடு விளைவிக்கக்கூடிய உணவை அல்லது பானத்தை விற்றல்

ஐபிசி பிரிவு 274 - மருந்துப் பொருட்களில் கலப்படம்

ஐபிசி பிரிவு 275 - கலப்படம் செய்யப்பட்ட மருந்துகளை விற்றல்

ஐபிசி பிரிவு 276 - ஒரு வேறுபட்ட மருந்து அல்லது தயாரிப்பைப் போல் மருந்தை விற்றல்

ஐபிசி பிரிவு 277 - பொது நீரூற்று அல்லது நீர்தேக்கத்தின் தண்ணீரை மாசுபடுத்துதல்

ஐபிசி பிரிவு 278 - சுற்றுச்சூழலை ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்குமாறு செய்தல்

ஐபிசி பிரிவு 279 - பொதுஇடத்தில் அஜாக்கிரதையாக வண்டியோட்டுதல் அல்லது சவாரி செய்யுதல்

ஐபிசி பிரிவு 280 - நீர்வழிக் கலத்தை கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் செலுத்துதல்

ஐபிசி பிரிவு 281 - பொய்யான ஒளிப் பாய்ச்சல், அடையாளக்குறி அல்லது மிதவையை பார்வையில் படும்படி வைத்தல்

ஐபிசி பிரிவு 282 - தண்ணீரைக் கடக்க, பாதுகாப்பற்ற அல்லது அளவுக்கு மீறி சுமை கொண்ட நீர்க்கலத்தில், வாடகைக்காக நபரை ஏற்றிச் செல்லுதல்

ஐபிசி பிரிவு 283 - பொதுப் பாதையில் அல்லது நீர்வழிப் பாதையில் ஆபத்து அல்லது தடை

ஐபிசி பிரிவு 284 - நஞ்சுப் பொருளின் பொருட்டு கவனக்குறைவான நடத்தை

ஐபிசி பிரிவு 285 - தீ அல்லது தீப்பற்றக்கூடிய பொருளின் பொருட்டு கவனக்குறைவான செய்கை

ஐபிசி பிரிவு 286 - வெடிபொருளின் பொருட்டு கவனக்குறைவான செய்கை

ஐபிசி பிரிவு 287 - இயந்திரத்தின் பொருட்டு கவனக்குறைவான செய்கை

ஐபிசி பிரிவு 288 - கட்டிடங்களை இடித்தல் அல்லது பழுது பார்த்தலின் பொருட்டு கவனக்குறைவான செய்கை

ஐபிசி பிரிவு 289 - விலங்கின் பொருட்டு கவனக்குறைவான செய்கை

ஐபிசி பிரிவு 290 - குறிப்பிட்டு வகை செய்யப்படாத பிற வழக்குகளில் பொதுத் தொல்லைக்கான தண்டனை

ஐபிசி பிரிவு 291 - தொடரக் கூடாது என்ற உறுத்துக் கட்டளைக்குப் பின்னரும் தொல்லையைத் தொடர்தல்

ஐபிசி பிரிவு 292 - ஆபாச நூல்கள் முதலானவற்றை, விற்பனை செய்தல்

ஐபிசி பிரிவு 293 - ஆபாசமான பொருட்களை இளைஞர்களுக்கு விற்றல்

ஐபிசி பிரிவு 294 - ஆபாசமான செயல் அல்லது பாடல்களை பாடுதல்

ஐபிசி பிரிவு 294A - குலுக்கு சீட்டு பரிசு முறை அலுவலகத்தை வைத்திருத்தல்

அத்தியாயம் 15 பகுதி 295 முதல் 298 மதம் தொடர்பான குற்றங்கள்

அத்தியாயம் 16 பகுதி 299 முதல் 377 மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் பற்றி

1. கொலை, குற்றத்துக்குரிய படுகொலை (பிரிவு 299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்றங்கள் பற்றி

ஐபிசி பிரிவு 299 - மரணம் விளைவிக்கும் குற்றம்

ஐபிசி பிரிவு 300 - கொலைக் குற்றம்

ஐபிசி பிரிவு 301 - ஒருவரை கொலை செய்யாவேண்டிய நோக்கத்தோடு செய்த செயலால் வேறு ஒருவருக்கு மரணம் விளைவித்தல்

ஐபிசி பிரிவு 302 - கொலைக்குற்றத்திற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 303 - ஆயும்தண்டனை கைதி கொலைசெய்வதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 304 - கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவித்த குற்றத்திற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 304A - அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல்

ஐபிசி பிரிவு 304B - வரதட்சனைக் கொடுமை மரணம்

ஐபிசி பிரிவு 305 - குழந்தைகள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை தற்கொலை செய்ய தூண்டுதல்

ஐபிசி பிரிவு 306 - தற்கொலைக்கு தூண்டுதல்

ஐபிசி பிரிவு 307 - கொலை செய்ய முயற்சி செய்தல்

ஐபிசி பிரிவு 308 - கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தைச்செய்ய முயற்சித்தல்

ஐபிசி பிரிவு 309 - தற்கொலை செய்ய முயற்சித்தல்

2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்கள்(பிரிவு 312 முதல் 318)

ஐபிசி பிரிவு 317 - பன்னிரண்டு வயதிற்குட்பட்ட குழந்தையை அதன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் நிராதரவாக விட்டுவிடுதல்.

ஐபிசி பிரிவு 318 - இறந்த குழந்தையின் சடலத்தை இரகசியமாக மறைத்தல்

3. காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)

ஐபிசி பிரிவு 319 - காயப்படுத்துதல்

ஐபிசி பிரிவு 320 - கொடுங்காயம்

ஐபிசி பிரிவு 321 - வேண்டுமென்றே காயப்படுத்துதல்

ஐபிசி பிரிவு 322 - வேண்டுமென்றே கொடுங்காயப்படுத்துதல்

ஐபிசி பிரிவு 323 - தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 324 - பயங்கரமான ஆயுதம் அல்லது வேறு வழிகளால் தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல்

ஐபிசி பிரிவு 325 - தன்னிச்சையாக கொடுங்காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 326 - தன்னிச்சையாக பயங்கரமான ஆயுதத்தால் அல்லது வேறு வழிகளினால் கொடுங்காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 332 - பொதுஊழியரை அவருடைய கடமையைச் செய்யாவிட்டால் தன்னிச்சையாக தடுத்தல் அல்லது காயப்படுத்துவதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 333 - போது ஊழியரை அவருடைய கடமையைச் செய்யவிடாமல் தடுப்பதற்கு தன்னிச்சையாக கொடுங்காயம் ஏற்படுத்துதல்

ஐபிசி பிரிவு 337 - உயிருக்கு (அ) தனி நபருடைய பாதுகாப்பிற்கு ஒரு செயலால் காயம் ஏற்படுத்துதல்

ஐபிசி பிரிவு 338 - உயிருக்கு அல்லது தனி நபருடைய பாதுகாப்பிற்கு ஒரு செயலால் கொடுங்காயம் ஏற்படுத்துதல்

4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை (பிரிவு 339 348 போன்ற)

