Friday, 12 June 2015

கூலி வழங்கல் சட்டம்


கூலி வழங்கல் சட்டம்

கூலி வழங்கல் சட்டம் -
1936
இந்தியாவில் முதலாளிகள்
தொழிலாளர்களுக்கு,
கூலியினை வழங்காமல்
அல்லது தாமதப்படுத்தி
வழங்கி தொழிலாளர்களைச்
சுரண்டுவதைத் தடுக்கும்
நோக்கத்தில்
கொண்டு வரப்பட்டது
கூலி வழங்கல் சட்டம் - 1936
(The Payment of
Wages Act - 1936) ஆகும்.
இச்சட்டம் தொழிலாளர்களுக்கு
கொடுக்கப்பட வேண்டிய
நியாயமான கூலி, குறித்த
வடிவத்தில், குறிப்பிட்ட
காலத்தில் சட்ட விரோதமான
பிடித்தங்களின்றி வழங்கப்பட
வேண்டும் என்பதை உள்ளடக்கமாகக்
கொண்டு இச்சட்டம்
வடிவமைக்கப்பட்டுள்ளட்து.
கூலி
கூலி என்பது முதலாளியால்
கொடுக்கப்பட்ட
வேலையை செய்து முடித்தத்
தொழிலாளிக்கு மறு பயனாக
வழங்கப்படும் தொகையாகும்.
இது பணமாகவோ அல்லது
வங்கிக் காசோலையாகவோ
வழங்கப்படலாம். இவை தவிர
கூலி என்பது,
1. முதலாளிக்கும்
தொழிலாளிக்கும்
ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்
அல்லது நீதிமன்ற உத்தரவின்
பேரில் வழங்கப்படும்
தொகை கூலியாகும்.
2. மிகுதி நேரம் சம்பளம்
(Over Time wage)
விடுமுறை நாள் சம்பளம்
போன்றவையும்
கூலி எனப்படும்.
3. மீதூதியம் போன்ற
எந்தவொரு கூடுதல்
சன்மானமும் கூலி எனப்படும்.
வேலையின் முடிவில் அந்த
வேலைக்காக வழங்கப்படும்
தொகை கூலி எனப்படும்.
கூலி இல்லாதவை
1. பயணப்படி அல்லது பயணச்
சலுகைத் தொகை
2. பணியின் தன்மையினால்
வரும் கூடுதல் செலவுகளைச்
சரிக்கட்டப்பட வழங்கும் தொகை
3. நன்றித்தொகை அல்லது
பணிக்கொடை
4. லாபமாகக் கிடைக்கும்
மீதூதியம்
5. வீட்டு வசதி, தண்ணீர்
வசதி மற்றும் மின்சார
வசதி போன்ற சேவைகள்
6. ஓய்வூதியம்,
வைப்புநிதி மற்றும்
இவைகளின் மேலான வட்டித்
தொகை, இவற்றிற்காக
முதலாளி செலுத்தும் சந்தாத்
தொகை.
-போன்றவைகள் கூலியாகக்
கருதப்படாது.
கூலியின் வடிவம்
கூலியை பணமாகவோ அல்லது
வங்கிக் காசோலையாகவோ மட்டும் வழங்க வேண்டும்.
வேறு வழிகளில்
இவை வழங்கக் கூடாது.
கூலி வழங்கும் நாட்கள்
தொழிலாளர்களுக்கு கூலி
அவ்வப்போது வழங்கப்பட்டு
விட வேண்டும். மாதாந்திர
சம்பளத்தில் வேலை பார்க்கும்
தொழிலாளிக்கு மாதத்தின்
முதல் ஏழு நாட்களிலிருந்து பத்து நாட்களுக்குள் மாதக்
கூலி வழங்கப்பட வேண்டும்.
கூலி வழங்கப்படும் காலம்
கூலி குறிப்பிட்ட கால
இடைவெளியில் சரியாக
வழங்கப்பட வேண்டும். கால
இடைவெளி என்பது வாரம்,
மாதமிருமுறை, மாதம்
என்பதைக் குறிக்கும். இந்தக்
கால இடைவெளியில் வாரம்
என்றால் குறிப்பிட்ட
கிழமையிலும்,
மாதமிருமுறை எனில்
குறிப்பிட்ட தேதிகளிலும்
மாதமாக இருந்தால் குறிப்பிட்ட
சில நாட்களுக்குள்ளும்
வழங்கப்பட வேண்டும்.
சட்ட விரோதமான பிடித்தங்கள்
தொழிலாளர்களுக்கு சேர
வேண்டிய
கூலியிலிருந்து நியாயமான
பிடித்தங்கள் தவிர
சட்டவிரோதமான பிடித்தங்கள்
எதுவும் செய்யக் கூடாது.

சட்டம்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...