Friday 12 June 2015

செக் மோசடி வழக்கு


செக் மோசடி வழக்கு

செக் மோசடி வழக்கு - சட்ட திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்....
இதுநாள் வரையிலும் செக் மோசடிவழக்கை செக் கொடுத்தவர் வசிக்கும் இடத்தில் சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கை பதிவு செய்ய வேண்டி இருந்தது.
அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் சிரமத்துக்குள்ளானார்கள்.
உதாரணத்திற்கு திருநெல்வேலியிலிருக்கும் ஒருவர் சென்னையிலிருக்கும் ஒருவருக்கு அளித்த காசோலை, சென்னையிலுள்ள வங்கியில் செலுத்திய பின்னர் , அந்த காசோலையை அளித்தவர் வங்கிக்கணக்கில் தேவையான பணம் இல்லாத போது சென்னை நபர் ஏற்கெனவே நொடிந்து போகிறார்.
இதுமட்டுமல்லாது அந்த காசோலை தந்து ஏமாற்றிய திருநெல்வேலி நபரின் மீது செக் மோசடி வழக்கு தொடுக்க இந்த பாதிக்கப்பட்ட சென்னை நபர் திருநெல்வேலி செல்லவேண்டும்.
எத்தனை முறை செல்ல வேண்டும்?
வீண் அலைச்சல்.இனி பாதிக்கப்பட்ட நபர் தன் பகுதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
சட்ட திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்....
ஒருவர் வழங்கும் காசோலை, அவருடைய வங்கிக் கணக்கில் போதுமான அளவு பணம் இல்லாமல் திரும்பி வந்தால், அது காசோலை மோசடி என்று கருதி வங்கிகள் அவரை உடனே நீதிமன்றங்களில் நிறுத்திவிடுவார்கள். இதுபோன்று காசோலை குற்றங்களுக்கு, காசோலை வழங்கியவரை உடனே நீதிமன்றத்தில் நிறுத்திவிடாமல் இருப்பதற்காக நெகோஷியபுள் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (என்ஐ) என்ற புதிய சட்டத்தை அமல்படுத்த இருக்கிறது மத்திய அரசு. அதன்படி காசோலை மோசடி சம்பந்தமான குற்றங்களை இனி மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் லோக் அடலட்ஸ்(LOK ADALATS) என்ற மக்கள் மன்றங்கள் விசாரிக்கும் என்று தெரிகிறது. தற்போது நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளில் 30 சதவீத வழக்குகள், காசோலை மோசடி மற்றும் போக்குவரத்து சலான்கள் சம்பந்தமானவையாகும். இப்போது வர இருக்கும் புதிய சட்டம் இன்டர்-மினிஸ்டீரியல் குரூப் (ஐஎம்ஜி) என்ற அமைப்பால் சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக, தேவையான சட்டத் திருத்தங்களை பரிந்துரைக்க இந்த அமைப்பு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. காசோலை மோசடி மற்றும் போக்குவரத்து சலான்கள் சம்பந்தமான குற்றங்கள் நீதிமன்றங்களில் வந்திருக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காகவும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவும், இந்திய சட்டத்துறை, நிதித்துறை மற்றும் போக்குவரத்துதுறை ஆகியவற்றோடு மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. இந்த புதிய சட்டத்தின்படி காசோலை மோசடி அல்லது போக்குவரத்து சலான்கள் சம்பந்தமான குற்றங்களை செய்யும் போது உடனே அவர்களை நீதிமன்றங்களில் நிறுத்த முடியாது. ஆனால் குற்றம் நிருபிக்கப்பட்டால் அவரை நீதிமன்றங்களில் நிறுத்தலாம். என்ஐ சட்டத்தில் வந்திருக்கும் திருத்தத்தின்படி, காசோலை மோசடி அல்லது போக்குவரத்து சலான் சம்பந்தமான குற்றங்களுக்கு உடனே நீதிமன்றம் போவதை விட்டுவிட்டு, அதற்கு மாற்றாக ரிசெலூசன் மெக்கானிசம் மூலமாக பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஐஎம்ஜியின் பரிந்துரையின்படி, சிவில் ப்ரொசீஜர் பிரிவு 89ன் கீழ், காசோலை மோசடி மற்றும் போக்குவரத்து சலான்கள் சம்மந்தமான குற்றங்கள் லோக் அடலட்ஸ் என்று அழைக்கப்படும் மக்கள் மன்றங்களால் கையாளப்பட்டு அவை விரைந்து முடித்து வைக்கப்படும். காசோலை மோசடி சம்பந்தமான வழக்குகளுக்கு நீதிமன்றங்களுக்கு ஆகும் செலவு மக்கள் மன்றங்களுக்குத் தேவைப்படாது.

கந்து வட்டித் தொழில்


கந்து வட்டித் தொழில்

கந்து வட்டித்
தொழிலை குண்டர்
தடுப்புச் சட்டத்தின் கீழ்
கொண்டு வருவதற்கான
வழிமுறைகளை மேற்கொள்ள
வேண்டும் என தமிழக
அரசுக்கு சென்னை உயர்
நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
கந்து வட்டி பிரச்னையால்
மக்கள்படும் சிரமம்
குறித்து தமிழ் நாளிதழ்
ஒன்றில் வெளியான
செய்தியை அடிப்படையாகக்
கொண்டு சென்னை உயர்
நீதிமன்றம் தானாக
முன்வந்து வழக்குப்
பதிவு செய்யக்
கோரி நீதிபதி
என்.கிருபாகரன் கடந்த
ஆண்டு,
தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம்
அனுப்பினார்.
அந்தக் கடிதம் ஏற்றுக்
கொள்ளப்பட்டு தானாக
முன்வந்து உயர்
நீதிமன்றம் வழக்குப்
பதிவு செய்தது.
அதில்,
கந்து வட்டி தொடர்பாக
இதுவரை எத்தனை வழக்குகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன?
அவற்றைத்
தடுப்பதற்கு அரசு எடுத்த
நடவடிக்கைகள் என்ன?
கந்து வட்டித் தடுப்புச்
சட்டம் 2003-ஐ கண்டிப்பாக
நடைமுறைப்படுத்த
வேண்டும் என
கோரப்பட்டது.
இந்த
மனுவை விசாரணைக்கு எடுத்துக்
கொண்ட அப்போதைய
தலைமை நீதிபதி அமர்வு,
வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக
மூத்த வழக்குரைஞர்
ஆர்.முத்துக்குமரசாமியை நியமித்தது.
இந்த நிலையில் இந்த
வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல்,
எம்.சத்தியநாராயணன்
ஆகியோர் அடங்கிய
முதன்மை அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரனை
அப்போது, மூத்த
வழக்குரைஞர்
ஆர்.முத்துக்குமாரசாமி ஒரு அறிக்கை தாக்கல்
செய்தார்.
அதில்,
கந்து வட்டி தொடர்பான
புகார்கள்
மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா,
இல்லையா என்பதை கண்காணிக்க
மாவட்டம்,
தாலுகா அளவில்
கண்காணிப்பூக்குழு அமைக்க
வேண்டும்.
மேலும்,
கந்து வட்டி சட்டம்
குறித்த
விழிப்புணர்வைபொதுமக்களிடம்
ஏற்படுத்த வேண்டும்
என்ற
இரண்டு ஆலோசனைகளைப்
பரிந்துரை செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள்
பிறப்பித்த உத்தரவு:
கந்து வட்டி பிரச்னை தொடர்பாக
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக
அரசுத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் நியமித்த
உதவியாளரும்
இரண்டு பரிந்துரைகள்
நீதிமன்றத்துக்கு அளித்துள்ளார்.
அதன்படி,
கந்து வட்டியால்
பாதிக்கப்படும்
பொது மக்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக
அனைத்து ஊடகங்களிலும்
விளம்பரங்கள் செய்ய
வேண்டும்.
திரையரங்கங்களிலும்
இந்தச் சட்டம்
குறித்து காட்சிகளை ஒளிபரப்ப
வேண்டும்.
தவிர,
கந்து வட்டி புகார்கள்
மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கண்காணிக்க
மாவட்ட,
தாலுகா அளவில்
குழு அமைக்க
வேண்டும். இதற்காக
தன்னார்வத்
தொண்டு நிறுவனங்களைப்
பயன்படுத்திக்
கொள்ளலாம்.
போலீஸாருக்கும் கந்து வட்டி கொடுப்பவர்களுக்கும்
இடையே உள்ள
உறவுகளை முறியடிக்க
வேண்டும்.
இது தொடர்பான
வழக்கு விசாரணைகளை போலீஸ்
ஆணையர், எஸ்.பி.
ஆகியோர் கண்காணிக்க
வேண்டும்.
இது குறித்து தொடர்ந்து நீதிமன்றத்தில்
அறிக்கை தாக்கல் செய்ய
வேண்டும். மேலும்,
கந்து வட்டித்
தொழிலை குண்டர்
தடுப்புச் சட்டத்தின் கீழ்
கொண்டு வருவதற்கான
வழிமுறைகளைத் தமிழக
அரசு மேற்கொள்ள
வேண்டும்.
இந்த
உத்தரவை பின்பற்றியதற்கான
அறிக்கையை நவம்பர் 15-
ஆம் தேதி தமிழக
அரசு நீதிமன்றத்தில்
தாக்கல் செய்ய வேண்டும்
என உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்'s photo.