ஐபிசி பிரிவு 339 - முறையற்ற தடுப்பு

ஐபிசி பிரிவு 340 - முறையற்று சிறையிடுதல்

ஐபிசி பிரிவு 341 - முறையற்ற தடுப்புக்கு தண்டனை

ஐபிசி பிரிவு 342 - எந்த நபரையும் முறையற்று சிறை வைப்பது குற்றமாகும்

5. குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)

ஐபிசி பிரிவு 349 - தாக்குதல்

ஐபிசி பிரிவு 350 - வன்முறைத் தாக்குதல்

ஐபிசி பிரிவு 351 - வன்முறையில் தாக்க முனைதல்

ஐபிசி பிரிவு 353 - வன்முறை செயலால் ஒரு பொதுஊழியரை தன்னுடைய கடமையை செய்யவிடாமல் தடுத்தல்

ஐபிசி பிரிவு 354 - வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல்

6. கடத்தல்,அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல்(பிரிவு 359 முதல் 374)

ஐபிசி பிரிவு 359 - ஆளை கவர்தல்

ஐபிசி பிரிவு 360 - இந்தியாவிலிருந்து கவர்ந்து செல்லுதல்

ஐபிசி பிரிவு 361 - பெற்றோர் பாதுகாப்பாளரிடமிருந்து கடத்திச் செல்லுதல்

ஐபிசி பிரிவு 362 - கடத்திச் செல்லுதல்

ஐபிசி பிரிவு 363 - கவர்ந்து செயல்வதற்க்கான தண்டனை

ஐபிசி பிரிவு 363A - பிச்சையெடுப்பதற்காக இளம் சிறுவர்களை கவர்தல் அல்லது முடம் ஆக்குவதற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 366 - பலாத்காரமாக ஒரு பெண்ணைத் திருமணத்திற்காகக் கவர்தல், கடத்தி செல்லுதல், தூண்டுதல் போன்றவை

ஐபிசி பிரிவு 366A - இளம்பெண்ணை கட்டாயப் புணர்ச்சிக்கு ஆட்படுத்தல்

ஐபிசி பிரிவு 370 - ஆள் கடத்தல்

7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்(பிரிவு 375 முதல் 376)

ஐபிசி பிரிவு 375 - வன்முறைப் புணர்ச்சி

ஐபிசி பிரிவு 376 - வன்முறைப் புணர்ச்சிக்குரிய தண்டனை

ஐபிசி பிரிவு 376B - கணவன் மனைவி தனித்து வாழும் பொது புணர்ச்சி செய்தல்

ஐபிசி பிரிவு 376C - தன் பொறுப்பில் இருக்கும் பெண்ணை பொதுஊழியர் புணர்ச்சி செய்தல்

8. செயற்கை குற்றங்கள் என்ற (பிரிவு 377)

ஐபிசி பிரிவு 377 - இயற்கைக்கு மாறான குற்றங்கள்

அத்தியாயம் 17 பகுதி 378 முதல் 462 சொத்து தொடர்பான குற்றங்கள் பற்றி

1. திருட்டு (பிரிவு 378 முதல் 382)

ஐபிசி பிரிவு 378 - திருட்டு

ஐபிசி பிரிவு 379 - திருட்டுக் குற்றத்திற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 380 - வசிப்பிடங்கள் போன்றவற்றில் திருட்டு

ஐபிசி பிரிவு 381 - உரிமையாளரிடம் எழுத்தர் அல்லது பணியாளர் செய்யும் திருட்டு

ஐபிசி பிரிவு 382 - திருடுவதற்கு முன்னர் அல்லது செய்ய முற்படும் பொது மரணம் - காயம் ஏற்படுத்துதல்

2. பலாத்காரம் (பிரிவு 383 முதல் 389)

ஐபிசி பிரிவு 383 - அச்சுறுத்திப் பொருள் பறித்தல்

ஐபிசி பிரிவு 390 - கொள்ளை

3. திருட்டு மற்றும் கொள்ளை என்ற (பிரிவு 390 முதல் 402)

ஐபிசி பிரிவு 391 - கூட்டுக்கொள்ளை

ஐபிசி பிரிவு 392 - கொள்ளையடித்ததற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 393 - கொள்ளையடிக்க முயற்சி செய்தல்

ஐபிசி பிரிவு 394 - கொள்ளையடிக்கும்போது தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல்

ஐபிசி பிரிவு 395 - கூட்டுக் கொள்ளைக்கான தண்டனை

ஐபிசி பிரிவு 396 - கூட்டுக் கொலையுடன் கொலை செய்தல்

ஐபிசி பிரிவு 399 - கூட்டுக் கொள்ளையிடுவதற்கு ஆயத்தம் செய்தல்

ஐபிசி பிரிவு 402 - கூட்டுக்கொள்ளையடிப்பதற்காகக் கூடுதல்

4. சொத்து குற்றவியல் மோசடி செய்ததற்காக (பிரிவு 403 முதல் 404)

ஐபிசி பிரிவு 403 - சொத்துக்களை கையாடல்

5. குற்றவியல் நம்பிக்கை துரோகம் (பிரிவு 405 409)

ஐபிசி பிரிவு 406 - நம்பிக்கை மோசடி செய்ததற்கான தண்டனை

ஐபிசி பிரிவு 409 - பொதுஊழியர் வாங்கி, வியாபாரி அல்லது தரகர் ஏஜென்ட் நம்பிக்கை மோசடி செய்ததற்கான தண்டனை

6. திருடிய சொத்து பெறுகிறார் (பிரிவு 410 முதல் 414)

ஐபிசி பிரிவு 410 - திருட்டு சொத்து

ஐபிசி பிரிவு 411 - கள்ளப்பொருளை கரவுடன் பெறுதல்

ஐபிசி பிரிவு 412 - கரவுடன் பெற்ற கூட்டுக் கொள்ளைப் பொருள்

7. ஏமாற்றுதல் (பிரிவு 415 முதல் 420)

ஐபிசி பிரிவு 415 - வஞ்சித்தல்

ஐபிசி பிரிவு 416 - ஆள் மாறாட்டம்

ஐபிசி பிரிவு 420 - ஏமாற்றி மற்றும் நேர்மையின்றித் தூண்டிப் பொருளை பெறுதல் அல்லது கொடுக்கும்படி செய்தல்

8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல் (பிரிவு 421 முதல் 424)

9. குறும்புகள் (பிரிவு 425 முதல் 440)

ஐபிசி பிரிவு 425 - சொத்து அழித்தல்

ஐபிசி பிரிவு 429 - மிருகங்களைக் கொல்லுதலும் அல்லது ஊமையாக்குதலும்

ஐபிசி பிரிவு 435 - தீயிட்டு அல்லது வெடிமருந்து பொருட்களால் 100 ரூபாய் மதிப்புள்ள சொத்தை சேதப்படுத்துதல்

10. குற்ற மீறல் பற்றிய (பிரிவு 441 முதல் 462)

