Friday, 12 June 2015

செக் மோசடி வழக்கு


செக் மோசடி வழக்கு

செக் மோசடி வழக்கு - சட்ட திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்....
இதுநாள் வரையிலும் செக் மோசடிவழக்கை செக் கொடுத்தவர் வசிக்கும் இடத்தில் சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கை பதிவு செய்ய வேண்டி இருந்தது.
அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் சிரமத்துக்குள்ளானார்கள்.
உதாரணத்திற்கு திருநெல்வேலியிலிருக்கும் ஒருவர் சென்னையிலிருக்கும் ஒருவருக்கு அளித்த காசோலை, சென்னையிலுள்ள வங்கியில் செலுத்திய பின்னர் , அந்த காசோலையை அளித்தவர் வங்கிக்கணக்கில் தேவையான பணம் இல்லாத போது சென்னை நபர் ஏற்கெனவே நொடிந்து போகிறார்.
இதுமட்டுமல்லாது அந்த காசோலை தந்து ஏமாற்றிய திருநெல்வேலி நபரின் மீது செக் மோசடி வழக்கு தொடுக்க இந்த பாதிக்கப்பட்ட சென்னை நபர் திருநெல்வேலி செல்லவேண்டும்.
எத்தனை முறை செல்ல வேண்டும்?
வீண் அலைச்சல்.இனி பாதிக்கப்பட்ட நபர் தன் பகுதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
சட்ட திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்....
ஒருவர் வழங்கும் காசோலை, அவருடைய வங்கிக் கணக்கில் போதுமான அளவு பணம் இல்லாமல் திரும்பி வந்தால், அது காசோலை மோசடி என்று கருதி வங்கிகள் அவரை உடனே நீதிமன்றங்களில் நிறுத்திவிடுவார்கள். இதுபோன்று காசோலை குற்றங்களுக்கு, காசோலை வழங்கியவரை உடனே நீதிமன்றத்தில் நிறுத்திவிடாமல் இருப்பதற்காக நெகோஷியபுள் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (என்ஐ) என்ற புதிய சட்டத்தை அமல்படுத்த இருக்கிறது மத்திய அரசு. அதன்படி காசோலை மோசடி சம்பந்தமான குற்றங்களை இனி மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் லோக் அடலட்ஸ்(LOK ADALATS) என்ற மக்கள் மன்றங்கள் விசாரிக்கும் என்று தெரிகிறது. தற்போது நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளில் 30 சதவீத வழக்குகள், காசோலை மோசடி மற்றும் போக்குவரத்து சலான்கள் சம்பந்தமானவையாகும். இப்போது வர இருக்கும் புதிய சட்டம் இன்டர்-மினிஸ்டீரியல் குரூப் (ஐஎம்ஜி) என்ற அமைப்பால் சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக, தேவையான சட்டத் திருத்தங்களை பரிந்துரைக்க இந்த அமைப்பு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. காசோலை மோசடி மற்றும் போக்குவரத்து சலான்கள் சம்பந்தமான குற்றங்கள் நீதிமன்றங்களில் வந்திருக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காகவும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவும், இந்திய சட்டத்துறை, நிதித்துறை மற்றும் போக்குவரத்துதுறை ஆகியவற்றோடு மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. இந்த புதிய சட்டத்தின்படி காசோலை மோசடி அல்லது போக்குவரத்து சலான்கள் சம்பந்தமான குற்றங்களை செய்யும் போது உடனே அவர்களை நீதிமன்றங்களில் நிறுத்த முடியாது. ஆனால் குற்றம் நிருபிக்கப்பட்டால் அவரை நீதிமன்றங்களில் நிறுத்தலாம். என்ஐ சட்டத்தில் வந்திருக்கும் திருத்தத்தின்படி, காசோலை மோசடி அல்லது போக்குவரத்து சலான் சம்பந்தமான குற்றங்களுக்கு உடனே நீதிமன்றம் போவதை விட்டுவிட்டு, அதற்கு மாற்றாக ரிசெலூசன் மெக்கானிசம் மூலமாக பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஐஎம்ஜியின் பரிந்துரையின்படி, சிவில் ப்ரொசீஜர் பிரிவு 89ன் கீழ், காசோலை மோசடி மற்றும் போக்குவரத்து சலான்கள் சம்மந்தமான குற்றங்கள் லோக் அடலட்ஸ் என்று அழைக்கப்படும் மக்கள் மன்றங்களால் கையாளப்பட்டு அவை விரைந்து முடித்து வைக்கப்படும். காசோலை மோசடி சம்பந்தமான வழக்குகளுக்கு நீதிமன்றங்களுக்கு ஆகும் செலவு மக்கள் மன்றங்களுக்குத் தேவைப்படாது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...