பீடி, சிகரெட்டுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு


 பீடி, சிகரெட்டுக்கு தடை விதிக்க
கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு


பீடி,
சிகரெட்டுக்கு தடை விதிக்க
கோரி சுப்ரீம்
கோர்ட்டில் பொது நல
மனு: மத்திய–மாநில
அரசுகள் பதில் அளிக்க
உத்தரவு
பீடி,
சிகரெட்டுக்கு தடை விதிக்க
வேண்டும் என்று சுப்ரீம்
கோர்ட்டில் பொதுநல
மனு தாக்கல்
செய்யப்பட்டது.
நாடு முழுவதும்
தற்போது பொது இடங்களில்
பீடி, சிகரெட் பிடிக்க
தடை அமலில் உள்ளது.
மேலும் 18
வயதுக்குட்பட்டவர்களுக்கு பீடி,
சிகரெட் மற்றும்
புகையிலை பொருட்கள்
விற்கவும்
தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்
நாடு முழுவதும் பீடி,
சிகரெட்டுக்கு அடியோடு தடை விதிக்க
வேண்டும் என்று சுப்ரீம்
கோர்ட்டில் பொது நல
மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு சுப்ரீம்‬
கோர்ட்டில்
விசாரணைக்கு வந்தது.
அப்போது சிகரெட்,
பீடிக்கு தடை விதிப்பது பற்றி மத்திய,
மாநில அரசுகள் பதில்
அளிக்குமாறு நோட்டீஸ்
அனுப்ப நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
6 ஆண்டுகளுக்கு முன்
பொது இடங்களில்
சிகரெட், பீடி புகைக்க
தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இதை யாரும்
சரியாக
கடைப்பிடிக்கவில்லை.
பொது இடத்தில் எளிதாக
பீடி, சிகரெட்
பிடித்துச்சென்று விடுகிறார்கள்.
எனவே பீடி,
சிகரெட்டை அடியோடு தடை செய்ய
வேண்டும்
என்று மனுவில்
குறிப்பிடப்பட்டு உள்ளது.

சட்டம்'s photo.

யார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய முடியும்?


யார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய முடியும்?

யார் முதல் தகவல்
அறிக்கை தாக்கல் செய்ய
முடியும்?
குற்றவியல்
நடைமுறை சட்டம்
பிரிவு 154(1) இன் படி,
ஒரு நிலைய பொறுப்பில்
இருக்கும் constable ரேங்க்ஐ
விட கூட உள்ள ஒருவர்
ஒரு வழக்கினை பதிய
முடியும். ஒரு grade 2
constable ஒரு குற்ற
வழக்கை (cognizable offence)
பதிய முடியாது. .
ஒரு அவுட் போஸ்ட்
காவல் நிலையத்தில் உள்ள
தலைமை constable
குற்றவியல்
நடைமுறை சட்டம்
பிரிவு 174 இன் படி,
ஒரு குற்ற
வழக்கை பதிந்து,
அதை விசாரிக்க TN PSO 585
படியும், பிரிவு 21(40)
படி உள்ள
சென்னை கிரிமினல்
ரூல்ஸ் of Practice படியும்,
அதிகாரம் பெற்றவராவார்.
குற்றவியல்
நடைமுறை சட்டம்
பிரிவு 36 இன் படி, எந்த
ஒரு உயர் அதிகாரியும்
வழக்கு பதிந்து,
அதை விசாரிக்க
முடியும். உத்தேசமான
தமிழ்நாடு காவலர் சட்டம்
பிரிவு 35 படி, ஒரு சீனியர்
காவல் அதிகாரி,
தனது உதவி அதிகாரியின்
கடமைகளையும் செய்ய
முடியும்
என்று தெரிவிக்கிறது.
ஒரு காவல் நிலையத்தில்
வழக்கை பதிவு செய்ய,
அந்த காவல் நிலையத்தில்
பணியாற்ற வேண்டும்.
வேறு காவல்
நிலையங்களில்
பணி புரியும் காவல்
அதிகாரிகள், தங்கள் காவல்
நிலையம் தவிர,
வேறு எங்கும்
வழக்கு பதிய அதிகாரம்
பெற்றவர்கள் அல்லர்.
உதாரணமாக,
சிறப்பு பிரிவு CID,
intelligence துறை, தமிழக
மின்சார துறையில் உள்ள
Vigilance துறை, ஆவின்,
முனிசிபல் corporation,
போக்குவரத்து corporation,
காவலர் பயிற்சி கல்லூரி,
Armed Reserve Wings,
கம்ப்யூட்டர் Wing, கிரைம்
ரெகார்டு பீரோ ஆகியவற்றில்
பணி புரியும் காவலர்,
வழக்கு ஏதும் தாக்கல்
செய்ய முடியாது.
ஏனென்றால், அவர்கள்
துறை, காவல்
நிலையங்கள்
என்று வரையறுக்கப்படவி
ல்லை. கிரைம் பிரான்ச் CID,
கமர்ஷியல் கிரைம்ஸ்
விசாரணை பிரிவு,
பொருளாதார குற்றங்கள்
பிரிவு மற்றும்
விஜிலன்ஸ் மற்றும் லஞ்ச
ஒழிப்பு தடுப்பு பிரிவு ஆகியவை காவல்
நிலையம்
என்று வரையருக்கபட்டுள
்ளதால்,
அங்கு பணி புரியும்
காவல் அதிகாரிகள்,
வழக்கு பதிவு செய்யவும்,
புலன்
விசாரணை நடத்தவும்
அதிகாரம் பெற்றவர்கள்
ஆவர்.
சட்டம்'s photo.

இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள்


இந்திய  அரசியலமைப்பின் சிறப்புகள்

இந்திய
அரசியலமைப்பின்
சிறப்புகள்
மக்களின் இறைமை என்ற
கோட்பாட்டின்
அடிப்படையில், இந்திய
அரசியலமைப்பு
உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பின்
முகப்பில் இவ்வாறு
அளிக்கப்பட்டுள்ளது:
இந்திய மக்களாகிய
நாங்கள்
இந்தியாவை மனம்
விரும்பி ஒரு முழு
இறைமை பெற்ற, சமதர்ம,
மதசார்பற்ற, மக்களாட்சிக்
குடியரசாக
அமைப்பது என்று
உறுதி கொண்டு அதன்
குடிமக்கள் யாவருக்கும்
“சமூக, பொருளாதார,
அரசியல் துறைகளில்
நீதியையும்;
“எண்ணம், பேச்சு,
கருத்து, நம்பிக்கை,
வழிபாடு தொடர்பான
உரிமைகளையும்,
வாய்ப்புகள்,
அந்தஸ்து ஆகியவற்றில்
சமத்துவத்தையும்;
நாட்டின்
ஒற்றுமைக்கு கேடு
விளையாமல், தனிமனித
உரிமையைப்
பாதுகாத்து
உறுதிப்படுத்தி
சகோதரத்துவத்தை
வளர்க்கவும்;
“1949-ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் 26ஆம் நாள்,
இவ்வரசியல்
அமைப்பை உருவாக்கி,
நிறைவேற்றி
எங்களுக்கு நாங்களே
வழங்கிக்
கொண்டிருக்கிறோம்.”

