கள், மது, சாராயம் இவற்றை குடித்து சாகா உடலை அடையலாமா?
கள்ளினை குடித்து உடம்பினை கல் போல் வசர தேகமாக்கி கொள்ளலாம் என்றும். சித்தர் பாடல் ஒன்றை பாடி, அது பரி பாசையாக பாடப்பட்டது என்றும் அதற்க்கு தான் உண்மை பொருள் அறிந்து கண்டு பிடித்து விட்டதாகவும், பல விளக்கம் சொல்லி, ஒரு மரத்து கள்ளினை ஒரு மண்டலம் சாப்பிட்டால் உடல் கல் தூண் போல் மாறி விடும் என்றும். எல்லோரும் கள் சாப்பிட்டு வசிர தேகமாக மாற்றிக் கொண்டாள், உலகம் இடம் கொள்ளாது என்று சித்தர்கள் மறை பொருளாக கூறியுள்ளார்கள் என்று கூறுகிறார் அது உண்மையா?.
இயேசுவை வழிபடுபவர்களில் சிலர் வழிபாட்டின் போது மது வைப்பதை தவிர்க்க முடியாது என்றும், மதுவை வைத்து வணங்கி பின் குடிக்கிறார்கள். அப்படி செய்தால் பரம பிதாவை அடையலாம் என்கின்றனர் அது உண்மையா?.
இந்து மதத்தில் பாமர மக்கள் கருப்பு சாமி, வேட்டைக்காரன் போன்ற சாமி களுக்கு சாராயம் வைத்து படைக்கிறார்களே அதன் பொருள் என்ன. உலகம் முழுதும் பெரும்பாலான பாமர மக்களிடையே இந்த பழக்கம் உள்ளதே அதன் பொருள் என்ன?.
சித்தர்கள் தன் சில பாடல்களில் மது அருந்தும் படியும் அப்படி மது அருந்தினால் உடல் காய கற்பமாக மாறும் என்றும் எல்லா வியாதிகளும் தவிடு பொடியாகி விடும் என்றும், இளமையாகி விடலாம் என்றும் பாடி யுள்ளனர் அது உண்மையா?
மேலே சொல்லப்பட்டவை எல்லாம் உண்மையே. அதில் எந்த ஒரு தவறுமில்லை. ஆனால் அவைகள் எல்லாம் பரிபாசையாக சொல்ல ப்பட்டவைகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
வாசி யோகத்தால் உடல் கற்ப சரிரமாக மாறும். அதாவது உடல் விந்து மயமாக மாறும். அதாவது உடல் சுன்ன உடம்பாக மாறும். இரண்டாவது தீட்சையின் போது சிரசின் மூலாதாரத்தில் இருந்து அமிர்தம் வழிந்து 72000 நாடிகள் வழியாக உடல் முழுதும் பாயும் அந்த அமிர்தத்தையே பெரியோர்கள் பரிபாசையாக கள் , மது, சாராயம், வாட்டர் ஆப் லைப் என்று ஆயிர கணக்கான பெயரிட்டு அழைத்துள்ளார்கள்.
உண்மையான பூசை, முறையாக செய்யும் போது அமிர்தம் சுரப்பதை தவிர்க்க முடியாதது ஆகும்.
இந்த அமிர்தத்தை உண்ணுபவர்கள் உடல் காய சித்தியாகும் அஷ்டமா சித்துகள் அடைவர், சாகாமலும் இருப்பார்.
மக்கள் அவர் அவர் அறிவு தளத்திற்கு தக்கவாறு கள் , மது, சாராயம் போன்ற வற்றை அவர் அவர் கடவுளுக்கு படைத்து பின் குடிக்கின்றனர். இவர்கள் உண்மையான வழிபாட்டை அறியாதவர்கள்.
உலகத்தில் உள்ள எல்லா சித்தர்களும் கள் , மது, சாராயம் குடிப்பது பஞ்சமா பாதகங்களில் ஒன்று என்று கூறியுள்ளனர். நாங்கள் எல்லாம் கள் கஞ்சா குடித்தா சித்தரானோம் என்று வினாவியுள்ளனர்.
அறிவு தளத்தில் கீழ் உள்ள மக்கள் அவைகளையாவது குடித்து விட்டு சிறிது நேரம் தன்னை மறந்து இருக்கட்டுமே என்று பரிபாடையாக எழுதியுள்ளார்கள்.
கள் , மது, சாராயம் இவற்றை குடிப்பவர்களும், குடிக்க சொல்லுபவர்களும் தன்னை அழித்து கொள்ளுவது மட்டும் அன்றி தன் குடும்பத்தையும் சமுதா யத்தையும் கெடுத்தவர்கள் ஆவர்.
No comments:
Post a Comment