ஐபிசி பிரிவு 441 - அத்துமீறல்

ஐபிசி பிரிவு 442 - அத்துமீறி வீடு புகுதல்

ஐபிசி பிரிவு 443 - ஒளிந்து வீடு புகுதல்

ஐபிசி பிரிவு 444 - இரவில் ஒளிந்து வீடு புகுதல்

ஐபிசி பிரிவு 445 - வலிந்து வீடு புகுதல்

ஐபிசி பிரிவு 446 - இரவில் வலிந்து வீடு புகுதல்

ஐபிசி பிரிவு 447 - குற்றமுறு அத்து மீறலுக்கு தண்டனை

ஐபிசி பிரிவு 454 - வலிந்து வீடு புகுந்ததற்கான குற்றத்திற்குத் தண்டனை

அத்தியாயம் 18 பகுதி 463 முதல் 489 ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள் பற்றி

1. சொத்து (பிரிவு 478 முதல் 489)

ஐபிசி பிரிவு 468 - ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணத்தைத் தயாரித்தல்

ஐபிசி பிரிவு 471 - பொய்யாகப் புனையப்பட்ட உண்மையானதாக உபயோகம் செய்தல்

ஐபிசி பிரிவு 489A - ரூபாய்நோட்டுகள், பாங்கு நோட்டுகள் பற்றிய குற்றங்கள்

ஐபிசி பிரிவு 489B - பொய்யாக புனையப்பட்ட அல்லது போலியான ரூபாய் நோட்டு அல்லது வாங்கி நோட்டு உண்மையானதாக உபயோகம் செய்தல்

அத்தியாயம் 19 பகுதி 490 முதல் 492 சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்


அத்தியாயம் 20 பகுதி 493 முதல் 498 திருமணத்திற்கு எதிரான குற்றங்கள்

ஐபிசி பிரிவு 497 - பிறர்மனை உறவு

அத்தியாயம் 20எ பகுதி 498எ கணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தல்

ஐபிசி பிரிவு 498A - கணவரால் அல்லது கணவரின் உறவினரால் பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமைகள்

அத்தியாயம் 21 பகுதி 499 முதல் 502 அவதூறு வழக்குகள்

அத்தியாயம் 22 பகுதி 503 முதல் 510 சட்ட விரோத மிரட்டல், அவமதிப்பு குறித்து

ஐபிசி பிரிவு 503 - மிரட்டல், அவமதித்தல் ஆகிய குற்றங்கள்

ஐபிசி பிரிவு 506 - குற்றங்கருதி மிரட்டுவதற்கான தண்டனை

அத்தியாயம் 23 பகுதி 511 குற்றம் செய்ய முயல்வது

ஐபிசி பிரிவு 511 - குற்றம் செய்ய முயற்சித்தல்

Sunday, 11 January 2015

இந்திய தண்டனைச் சட்டம்



•இ.பி.கோ. 1 முதல்5 வரை அறிமுகம்
•இ.பி.கோ. 6 முதல்52 வரை பொது விளக்க ங்கள்
•இ.பி.கோ. 53 முதல்75 வரை தண்டனைகள்
•இ.பி.கோ. 76 முதல்106 வரை தனியார் பாது காப்புஉரிமைகளின் பொது விதிவிலக்குகள்
•இ.பி.கோ. 107 முதல்120 வரை உடந்தை
•இ.பி.கோ. 120எமுதல் 120பி வரை குற்றவியல்சதி
•இ.பி.கோ. 131 முதல்140 வரை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைதொடர்பான குற்றங்கள்
•இ.பி.கோ. 141 முதல்160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்
•இ.பி.கோ. 161 முதல்171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பானகுற்றங்கள்
•இ.பி.கோ. 172 முதல்190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப்பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்
•இ.பி.கோ. 191 முதல்229 வரை பொது நீதிக்கு எதிரானபொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
•இ.பி.கோ. 230 முதல்263 வரை நாணயம் மற்றும் அரசுஅஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்
•இ.பி.கோ. 264 முதல்267 வரை பொது நீதிக்கு எதிரானபொய்யானஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
•இ.பி.கோ. 268 முதல்294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு,வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும்குற்றங்கள்
•இ.பி.கோ. 295 முதல்298 வரை பொது மதம் தொடர்பானகுற்றங் கள்
•இ.பி.கோ. 299 முதல்377 வரை கொலை குற்றத்துக்குரிய படுகொலை
•(பிரிவு299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை
•கருத்சிதைவுதொடர்பான குற்றங்;கள் (பிரிவு312 முதல் 318)
•காயப்படுத்துதல்(பிரிவு 319 முதல் 338)
•தவறானகட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை(பிரிவு 339 முதல் 348)
•குற்றவியல்தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
•கடத்தல்அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில்வலியுறுத் தல் (பிரிவு 359 முதல்374)
•கற்பழிப்புஉள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு375 முதல் 376)
•இ.பி.கோ. பிரிவு299 முதல் 377 மனித உடல் பாதிக்கும்குற்றங்கள்
•மனித உடல் பாதிக்கும் குற்றங்கள்அதாவது கொலை, குற்றத்துக் குரியபடுகொலை உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு (பிரிவு299 முதல் 311)
•கருச்சிதைவுதொடர்பான குற்றங்களுக்கு (பிரிவு 312 முதல் 318)
•ஒருவரைகாயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
•தவறானகட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை(பிரிவு 339 348 போன்ற)
•குற்றவியல்தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
•கடத்தல்,அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில்செய்ய வலியுறுத்தல் (பிரிவு 359 முதல் 374)
•கற்பழிப்புஉள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு375 முதல் 376)
•செயற்கைகுற்றங்களுக்கு (பிரிவு 377)
•இ.பி.கோ. பிரிவு378 முதல் 462 சொத்து தொடர்பான குற்றங்கள்
•திருட்டு(பிரிவு 378 முதல் 382)
•பலாத்காரம்(பிரிவு 383 முதல் 389)
•திருட்டுமற்றும் கொள்ளை (பிரிவு 390 முதல்402)
•சொத்துகுற்றவியல் மோசடி (பிரிவு 403 முதல்404)
•குற்றவியல்நம்பிக்கை துரோகம் (பிரிவு 405 முதல் 409)
•திருடியசொத்து பெறுவது (பிரிவு 410 முதல் 414)
•ஏமாற்றுதல்(பிரிவு 415 முதல் 420)
•மோசடிசெயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல்(பிரிவு 421 முதல் 424)
•குறும்புகள்(பிரிவு 425 முதல் 440)
•குற்றமீறல் பற்றிய செயல்கள் (பிரிவு441 முதல் 464)
•ஆவணங்கள்மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள்(பிரிவு 463 முதல் 489 வரை)
•சொத்து(பிரிவு 478 முதல் 489)
•நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை(பிரிவு 489எ வேண்டும் 489இ)
•இ.பி.கோ. பிரிவு490 முதல் 492 வரை சேவை ஒப்பந்தங்கள்குறித்த சட்ட மீறல்கள்
•கணவன்அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தப்படுதல்(பிரிவு 498 (a) (குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம்ு)
•மான நஷ்ட வழக்குகள் (பிரிவு499 முதல்502 வரை)
•சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு(பிரிவு 503 முதல் 510 வரை)
•குற்றம்செய்ய முயல்வது. (பிரிவு 511)

சட்ட சீர்திருத்தங்கள்
1, பிரிவு377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமானஉரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன.தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ்நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரியதடையாக இருந்துவந்தது. ஆனால் ஜூலை 2 2009 முதல்டில்லி உயர் நீதி மன்றம்இப்பகுதியில் ஒரு முற்போக்கா னவிளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டுஆண்கள் இடையே பரஸ்ப்பர ஒப்புதலுள்ளபாலியல் உடலுறவு சட்டம் தண்டிக்கபயன்படுத்த முடியாது என்றது.