சட்டம்'s photo.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 320ஆவது பிரிவு (I.P.C 320)



இந்திய தண்டனைச்  சட்டத்தின் 320ஆவது பிரிவு (I.P.C 320)


கடுங்காயத்தை அல்லது
கொடுங்காயத்தை (grievous hurt)
வரையறுக்கிறது.
வரையறை
கீழ்க்கண்ட எட்டுள்
ஏதேனும்
ஒன்றோ அல்லது பலவோ
இருப்பின்
அது கொடுங்காயமாகும்.
1.ஆண்மையிழக்கச்‬
செய்தல் (Emasculation)
2.ஏதேனும் ஒரு
கண்ணின்‬
பார்வையை நிரந்தரமாக
இழக்கச் செய்தல்
3.ஏதேனும் ஒரு
செவியின்‬ கேட்கும்
தன்மையை நிரந்தரமாக
இழக்கச் செய்தல்
4.ஏதேனும் ஓர் உடல்
உறுப்பையோ அல்லது
மூட்டு‬
இணைப்பையோ இழக்கச்
செய்தல்
5.ஏதேனும் ஓர் உடல்
உறுப்பையோ அல்லது மூட்டு இணைப்பையோ
சிதைத்தல்
அல்லது வலுவிழக்கச்
செய்தல்
6.தலை‬முகம்‬
ஆகியவற்றை உருக்குலைத்தல்
7.‪‎பல்‬எலும்பு‬
ஆகியவற்றில்
முறிவு ஏற்படும்
படியோ அல்லது அவை
விலகிப்போகும்படியோ
செய்தல்
8.உயிருக்கே ஆபத்து ,
‪‎இருபது‬ நாட்களுக்கும்
மேலாக வலி
அல்லது அன்றாடக்
கடமைகளைச் செய்ய
முடியாமல் முடக்குதல்
இவை ஏதேனும்
ஒன்றை ஏற்படுத்தும்
வகையில்
காயமுண்டாக்குதல் கொடுங்காயம் எனப்படுவார்
இந்திய தண்டனைச்
சட்டத்தின்
325ஆவது பிரிவு (I.P.C
325) வேண்டும் என்றே கொடுங்காயம் விளைவித்தல் அதற்கு தண்டனை : 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் போடலாம்
இது பிணையில் விடக்கூடிய குற்றம் தான்

சட்டம்'s photo.

சட்டம்


சட்டம்

தன்னைத்
தானே காப்பாற்றிக்
கொள்ள இயலாமலும்,
தன்னைப் பராமரிக்க
வேண்டியவரும் கைவிட்ட
நிலையில் இருக்கும்
ஒரு இந்தியக்
குடிமகனுக்கு நம்
நாட்டுச் சட்டம் என்ன வழி சொல்கிறது?
அது கொடுக்கும்
பாதுகாப்புதான் என்ன?
‪#‎இந்திய_குற்றவியல்_சட்டத்தின்‬ (Criminal
Procedure Code)
பிரிவு 125ன் கீழ்...
=> தன்னைப்
பாதுகாத்துக் கொள்ள
இயலாத மனைவி.
=> தன்னைப்
பாதுகாத்துக் கொள்ள
இயலாத சட்டம்
அங்கீகரிக்கும் மற்றும்
சட்டம் அங்கீகரிக்காத
மைனர் குழந்தைகள்.
ஒருவேளை இவர்களுக்கு
திருமணம்
நடைபெற்றிருந்தாலும்
இந்தச் சட்டம் பொருந்தும்.
=> வயது வந்த
சட்டப்பூர்வமான அல்லது சட்டம் அங்கீகரிக்காத ஒருவரின்
மகன், மகள் உடலளவிலோ,மனத்தளவிலோ பாதிக்கப்பட்டிருக்கும்
பட்சத்தில்.
=> ஒரு நபரின் தன்னைத்
தானே பராமரித்துக்
கொள்ள இயலாத தாய்,
தந்தையர்.
மேற்கூறிய இவர்கள்
அனைவரும் தன்னுடைய
கணவர், தகப்பன் மற்றும்
பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம்
கோர இந்தப்
பிரிவு வழிவகை செய்கிறது.
இந்தச் சட்டப் பிரிவில்
மனைவி என்ற சொல்
சட்டப்பூர்வமான
மனைவியை மட்டுமே குறிக்கும்.
மேலும், கணவரால்
விவாகரத்து செய்யப்பட்ட
பெண் மறுமணம்
செய்யாத பட்சத்திலும்,
எந்தவிதமான நிரந்தர
ஜீவனாம்சம் பெறாத
பட்சத்திலும், தன்னைத்
தானே பராமரித்துக்
கொள்ள எந்தவிதமான
வருமானமும் இல்லாத
பட்சத்திலும் இந்தச்
சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம்
கோர இயலும்.
இந்தச் சட்டத்தின் கீழ்
வழக்கு தாக்கல் செய்ய
விரும்பும் நபர் தான்
எங்கே வசிக்கிறாரோ,
எதிர் தரப்பினருடன்
கடைசியாக
எங்கே வசித்தாரோ, அந்த
இடத்திற்குட்பட்ட
குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்திலோ (Magistrate
Court) அல்லது குடும்பநல
நீதிமன்றத்திலோ ஜீவனாம்ச
வழக்கு தாக்கல்
செய்யலாம். மைனர்
குழந்தைகளுக்கு தாயே காப்பாளராக
இருந்து வழக்கு தாக்கல்
செய்ய இயலும்,
இது சட்டம் ஏற்றுக்
கொள்ளாத
குழந்தைக்கும் (Illegitimate
child) பொருந்தும்.
மேலும் இந்த
வழக்கு நிலுவையில்
இருக்கும்
போது இடைக்கால
ஜீவனாம்சம் கோரவும்
இந்தச் சட்டத்தில்
இடமுள்ளது.

இந்திய அரசியலமைப்பு ஐந்து வகையான நீதிப்பேராணை


இந்திய  அரசியலமைப்பு ஐந்து வகையான நீதிப்பேராணை

இந்திய
அரசியலமைப்பு ஐந்து
வகையான
நீதிப்பேராணையை
அளிக்கிறது :
1.ஆட்கொணர்
நீதிப்பேராணை (Writ of ‪#‎Habeas_Corpus‬):
தவறாக ஒருவர் காவலில்
வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும்
நீதிமன்றம் காவலில்
வைத்த
அதிகாரிக்கோ அல்லது
அரசாங்கத்திற்கோ ஆணை வழங்கி,
காவலில் வைக்கப்பட்ட
வரை நீதிமன்றத்தின்முன்
கொண்டுவரச்
செய்வதாகும்.
2.கட்டளை
நீதிப்பேராணை (Writ of
‪#‎Mandamus‬):
ஒரு குறிப்பிட்ட
செயலை உடனடியாக
செய்யக்கோரி நீதிமன்றம்
ஆணை பிறப்பிப்பதாகும்.
3.தடை நீதிப்பேராணை (Writ of ‪#‎Prohibition‬):
நீதிமன்றம் ஓர்
அதிகாரிக்கு ஆணை
பிறப்பித்து அவரது
எல்லைக்குட்படாத
ஒரு செயலைச்
செய்யாதிருக்குமாறு
ஆணை பிறப்பிப்பதாகும்.
4.உரிமைவினா நீதிப்
பேராணை (Writ of ‪#‎Quo_warranto‬)
அரசாங்கத்தின் அலுவலர்
ஒருவரை அவர் எந்த
அடிப்படையில்
குறிப்பிட்ட
பதவியை வகிக்கிறார்
என்பதைத்
தெளிவுபடுத்தக்கோரும் நீதிமன்றத்தின்
உத்தரவாகும்.
5.தடைமாற்று
நீதிப்பேராணை (Writ of
‪#‎Certiorary‬):
நீதிமன்றம் தனது கீழ்பட்ட
ஒரு அதிகாரிக்கோ
அல்லது
நீதிமன்றத்துக்கோ
ஆணை பிறப்பித்து,
குறிப்பிட்ட நீதிமன்றச்
செயல்முறைகளையும்
ஆவணங்களையும்
தனக்கோ அல்லது உரிய
அதிகாரிக்கோ மாற்றச்
செய்வதாகும்.

கொடைசாசனத்திற்கும் உயில்சாசனத்திற்கும் என்னவித்தியாசம் ?


கொடைசாசனத்திற்கும் உயில்சாசனத்திற்கும் என்னவித்தியாசம் ?

