Tuesday, 2 June 2015

சித்தர்கள்

சித்தர்கள்  உலகின் திறவுகோல் - தொடர்



முன்னுரை   
வணக்கம்.  சித்தர் ஒர்ல்டு.காம், சித்தர் உலகம் பிளாக் ஸ்பாட் மூலம தங்களை சந்திப்பதில் அளவு கடந்த உவகைக் கொள்கிறேன்.  இத் தளத்தில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும், உலகத்தில் ஒரு சிலரால் ஆண்டு அனுபவித்து வரும் கலையாகும். பரம்பரையாக செவி வழியாக குரு சீடன் மூலமாக கற்று  அனுபவித்து வரும் கலையாகும்.  இதை விட சிறந்த கலை அல்லது  அறிவோ இவுலகில் கிடையாது. இதைத்தான் உலகிலுள்ள மனித சீவன்கள் அனைத்தும் கற்றுக் கொள்ள துடிக்கின்றன. அனால் குருவில்ல குருட்டு வித்தையாக தடம் புரண்டு பல வழிகளில் செல்கின்றனர்.  
 பத்து புத்தகம் படித்து விட்டு பதினோறாவது புத்தகம் எழுதுவது போல் இக் கட்டுரை அல்ல என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.  அறிவு பூர்வ மாகவும், அனுபவ பூர்வமாகவும் தெளிந்தவற்றை பகிர்ந்து கொள்ளும் விதமாக எழுதப் படுவதாகும்.  இதை மேலோட்ட மாகவோ, பொழுது   போக்கிற்காகவோ படித்தால் ஒரு பலனும் காணார்.  இதை பல முறை ஊன்றி படித்தும்,  சிந்தித்தும் கருத்தை  புரிந்து கொண்டால் நீ சித்தர் உலகில் அடி எடுத்து வைத்து விட்டாய் என்பதாகும்.   இத் தளத்தில் கொடுகப்பட்ட பொன் மொழிகளை புரிந்து கொண்டு அதன் வழியில் நடந்தால் இவ் உலகில் அடைய முடியாதது ஒன்றும் இல்லை.
சித்தர் உலகம் என்றால் என்ன.
சித்தர் உலகம் என்றால் ஏதோ சில சாமியார்கள் தாடி சடா முடியுடன் அழுக்கு படிந்த கிழிந்த சட்டையுடனும், பிச்சைக்காரன் போலும், பைத்தியக் காரர்கள் போல் சுற்றிக் கொண்டும்,  திரு நீறு கொடுப்பவர் என்றும். அவரைப் பார்த்து தரிசனம் பெற்றால் நாம் நினைத்தது எல்லாம் நடக்கும் என்றும் அவரை மக்கள் தேடி அலைவார்கள். சில சித்தர்கள் பேசுவது யாருக்கும் புரியாது. சிலர் சித்தரின் வாயில் வைத்த பொருளை நாம் தின்றால் அதிர்ஷ்டகாரர் ஆகலாம் என்று அதற்காக தவம கிடப்போர் ஏராள ம். சித்தர்கள் தங்கம் செய்பவர்கலாம் அவர்களை கண்டு நல்லவராக நடித்தால் தங்கம் செய்யும் கலையிணை உடனே கற்று கொடுத்து விடுவார்கள் என்று சித்தர்களைத் தேடி காடு மலை என்று அலைந்து கொண்டு இருப்பவர்கள் ஏராளம் ஏராளம். இப்படி நினைத்து இந்த உலகில் நுழைந்து வெற்றி கண்டவர்கள் ஒருவராவது உண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சித்தர்களைப் பற்றி இப்படி ஒரு கருத்து நிலவுவது மிகவும் தவறானதாகும். இதிலும் சில உண்மை இருக்கலாம், அதன் உண்மை பொருளை தெரிந்து கொண்டால். சித்தர் பெருமைகளைப் பற்றியும், அவர்களின் அறிவையும் அனுபவத்தையும் பெறுவது மிகவும் எளிது.   அதற்கு வழி தொடர்ந்து இக் கட்டுரையினை    படியுங்கள்.                                                                       தொடரும்.

சித்தர்கள் நிலை 

எனது அறிவுக்கு எட்டியவரை இவ்வுலகில் உயர்ந்த பதவிகள் மூ ன்று . அமெரிக்க ஜனாதிபதி, இந்திய ஜனாதிபதி, ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவர். நாம் இதைவிட அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த பதவிகள் கிடையாது என்று நினைக்கிறேன்.