2. பிரிவு309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனைவழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனைவழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.

3 பிரிவு497ன் கீழ் மற்றொரு நபர்கள்மனைவியுடன் ஒபபுதலுள்ள உடலுறவு வைத்துக் கொள்ளும்ஆண்களை தண்டிக்கிறது.

Power of Attorney எதற்கெல்லாம் உதவும்:


 ஒருவர் தம்முடைய சொத்தை விற்பதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று கிரயப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும். தன்னுடைய நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய அரசாங்கத்தின் பல துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும்.சில சமயம் அரசாங்க அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். அரசாங்கத்தில் அங்கீகாரம் பெற்றபின் ஒவ்வொரு வீட்டு மனையை விற்கும் போதும் நில உரிமையாளர் சார்பதிவாளர் அலுவலகம் செல்லவேண்டும்.
அதையெல்லாம் நிலத்தின் உரிமையாளர் செய்ய முடியாத நிலையில் மேற்கண்ட வேலைகளைச் செய்வதற்கு தனது சார்பாக ஒருவரை நியமனம் செய்யலாம். அவரை நியமனம் செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில்(Sub Registration Office) அதிகார பத்திரம் (Power of Attorney) பதிவு செய்ய வேண்டும். அதில் தம்மால் நியமிக்கப்படுபவருக்கு எதற்கெல்லாம் அதிகாரம்(Power) கொடுக்கப்படுகிறது என விபரங்கள் இருக்கும்.Power of Attorney எதற்கெல்லாம் உதவும்:1. சொத்துகளை தனது பெயரில் வேறொருவர் மூலமாக வாங்கலாம்.2. வெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது தன்னுடைய (visit) இல்லாமல் இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்து கொள்ளலாம்.3.சொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.இந்த ஆவணக்களுக்கு காலவாதி ஆகாது.4. எழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது. Power of Attorney இரண்டு வகைப்படும்:1. பொது அதிகார பத்திரம் (General Power of Attorney)2. தனி அதிகார பத்திரம் (Special Power of Attorney)1. பொது அதிகார பத்திரம் (General Power of Attorney)இதில் Power of Attorney யாக நியமிக்கப்படுபவருக்கு சொத்தை விற்க, நிலமாக இருந்தால் மனைப்பிரிவுகளாக பிரிக்க மற்றும் அரசு அலுவலகங்களில் சொத்துதொடர்பான ஆவணங்களில் கையொப்பம் இட முதலிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.2. தனி அதிகார பத்திரம்(Special Power of Attorney)இதில் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரம் வழங்கப்படும் (எ.கா) சொத்தை விற்க அல்லது மனைப் பிரிவுகளாக பிரிக்க மட்டும் என்பது போன்ற செயல்கள். மேற்கண்ட செயலைத் தவிர வேறு எதையும் அவரால் செய்யமுடியாது.மேற்கண்ட இரண்டிலுமே நீங்கள் வாங்க நினைக்கும் சொத்து எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office)பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்குதான் Power of Attorney பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். அதனால் வில்லங்க சான்றிதழில் (EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் ) இந்த விவரம் (Entry)இருக்காது. இப்படி EC-ல் entry வராத காரணத்தினால் Power of Attorney -யிடம் சொத்து வாங்குபவரால் அது ரத்து செய்யப் பட்டிருக்கிறதா? என்ற விவரத்தை தெரிந்து கொள்ளமுடிவதில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?1.நாம் சொத்து வாங்கும் போது நமக்கு அந்த சொத்தை விற்பனை செய்பவர் Power of Attorney-ஆக இருந்தால் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் Power of Attorneyபதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு நகல் (Copy of Document) விண்ணப்பம் செய்து பெறவேண்டும். அதில் இந்த Power of Attorney ரத்து செய்யப்பட்டிருந்தால் அதனுடைய விவரம் குறிக்கப்பட்டிருக்கும். நகல் பெறுவதற்கு சொத்தின் உரிமையாளர் அல்லது Power of Attorney இருவரில் ஒருவர் தான் விண்ணப்பம் செய்ய முடியும்.2.சொத்தின் உரிமையாளரிடம் நேரிடையாக பேசி Power of Attorney ரத்து செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்வது மிகவும் நல்லது. உரிமையாளரிடம் பேசாமல் எந்த ஒப்பந்தமும் Power of Attorney-யிடம்செய்யக்கூடாது.01.11.2009 -லிருந்து Power of Attorney பதிவு செய்யும் புதிய முறை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி Power of Attorney தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதன் விவரம் முழுவதும் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த சார்பதிவாளருக்கு அனுப்பப்பட வேண்டும். இது பல மோசடிகளை தவிர்க்க உதவும். ஏனென்றால் இதன் விவரம் EC-ல் வந்து விடும்.Power of Attorney எழுத தேவையான ஆவணங்கள்:பவர் எழுதி கொடுப்பவர்பவர் ஏஜன்ட் ( எழுதி வாங்குபவர் )1. புகைப்பட அடையாள அட்டை (Photo Identity proof)1. புகைப்பட அடையாள அட்டை (Photo Identity proof)2. இருப்பிட சான்று (Residence Proof)2. இருப்பிட சான்று (Residence Proof)3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும் 3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும் 4. ரூபாய் 20க்கான முத்திரைதாள் (பத்திரம்) 4. இரு அத்தாட்சி (Two witness)
பதிவு செய்யப்படாத அடமானம் மற்றும் கிரைய ஒப்பந்தம் போன்றவை EC-ல் வராத பட்சத்தில் நாம் எப்படி அதை கண்டுபிடிப்பது ?ஒருவர் சொத்தை அடமானம் செய்யும் போது அது பதிவு செய்யப்படாவிட்டாலும் சொத்தின் Original பத்திரத்தை அடமானம் பெற்றவர் வாங்கி வைத்துக்கொள்வார். அதனால் ஒரு சொத்தை நாம் கிரைய ஒப்பந்தம் செய்யும் போது Xerox copy-யை வைத்து நாம் மற்ற விவரங்களை உறுதி செய்து கொண்டாலும் Originalபத்திரத்தை பார்த்த பிறகு தான் கிரைய ஒப்பந்தமே செய்ய வேண்டும். அது மிக முக்கியம். ஆனால் ஏற்கனவே ஒருவரிடம் சொத்தின் உரிமையாளர் கிரைய ஒப்பந்தம் செய்து இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வது அரிது. ஏனெனில் பொதுவாக கிரைய ஒப்பந்தம் செய்பவரிடம் Original பத்திரத்தை சொத்தின் உரிமையாளர் கொடுக்கத் தேவையில்லை.மேலும் சொத்து சம்பந்தமான பதிவு செய்யப்படாத அடமானம், மற்றும் பதிவுசெய்யப்படாத எந்த நடவடிக்கைகளும் செல்லு படியாகாது என சட்டம் இருந்தால் இது போன்ற மோசடிகள் நடக்காது. சொத்து சம்பந்தமான எல்லா நடவடிக்கைகளுமே பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏனென்றால் பதிவு செய்யப்படும் எல்லா விவரங்களுமே EC-ல் வந்து விடுவதால் சொத்து அடமானத்தில் உள்ளதா அல்லது வேறு ஒருவரிடத்தில் கிரைய ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறதா என நாம்தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 

