Tuesday, 2 June 2015

அனுபவ குருவை அடைவது எப்படி.

          அனுபவ குருவை அடைவது எப்படி.

கோபத்தை கொன்றவனாய் , அகங்காரத்தை அழித்தவனாய், சுற்றத்தை சற்று விலக்கியவனாய், மனித நேயத்தை வளர்த்தவனாய், வாழும் வழியினை அறிந்து அதில் கவனம் செலுதுபவனாய், தன் கடமைகளை முறையாக செய்து கொண்டு, தேவையானவர்களுக்கு உதவி செய்து கொண்டும், தான் செய்யும் எல்லா காரியங்களிளும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொண்டு குருவை தேடும் பயணத்தை மேற்கொண்டால், அனுபவ குருவை அடைவது மிகவும் எளிது. மேற்கண்ட குணங்கள் கொண்டவர்களிடம்தான் அனுபவ குருக்கள் மனம் திறந்து உண்மை பேசுவார்கள். மற்றவர்களிடம் மனம் திறந்து பேசமாட்டார்கள்.

மேற் கண்ட குணங்கள் கொண்ட சீடனுக்கு நேரிடையாக குரு மூலமாகவோ அல்லது மானசிகமாகவவோ அல்லது புத்தகவாயிலாகவோ உண்மை பொருளை அடைந்தே தீருவான்.

பொய் நடிப்பாலோ, வஞ்சகத்தாலோ, மிரட்டலாலோ , பதவியாலோ, பட்டதினாலோ பணத்தாலோ, இக்கலையினை பெற முடியாது. இந்த பிரபஞ்சத்தில் இதை விட சிறந்த கலை வேறு ஏதும் கிடையாது.

யோக்கியனாய் இருந்தால் யோகியாவான், நல்லவனாய் இருந்தால் சித்தனாவான். இது சான்றோர் வாக்கு.

இக் கலை உனக்கு தெரிந்திருந்தால் அதை எல்லோருக்கும் கற்று தந்து விடுவாயா?. யாருக்கு கற்று கொடுக்க நினைப்பாயோ அந்த குணங்களை நீ வளர்த்துக் கொள். இந்த விதி எல்லா நிலைக்கும் பொருந்தும்.  இந்த கலை எளிதில் உனக்கு கிடைத்து விடும்
  
நல்லவர்கள் மனம் நோகும் படி நடந்து கொண்டால் அவன் ஏழு பிறப்பும் கழுதையினும் கடையினாய் பிறப்பான்.  அவனது  ஏழு பரம்பரையும் தெரு நாய்களாக திரிந்து நாசமாவார்கள்  இது சித்தர்கள் சாபமாகும்  


மேற்கண்ட குணங்கள் இல்லாமல்அனுபவ குருவை சந்தித்தாலும் ஆயிர கணக்கான புத்தகங்களை படித்தாலும் யாருக்கும் எந்த ஒரு பயனும் கிட்டாது.

பூத உடலுடன் உலவிக்கொண்டிருக்கும் சிதர்களாகட்டும், அருபமாக வாழ்ந்துகொண்டிருக்கும் சித்தர்களாகடும் அவர்களுக்கு இந்த உலகத்தில் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை அடையவேண்டியதும் ஒன்றும் இல்லை. நற்சீடர்களுக்கு வழிகாட்டவும், வழி நடத்து வதர்க்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
டியோனாக
இக் கலையிணை கற்றுக் கொள்ள மேற்கண்ட தகுதி தவிற வேறு ஏதும் தேவை இல்லை.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...