அமெரிக்க ஜனாதிபதிக்கோ அளவு கடந்த அதிகாரங்கள். ஆலோசகர்கள் படைகள் என்று ஏராளம் ஏராளம். இருப்பினும் அவர்கள் மற்ற நாட்டின் மீது போர் தொடுப்பதும், கருத்து வேறு பட்ட நாட்டில் உள் கலவர்த்தை தூண்டி பிரிவினையினை உண்டாக்கவும். அதிக முயற்சியும்; செலவும் செய்கிறார்கள். தன் நாட்டின் நலனையும் காக்க வேண்டி யுள்ளது. அதனால் அமெரிக்க ஜனாதிபதிக்கோ அமைதியாகவோ, நிம்மதியாகவோ, நிறைவாகவோ வாழ முடியாத நிலை, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அவர்களும் சாதார்ன மனிதர்களாகி விடுகிறார்கள்.

ரோம் நகரத்தின் ராசாவாக எல்லா அதிகரத்துடனும், செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்து கொண்டு இருப்பவர் போப் ஆண்டவர் ஆவார். அவர் இயேசுவின் கொள்கைகளை உலகம் பூராவும் பரப்பும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் ஏசு வின் நிலையினை அடையும் சூழலில் உள்ளார். அவருக்கு உள்ள பொறுப்பு புதிதாக எத்தனை சர்ச்சுகள் கட்டப் பட்டுள்ளது. எவ்வளவு மக்கள் மத மாற்றம் செய்யப்பட் டுள்ளார்கள் என்பதை மேற்பார்வையிடவும், அதற்கான செல்வத்தை திரட்டுவதும் தான் அவரது முக்கிய கடமை. இருப்பினும் அவர்களும் ஆரோக்கியமான, அமைதியான, சந்தோஷமான வாழ்க்கையினை அடைய முடிய வில்லை.

(ஒரு குறிப்பிடப் பட்ட மனிதரையோ, அல்லது குறிப்பிட்ட பதவினையோ குறை சொல்ல எழுதப் பட்டது அல்ல இது. இவ்வளவு பெரும் பதவியில் உள்ளவர்களும் முழுமை பேற்றினை அடைய முடியவில்லை என்பதை சுட்டி காட்டவே இதனை எடுத்து காட்டி யுள்ளோம்)

இன்றைய உலகில் பணக்காரர்களின் முதல் வரிசை பட்டியல் வருடம் ஒரு முறை மாறிக் கொண்டே உள்ளது. அவர்களும் சந்தோசமாக இல்லை. அவர்களில சிலர் நடிகையோ அல்லது புகழ் பெற்ற பெண்மணிகள் அணிந்தி ருந்த சட்டிகளை (உள் ஆடை ) லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி முகர்ந்து கொண்டு ள்ளார்கள் அவர்கள் இன்பம் இன் நிலையில்தான் உள்ளது.

இதனால் நாம் தெரிந்து கொள்ளுவது, பதவி, பட்டம், பணம் அதிகாரம் இவைகளால் அமைதினையோ, ஆனந்தத்தையோ அளவு கடந்த ஆற்றலையோ, அழியா தன்மையோ அடைய முடியாது என அனுபவ பூர்வமாக தெரிகிறது.

யார் சித்தர்கள்.  

சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள். சித்தத்தை சிவன்பால் செலுத்தி கடவுள் நிலையை அடைந்த வர்கள் சித்தர்கள். அஷ்டமா சித்துக்களைப் பெற்றவர்கள் சித்தர்கள். நவலோகங் களையும் தங்கமாக்க வல்லவர்கள் சித்தர்கள். தங்கள் வாழ நினைக்கும் காலம் வரை இந்த பூத உடலுடன் இந்த உலகில் வாழ வல்லமை பெற்றவர்கள். தான் நினைத்தால் இந்த உடலை விட்டு செல்லவும் அல்லது இந்த உடலை பஞ்சபூதங்களாக பிரித்து இறைவனோடு இரண்டற கலக்கும் முக்தி நிலையை அடைந்தோர் சித்தர்கள். உடலிருக்க உயிர் போன மாயம் என்ன என்று மக்கள் புலம்புவர் . ஆனால் உயிரிருக்க உடலை மறைத்தவர்கள் சித்தர்கள்

சித்தர்கள் சாகாவரம் பெற்றவர்கள். பல உகங்கள் இந்த பூ த உடலுடன் இந்த பூமிதனில் வாழ்பவர்கள்.

அட்டமா சித்துக்களை கை வரப் பெற்றவர்கள் , அதாவது கடவுளால் என்ன என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வல்லவர்கள்.
ஒரு சிறந்த சித்த வைத்தியனால் நவ லோகங்களையும் தங்கமாக்கி விற்று உண்ண முடியும்.