கொடை
சாசனத்திற்கும் உயில்
சாசனத்திற்கும் என்ன
வித்தியாசம் ?
கொடை சாசனம்
எழுதியவுடன் அதில்
கண்ட
கொடை பெறுபவர் அந்த
சொத்தின் அனுபவ
பாத்தியத்தை பெற்றுக்
கொள்ளலாம்,கொடை
எழுதிய நபருக்கு அந்த
சொத்தில்
அதற்கு பின்னர் எந்த
உரிமையும்
கிடையாது.கொடை
பெறுபவர் அந்த
சொத்தினை பெற்றுக்
கொள்ளவில்லை என்றால்
கொடை கொடுத்தவர்
அந்த சொத்தின்
மீது உரிமை
கொண்டிருப்பார்.
2.கொடை சாசனத்தை
கட்டாயம் பதிவு செய்ய
வேண்டுமா?
100ரூபாய்க்கு மேல்
சொத்து மதிப்பு
இருந்தால் கட்டாயம்
கொடையை பதிவு
செய்ய வேண்டும்
ஆனால்
உயிலை அப்படி கட்டாயம்
பதிவு செய்ய வேண்டிய
அவசியம் இல்லை.

Fundamental Duties - Article 51A


Fundamental Duties - Article 51A
இந்திய
குடிமக்களுக்கு
அரசியலமைப்பு விதித்துள்ள
அடிப்படை கடமைகள்:
1.அரசியலமைப்புச்
சட்டத்துக்கு
கட்டுப்பட்டு நடத்தல்,
தேசிய கொடி, தேசிய கீதம் ஆகியவற்றுக்கு
மதிப்பளித்தல்
2.இந்திய விடுதலைப்
போராட்டத்துக்கு தூண்டுதலாக அமைந்த
கொள்கைகளை
போற்றுதல்,
பின்பற்றுதல்
3.இந்தியாவின்
இறையான்மை, ஒற்றுமை,
ஒருமைப்பாட்டை
நிலைநிறுத்த்தல்,பாதுகாத்தல்
4.நாட்டை பாதுகாக்கவும்
, தேசப் பணியாற்றவும்
அழைக்கும்போது வந்து
அவ்வாறு பணியாற்றுதல்
5.சமயம், மொழி, வட்டாரம்
ஆகியவற்றைக்
கடந்து ஒற்றுமையுடன்
சகோதர நேயத்தையும்,
இணக்கத்தையும் பேணுதல்; பெண்களின்
கண்ணியத்தைச் சிறுமைப்படுத்தும் செயல்களை
விட்டுவிடுதல்
6.நமது கூட்டுக்
கலாசாரத்தின் மிக உயர்ந்த
பாரம்பரியத்தை மதித்தல்,
பாதுகாத்தல்
7.காடுகள், ஏரிகள்,
ஆறுகள் மற்றும்
வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச்
சுழ்நிலைகளைப் பாதுகாத்தல்,
மேம்படுத்தல், வாழும்
உயிர்களிடம் இரக்கம்
காட்டல்
8.அறிவியல் சிந்தனை,
மனித நேயத்தை வளர்த்தல்
9.பொதுசொத்தை
பாதுகாத்தல்,
வன்முறையை ஒழித்தல்
10.தேசத்தை முன்னேற்ற
தனிப்பட்ட முறையிலும்,
கூட்டாகவும்
முயற்சித்தல்,
தொண்டாற்றுதல்
11.நிலவரத்துக்கேற்ப
குழந்தையின் பெற்றோர்
அல்லது காப்பாளர்,
அந்தக்
குழந்தை ஆறு வயது
முதல்
பதினான்கு வயதுவரை
கல்வி கற்க
வசதி ஏற்படுத்தித்
தருதல்

சட்டம்'s photo.

சமத்துவ உரிமை


சமத்துவ உரிமை

சமத்துவ உரிமை (Right to Equality)
பிரிவு 14 – சட்டத்தின் முன்
அனைவரும் சமம் – சட்டத்தின்
முன்பு சமத்துவத்தையோ சம
பாதுகாப்பை அரசு மறுக்கக் கூடாது.
பிரிவு 15 – எந்த குடிமகனையும்
மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம்
ஆகியவற்றில் ஏதனையாவது காரணம்
காட்டி அவரை பாகுபாட்டுடன்
நடத்தக் கூடாது.
பிரிவு 16 – பொது வேலைவாய்ப்பில்
எல்லோருக்கும் சம
வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
பிரிவு – 17 தீண்டாமை ஒழிப்பு:
தீண்டாதோர் என்று யாரையும்
ஒதுக்கி வைத்தல் இச்சட்டத்தின்
மூலம் அழிக்கப்படுகிறது.
தீண்டாமை நடைமுறைப்படுத்தப்
படுவதைத் தடுக்கிறது.
தீண்டாமையின் மூலம்
தகுதியிண்மை கடைப்பிடிக்கப்பட்டால்
அது குற்றமாக
கருதப்பட்டு தண்டிக்கப்படும

சட்டம்'s photo.

CYBER CRIME ACT


                                            CYBER CRIME ACT

ஃபேஸ்புக்கில்
அடுத்தவரை அவமதிப்புக்குள்ளாக்கும்
அவதூறான கமென்டுகள்,
மரியாதைக்
குறைச்சலுக்கு உள்ளாக்கும்
விதத்தில் போட்டோக்கள்
ஆகியவற்றை போட்டதற்காக
சென்னையில் ஐந்து பேர் கைது.
நண்பர்களாக
இருக்கும்போது தனிப்பட்ட
முறையில் பரிமாறிக்கொண்ட
படங்களையும், பதிவுகளையும்
வெளியிட்டுவிடுவதாக மிரட்டிப்
பணம் பறித்தவர்கள் மேலும்
நடவடிக்கை.
பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல்
புகார் கொடுக்க வேண்டும்
என்று போலீசார் ஆலோசனை.
+++++++++++++++++++++
+++++++++++++++
புகார் கொடுக்க வேன்டிய சைபர்
கிரைம் செல் அலுவலக முகவரி,
போன் நம்பர், இ-மெயில்
ஐடி போன்ற விவரங்கள் இந்த
லிங்கில் உள்ளன:
www.naavi.org/cl_editorial_04/cyber_Crime_ps.htm
பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல்
புகார் கொடுக்க வேண்டும்
சட்டம்'s photo.