குடும்பச் சொத்து உடன்படிக்கை பத்திரம்.(பாகப்பிரிவினை)


பாகப்பிரிவினை..!

''தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை. அதாவது, குடும்பச் சொத்து உடன்படிக்கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப்படாதபட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப்பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம்.

தான பத்திரம்..!

சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்துகொள்ளும்போது இந்த முறையைக் கையாளலாம்.
ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முத்திரைத்தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்துகொள்ளலாம்.
ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.  

உயில்..!

இது விருப்ப ஆவணம்; சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.
தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாய மில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.
மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.  

பெண்களுக்கான சொத்துரிமை!

பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திருமணமான பெண்களுக்கான சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

2005-ம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி, பெண்கள் தனது தந்தையின் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியும். மேலும், 25.3.1989-க்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியும். அதேவேளையில், சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பிரிவினை கோர முடியாது. ஒருவேளை அந்த சொத்து விற்கப்படாமல் அல்லது பாகம் பிரிக்கப்படாமல் இருந்தால் உரிமை கோர முடியும்.

வாரிசுச் சான்றிதழ்..!

வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும்.

பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரியவரும்போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.
முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்'' 
பொதுவாக, சொத்து பாகப்பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

           First Information Report (F.I.R)


First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.


“இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களை யும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய் ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உட னடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக் கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.


உடலில் காயம் ஏற்படாத மன உளைச்ச லை உண்டாக்கும் வகையிலான குற்ற ங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குப வை. இக்குற்றங்களில் பாதிக்கப்பட் டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும்.


சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசரகாலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத் திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்க வாட்டில் இரு வெள்ளைக்கோடு இருக்கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்கவேண் டும்.அவருக்கும் மேல் உள்ள அதிகாரிகளான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய் மொழி வாக்கு மூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையப்பத்தையோ கைரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப் பதை உறுதி செய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்யவேண்டும்.பிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதி க்குக் கிடைத்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, விசாரணை நடவ டிக்கையைத் தொடங்கவேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசார ணைக்கு வரும்போது, ‘குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப் பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்’ ஆகியவற்றில் உள்ள முரண்பாடுக ளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள்.


ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும்மீதி ஐந்து நகல்களைத்தான் புகார்தாரர், நீதிமன்றம் என விநியோகிக்க வேண்டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படித்தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.

ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு...


ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பற்றி இங்கே விளக்கமாக கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் 

''பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.
பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு. இந்த சட்டத்தின்படி இருக்கும் பெண்களுக்கான உரிமைகள் இதோ:

1.முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.
<p> </p>
2.ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.

3.ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.

4.கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.

5.அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.

6.பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.

7.பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

8. 2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல்  இருந்தாலோ உரிமை கோரலாம்.

9.ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில்  உள்ளது.

10. இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் மட்டும்தான் இதுவரை சொல்லி இருக்கிறேன். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த  சட்டங்கள் பொருந்தாது. முடிவாக, சொத்தில் பெண்களுக்கென சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை யார் தடுத்தாலும் சட்டம் மூலம் அதை தாராளமாக எதிர்கொள்ளலாம்'' 

நோட்டரி பப்ளிக்(`உண்மை நகல்' என்று இவர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தால் அது சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப் படும்)


நோட்டரி பப்ளிக்

பல்வேறு சந்தர்ப்பங்களில், நம்மிடம் இருக்கும் அசல் டாக்குமென்ட்களின் பிரதிகளை( Xerox ) அரசாங்கம், கோர்ட், இதர நிறுவனங்கள் என்று பலருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அப்போது அசல்(Original) டாக்குமென்ட்களை கொடுப்பது சாத்தியமில்லை.

எனவே, அவற்றின் பிரதிகளை (அந்தக் காலத்தில் டைப் செய்யப்பட்ட நகல்கள்) ஜெராக்ஸ் பிரதிகளாக சமர்ப்பிக்கலாம்.

ஆனால், நாம் கொடுக்கும் பிரதிகள் உண்மை நகல்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? இது உண்மையான நகல் என்று நமக்கு நாமே உறுதி அளித்துக் கொள்ள முடியாது. அங்கீகரிக்கப்பட்ட, பொறுப்பான வேறு ஒருவர்தான் அதைச் செய்ய முடியும். அவர்தான் நோட்டரி பப்ளிக். ஒரு டாக்குமென்ட்டை `உண்மை நகல்' என்று இவர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தால் அது சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப் படும் தகுதியைப் பெற்றுவிடுகிறது.

இன்னும் சில விஷயங்களில் சட்டப்படி, முத்திரைத்தாளில் பிரமாண மாக எழுதி, கையெழுத்திட்டு சமர்ப்பிப் பார்கள். சாட்சிகள் முன்னிலையில் அப்படிக் கையெழுத்திட்டு, சமர்ப்பித் தாலும் கூட, ஒரு நோட்டரி பப்ளிக், என் முன்னிலையில் இன்னார், இன்ன தகவல்கள் இடம் பெறும்படியான பிரமாணத்தில் கையெழுத்திட்டார் என்று சான்றொப்பம் இடவேண்டும்.

அப்போதுதான் அந்தப் பிரமாணத்துக்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது.

வழக்கறிஞர்களாக குறைந்த பட்சம் ஏழு வருடங்கள் பிராக்டீஸ் செய்தவர்கள் மட்டுமே நோட்டரி ஆவதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை மூத்த நோட்டரிகள் இரண்டு பேர் சிபாரிசு செய்து கையெழுத்திட வேண்டும். பிறகு, அதற்குரிய கட்டணம் செலுத்தி மாவட்ட நீதிபதியிடம் சமர்பிக்க வேண்டும். அவர் அந்த விண்ணப் பங்களைப் பரிசீலனை செய்து தகுதி யானவற்றை சிபாரிசு செய்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைப்பார்.

