Friday, 12 June 2015

இந்திய அரசியலமைப்பு ஐந்து வகையான நீதிப்பேராணை


இந்திய  அரசியலமைப்பு ஐந்து வகையான நீதிப்பேராணை

இந்திய
அரசியலமைப்பு ஐந்து
வகையான
நீதிப்பேராணையை
அளிக்கிறது :
1.ஆட்கொணர்
நீதிப்பேராணை (Writ of ‪#‎Habeas_Corpus‬):
தவறாக ஒருவர் காவலில்
வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும்
நீதிமன்றம் காவலில்
வைத்த
அதிகாரிக்கோ அல்லது
அரசாங்கத்திற்கோ ஆணை வழங்கி,
காவலில் வைக்கப்பட்ட
வரை நீதிமன்றத்தின்முன்
கொண்டுவரச்
செய்வதாகும்.
2.கட்டளை
நீதிப்பேராணை (Writ of
‪#‎Mandamus‬):
ஒரு குறிப்பிட்ட
செயலை உடனடியாக
செய்யக்கோரி நீதிமன்றம்
ஆணை பிறப்பிப்பதாகும்.
3.தடை நீதிப்பேராணை (Writ of ‪#‎Prohibition‬):
நீதிமன்றம் ஓர்
அதிகாரிக்கு ஆணை
பிறப்பித்து அவரது
எல்லைக்குட்படாத
ஒரு செயலைச்
செய்யாதிருக்குமாறு
ஆணை பிறப்பிப்பதாகும்.
4.உரிமைவினா நீதிப்
பேராணை (Writ of ‪#‎Quo_warranto‬)
அரசாங்கத்தின் அலுவலர்
ஒருவரை அவர் எந்த
அடிப்படையில்
குறிப்பிட்ட
பதவியை வகிக்கிறார்
என்பதைத்
தெளிவுபடுத்தக்கோரும் நீதிமன்றத்தின்
உத்தரவாகும்.
5.தடைமாற்று
நீதிப்பேராணை (Writ of
‪#‎Certiorary‬):
நீதிமன்றம் தனது கீழ்பட்ட
ஒரு அதிகாரிக்கோ
அல்லது
நீதிமன்றத்துக்கோ
ஆணை பிறப்பித்து,
குறிப்பிட்ட நீதிமன்றச்
செயல்முறைகளையும்
ஆவணங்களையும்
தனக்கோ அல்லது உரிய
அதிகாரிக்கோ மாற்றச்
செய்வதாகும்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...