Friday 12 June 2015

சட்டப்படி செல்லத்தக்க ஓர் ஒப்பந்தத்தில் இருக்கவேண்டிய முக்கிய அம்சங்கள்


சட்டப்படி செல்லத்தக்க ஓர்  ஒப்பந்தத்தில் இருக்கவேண்டியமுக்கிய அம்சங்கள்

சட்டப்படி செல்லத்தக்க ஓர்
ஒப்பந்தத்தில் இருக்கவேண்டிய
முக்கிய அம்சங்கள் :
இந்திய ஒப்பந்தங்கள் சட்டத்தின்
பிரிவு 10 பின்வருமாறு
கூறுகிறது:
All agreements are
contracts if they are
made by the free consent
(பரிபூரண -முழுமையான
சம்மதம்) of the parties
competent to contract
, for a lawful
Consideration and with a
lawful Object and are not
hereby expressly declared
to be void"
1. Agreement : உடன்படிக்கை (Agreement)
மற்றும் ஒப்பந்தம் (Contract) :
பிரிவு 2(h) : இந்த பிரிவு
ஒப்பந்தம் என்ற சொல்லை
வரையறுக்கிறது. ஒப்பந்தம்
என்றால் என்ன?
பிரிவு 2(h) இன்படி " ஒப்பந்தம்
என்பது, சட்டத்தினால்
செயல்படுத்தக்கூடிய ஓர்
உடன்படிக்கை ஆகும். (Contract is an agreement
enforceable by law)
அப்படியென்றால்
"உடன்படிக்கை - Agreement
- என்பது என்ன?
பிரிவு 2(e) "உடன்படிக்கை "
என்ற சொல்லை
வரையறுக்கிறது.
எனவே அனைத்து
உடன்படிக்கைகளும் "ஒப்பந்தம்" அல்ல. ஆனால் அனைத்து
ஒப்பந்தங்களும் உடன்படிக்கைதான்.
(All Agreements are not
contracts But all Contracts
are agreements)
2.Free Consent : ஒப்பந்தம்
செய்துகொள்ளும் நபர்கள் ,
முழுமையான சம்மதத்தின்
அடிப்படையில் ஒப்பந்தத்தை
செய்துகொள்ள வேண்டும்.இந்த
சம்மதமும் FREE ஆக இருக்க
வேண்டும்.- அதாவது-வேறு
யாராலும் வற்புறுத்திப்
பெறப்பட்டதாகவோ பிறரால்
அச்சுறுத்தப்பட்டு
பெறப்பட்டதாகவோ
இருக்கக்கூடாது.
3.Competency - ஒப்பந்தம்
செய்துகொள்ள சில தகுதிகள்
அவசியம்.உதாரணமாக 18
வயது நிறையாத மைனருடன்
செய்துகொள்ளும் ஒப்பந்தம்
செல்லாது.முட்டாள்கள்,
மனனிலை சரியற்றவர்கள்
போன்றவர்களுடன்
செய்துகொள்ளும் ஒபந்தங்களும்
செல்லாது.
4.Lawful consideration :
consideration என்பதை
பிரதிபலன் என்று
கூறலாம்.ஒப்பந்தத்தின்படி நாம்
ஒருவருக்கு ஒரு வேலையை
செய்துகொடுக்கிறோம் அல்லது
செய்யாமல் இருக்கிறோம்
என்றால் அதற்குக் கைம்மாறாக
அவர் நமக்கு கொடுப்பதை
consideration
என்கிறோம்.இந்த கைம்மாறு
சட்டப்படி செல்லக்கூடியதாக
இருக்கவேண்டும்.உதாரணமாக
நான் உங்களுக்கு பத்து
மூட்டை அரிசி தருகிறேன்
என்றால் நீங்கள் எனக்கு
ஆயிரம் ரூபாய் தரமுன்வந்தால்
அது நியாயம்.ஆனால்
அதற்காக வேறு ஒரு நபரை
அடித்து கைகால்களை வெட்ட
வேண்டும் என்றால் அது
செல்லாது.
5.Lawful Object :
ஒப்பந்தத்தின் நோக்கம்
இதுதான்.ஒப்பந்தத்தின்
நோக்கமும் சட்டப்படி
செல்லத்தக்கதாக
இருக்கவேண்டும்.
சட்டத்துக்குப் புறம்பான
செயல்கள் ஒப்பந்தத்தின்
நோக்கமாக இருக்கக் கூடாது.
6.Not declared to be void: இந்தியாவில் நடைமுறையில்
இருக்கும் சட்டம் எதுவும் உங்கள் ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவிக்காமல் இருக்கவேண்டும்.

சட்டம்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...