வழக்கறிஞர்கள் நோட்டரி ஆவதற்கு விண்ணப்பித்திருக்கும்போது `இவர்கள் நோட்டரி ஆவதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருக்குமானால், அர சாங்கத்துக்குத் தெரிவிக்கலாம்' என்று கெசட்டில் அறிவிப்பு வெளியாகும். ஆட்சேபணை ஏதுமில்லாமல், மற்ற அம்சங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த வழக்கறிஞர்கள் நோட்டரியாக நியமிக்கப்படுவார்கள்.

இப்படி நியமிக்கப்படுபவர்கள் நோட்டரியாக செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட நகரம், மாவட்டம் அல்லது மாநிலம் என்று வரையறை செய்யப்படும். அவரவர்கள் தமக்கு குறிப்பிடப்பட்ட எல்லைக்குட்பட்ட பகுதிக்கான விஷயங்களில் மட்டுமே நோட்டரியாக செயல்பட முடியும். மாநில அரசிடம் மட்டும் அனுமதி பெற்ற செங்கல்பட்டு

பகுதியைச் சேர்ந்த நோட்டரி ஒருவர், புதுக் கோட்டை டாக்குமெண்டை அட்டஸ்ட் செய்ய முடியாது. ஆனால், ஒரு வழக்கறிஞர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் அலுவலகங்கள் வைத்துச் செயல்பட விரும்பினால் அவர் ஆல் இந்தியா நோட்டரியாக செயல்பட மத்திய, அரசிடம் அனுமதி பெறவேண்டும்.

முன்பெல்லாம் நோட்டரியாக செயல்பட ஒருவருக்கு மூன்றாண்டுகள் அனுமதி அளிக்கப்படும். மூன்றாண்டு களுக்கு ஒருமுறை அந்த அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இப்போது விண்ணப்பிக்கும்போதே ஐந்து வருடங்களுக்கு அனுமதி வழங்கப் படுகிறது. அதன் பிறகு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொண்டால் போது மானது. இதற்கும் கட்ட ணம் உண்டு.

ஒரு வழக்கறிஞர் நோட்டரிக்கான அனுமதி பெற்றதும் நோட்டரிக்குரிய இரண்டு ரப்பர் ஸ்டாம்ப் களைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். ஒன்று நோட்டரியின் பெயர் மற்றும் அவர் செயல்பட அனு மதிக்கப்பட்ட எல்லையைக் குறிப்பிடும் வட்ட வடிவத் திலானது. இன்னொன்று அவரது பெயர் மற்றும் முகவரி கொண்ட செவ்வக வடிவ ரப்பர் ஸ்டாம்ப். நோட்டரி பப்ளிக் என்பவர் ஆவ ணத்தில் கையெழுத்திடும்போது பச்சை மையில்தான் கையெழுத்துப் போட வேண்டும்.

அஃபிடவிட் என்று சொல்லப் படும் பலவிதமான பிரமாணப் பத்திரங்களை நோட்டரி, அட்டஸ்ட் செய்யலாம். ஒருவருடைய உயிலின் பிரதிகளை, சொத்து டாக்குமென்ட்களை `உண்மை நகல்' என்று அட்டஸ்ட் செய்யலாம். ஒருவர் பெயரில் இருக்கும் டெலிஃபோனை அவரது வாரிசுதார ருக்கோ அல்லது அவரது விருப்பத்தின் பேரில் வேறு ஒருவருக்கோ மாற்றும் போது, அந்த ஒப்பந்தத்தை அட்டஸ்ட் செய்யலாம். வங்கிகளுக்கோ, இதர நிறுவனங்களுக்கோ அளிக்கும் இன்டம் னிடி பாண்டுகளை அட்டஸ்ட் செய்யலாம். அமெரிக்கா போன்ற அயல் நாடுகள் செல்லும்போது, நீங்கள் அமெரிக்காவுக்குப் போய் அங்கேயே தங்கிவிட மாட்டீர்கள்; இந்தியாவுக்கு திரும்பி வந்துவிடுவீர்கள்; அதற்கான அவசியம் உங்களுக்கு இருக்கிறது என்று எடுத்துச் சொல்வதுபோல் சில அஃபிடவிட்கள் கொடுக்க வேண்டும். அவற்றுக்கு நோட்டரியின் அட்டஸ் டேஷன் அவசியம்.

ஆண்டுக்கு ஒரு முறை, ஒவ்வொரு நோட்டரியும், தாங்கள் அட்டஸ்ட் செய்த டாகுமென்ட் களின் விவரங்களை, அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒரு விதிமுறையும் இருக்கிறது.

நோட்டரிகள் பயன்படுத்தக் கூடிய `நோட்டரி ஸ்டாம்ப்' என்று ஒன்றுண்டு, பிரமாணப் பத்திரம், பவர் ஆஃப் அட்டர்னி, விற்பனை அக்ரிமென்ட்கள் என்று நோட்டரிகள் எதில் கையெழுத் திட்டாலும், அதில் பத்து ரூபாய் மதிப்புள்ள நோட்டரி ஸ்டாம்ப்களை ஒட்ட வேண்டியது அவசியம். ஆனால், உண்மை நகல் என்று சான்றளிக்கும் டாக்குமென்டில் நோட்டரி ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியமில்லை.


அட்டஸ்ட் செய்கிறபோது சம்பந்தப்பட்டவர் அந்த நோட்டரிக்கு ஏற்கெனவே அறிமுகமானவராக இருக்க வேண்டும். அப்படித் தெரியாத பட்சத்தில், சம்பந்தப் பட்டவருக்கும், நோட்டரிக்கும் அறிமுகமான ஒரு பொதுவான நபர் அவசியம். இருவருக்கும் தெரிந்த அந்த நபர், இன்னாரை எனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டு கையெழெுத்திட வேண்டும்; அதன் பிறகு நோட்டரி, `நான் அறிந்த இன்ன நபரால், அடையாளம் கூறப் பட்ட இவர், என் முன்னிலை யில் அளித்த பிரமாணம்

இது' என்று குறிப்பிட்டு கையெழுத்திடலாம்.

துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள், வந்து சேர வேண்டிய குறிப்பிட்ட தினத்தில் வராமல் தாமத மாக வந்து சேர்ந்தால், அந்தக் கப்பலின் கேப்டன் காலதாமதத்துக்கான காரணங் களைக் குறிப்பிட்டு, ஒரு பிரமாணப் பத் திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அந்நிய நாட்டிலிருந்து வரும் கப்பலின் கேப்டனுக்கு இங்கே இருக்கும் நோட் டரியை எப்படித் தெரிந்திருக்கும்? அப் படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் கப்பலுக் குரிய லோக்கல் ஏஜென்ட் மூலமாக அடையாளம் கண்டு நோட்டரி பிரமாணப் பத்திரத்தை அட்டஸ்ட் செய்வார்.

விளக்கங்கள் விவரம்: பட்டா:சிட்டா: அடங்கல்:


விளக்கங்கள் விவரம்:
பட்டா:

 ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.


சிட்டா:

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


அடங்கல்:

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


கிராம நத்தம்:

 ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.


கிராம தானம்:

 கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.


இனாம்தார்:

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.


விஸ்தீரணம்:

நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.


ஷரத்து:

பிரிவு.


இலாகா:

துறை.


கிரயம்:

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.


