Friday 12 June 2015

சட்டம்


சட்டம்

தன்னைத்
தானே காப்பாற்றிக்
கொள்ள இயலாமலும்,
தன்னைப் பராமரிக்க
வேண்டியவரும் கைவிட்ட
நிலையில் இருக்கும்
ஒரு இந்தியக்
குடிமகனுக்கு நம்
நாட்டுச் சட்டம் என்ன வழி சொல்கிறது?
அது கொடுக்கும்
பாதுகாப்புதான் என்ன?
‪#‎இந்திய_குற்றவியல்_சட்டத்தின்‬ (Criminal
Procedure Code)
பிரிவு 125ன் கீழ்...
=> தன்னைப்
பாதுகாத்துக் கொள்ள
இயலாத மனைவி.
=> தன்னைப்
பாதுகாத்துக் கொள்ள
இயலாத சட்டம்
அங்கீகரிக்கும் மற்றும்
சட்டம் அங்கீகரிக்காத
மைனர் குழந்தைகள்.
ஒருவேளை இவர்களுக்கு
திருமணம்
நடைபெற்றிருந்தாலும்
இந்தச் சட்டம் பொருந்தும்.
=> வயது வந்த
சட்டப்பூர்வமான அல்லது சட்டம் அங்கீகரிக்காத ஒருவரின்
மகன், மகள் உடலளவிலோ,மனத்தளவிலோ பாதிக்கப்பட்டிருக்கும்
பட்சத்தில்.
=> ஒரு நபரின் தன்னைத்
தானே பராமரித்துக்
கொள்ள இயலாத தாய்,
தந்தையர்.
மேற்கூறிய இவர்கள்
அனைவரும் தன்னுடைய
கணவர், தகப்பன் மற்றும்
பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம்
கோர இந்தப்
பிரிவு வழிவகை செய்கிறது.
இந்தச் சட்டப் பிரிவில்
மனைவி என்ற சொல்
சட்டப்பூர்வமான
மனைவியை மட்டுமே குறிக்கும்.
மேலும், கணவரால்
விவாகரத்து செய்யப்பட்ட
பெண் மறுமணம்
செய்யாத பட்சத்திலும்,
எந்தவிதமான நிரந்தர
ஜீவனாம்சம் பெறாத
பட்சத்திலும், தன்னைத்
தானே பராமரித்துக்
கொள்ள எந்தவிதமான
வருமானமும் இல்லாத
பட்சத்திலும் இந்தச்
சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம்
கோர இயலும்.
இந்தச் சட்டத்தின் கீழ்
வழக்கு தாக்கல் செய்ய
விரும்பும் நபர் தான்
எங்கே வசிக்கிறாரோ,
எதிர் தரப்பினருடன்
கடைசியாக
எங்கே வசித்தாரோ, அந்த
இடத்திற்குட்பட்ட
குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்திலோ (Magistrate
Court) அல்லது குடும்பநல
நீதிமன்றத்திலோ ஜீவனாம்ச
வழக்கு தாக்கல்
செய்யலாம். மைனர்
குழந்தைகளுக்கு தாயே காப்பாளராக
இருந்து வழக்கு தாக்கல்
செய்ய இயலும்,
இது சட்டம் ஏற்றுக்
கொள்ளாத
குழந்தைக்கும் (Illegitimate
child) பொருந்தும்.
மேலும் இந்த
வழக்கு நிலுவையில்
இருக்கும்
போது இடைக்கால
ஜீவனாம்சம் கோரவும்
இந்தச் சட்டத்தில்
இடமுள்ளது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...