எல்லா வியாதிகளையும் தவிடு பொடியாக்கி விடுவர்.
தன் தரும பத்தினி களுடன் கால வரம்பு இன்றி விந்து வெளியேறாமல் போகம் செய்ய வல்லவர்கள்.

சித்தர்கள் மண்ணிலும் தண்ணிலும் உயிருடன் சமாதில் இருக்கிறார்கள்
உலகம் முழுதும் உள்ள மொழி, கடவுள், கலாசாரம், சாங்கியம், சம்பிரதாயம், முதலிய வைகனை உருவாக்கினவர்கள் சித்தர்களே. 

சித்தர்கள் எதோ ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் அவர்கள் எப்போதோ ஒரு காலத்தில் தோன்றுவார்கள் என்ற கருத்து மக்களிடே நிலவி வருகிறது. இது தவறான கருத்தாகும். 

ஜட்ஜ் பலராமய்யா அவர்கள் தன வாழ் நாளில் பல சாதுக்களை கண்டு பழகியுள்ளார் அவர்களில் ஒரு சாது மணல் பரப்பின் மீது நடந்து செல்லும் போது தனது கால் பேரு விரலால் மணலை வாரி வீசி அவைகள் கீலே விழும் போது வைர கற்களாக வீழ்ந்ததாம். அது அவர் நேரில் கண்ட காட்சி.  

மற்றும் ஒரு சாது ஒரு மொட்டை தலையின் மீது தனது கையினை வைக்க அவரது தலையில் உடனே கிராப்பு விடும் அளவிற்க்கு மயிர் முளைத்ததை அவர் கண்டுள்ளார்.

கிட்ட திட்ட   500    ஆண்டுகள் இவ் உலகில் பூத உடலுடன் வாழ்ந்து கொண்டிருந்த கோடி சுவாமிகளை நான் பல தடவை பார்த்து ஆசியும் பெற்று யுள்ளேன்.

இயேசு நாதர் யூதர் இனத்தில் பிறந்தவர். ஆனால் அவர் வாழ்க்கை நமது சித்த பரம்பரையாகும். சித்தர் கொள்கையும். கோட்பாடும், வாழ்க்கை முறையும் ஒன்றே. இது சித்தர்களைப் பற்றி அறிந்தவர் களுக்கே தெரியும். மற்றவர்கள் அறியார். இயேசு நிலையிலும் அதை விட மேம்பட்ட நிலையிl வாழும் சித்தர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டுள்ளார்கள் என்பதை அறியவும். 

உலகம் என்றும் அழியாது. இயற்கை சீற்றம், மற்றும் செயற்கை அழிவு செயல்களால் சில அழிவுகளும் மாற்றங்களும் உருவாக்கலாமே தவிர, உலகம் அழியாது என்பதை அறியவும். 

உலகில் தோன்றிய எந்த ஜீவனாக இருந்தாலும் அது தான் செய்கின்ற நல்ல காரியமாகட்டும், தீய காரிய மாகட்டும் அதன் நல்ல தீய பலன்களை அந்த அந்த ஜீவன்களே அனுபவிக்க  வேண்டும். இது இயற்கையின் விதி. கடவுளின் சட்டம். இதை எவராலும் மாற்றி அமைக்க முடியாது.

கடவுள் நிலையில் உள்ள சித்தர்கள் கடவுளின் அணைத்து ஆற்றல்களையும் பெற்று இருபினும் கடவுளின் சட்ட திட்டங்களை மீறி செயல் பட மாற்றார்கள். யாருடைய பாவங்களையும் அவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

இயேசு கடவுள் நிலையினை அடைந்தவர். அவர் மீண்டும் பிறக்க வாய்ப்பு இல்லை. ஒரு வேலை அவர் நிலையில் வேறு ஒருவர் தோன்றினாலும் யாருடைய பாவத்தையும் ஏற்று கொள்ள மாட்டார். அவர் தர்மங்களை போதிப்பார், வாழும் வழியினை காட்டுவார், எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டுவார். 

சித்தர்கள் காட்டும் வழிமுறைகள் என்ன. 
ரசவாதம், முப்பு, ரசமணி  செய்தல் .
அஞ்சன மை, மறைப்பு மை, வசிய மை தயாரித்தல்.
சித்தர் உலகில் நுழைய சூத்திரம். 
காய கற்பமும், சித்துக் களும்.
நவீன அறிவியலோடு சித்தர் அறிவியல்.ம் எப்படி வாழ வேண்டும்
ஆன்மிகமும்,  நாத்திகமும்
நல்லதும் கெட்டதும்
உண்மையும், தருமமும் .

இன்னும் பல

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...