Friday, 12 June 2015

தம்பதியின் உரிமைகள்


தம்பதியின் உரிமைகள்

தம்பதியின் உரிமைகள்
(Restitution of Conjugal
Rights)
சட்டப்படி திருமணம் செய்து
கொள்ளும் தம்பதிகள் பரஸ்பர
ஒற்றுமையுடன் வாழும்
உரிமை பெறுகிறார்கள்.
எதிர்பாராத சூழ்நிலையில்
கணவன், மனைவி இடையில்
பிரச்னை வந்து தனித்தனியாக
வாழும் நிலை ஏற்பட்டாலும்,
தம்பதியரில் யாரும்
நீதிமன்றத்தை நாடி தங்களை
ஒன்றாக வாழ
உத்தரவிடும்படி முறையிடும்
உரிமை பெற்றுள்ளனர்.
தவிர்க்க முடியாத நிலையில்
நீதிமன்றம் மூலம்
விவாகரத்து பெறலாம்
(Judicial Separation and
Divorce):
திருமணமான தம்பதியர்
இடையில் கருத்து வேறுபாடு
ஏற்பட்டு நீதிமன்றத்தின்
உத்தரவின் பேரில் தனித்
தனியாக வசிப்பதை Judicial
Separation என்று
கூறப்படுகிறது. அதே
சமயத்தில் தம்பதியர்
நிரந்தரமாக பிரிவதை
விவாகரத்து என்று
அழைக்கப்படுகிறது. தவிர்க்க
முடியாத சூழ்நிலையில்
தம்பதியரில் யாராவது ஒருவர்
கீழ் காணும் காரணங்களை
முன்வைத்து தனியாக பிரிந்து
வாழ்வது அல்லது நிரந்தரமாக
பிரிந்துவிட விவாகரத்து கோரி
நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்ய முடியும்.
திருமணமான தம்பதிகள்:-
* கணவர் வேறொரு
பெண்ணுடன் கள்ளத்தொடர்பு
வைத்திருந்தாலோ அல்லது
மனைவி வேறோரு ஆணுடன்
கள்ளத்தொடர்பு
வைத்திருந்தால்
* தம்பதியரில் யாராவது
ஒருவர் அதிகார
தோரணையுடன்
கொடுமைபடுத்தினால்
* இரண்டாண்டுகளுக்கு மேல்
யாராவது ஒருவர் அடிமை
தனத்துடன் நடந்துகொண்டால்
* தம்பதியரில் யாராவது
ஒருவர் இந்து மதத்தை விட்டு
வேறு மதத்தை பின்பற்றினால்
* தம்பதியரில் யாராவது
மனநோயாளியாக
பாதிக்கப்பட்டால், எய்ட்ஸ்
உள்பட பாலின நோய்
பெற்றிருந்தால், தொழுநோயால்
பாதிப்பு அல்லது
குணப்படுத்த முடியாத நோய்
தாக்கும் பட்சத்தில்
* யாராவது உலக
பற்றில்லாமல் வாழ்ந்தால்,
தம்பதியரில் யாராவது ஒருவர்
மற்றொருவர் மீது திருமண
விவகார உரிமையை மீண்டும்
பெறுவதற்கு நீதிமன்றத்தில்
டிகிரி பெற்றுகொண்டு பின்
ஓராண்டு முடிந்தால் கணவர்
அல்லது மனைவி ஆகிய
இருவரில் ஒருவர்
வேறொருவருடன் வாழ்ந்தால்
* தம்பதியரில் யாராவது
ஒருவர் 7 ஆண்டுகள்
காணாமல் போய் இருந்து,
அவர் உயிருடன் இருக்கும்
தகவல் உறுதியாக தெரியாத
பட்சத்தில்
* நீதிமன்ற உத்தரவின் பேரில்
யாராவது ஒருவர் ஓராண்டு
பிரிந்து வாழ்ந்து வாந்தால்
மனைவிக்கு மட்டும்
இருக்கும் கூடுதல்
உரிமைகள்:-
* திருமணம் ஆனபின்
கணவருக்கு ஏற்கனவே
திருமணமாகி முதல் மனைவி
உயிருடன் இருப்பது
தெரிந்தால்
* கணவர் வேரு யாராவது
பெண்ணை பாலியல்
பலாத்காரம் செய்திருந்தாலோ
அல்லது சபல புத்தியுடன்
திரிந்தாலோ
* எதிர்பாராத சூழ்நிலையில்
கணவரிடம் ஜீவனாம்சம்
அல்லது டிக்ரி நீதிமன்றத்தில்
பெற்றுக்கொண்ட ஓராண்டு
காலத்தில் தம்பதிகள்
தாம்பத்திய வாழ்வில்
ஈடுபடாமல் இருந்தால்
* திருமணம் செய்துகொண்ட
சமயத்தில் 15 வயதிற்கும்
குறைவாக இருக்கும்
பட்சத்தில் 18 வயது நிரம்பும்
வரை திருமணத்தை
நிராகரிக்கலாம்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...