Friday, 12 June 2015

பீடி, சிகரெட்டுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு


 பீடி, சிகரெட்டுக்கு தடை விதிக்க
கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு


பீடி,
சிகரெட்டுக்கு தடை விதிக்க
கோரி சுப்ரீம்
கோர்ட்டில் பொது நல
மனு: மத்திய–மாநில
அரசுகள் பதில் அளிக்க
உத்தரவு
பீடி,
சிகரெட்டுக்கு தடை விதிக்க
வேண்டும் என்று சுப்ரீம்
கோர்ட்டில் பொதுநல
மனு தாக்கல்
செய்யப்பட்டது.
நாடு முழுவதும்
தற்போது பொது இடங்களில்
பீடி, சிகரெட் பிடிக்க
தடை அமலில் உள்ளது.
மேலும் 18
வயதுக்குட்பட்டவர்களுக்கு பீடி,
சிகரெட் மற்றும்
புகையிலை பொருட்கள்
விற்கவும்
தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்
நாடு முழுவதும் பீடி,
சிகரெட்டுக்கு அடியோடு தடை விதிக்க
வேண்டும் என்று சுப்ரீம்
கோர்ட்டில் பொது நல
மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு சுப்ரீம்‬
கோர்ட்டில்
விசாரணைக்கு வந்தது.
அப்போது சிகரெட்,
பீடிக்கு தடை விதிப்பது பற்றி மத்திய,
மாநில அரசுகள் பதில்
அளிக்குமாறு நோட்டீஸ்
அனுப்ப நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
6 ஆண்டுகளுக்கு முன்
பொது இடங்களில்
சிகரெட், பீடி புகைக்க
தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இதை யாரும்
சரியாக
கடைப்பிடிக்கவில்லை.
பொது இடத்தில் எளிதாக
பீடி, சிகரெட்
பிடித்துச்சென்று விடுகிறார்கள்.
எனவே பீடி,
சிகரெட்டை அடியோடு தடை செய்ய
வேண்டும்
என்று மனுவில்
குறிப்பிடப்பட்டு உள்ளது.

சட்டம்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...