வில்லங்க சான்று:

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.


புல எண்:

 நில அளவை எண்.


இறங்குரிமை:

 வாரிசுரிமை.


தாய்பத்திரம்:

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.


ஏற்றது ஆற்றுதல்:

குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.


அனுபவ பாத்தியதை:

நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.


சுவாதீனம் ஒப்படைப்பு:

 நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.


நன்செய்நிலம்:

அதிக பாசன வசதி கொண்டநிலம்.


புன்செய்நிலம்:

 பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.


குத்தகை:

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.


இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....

தமிழ்நாடு வீட்டு வாடகை, குத்தகை, கட்டுபாட்டுச் சட்டங்கள் தொடர்பான விளக்கங்கள்


இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வேலை நிமித்தமாகவோ, படிப்பு நிமித்தமாகவோ, தொழில் நிமித்தமாகவோ, பிற இடங்களுக்குக் குடி பெயரும் குடும்பங்கள் தமிழ் நாட்டில் ஏராளம். எனினும் அவ்வாறு செல்லும் இடங்களில் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். இந்தத் தேவைகளை நன்கு உணர்ந்த வீடுகளுக்குச் சொந்தக்காரரான முதலாளிகள் இதுதான் சம்பாதிக்க சிறந்த வழி என்று கருதி தாங்கள் நினைத்தபடி வீட்டு வாடகைகளை உயர்த்திக் கூறுவதோடு, மின்சாரத் தொகை , குடிநீர் தொகை , வீட்டைத் துடைப்பவருக்கான தொகை , வீட்டுக் காவலர் தொகை,  இப்படி இன்னும் புதிது புதிதான தொகைகளைக் கண்டுபிடித்து வாடகைக்கு வரும் குடும்பத்தினரிடம் வசூலித்து சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் வாடகைக்கு  வீடு  பிடிப்பதென்பது குதிரைக்கொம்பான செயலாகும். சென்னையில் வாடகை வீடுகளின் வாடகைப் பணத்தை உயர்த்திய பெருமை தொழில் நுட்பத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்களையே சாரும். இது ஒரு புறம் இருக்க வீடுகளை வாடகைக்குப் பிடித்துத் தரும் தரகர்களின் கொடுமை அதற்கு மேல். ஒரு வீடு வாடகைக்கு இவர்கள் எடுத்துக் கொடுத்தால், நம் அந்த வீட்டுக்குக் கொடுக்கும் ஒருமாத வாடகையை இவருக்கு கொடுக்க வேண்டும் என்பது தரகர்களின் எழுதப்படாத சட்டம்.  ஆதலால் இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டிய காரணத்தால், தற்போது வீட்டுக்குச் சொந்தக்காரரும், வாடகைக்கு வரும் குடும்பத்தினரும் வீட்டு வாடகைச் சட்டத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதின் காரணத்தினாலேயே இக்கட்டுரை எழுதுகிறேன். 

வீட்டு வாடகைச் சட்டத்தில் உள்ள பிரிவுகள்:
               
• குடித்தனக்காரர்களின் உரிமைகள்
• வீட்டுக்காரர்களின் கடமைகள்
• குடித்தனக்காரர்களின் பொறுப்புகள்
• நியாய வாடகை
• வீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள்
• காரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்கும் முறைகள்
• வாடகையைக் கொடுக்கும் மற்றும் பெறும் முறை
• வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய  உதவும் சட்டவிதிகள்
• வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள்.
மேற்குறிப்பிட்ட கூறுகளை விளக்கி இதன்மூலம் வீட்டு உரிமையாளர் மற்றும் குடித்தனக்காரர்களின் உறவை மேம்படுத்துவோம். குறிப்பாக “வீட்டு உரிமையாளர்”, “குடித்தனக்காரர்”, ”குடியிருப்பு பகுதி”, ”கட்டிடப்பகுதி” இதுபோன்ற சொற்களுக்கு சட்டவிளக்கத்தை உள்ளடக்கி புரிந்துகொள்ள வேண்டும்.

வீட்டு உரிமையாளர் மற்றும் குடித்தனக்காரருக்கு இடையிலான வாடகை ஒப்பந்தம்:

 வீட்டை வாடகை அல்லது குத்தகைக்கு விடும் வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரருடன் முறையான வாடகை ஒப்பந்தத்தை ஆவணமாக செய்துகொள்வது முறையானதாக இருக்கும். இருவருக்கும் இடையிலான ஒப்பந்தவிதிகளை எழுதிகொள்வதின் மூலம் இருவரும் வரையரைக்குட்பட்டு கட்டுப்பட்டு இருக்க அது உதவும்.

குடித்தனக்காரர்களின் உரிமைகள்: 

குடித்தனக்காரர் வாடகை ஒப்பந்தத்தில் என்ன வாடகை குறிப்பிடப்பட்டுள்ளதோ அதைக் கொடுத்தாலே போதுமானது. மேலும் வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கூறுவாறேயானால் அவர் அதை மூன்று மாதத்திற்க்கு முன்னரே தக்கக் காரணத்தோடு தெரியப்படுத்தவேண்டும். ஒப்பந்த காலகட்டத்திற்க்குள் ஒப்பந்தம் செய்துகொண்ட வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால் ஒப்பந்த காலம் வரை குடியிருக்க இறந்தவர்களின் வாரிசுகளுக்கு உரிமையிருக்கிறது. அதேபோல் வணிகக் கட்டிடமாக இருப்பின் தொழில் செய்பவர் வாடகைதாரராக இருந்தால் அவர் இறந்த பின் அவருடைய பங்குதாரர் இருப்பின் அவர் குடியிருக்க உரிமை உள்ளது. தக்கக்காரணமின்றி குடித்தனக்காரர் அனுபவித்துவரும் அடிப்படை வசதிகள் எதனையும் தடுத்து நிறுத்தவோ அல்லது நீக்கவோ உரிமையாளர் செய்யக்கூடாது.

வீட்டுக்காரர்களின் கடமைகள்: 

வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரரிடம் வாங்கும் மாதவாடகைக்கு பற்றுச்சீட்டு கொடுக்கவேண்டும். மேலும் வீட்டு வரிச் சுமைகளை குடித்தனக்காரர்களின் மீது செலுத்தக்கூடாது.
வாடகை ஒப்பந்தத்தின் காலம் வரை அதற்கான வாடகை மாற்றப்படக்கூடாது காலி செய்ய கூறும் போது தக்க மூன்று மாத முன்னறிவிப்பு கொடுத்தல் வேண்டும்.
வாடகைக் கட்டுப்பாட்டு சட்டக் கூறுகளைத்தாண்டி வேறுவிதமாக வெளியேற்றக்கூடாது.

குடித்தனக்காரர்களின் பொறுப்புகள்:

குடித்தனக்காரர் எந்தவித தேவைக்காக குடித்தனம் வந்தாரோ  அந்தத்தேவைக்காக மட்டுமே அந்தக் குடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தவேண்டும்.
குடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தாமல் தொடர்ந்து பூட்டிவைக்கக் கூடாது. மேலும் வேறு யாருக்கும் உள்வாடகைக்கு விடக்கூடாது. காலிசெய்வதற்கு முன் முறையான முன் அறிவிப்பு அறிவிக்கவேண்டும்.

