Tuesday, 2 June 2015

சித்தர்கள்

                

                    ஜனகருக்கு சித்தர் கீதங்கள்


 வசிஷ்ட மகா முனி ஆத்ம ஞானத்தை ராமபிரானுக்கு   போதித்தார்.  அப்போது ஜனகர் ஒரு மகா ராஜா   ஞானம் அடைந்த வரலாறை கூறலானார். ஜனகர் ஒரு  மஹா ராஜா அவர் ஒரு நாள் தனிமையில் நந்த வனத்துக்குள் நுழைந்தார். அப்பொழுது   சித்தர்கள் பேசும் மொழிக்  கேட்டது அவைகளை ஊன்றி கேட்டார்.   உடனே காவலர் அமைச்சர் மற்றவர்களையும்  வெளியே சென்று அவரவர் கடமைகளை செய்யுபடி கேட்டுக் கொண்டார்.

பின் அவர் தன் அரண்மனையின் உச்சி மாடிக்கு சென்று ஒரு தனி அறைக்குள் சென்று தனிமையாக அமர்ந்து  தாளிட்டுக் கொண்டு தனிமையில் சித்தர் கீதங்களைப்  பற்றி சிந்திக் கலானார். அதன் உட் கருத்தையும், பொருளையும் சந்தேகமற தெளிவுற்றார். பின் தவத்தில் ஈடுப்பட்டார் சீவன் முக்தர் நிலை அடைந்தார். 

பின் அவர் மிகவும்  நெடுங்காலம்  நல்லாட்சி புரிந்தார். மன்னருக் கெல்லாம் மன்னராக திகழ்ந்தார். இறுதில் ஜோதிக் கெல்லாம் ஜோதியில்  இரண்டற கலந்தார். முக்தி அடைந்தார்.

உலக வரலாற்றி யிலாகட்டும், புராணங்களிலாகட்டும் ஜனகரைப் போல் மா மன்னராகவும் ஞானியாகவும் நெடுங்காலம் ஆட்சி செய்து, சீவான் முக்தராக வாழ்ந்து முக்தி அடைந்த மனிதர்கள் வேறு யாருமில்லை.     

வேத வியாசர் தன் மகன் சுகதேவர் சீவன் முக்தர் நிலை அடைந்தும் அதில் முழு திருப்தி அடையாமல் சற்று குழப்ப நிலையில் இருந்தார்.  அவர் சந்தேகத்தை வேத வியாசரால் தீர்த்து வைக்க முடிய வில்லை. கடைசில்  சுக தேவரை ஜனகரிடம் அனுப்பி வைத்தார். ஜனகர் அவரது சந்தேகத்தை தீர்த்து வைத்தார். 
அகத்தியர்  தன் பாடலில் ஜனகர் மறைத்த பொருளை விண்டிட்டேன் என்று பாடுகிறார். அதனால் ஜனகர் காலத்தால் அகத்தியருக்கு முன் தோன்றியவர் என தெரிகிறது. ஜனகருக்கு முன்பே சித்தர்கள் வாழ்ந்து வந்தனர்  என அறிகிறோம்.

சித்தர் கீதங்கள்
"அறிகிறவனும் அறியப்படுபவனும் ஒன்றாக சேருகின்றார்கள். சீவாத்மா பரமாத்மாவிலே  கலக்கிறது. மேலான ஞானமும் ஆனந்தமும் எழுகின்றன. இது ஆத்ம ஞானம் ஆகும். இதை நாட வேண்டும்."                                முதல் சித்தர்

"எல்லா வாசனைகளையும் ஒழிக்க வேண்டும். காண்கின்ற பொருள்கள்  சகலத்தையும் நீக்க வேண்டும். அப்பால் ஆத்மா அல்லது ஜோதிகளுக்கு ஜோதியாக விளங்குகிற பிரமன் மீது இடைவிடாமல் தியானம் புரிய வேண்டும்."                                                                                                    இரண்டாம் சித்தர்