பெண்களுக்கான சொத்துரிமை

Mohandass Samuel's photo.
'பெண்களுக்கான சொத்துரிமை, பெண்ணின் சொத்தில் அவருக்கு உள்ள உரிமைகள் என இரண்டு வகையாக இந்த விஷயத்தை அணுகலாம். இதைத் தெளிவாக தெரிந்துகொண்டால் குழப்பங்கள் இருக்காது''
''முதலில், பெண்களுக்கான சொத்துரிமை குறித்து பார்ப்போம். இந்த உரிமை அவர்களுக்குத் தானாக வந்துவிடவில்லை. 1937 வரை இந்து பொதுக் குடும்ப சொத்தில் பெண்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லாமலே இருந்தது. அதாவது, பங்குரிமையானவர்களாக (Coparcener) ஆண்கள் மட்டுமே இருக்க முடியும். கணவர் இறந்துவிட்டால் அவருடைய பங்கு, அந்த கூட்டுக் குடும்பத்திலுள்ள மற்ற ஆண்களுக்குச் சேர்ந்துவிடும். ஆனால், ஆண்களைப்போல, மனைவிக்கோ, மகளுக்கோ எந்தப் பங்கும் கிடைக்காது.
இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டு, சொத்தில் பெண்களுக்கான உரிமைச் சட்டம் 1937-ல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, கூட்டுக் குடும்ப அமைப்பில் கணவரின் சொத்து மனைவிக்கு வந்தடைய வழி செய்தது. ஆனால், முழுமையான உரிமை வந்தடையவில்லை. அதன்பிறகு, 1956-ல் இந்து வாரிசு உரிமைச் சட்டம் இயற்றப்பட்டபோதுதான் பெண்களுக்கு சொத்துரிமை மேலும் பலப்படுத்தப்பட்டது. அதன்படி, ஓர் ஆணின் சொத்து, அவரது காலத்திற்குப் பிறகு, பொதுக் குடும்ப சொத்து என்றும், தனிப்பட்ட சொத்து என்றும் இரண்டு வகையாகப் பிரிக்க வழி செய்தது. இதில், தனிப்பட்ட சொத்தில் வாரிசு அடிப்படையில் மனைவிக்கும், மகள்களுக்கும் சமபங்கு வழங்க வகை செய்யப்பட்டது. ஆனால், பொதுக் குடும்பச் சொத்து, பரம்பரை சொத்தில் உரிமை எதுவும் வழங்கப்படவில்லை.
1989-ல் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங் களில் இந்த சட்ட நடைமுறையில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பொதுக் குடும்பச் சொத்திலும் பெண்கள் உரிமை கோரலாம் என்கிற நிலை உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி, 25.03.1989-க்கு முன்பாக திருமணம் ஆன பெண்களுக்கு இந்தச் சட்ட திருத்தம் பொருந்தாது. மேலும், அன்றைய தேதி வரை பொதுக் குடும்பச் சொத்து பாகம் பிரிக்கப்பட்டிருக்கக் கூடாது என்று இந்தச் சட்ட திருத்தம் சொன்னது.
2005-ம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, பெண் என்பவர் குடும்பத்தின் பங்குரிமையானவராக கருதப்படுவார் என்றது. அதன் விளைவாக, பொதுக் குடும்பச் சொத்து என்றாலும், ஆணின் தனிப்பட்ட சொத்து என்றாலும், ஓர் ஆணுக்கு என்ன உரிமை உள்ளதோ, அந்த உரிமை பெண்ணுக்கும் உள்ளது.
2005 முதல் இந்தச் சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது. தற்போது சொத்துகளில் ஆண், பெண் பேதம் கிடையாது. காலப்போக்கில் இப்படி பல மாற்றம் கண்டுவந்திருக்கிறது பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம்.
அடுத்து, நாம் பார்க்கவேண்டிய முக்கியமான விஷயம், ஆண்கள் பெயரில் உள்ள சொத்துகளில் அவருக்கு உள்ள உரிமையும், பெண்கள் பெயரில் உள்ள சொத்துகளில் அவருக்கு உள்ள உரிமைகளும் என்ன என்பதைத்தான்.
ஆண்கள் பெயரில் உள்ள சொத்து அவர் களுக்கு எப்படி கிடைத்தது என்பதைப் பொறுத்து அவர்களின் உரிமை தீர்மானிக்கப்படும். அதாவது, மூதாதையர் வழியாக ஓர் ஆணுக்குக் கிடைக்கும் சொத்தில் அவருடைய மகனுக்கும், பேரனுக்கும் பங்குரிமை உண்டு. அதேபோல, ஒரு பொதுக் குடும்பத்தில், ஓர் ஆண் பெயரில் சொத்து இருந்தாலும் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் பொதுக் குடும்ப உறுப்பினர்கள் என்கிற அடிப்படையில் பாகம் கேட்க உரிமை உண்டு. அதே ஆண் அவருடைய சுயசம்பாத்தியத்தில் அல்லது அவருடைய தனிப்பட்ட பாகமாகக் கிடைக்கும் சொத்துகள் அவருக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட சொத்தாகும். இப்படி சொத்து வந்த முறையைப் பொறுத்து சொத்தின் உரிமை தீர்மானிக்கப்படுகிறது.
ஆனால், பெண்கள் பெயரில் உள்ள சொத்துகளை பொறுத்து இவ்விதமான நிபந்தனைகள் எதுவும் இல்லை. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14-ன்படி ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்துகள் இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். திருமணமான ஒரு பெண்ணுக்கு அவரது பெற்றோர் மூலமாகச் சொத்துகள் கிடைத்தால், அதில் அவரது கணவரோ, குழந்தைகளோ உரிமை கோர முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள்.
ஏற்கெனவே சொன்னபடி, இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14-ன்படி ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அதாவது அவரது பெற்றோர்கள் மூலமாக, கணவனின் மூலமாக அல்லது சுய சம்பாத்தியம் மூலமாக என எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அது அவரது தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். எனவே, அந்தச் சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு எதிராக பாகமோ, உரிமையோ வேறு யாரும் கோர முடியாது.
கணவன் தன்னுடைய வருமானத்தைக் கொண்டு மனைவி பெயரில் ஒரு சொத்தை வாங்குகிறார். இருவருக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இந்த நிலையில் கணவன் அந்தச் சொத்தை திரும்ப எடுத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டால், முடியாது
எப்படி என்கிறீர்களா?
ஒருவர் தன்னுடைய பணத்தைக்கொண்டு வேறொருவர் பெயரில் சொத்துகளை கிரயம் செய்வது, பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே, யார் பெயரில் சொத்து இருக்கிறதோ, அவரே அந்தச் சொத்தின் உரிமையாளராகக் கருதப்படுவார். சட்டப்படி, வேறு யாரும் அந்தச் சொத்தின் உரிமையாளராகக் கோர முடியாது. அப்படிக் கோருவது குற்றம்.
ஆனால், இந்த நடைமுறையிலும் விதிவிலக்கு உள்ளது. அதாவது, ஒருவர் தன் மனைவி பெயரிலோ அல்லது திருமணமாகாத மகள் பெயரிலோ சொத்துகளை வாங்கியிருந்தால், அந்தச் சொத்து வாங்குவதற்கான பணம் தன்னால் மட்டுமே செலுத்தப்பட்டது என்பதையும், மனைவி / மகளுக்கு வருமானம் ஏதுமில்லை அல்லது கிரயத்தொகை அவரால் செலுத்தப்படவில்லை என்பதை நிரூபித்தால் மட்டுமே அந்தச் சொத்தை அவருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிடும்.
ஒரு பெண்ணின் சொத்திற்கு யார், யார் வாரிசுகளாக இருக்க முடியும் என்பது முக்கியமான கேள்வி. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 15-ன்படி, ஒரு பெண் இறந்தபிறகு அவருடைய கணவன் மற்றும் மகன், மகள்கள் வாரிசுகளாகின்றனர். அவர்கள் இல்லாதபோது கணவனுடைய வாரிசுகளுக்கு அந்தச் சொத்து போய் சேரும்.
கணவனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழும் மனைவி, விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இறந்துவிட்டால் அவருக்கு வாரிசு யார்? என்று நீங்கள் கேட்கலாம். விவாகரத்து வழங்கப்படும்வரை கணவன் - மனைவி என்கிற பந்தம்தான் கணக்கிலெடுக்கப்படும். ஆகவே, வாரிசு உரிமைச் சட்டப்படி, பிரிந்து வாழும் மனைவியின் சொத்து கணவனுக்குச் சென்றடையும்.
திருமணம் ஆகாமல் ஒரு பெண் இறந்தால் அவரது சொத்துகளுக்கு யார் வாரிசு என்று கேட்கிறீர்களா? திருமணம் ஆகாத பெண் இறந்தால், அவரது பெற்றோரே வாரிசாக இருப்பார்கள். அவர்கள் இல்லாதபட்சத்தில் தந்தையின் வாரிசுகள் இறந்துபோன பெண்ணின் வாரிசுகளாகக் கருதப்படுவார்கள்.
ஒரு பெண்ணின் தனிப்பட்ட சொத்தை அவர் எவ்வாறு அனுபவிக்க முடியும்? ஒரு குறிப்பிட்ட சொத்திற்கு ஒரு பெண் தனிப்பட்ட முழுமையான உரிமையாளர் என்கிறபோது, அவர் அந்தச் சொத்தை தன் விருப்பப்படி அனுபவிக்க முடியும். அதாவது, அவர் அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றித் தரலாம். அது தானமாகவோ / உயிலாகவோ அல்லது விற்கவோ எந்த வகையிலும் பாராதீனம் செய்யலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.
ஓர் இந்துப் பெண் மதம் மாறுவதால், குடும்பச் சொத்தில் உள்ள உரிமைகளோ, பங்கு கேட்கும் உரிமைகளோ பாதிக்கப்படுமா? என்று கேட்கலாம்.
இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 26-ன்படி, இந்து மதத்திலிருந்து விலகி மதம் மாறிய ஒருவர் மற்றும் அவரின் வாரிசுகள், வாரிசு உரிமையின் அடிப்படையில் இந்துக் கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கு கேட்க முடியாது. இருந்தாலும், ஜாதிக் குறைபாடுகள் அகற்றுதல் சட்டத்தின்படி ஒருவர் சாதி இழப்பதாலோ அல்லது மதம் மாறுவதாலோ சொத்தில் உள்ள உரிமையை அவர் இழப்பதில்லை. இதையே உயர்நீதிமன்ற சமீபத்திய தீர்ப்புகூட உறுதி செய்துள்ளது.
இந்துப் பெண்களுக்கான இந்த சொத்துரிமை சட்டங்கள் முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தில் உள்ள பெண்களுக்குப் பொருந்துமா? என்பதும் பலருக்கு இருக்கும் கேள்வி.
பரம்பரைச் சொத்து, தனிக் குடும்பச் சொத்து போன்ற தத்துவங்கள் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தாது.
ஆகவே, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவரது பெயரில் உள்ள சொத்துகள் அவரது தனிப்பட்ட சொத்தாகவே இருக்கும்'

லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால்


லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால்

லைசென்ஸ் இல்லாமல்
வாகனம் ஓட்டினால் ரூ.500
(அல்லது) 3 மாத
சிறை தண்டனை
லைசென்ஸ்
இல்லாதவருக்கு வாகனம்
கொடுத்தால் ரூ.1000
(அல்லது) 3 மாத
சிறை தண்டனை
பர்மிட் இல்லாத
வாகனத்தை ஓட்டினால்
(அதிகபட்சம்) ரூ.5000
(ரூ.2000க்கு குறைவில்லாமல்)
உடல் தகுதியில்லாமல்
வாகனம் ஓட்டினால்
(அதிகபட்சம்) ரூ.5000
(ரூ.2000க்கு குறைவில்லாமல்)
ஆர்சி புக் இல்லாத
வாகனத்துக்கு ரூ.2000 -
நிர்ணயிக்கப்பட்ட
வயது தகுதிக்கு குறைவானவர்
(மைனர்) வாகனம் ஓட்டினால்
ரூ.500
ஒருவழிப்பாதையில் சென்றால்
ரூ.100
குடிபோதையில் வாகனம்
ஓட்டினால் ரூ.2000
அல்லது 6 மாத
சிறை தண்டனை
இருசக்கர வாகனத்தில் 3 பேர்
பயணம் செய்தால ரூ.100
ரூ.300
ஓவர் ஸ்பீடு ரூ.400 - ரூ.1000
தாறுமாறாக
வண்டி ஓட்டினால் ரூ.1000
ரூ.2000
பதிவு செய்யாத
வாகனத்தை ஓட்டினால்
ரூ.2500
இன்ஸ்யூரன்ஸ் இல்லாத
டூ வீலருக்கு ரூ.500-
ரூ.1000
இன்ஸ்யூரன்ஸ் இல்லாத
ஃபோர் வீலருக்கு ரூ.700-
ரூ.1000
இன்ஸ்யூரன்ஸ் இல்லாத
கமர்ஷியல்
வாகனங்களுக்கு ரூ.1000
லைசென்ஸ்
ரத்து செய்யப்பட்டவர் வாகனம்
ஓட்டினால் ரூ.500
வாகனத்தால் காற்று மற்றும்
சப்த மாசுபாடு தொடர்பான
குற்றங்களுக்கு ரூ.1000-
ரூ.2000
மொபைல்போன்
பேசிக்கொண்டே வாகனம்
ஓட்டினால் ரூ.1000
நடைபாதையில் வாகனம்
ஓட்டினால் ரூ.100

சட்டம்'s photo.

பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம்

Mohandass Samuel's photo.

பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம்
அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது
சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
பிறப்பு சான்றிதழ் பெற -
http://www.chennaicorporation.gov.in/o…/birthCertificate.do…
பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள -http://www.chennaicorporation.gov.in/…/birthCertificateList…
இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateBasi…
இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateList…
இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php…
கோயம்புத்தூர் மாநகராட்சி - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php…
மதுரை மாநகராட்சி - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)
திருச்சி மாநகராட்சி -https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி மாநகராட்சி
http://tirunelvelicorp.tn.gov.in/download.html
சேலம் மாநாராட்சி

தொழிலாளர் விதிகள்


தொழிலாளர் விதிகள்







தொழிலாளர் விதிகள்
பிரிவு 66(1)(b) 1948 ன்
படி பெண்கள் எந்த
ஒரு தொழிற்சாலையாக
இருந்தாலும் காலை 6
மணிக்கு முன்பாகவோ அல்லது இரவு 7 மணிக்கு மேல் வேலை செய்ய அனுமதிக்க கூடாது
ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில்
சுமார் 30 வேலை நாட்கள்
பணிபுரிந்திருந்தாலே போனஸ்
பெற தகுதியானவர் ஆண்டு இறுதி கணக்கு முடிந்த
8 மாத காலத்திற்குள் போனஸ்
தொகையை தொழிலாளர்களுக்கு அளித்திருக்க வேண்டும்
கூடுதல் நேர வேலை செய்பவர்களுக்கு
சாதாரண நேரத்தில்
கணக்கிடபடும் தொகையை விட
இரண்டு மடங்கு கூடுதலாக தர
வேண்டும்.

கூலி வழங்கல் சட்டம்


கூலி வழங்கல் சட்டம்

கூலி வழங்கல் சட்டம் -
1936
இந்தியாவில் முதலாளிகள்
தொழிலாளர்களுக்கு,
கூலியினை வழங்காமல்
அல்லது தாமதப்படுத்தி
வழங்கி தொழிலாளர்களைச்
சுரண்டுவதைத் தடுக்கும்
நோக்கத்தில்
கொண்டு வரப்பட்டது
கூலி வழங்கல் சட்டம் - 1936
(The Payment of
Wages Act - 1936) ஆகும்.
இச்சட்டம் தொழிலாளர்களுக்கு
கொடுக்கப்பட வேண்டிய
நியாயமான கூலி, குறித்த
வடிவத்தில், குறிப்பிட்ட
காலத்தில் சட்ட விரோதமான
பிடித்தங்களின்றி வழங்கப்பட
வேண்டும் என்பதை உள்ளடக்கமாகக்
கொண்டு இச்சட்டம்
வடிவமைக்கப்பட்டுள்ளட்து.
கூலி
கூலி என்பது முதலாளியால்
கொடுக்கப்பட்ட
வேலையை செய்து முடித்தத்
தொழிலாளிக்கு மறு பயனாக
வழங்கப்படும் தொகையாகும்.
இது பணமாகவோ அல்லது
வங்கிக் காசோலையாகவோ
வழங்கப்படலாம். இவை தவிர
கூலி என்பது,
1. முதலாளிக்கும்
தொழிலாளிக்கும்
ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்
அல்லது நீதிமன்ற உத்தரவின்
பேரில் வழங்கப்படும்
தொகை கூலியாகும்.
2. மிகுதி நேரம் சம்பளம்
(Over Time wage)
விடுமுறை நாள் சம்பளம்
போன்றவையும்
கூலி எனப்படும்.
3. மீதூதியம் போன்ற
எந்தவொரு கூடுதல்
சன்மானமும் கூலி எனப்படும்.
வேலையின் முடிவில் அந்த
வேலைக்காக வழங்கப்படும்
தொகை கூலி எனப்படும்.
கூலி இல்லாதவை
1. பயணப்படி அல்லது பயணச்
சலுகைத் தொகை
2. பணியின் தன்மையினால்
வரும் கூடுதல் செலவுகளைச்
சரிக்கட்டப்பட வழங்கும் தொகை
3. நன்றித்தொகை அல்லது
பணிக்கொடை
4. லாபமாகக் கிடைக்கும்
மீதூதியம்
5. வீட்டு வசதி, தண்ணீர்
வசதி மற்றும் மின்சார
வசதி போன்ற சேவைகள்
6. ஓய்வூதியம்,
வைப்புநிதி மற்றும்
இவைகளின் மேலான வட்டித்
தொகை, இவற்றிற்காக
முதலாளி செலுத்தும் சந்தாத்
தொகை.
-போன்றவைகள் கூலியாகக்
கருதப்படாது.
கூலியின் வடிவம்
கூலியை பணமாகவோ அல்லது
வங்கிக் காசோலையாகவோ மட்டும் வழங்க வேண்டும்.
வேறு வழிகளில்
இவை வழங்கக் கூடாது.
கூலி வழங்கும் நாட்கள்
தொழிலாளர்களுக்கு கூலி
அவ்வப்போது வழங்கப்பட்டு
விட வேண்டும். மாதாந்திர
சம்பளத்தில் வேலை பார்க்கும்
தொழிலாளிக்கு மாதத்தின்
முதல் ஏழு நாட்களிலிருந்து பத்து நாட்களுக்குள் மாதக்
கூலி வழங்கப்பட வேண்டும்.
கூலி வழங்கப்படும் காலம்
கூலி குறிப்பிட்ட கால
இடைவெளியில் சரியாக
வழங்கப்பட வேண்டும். கால
இடைவெளி என்பது வாரம்,
மாதமிருமுறை, மாதம்
என்பதைக் குறிக்கும். இந்தக்
கால இடைவெளியில் வாரம்
என்றால் குறிப்பிட்ட
கிழமையிலும்,
மாதமிருமுறை எனில்
குறிப்பிட்ட தேதிகளிலும்
மாதமாக இருந்தால் குறிப்பிட்ட
சில நாட்களுக்குள்ளும்
வழங்கப்பட வேண்டும்.
சட்ட விரோதமான பிடித்தங்கள்
தொழிலாளர்களுக்கு சேர
வேண்டிய
கூலியிலிருந்து நியாயமான
பிடித்தங்கள் தவிர
சட்டவிரோதமான பிடித்தங்கள்
எதுவும் செய்யக் கூடாது.

