Tuesday, 2 June 2015

பைசா கோபுரம்

பைசா கோபுரம்

பைசா கோபுரம் பற்றிய தகவல் !!!

இத்தலியில் பைசா நகரில் ஒரு கதீட்ரல் கட்டினார்கள். அருகாமையிலே கோயில் மணியடிக்க கட்டபட்ட கோபுரம். கடைசியில் "பைசா கோபுரம்" என்று புகழ்பெற்றது. 1173_ல் மூன்று மாடிகள் கட்டபட்ட உடனே கட்டிடம் சாயத்தொடங்கியது. ஒரு பக்கத்தில் நிலத்துக்கடியில் மண் உறுதியாக இல்லாமல் இருந்தது தான் காரணம். உடனே பயந்து போய் கட்டுமான வேலைகளை உடனே இடை நடுவே நிறுத்தி விட்டார்கள்.அது எவ்வளவு காலத்த

ிற்கு என்று தெரியுமா நூறு ஆண்டுகளுக்கு இதை தொடர்ந்து கட்டாமல் நிறுத்தி விட்டார்கள்!!

அதற்கு பின்னர் ஆயிரத்திற்கு மேட்பட்ட கட்டடக்கலை அனுபவசாளிகள், கட்டடம் விழாமல் தொடர்ந்து கட்ட முடியும், என்று அரசுக்கு திட்டம் தீட்டி அனுப்பினார்கள். அவர்களது வரை படத்திற்கு ஏதுவான அடிப்படையில் எட்டு மாடிகள் வரை கட்டப்பட்டன. கலிலியோவும் மாடியேறி விதவிதமான கற்களை கீழே போட்டு, புவியீர்ப்பை பற்றி சோதனை செய்தார்.

ஆனால்... பைசா கோபுரம் தொடர்ந்து சாய்கின்றது என்று தெரியவந்தது. அஸ்த்திவாரத்தை பலப்படுத்த புதுவகையில் சிமெண்ட் செய்து அஸ்த்திவாரத்க்கு செலுத்தி பார்த்தும் பயன் இல்லை. ஆண்டுக்கு ஆண்டு அங்குலம் வீதம் சாய்ந்துகொண்டுதான் இறந்தது

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் முதல் முறையாக சாயாமல் நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 800 ஆண்டுகளில் முதல் முறையாக இப்போதுதான் சாய்வதை நிறுத்தியுள்ளது இந்தக் கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியின் பைசா நகரத்தில் உள்ள இந்த சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களுல் ஒன்றாக கருதப்படுகிறது. 14 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த கோபுரம், 1174ம் ஆண்டு முதல் 1370ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் பல கட்டங்களாக கட்டப்பட்டது.

கோபுரம் கட்ட ஆரம்பித்த பின்னர் மெதுவாக சாயத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இன்ச், இன்ச்சாக சாய்ந்து வந்தது. இதனால்தான் இக்கோபுரத்திற்கு சாய்ந்த கோபுரம் என்ற பெயர் வந்தது.

இந்த நிலையில் கோபுரம் சாயாமல் தடுக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. தற்போது முதல் முறையாக கோபுரம் சாயாமல் நின்றுள்ளது.

கடந்த 800 ஆண்டுகளில் கோபுரம் சாயாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் 300 ஆண்டுகளுக்கு கோபுரம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...