"எல்லா பொருள்களையும் பிரகாசிக்கிறதும் உள்ளவைகளிலும் இல்லா தவைகளிலும் மத்தியில் உள்ளதும், சத்துக்கும் அசத்துக்கும் இடையில் நடு நிலைமையான கேந்திரத்தில் எழுந்தருளியிருக்கிறது மான சர்வ வியா பகமான நித்திய ஜோதியை இடையறாமல் நாம் தியானிக்க
வேண்டும்."                                                                                                     மூன்றாம் சித்தர் 

"சீவர்கள் எல்லோரும் நான் என்று எப்போதும் சொல்லிக்கொள்கிற ஸ்வயம் ஜோதியான ஆத்மாவின் மீது தியானிப்போம்."                               நான்காம் சித்தர்  

"எல்லா பொருள் களும் யாருக்கு சொந்தமோ அவருக்குள் அவை எல்லாம் திரும்புகின்றனவோ எவரால் யாவும் கிரகிகப்படுகின்றதோ எவருக்குள்ளே எல்லாம் உறபத்தி செய்யப்பட்டிரு க்கின்றனவோ எவரிடமிருந்து எல்லாம் உதித்துள்ளனவோ யாருக்காக அவை தங்குகின்றனவோ எவருக்குள்ளே தங்கு கின்றனவோ எவருக்குள் அவை பிழைக்கின்றனவோ  அப்பேற்பட்ட சத்தியப் பொருளை   எல்லாமாக இருப்பவரை நாம் நமஸ்கரிக்கின்றோம்."                                                                                  ஐந்தாம்  சித்தர் 

"தங்கள் இருதைய குகைக்குள் வீற்றிருக்கும் இறைவனை புறக்கணித்து விட்டு வெளியே கடவுளைத் தேடுகிறவர்கள் உண்மையிலே கடற்கரை சங்குகளை தேடப் போகின்றார்கள். தங்கள் கைகளில் கிடைத்துள்ள கஸ்தூரிமணி  விட்டு விட்டு."                                                                    அடுத்த   சித்தர் 

"ஆசைகள் அனைத்தையும் பரிபூரணமாக ஒழித்தவர்கள் மாத்திரமே இந்த ஆத்மாவை பெறக்கூடும்."                                                                 மேலும் ஒரு சித்தர்  

"சகல உலகாயுத பொருள் களிடத்திலும்  சந்தோசம் இல்லாமையிணை அறிந்தும் கூட  தங்கள் உள்ளங்களில்  பற்று வைக்கிறவர்கள் கழுதைகள்தான், மானுடர்கள் அல்ல."                                                                        மற்றும் ஒரு சித்தர்        

"இந்திரியம் என்னும் பாம்புகள்  உடம்பாகிய குழிகளிலிருந்து மீண்டும் மீண்டும் தலைதூக்கி எழுகின்றன. இந்திரன் வசராயுதத்தால் மலைகளை உடைத்தது போன்று இவைகள் திரும்ப திரும்ப உறுதியான விவேகம் என்ற தடியால் அடித்து கொள்ளப்பட வேண்டும்."                     இன்னும் ஒரு சித்தர்  

"அமைதியான உள்ளம்  கொண்டவனும் சம நோக்கு எய்திய வனும் எவனோ அவன் ஆனந்தமும் அறிவு சொருபமாகிய சச்சிதானந்த ஆத்மாவை பெறுகிறான். இதுதான் மோட்சம் அல்லது இறுதி விடுதலை " 
                                                                                                           மேலும்ஒரு சித்தர்                                                                                                                                                                                            

சித்தர்களின் மேற் குறிப்பிட்ட கீதங்கள் சித்தர் கீதங்கள்  என அழைக்கப் படுகின்றன. 

சித்தர் கீதங்ககளை கேட்டு சிந்தித்து தெளிவு பெற்ற ஜனகர் தனக்கு தானே கூறிக்  கொண்ட வைகளை  பின்னால் வெளியிடுவோம்.   

ஒருவர் சீவன் முக்தர் நிலை அடைந்து விட்டால் இவ்வுலகில் இந்த பூத உடலுடன் மக்களோடு மக்களாக எவ்வளவு காலம் வெண்டு மானாலும் வாழலாம் என தெரிகிறது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...