Friday 12 June 2015

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்


                                           இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச்
சட்டம் (the consumer
protect act, 1986)
நுகர்வோரின் உரிமைகள்:
1. உயிருக்கும்
உடைமைகளுக்கும் தீங்கு
விளைவிக்ககூடிய பொருட்களை
சந்தைப்படுத்துவதில் இருந்து
பாதுகப்பு பெறும் உரிமை
2. நேர்மையற்ற வர்த்தக
செயல்முறைகளில் இருந்து
தங்களைப்பாதுகாத்துக்
கொள்வதற்காக, சந்தையில்
வழங்கப்படும் பொருட்கள்
மற்றும் சேவைகளின் தரம்,
அளவு, தூய்மை, தரனிலை
மற்றும் விலை பற்றிய
அனைத்து விவரங்களையும்
அறிந்துகொள்வதற்கான உரிமை.
3. பலவகைப்பட்ட பொருட்கள்
மற்றும் சேவைகளை போட்டி
விலைகளில் வாங்குவதற்கான
வாய்ப்புகளைப் பெறுவதற்கான
உரிமை
4. நுகர்வோரின் குறைகளைக்
கேட்பத்ற்கும் அவர்க்ளின்
உரிமைகளைப் பாதுகாக்கவும்
உத்தரவாதம் பெறும் உரிமை
5. நேர்மையற்ற வர்த்தகச்
செயல்முறைகள் மற்றும்
கட்டுப்படுத்தும் வர்த்தகச்
செயல்முறைகள்
போன்றவற்றைத் தடுத்து
நிறுத்துவதற்கான உரிமை
6. நுகர்வோருக்கான
விழிப்புணர்வினைப் பெறும்
உரிமை
7. நுகர்வோரின் சச்சரவுகளுக்கு
விரைவாகவும்
எளிமையாகவும் தீர்வு பெறும்
உரிமை.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் எல்லை:
1. இந்த சட்டம் இந்தியாவில்
உள்ள அனைத்து
மாநிலங்களுக்கும் பொருந்தும்.
ஆனால் ஜம்மு - காஷ்மீர்
மாநிலத்திற்கு மட்டும்
இதிலிருந்து விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது.
2. பொருட்கள் மற்றும்
சேவைகள் ஆகியவற்றுக்கு
மட்டுமே இந்தச் சட்டம்
பொருந்தும்.
3. தனியார் துறை,
பொதுத்துறை,
கூட்டுறவுத்துறை
போன்றவைகளுக்கும் இச்சட்டம்
பொருந்தும்.
சட்டம் பொருந்தாத நிலைகள்
1. வாங்கிய பொருளை மறு
விற்பனை செய்தல் அல்லது
இலாபம் ஈட்ட வேண்டும்
என்கிற நோக்கத்துக்கு
வாங்கப்பட்ட பொருள்.
2. இலவசமாக பெற்ற பொருள்
அல்லது இலவச சேவை
உதாரணம்:
அரசு மருத்துவமனைகளில்
பெறும் இலவச மருத்துவ
சேவை.
3. இலவச அனுமதியளிக்கும்
திட்டங்களில் பெறும் சேவை
குறைபாடுகளுக்கு
இச்சட்டத்தின்படி வழக்கு
தொடர முடியாது.

சட்டம்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...