சட்டம்'s photo.

கூலி வழங்கல் சட்டம்


கூலி வழங்கல் சட்டம்

கூலி வழங்கல் சட்டம் -part 2
கூலி வழங்குவது குறித்த
விதிகள்
* கூலி வழங்கல் சட்டம்
1936 ன் பிரிவு 3ன் படி
ஒவ்வொரு முதலாளியும்,
தன்னால் பணியில்
அமர்த்தப்பட்ட தொழிலாளிக்குச்
சேர வேண்டிய அனைத்துக்
கூலியையும் வழங்க
வேண்டும் என்பதைச் சட்டக்
கடமையாக்குகிறது.
* கூலி வழங்கல் சட்டம்
1936 ன் பிரிவு 4ன் படி
ஒவ்வொரு முதலாளியும் கூலி
வழங்கும் கால இடவெளியை
உருவாக்கிக் கொள்ள வழி வகை
செய்யப்பட்டுள்ளது. ஆனால்
இது ஒரு மாத கால
இடைவெளிக்கு அதிகமாகக்
கூடாது.
* தொழிலாளர்கள் எண்ணிக்கை
1000 க்கு அதிகமாகாத
நிலையில் ஊதியக் காலத்தின்
கடைசி நாளிலிருந்து ஏழு
நாட்கள் முடிவடைவதற்கு
முன்பும், 1000 க்கு அதிகமாக
உள்ள போது பத்து நாட்கள்
முடிவடைவதற்கு முன்பும்
கூலி வழங்கப்பட வேண்டும்.
இதை விடுமுறை நாளில்
அளிக்கக் கூடாது என்பதை
கூலி வழங்கல் சட்டம் 1936
ன் பிரிவு 5 மூலம்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
* கூலியை நடப்பிலுள்ள
இந்தியப் பணமாகவும்
சில்லரைக்காசுகளாகவும்
கொடுக்க வேண்டும்.
தொழிலாளர்கள் ஒப்புதல்
பெற்று வங்கிக்
காசோலையாகவோ அல்லது
அவர்களின் வங்கிக் கணக்கில்
வரவு வைப்பதன்
வாயிலாகாவோ வழங்கலாம்
என்று கூலி வழங்கல் சட்டம்
1936 ன் பிரிவு 6
தெரிவிக்கிறது.
* சட்டம் அனுமதிக்கும்
பிடித்தங்களைத் தவிர வேறு
எவ்வித பிடித்தங்களும்
இல்லாமல்
தொழிலாளர்களுக்குக் கூலி
வழங்கப்பட வேண்டும்.
முதலாளிக்கு அல்லது அவரது
முகவர்க்கு தொழிலாளர்கள்
செலுத்தும் தொகை
அனைத்தும் பிடித்தங்கள்
எனப்படும். ஊதிய உயர்வு
அல்லது பதவி உயர்வு
நிறுத்தி வைக்கப்படுதல், கீழ்
பதவிக்கு மாற்றம் செய்தல்
மற்றும் தற்காலிகப் பணி
நீக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட
கூலி இழப்புகள்
பிடித்தங்களாகக்
கருதப்படமாட்டாது என கூலி
வழங்கல் சட்டம் 1936 ன்
பிரிவு 7ல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் அனுமதிக்கும்
பிடித்தங்கள்
கூலி வழங்கல் சட்டம் 1936-
ன் படி சில பிடித்தங்கள்
அனுமதிக்கப்பட்டுள்ளன.
அவை
* அபராதத் தொகை
தொழிலாளி கடமையைச் செய்ய
தவறியதற்காகவோ,
* செய்யக்கூடாத செயலைச்
செய்ததற்கு விதிக்கப்பட்ட
அபராதத் தொகையைக்
கூலியில் பிடித்தம்
செய்யலாம். இப்பிடித்தம்
அவரது ஒரு மாதக் கூலியின்
மொத்தத் தொகையில் மூன்று
சதவிகிதத்திற்கு அதிகமாக
இருக்கக் கூடாது.
* வேலை செய்யாத நாட்கள்
கூலி வழங்கும்
காலத்திற்குரிய வேலை
நாட்களில் வேலைக்கு வராத
நாட்களுக்குரிய கூலியைப்
பிடித்தம் செய்து கொள்ள
அனுமதிக்கிறது.
* சேதத்திற்கான இழப்பு
தொழிலாளியிடம்
ஒப்படைக்கப்பட்ட பொறுப்பில்
கவனக்குறைவாய் இருந்து
அதனால் ஏற்பட்ட சேதம்
அல்லது இழப்பை ஈடு
செய்யும் வகையில் ஒரு
தொகையை கூலியிலிருந்து
பிடித்தம் செய்யலாம். இப்படி
பிடித்தம் செய்யப்படும் முன்பு,
தொழிலாளிக்கு இது குறித்த
நியாயமான விளக்கங்கள்
அளிக்கப்பட வேண்டும்.
* சேவைகளுக்கான தொகை
வீட்டு வசதி, தண்ணீர், மின்சார
வசதி மற்றும் வாகன வசதி
போன்ற சேவைகள்
வழங்கப்பட்டால் அதற்குச்
சமமான தொகையைக் கூலியில்
பிடித்தம் செய்யலாம். ஆனால்
அச்சேவைகளுக்கு தொழிலாளி
ஏற்பளித்திருக்க வேண்டும்.
முன்தொகை
தொழிலாளி வேலையில் சேரும்
முன்பு அல்லது சேர்ந்த பின்பு
அல்லது விழாக் காலங்களில்
வழங்கப்பட்ட
முன்தொகையினைக் கூலியில்
பிடித்தம் செய்ய
அனுமதிக்கிறது. இது போல்
அதிகமாகக் கொடுக்கப்பட்டு
விட்ட கூலியைத் திரும்பப்
பெறவும் பிடித்தம்
செய்யலாம். ஆனால்
போக்குவரத்து செலவுகளோ
அல்லது முன்பணம் மற்றும்
அதிகமாக வழங்கப்பட்ட
கூலிக்கு வட்டியோ பிடித்தம்
செய்யக் கூடாது.
கடன் தொகைகள்
மாநில அரசால்
அங்கீகரிக்கப்பட்ட வீட்டு
வசதிக் கடன், வாகனக் கடன்
மற்றும் தொழிலாளரால்
பெறப்பட்ட கடன்கள்
போன்றவற்றின் மாதாந்திர
தவணையிலான பிடித்தங்கள்
கூலியிலிருந்து கழித்துக்
கொள்ளலாம்.
பிற பிடித்தங்கள்
1. வருமான வரிக்கான
பிடித்தம்
2. நீதிமன்ற உத்தரவுகளின்
பேரிலான பிடிக்கப்பட
வேண்டிய தொகை
3. வருங்கால வைப்புநிதி
மற்றும் ஒய்வூதியத் திட்டம்
ஆகியவைகளுக்குச் செலுத்த
வேண்டிய தொழிலாளர்களின்
சந்தாத் தொகை
4. தொழிலாளர்களின் தொழில்
வரிப் பிடித்தம்
5. பிரதமர் தேசிய உஅதவி நிதி
மற்றும் பிற நிவாரண
நிதிகளுக்கான நன்கொடைத்
தொகை போன்றவை
தொழிலாளர்களின் சம்மதக்
கடிதத்தின்படி பிடித்தம்
செய்யலாம்.
6. தொழிற்சங்கத்திற்கான
உறுப்பினர் தொகை
தொழிலாளர்களின் சம்மதக்
கடிதத்தின்படி பிடித்தம்
செய்யலாம்.
பிடித்தத்தின் பொது வரம்பு
தொழிலாளியின் சம்பளத்தில்
பிடித்தம் செய்யப்படும்
பொழுது அனைத்துத்
தலைப்புகளின் கீழும்
செய்யப்படும் மொத்தப் பிடித்தம்
தொழிலாளியின் மாதச்
சம்பளத்தில் 50
சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்
கூடாது. கூட்டுறவு
நிறுவனங்கள் மற்றும் கடன்
தொகைகளுக்காகப் பிடித்தம்
செய்யப்படும் பொழுது 75
சதவிகிதம் வரை பிடித்தம்
செய்யலாம்.
சட்டம்'s photo.