நியாய வாடகை:

1).இதன் கீழ் வரும் கிளைப் பிரிவுகளுக்கு உட்பட்டு ஒரு கட்டிடத்தின் குடித்தனக்காரர் அல்லது வீட்டுக்காரர் அதற்கென மனுச் செய்து கொண்டால், தாம் தக்கதெனக்கருதும் ஒரு பரிசீலனையை  நடத்திய பிறகு அத்தகைய கட்டிடத்துக்கு உரிய நியாய வாடகையினைக் கட்டுப்பாட்டாளர் நிர்ணயிக்கலாம்.
2).குடியிருப்பதற்காகவுள்ள ஒரு கட்டிடத்தின் அடக்க விலையில் ஒன்பது சதவீதந்தான் அதனுடைய நியாய வாடகையாக இருக்க வேண்டும்.
3).குடியிருப்பில்லாத ஒரு கட்டிடத்திற்குரிய நியாய வாடகை, அந்தக் கட்டிடத்தின் அடக்க விலையில் பன்னிரண்டு சதவீதமாக இருக்க வேண்டும்.

குறிப்பு:

ஒவ்வொரு கட்டிடத்துக்கும் அதனதன் தரத்துக்கும், பரப்பளவுக்கும், விலைமதிப்புக்கும், அதில் செய்து தரப்பட்டுள்ள வசதிகளுக்கும் ஏற்ப, அதற்குரிய நியாய வாடகையைக் கேட்கும் உரிமை குடித்தனக்காரருக்கு மட்டுமின்றி வீட்டுக்காரருக்கும் இருக்கிறது.

வீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள்:

   குடித்தனக்காரர் அந்தக் கட்டிடத்துக்குரிய வாடகையை, வீட்டுக்காரருடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய நாளுக்குப் பதினைந்து நாட்கள் சென்ற பிறகும் அல்லது அத்தகைய ஒப்பந்தம் ஏதும் செய்து கொண்டிராதபோது, ஒரு மாதத்தின் வாடகையை அடுத்த மாதக் கடைசி வரையில் கொடுக்கவில்லை அல்லது கொடுக்க முன் வரவில்லையென்றால் அல்லது,
1). அந்தக் குடித்தனக்காரர் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதிக்குப் பிறகு வீட்டுக்காரரின் எழுத்து மூலமான அனுமதியின்றி,
அ).தமக்குள்ள குத்தகை உரிமையைப் பிறருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார் அல்லது அத்தகைய உரிமை தமக்கு வழங்கப்படாதிருக்கும்போது அந்தக் கட்டிடம் முழுவதையும் அல்லது அதில் ஒரு பகுதியை மற்றொருவருக்கு உள் வாடகைக்கு விட்டிருக்கிறார். அல்லது,
ஆ).அவ்வீடு  எத்தகைய உபயோகத்துக்காக வாடகைக்கு விடப்பட்டதோ, அதற்கு மாறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அல்லது,
2). அத்தகைய கட்டிடத்தின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதனைப் பாழ்படுத்தியிருக்கிறார் அல்லது பாழ்படுத்தப்படும்படி விட்டிருக்கிறார். அல்லது
3). ஒழுக்கக்கேடான அல்லது சட்டவிரோதமான காரியங்களுக்காக அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்துக்காக அமலில் உள்ள எந்தச் சட்டப்படியாவது அந்தக் குடித்தனக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். அல்லது,
4).அக்கம்பக்கத்திலுள்ள கட்டிடங்களில் இருப்பவர்களுக்கும் அல்லது அந்தக் கட்டிடத்தின் வேறு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும் தொல்லை தரக்கூடிய செயல்கள் அல்லது நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட குற்றத்துக்கும் பொறுப்பாகிறார். அல்லது,
5).ஒரு மலை வாசஸ்தலம் அல்லாத இடத்தில் அந்தக்கட்டிடம் இருந்தால், அதில் தக்கக் காரணமின்றி, நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்ந்தாற்போல் குடியிருக்கவில்லை.
6).வீட்டுக்காரருக்கு அந்தவீட்டில் உள்ள உரிமையை மறுத்தும் தமக்கு அந்தவீட்டில் நிரந்தரமாகக் குடியிருப்பதற்கு உரிமை உண்டென்று கோரும் குடித்தனக்காரரின் மறுப்பும் கோரிக்கையும் நியாயமற்றவை.
என்பதைப் பற்றிக் கட்டுப்பாட்டாளருக்குத் தெளிவு ஏற்பட்டால், அந்தக் குடியிருப்பை (கட்டிடத்தை) வீட்டுக்காரரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று உத்தரவிடலாம், அப்படி இல்லையெனில் அந்த விண்ணப்பத்தைத் தள்ளிவிடலாம்.

காரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்கும் முறைகள்:

      மேற்கூறிய காரணங்கள் இல்லாமல் குடித்தனக்காரரைக் காலிசெய்ய வைக்க முடியாது. காரணமின்றி வீட்டு உரிமையாளர் காலி செய்யுமாறு மிரட்டினாலோ அல்லது தொல்லை கொடுத்தாலோ வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் நிரந்தர உறுத்துக்கட்டளை வழக்கை(SUIT FOR PERMANENT INJUNCTION) தாக்கல் செய்து வாடகை நீதிமன்ற ஆணையின்றி தன்னைக் காலிசெய்யவைக்க முடியாது என்று வழக்காடலாம்.

வாடகையை கொடுக்கும் மற்றும் பெறும் முறை :

  வீட்டுக்காரர் வாடகைக்குரிய ரசீதை பணம் பெறும்போது அளிக்கவேண்டும். வீட்டுக்காரர் வாடகையை காரணமின்றி பெற மறுத்தால் வாடகைதாரர் 10 நாட்கள் நேரம் கொடுத்து வங்கி கணக்கு எண் மற்றும் பெயர் கேட்டு ஒரு அறிவிப்பை அறிவிக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் வங்கியின் எண்ணை கொடுத்தால் ஒவ்வொரு மாத வாடகையையும் அந்த வங்கியில் செலுத்தவேண்டும். வங்கி எண்ணை வீட்டுக்காரர் தரமறுத்தால் மாத வாடகையை பணவிடைத்தாள் (MONEY ORDER) மூலம் செலவை கழித்துக்கொண்டு அனுப்ப வேண்டும். அனுப்பப்பட்ட தொகையை வீட்டுக்காரர் பெற மறுத்துவிட்டால் ஒவ்வொரு மாத வாடகையையும் வாடகைதாரர் வாடகை நீதிமன்றத்தில் செலுத்தி வரவேண்டும்.
வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள் மற்றும் வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகளை வழக்குரைஞர்களை அணுகித் தெரிந்துக்கொண்டு அவர்களுடைய உதவியுடன் வழக்கை தாக்கல் செய்து நீதியை பெற்றுக்கொள்ளலாம்.

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...