Friday 12 June 2015

இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம்


                                       இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம்


இந்தியத் தொழிற்சாலைகள்
சட்டம் 1948 பிரிவு 52ன் கீழ்
வார விடுமுறை குறித்த
விதிமுறைகள்
தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை,
1. வாரத்தின் முதல் நாள்
அதாவது ஞாயிற்றுக் கிழமை
சாதாரணமாக விடுமுறை
நாளாகும்.
2. தொழிற்சாலை நிர்வாகி,
ஞாயிற்றுக் கிழமைக்குப்
பதிலாக அதற்கு முன்னுள்ள
அல்லது பின்னுள்ள மூன்று
கிழமைகளில் ஏதேனும் ஒரு
நாளை விடுமுறை நாளாக
அறிவிக்கலாம்.
3. ஒருவரது வார விடுமுறை
நாள் என்பது அவரது
மாற்றுமுறை வேலை நேரம்
முடிந்த நிமிடத்திலிருந்து
தொடங்கி அடுத்த 24 மணி
நேரத்தைக் குறிக்கும்.
4. வார விடுமுறை நாள்
இல்லாமல் ஒருவர் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மேல் வேலை பார்க்கக் கூடாது.
5. வார விடுமுறை வழங்க
மறுத்து தொடர்ந்து வேலி
செய்யுமாறு வற்புறுத்தப்படும்
போது தொழிலாளி இழப்பீடு கோரிப் பெற உரிமையுடையவராகிறார்.
தேசிய விடுமுறை நாட்களாக
மூன்று நாட்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன:
1. குடியரசு நாள் - சனவரி 26
2. இந்திய விடுதலை நாள் -
ஆகத்து 15
3. அண்ணல் காந்தியடிகள்
பிறந்த நாள் - அக்டோபர் 2
இந்நாட்களில் அனைத்து
அமைப்புக்களும் கட்டாயமாக
விடுமுறை வழங்குமாறு
சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள விடுமுறை
நாட்கள் புத்தாண்டு தினம்
* ஜனவரி 1 பொங்கல்
* திருவள்ளுவர் தினம்
* உழவர் திருநாள்
* குடியரசு தினம்
* மிலாடி நபி
* தெலுங்கு வருட பிறப்பு
* வங்கிகள் வருடாந்திர கணக்கு
முடிப்பு
* மகாவீர் ஜெயந்தி
* புனித வெள்ளி
*புத்தாண்டு தினம்,டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினம்
* மே தினம் மே
* சுதந்திர தினம் ஆகஸ்டு
* ரம்ஜான்
* கிருஷ்ண ஜெயந்தி
* விநாயகர் சதுர்த்தி
* காந்தி ஜெயந்தி
* ஆயுத பூஜை
* விஜய தசமி
* பக்ரீத்
* தீபாவளி
* மொகரம்
* கிறிஸ்துமஸ்
விடுப்பு நாள்
இந்த விடுமுறை நாட்களைத்
தவிர பணியாளர்களின்
தனிப்பட்டத் தேவைகளுக்காக
"பணி விடுப்புக்கள்"
கொடுக்கப்படுகின்றன. இவை
தற்செயல் நிகழ்வுகள், பேறு
காலத் தேவைகள்,
உடல்நலக்குறைவுகள்
போன்றவற்றிற்காக ஆண்டுக்கு
இவ்வளவு நாட்கள் என
ஒவ்வொரு அமைப்பாலும்
வரையறுக்கப்பட்டு ஊழியர்
நியமன உத்தரவில்
குறிப்பிடப்படுகின்றன. தவிர
நடுவண் மற்றும் அரசு மற்றும்
அரசு நிறுவனங்களில் பதினோரு
வேலை நாட்களுக்கு ஒருநாள்
என ஈட்டிய விடுப்பு
வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...