சட்டப்படி இந்து திருமணம் செய்வோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்



சட்டப்படி இந்து திருமணம்
செய்வோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்



சட்டப்படி இந்து திருமணம்
செய்வோர் பின்பற்ற வேண்டிய
வழிமுறைகள்:-
1. திருமணம் செய்து
கொள்ளும் ஆண் அல்லது
பெண்ணுக்கு ஏற்கனவே
திருமணமாகி உயிருடன்
துணை இருக்ககூடாது.
2. திருமணம் நடக்கும்
சமயத்தில்.
* மணமகன், மணமகள்
இருவரும் மனரீதியாக
தெளிவானவர்களாக இருக்க
வேண்டும். திருமணம் செய்து
கொள்ள இருவரின்
மனபூர்வமான ஒப்புதல்
இருக்க வேண்டும்.
மணமக்கள் ஒருவரை ஒருவர்
விருப்பமில்லாமல் திருமண
பந்த்திற்குள் செல்பவர்களாக
இருக்ககூடாது.
* மணமக்கள் மற்றவர்களின்
கட்டாயத்தின் பேரில்
திருமணம் செய்பவர்களாக
இருக்ககூடாது.
* திருமணம் செய்து கொள்ளும்
சமயத்தில் மணமகனுக்கு 21,
மணமகளுக்கு 18 வயது
முழுமையாக பூர்த்தியாகி
இருக்க வேண்டும்.
* மணமக்கள் பொருந்தாத
உறவினர்களாக
இருக்ககூடாது.

சட்டம்'s photo.

தகவல் தொழில்நுட்ப சட்டம்


                                             தகவல் தொழில்நுட்ப சட்டம்

தகவல் தொழில்நுட்ப சட்டம்
66 - ஏ
தகவல் தொழில்நுட்ப சட்டம்
66 - ஏ பிரிவால் பொதுமக்களின்
உரிமை நேரடியாக
பாதிக்கப்படும். தகவல்
தொழில்நுட்ப சட்டம் 66 - ஏ
பிரிவு, அரசியலமைப்பின் கீழ்
போற்றிப் பேணப்படும்,
பேச்சுசுதந்திரத்தை தெளிவாக
பாதிக்கிறது. அரசுகள் வரும்
போகும், ஆனால் சட்டப்பிரிவு
66 - ஏ எப்போதும் இருக்கும்
என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு,
மத்திய அரசின் உறுதியை
கருத்தில் எடுக்க
மறுத்துவிட்டது. இருப்பினும்
சுப்ரீம் கோர்ட்டு, தகவல்
தொழில்நுட்ப சட்டத்தில்,
இணைய தளங்களுக்கு
தடைவிதிக்கும் வகையிலான
இரண்டு பிற விதிகளை ரத்து
செய்ய மறுத்துவிட்டது.
தொலைத்தொடர்பு சேவைகள்
உள்ளிட்டவை மூலம்
அநாகரீகமான குறுஞ்செய்தி
அனுப்பினால் தண்டனை,
கம்ப்யூட்டர் அல்லது
தொலைத்தொடர்பு சாதனங்கள்
வழியாக அச்சுறுத்தும்
அல்லது தாக்கும் வகையில்
உள்ள தகவல்கள்,
பொய்யான தகவல்களை பிறரை
காயப்படுத்த, எரிச்சலூட்ட,
பகைக்காக, வெறுப்புக்காக
அனுப்புவது,
பிறரை எரிச்சலூட்ட, ஏமாற்ற
பொய்யான தகவலை இமெயில்
மூலம் அனுப்பினால் 3
ஆண்டுகள் வரை நீட்டிக்கக்
கூடிய சிறை தண்டனையும்,
அபராதமும் விதிக்கப்படும்.
என்று தீர்ப்பு
வழங்கியுள்ளார்கள்
நீதிபதிகள்....

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் சொல்வது என்ன


                      நிலம் கையகப்படுத்தும் அவசர  சட்டம் சொல்வது என்ன

நிலம் கையகப்படுத்தும் அவசர
சட்டம் சொல்வது என்ன?
அரசு சிலதிருத்தங்களுடன் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அவசர சட்டம் ஒன்றை
பிறப்பித்துள்ளது.
இந்த் அவசர சட்டம்
அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து
நடைமுறைக்கு வருவதாக
கூறப்பட்டது.
ஏற்கனவே உள்ள சட்டத்தில்
நிலம் கையகப்படுத்தும்போது
சில குறிப்பிட்ட
விஷயங்களுக்காக நிலம்
கையகப்படுத்தினால் அதற்கு
உரிமையாளர் 80 சட்தவீதம்
பேரிடம் அனுமதி கேட்க
தேவையில்லை என்று
சட்டத்தின் 10(ஏ)என்ற விதி
கூறுகிறது.இதில் இப்போது
திருத்தம் கொண்டு
வரப்பட்டுள்ளது.
அதாவது கீழ்கண்ட ஐந்து
பிரிவுகளுக்கு நிலம்
கையகப்படுத்தும்போது நிலத்தில்
உரிமையாள்ரில் 80 சதவீதம்
பேரின் அனுமதி தேவையில்லை.
1.தேசிய பாதுகாப்பு
தொடர்பானவை
2.ராணுவ்ம் தொடர்பானவை.
3.மின்சார திட்டத்தை
உள்ளடக்கிய அடிப்படை ஆதார
வசதிகள்
4.தொழில் பூங்காக்கள்
(இண்டஸ்டிரீஸ் காரிடார்ஸ்)
5.ஏழைகளுக்கு வீடு கட்டும்
சட்டம்.
நிலத்தை கையகப்படுத்தும்போது
அந்த நிலம் விவசாயம்
செய்வதற்க்கு உரிய நிலமா
என்பது கவனிக்வேண்டுமென்று
முன்பு இருந்த சட்டத்தில்
கூறப்பட்டு இருந்தது .
ஆனால் இப்பொழுது கொண்டு
வரப்பட்டுள்ள சட்டத்தில் 5
அமைப்புகளுக்கு நிலத்தை
கையகப்படுத்துபோது அந்த
நிலம் விவசாயம் நிலமாக
பார்க்கதேவையில்லை.
இதனால் செழிப்பான விவாசய
நிலத்தை கூட
கையகப்படுத்தமுடியும்.
யாருடைய அனுமதியும்
தேவையில்லை.
ஆனால் இந்த அவசர சட்ட்த்தில்
கீழ்கண்ட 13 சட்டபிரிவுகளும்
இதில் இணைக்கப்பட்டுள்ளன.
1.நிலக்கரி வளம் உள்ள பகுதிகள்
கையக்கப்படுத்துதல் மற்றும்
வளர்ச்சி சட்டம்(மீத்தேன்
திட்டத்தை கொண்டு வர அதிக
வாய்ப்புகள்,)
2.தேசிய சாலை திட்டம் 1956.
3.நிலம் கையகப்படுத்துதல்(சுரங்கம்)
4.அணுசகதி சட்டம் (1962)
5.இந்திய டிராம்பே சட்டம்
(1886)
6.ரெயில்வே சட்டம்(1989)
7.பழங்கால நினைவகங்கள்
தொல்பொருள் ஆய்வு சட்டம்
(1958)
8.பெடரோலிய,கனிமவள
குழாய்வழி சட்டம் (1962)
9.தாமோதர் பள்ளதாக்கு
கார்ப்பரேசன் சட்டம் 1948
10.மின்சார சட்டம் (2003)
11.அசையா சொத்து கேட்பு
மற்றும் கைப்பற்றுதல் சட்டம்
(1952)
12.நிலம் கையகப்படுத்துவதால்
இடம் பெயர்ந்தோர்க்களுக்கான
மறுகுடியேற்ற சட்டம்.
13.மெட்ரோ ரெயில்வே
கட்டுமான சட்டம் 1978..
இப்பட்டியாக மக்களை
விரட்டியடிக்கும் பல
சட்டங்களை கொண்டு வந்து
மக்களை பாழும் குழியில்
தள்ளுகிறது

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...