Tuesday 2 June 2015

மதம்

                                                                     மதம் 

மதம் என்பது மனிதனால் உருவாக்கபட்டது என்பது உண்மையான கருத்து.ஜாதி,மதம் என்பது அன்றைய சூழ்நிலையில் மக்கள் தங்களுக்குள் ஒரு ஒற்றுமையையும்,ஒழுக்க‌த்தையும் ஏற்படுத்துவதற்கு உண்டாக்கியவை,அப்போழுதே பிரிவினை இருந்த காரணத்தினால் தான் இப்படி தனி தனி கூட்டமாக பிரிந்து அதற்கு பெயர் வைத்து இன்று வரை வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.அடித்துக்கொண்டு செத்துகொண்டும் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஜாதி மதத்திற்கு இடையே சம்பந்தம் இல்லாமல் உருவாகி இருப்பது தான் 'தீவிரவாதி' என்னும் பயங்கரமான ஜாதி,இதுங்க‌ உலகில் உள்ள எந்த மதத்தையும், எந்த ஜாதியையும் சார்ந்தவைகள் அல்ல,குறிப்பாக இவைகள் மனித குலத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு வகை ஈனப்பிறவிகள் நிறைந்த கூட்டம். இவைகளை பற்றி அழகாக சொல்லனும்னால் "வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் அந்த வீட்டின் உரிமையாளருக்கு மட்டும் விசுவசமாக இருக்கும்,ஆனால் தெரு நாய்கள் யார் எதை போட்டாலும் வாலை ஆட்டும் அது தான் 'தீவிரவாதி' என்னும் ஜாதி இது தனி வகை" இதுங்களுக்கு புரியவைப்பதை விட பைத்தியக்காரனுக்கு பல்லை தெய்ச்சு விடலாம்.
மனித மதத்தை பற்றி பேசும் பொது இவர்களை பற்றி எதற்கு பேச்சு?
நம்ம விஷயத்திற்கு வருவோம்,இன்னைக்கு "ஒரே குலம், ஒரே மதம்,எல்லோரும் ஒரு தாய் மக்கள் ஜாதி மதம் இல்லை"அப்படின்னு நிறைய பேர் பிரச்சாரம் செய்கிறார்கள் காரணம் இன்னைக்கு மக்கள் அடித்துக்கொண்டு,வெட்டிக்கொண்டு இருப்பதை பொருக்க முடியாமல்!ஒரு நல்ல எண்ணத்தில் கூறுகிறார்கள்.
ஒரு நாட்டு அரசியல் சட்டத்தின் மூலம் ஒரு சட்டத்தை இயற்றி அமுல் படுத்தி விட்டால் அந்த சட்டத்தை கண்டிப்பாக மக்களிடம் அறிவுருத்தப்பட்டு நடைமுறைபடுத்திவிடுவார்கள் இப்படி ஐநூறு வருடங்களாக நடைமுறையில் இருப்பதாக வைத்துக்கோள்வோம், இதையே மக்கள் கடை பிடிக்கும் பொது, பல்லாயிரக்காண ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட மதத்தை அதுவும் குழந்தையாக இருக்கும்போதே சொல்லிவளர்க்கப்பட்ட ஒரு விஷயத்தை நம்பிக்கையை, விட்டு விட சொன்னால் நடக்க கூடிய விஷயமா? முடியுமா?.
ஜாதி மதங்களை ஒழிக்க கலப்பு திருமணம் செய்து கொண்டால் ஜாதி ஒழிந்து விடும்,என்பது இன்னொரு நகைச்சுவையான விஷயம்,யோசிச்சு பாருங்க காதல் திருமணம் ஆதிகாலத்துலிருந்தே இருக்கு, ஜாதி மதம் அழிஞ்சா போச்சு? அவர்களுக்கு பிறக்கும் குழந்தையை பள்ளியில் சேர்க்கும்பொழுது அப்பாவின் மதத்தை,ஜாதியை கண்டிப்பாக குறிப்பிட சொல்லுவார்கள்,அதற்கும் இப்பொழுது 'கலப்பு திருமணம்' பிரிவில் சேர்க்கிறார்கள்,இப்பொழுது பரவயில்லை இன்னும் பத்து வருடங்கள் போகட்டும் 'கலப்பு திருமணம்'பிரிவில் மெஜாரிட்டி அதிகம் ஆகி "எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர் வம்சம்"மாதிரி 'கலப்பு திருமணம் செய்த வம்சம்'னு ஒன்னு உருவாகி அதுக்கு ஒரு சாமி உருவாக்கி ஏற்கனவே ஜாதி மதம் கொஞ்ச‌மாக இருப்பதுபோல் இதையும் லிஸ்டில் சேர்த்துகொள்வார்கள்.
இப்படி தான் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க நிறைய பேர் மதங்களையும் ஜாதியையும் உருவாக்கி இருக்கிறார்கள்,இதை மாற்ற நினைப்பதை விட குறைக்க முடியும் எல்லா மதத்திற்கும், எல்லா ஜாதி பிரிவிற்கும் ,ஒரே நீதி,ஒரே சலுகை,ஒரே சட்டம்,ஒரே உரிமைன்னு சட்டம் வந்தால் ம்ட்டுமெ.இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள‌ சொல்லுங்கள், எவரும் ஒத்துக்கொள்ள் மாட்டார்,"எல்லாம் ஒரே இனம்"ன்னு சொன்னவர் கூட இதை வர விடமாட்டார் காரணம் அரசியல் ஆதாயம்.ஒரு பேச்சுக்கு ஆரம்பத்துலயே "இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டும் தான் ஒட்டுரிமை மற்றவர்களுக்கு இல்லை" என்று சட்டம் இருப்பதாக வைத்துகோள்வோம் என்ன ஆகும்?இன்றைய அரசியல்வாதிகள் தலையில் தொப்பி அணிந்து இஃப்தார் நோன்புக்கு கஞ்சி குடிப்பார்களா? இல்லை இந்துக்களை தான் கிண்டலடிப்பார்களா? இல்லை இன்னைக்கு மைனரிட்டி மக்கள் மீது காட்டுகிற அக்கரையை தான் காட்டி இருப்பார்களா? எல்லாமே அரசியல்.அரசியல்..அரசியல்..!
நடுவில் உருவாக்கப்பட்ட எல்லா மதத்திலையும் நிறைய கடுமையான‌ சட்ட திட்டங்கள் உண்டு,அதை அந்த மதத்தினர் கண்டிப்பாக கடைபிடித்தெ ஆகவேண்டும்!காரணம் நடுவில் உருவாக்கப்படுகின்ற எந்த விஷயமே முன்னால் இருந்த செயல்படுகளில் அல்லாத வேறு புதுமையாக எதாவது செய்தால் தான் அதன் மீது ஈர்ப்பு வ்ரும்.அதனால் தான் கட்டுப்பாட்டையும்,ஒருங்கினைப்பையும் கடைபிடிக்கிறார்கள்.
ஒழுக்கமும் ஒருங்கினைப்பும் இந்துக்கள் முதற்கோண்டு எல்லா மதத்திலையும் உண்டு,ஆனால் இந்துக்களிடம் வாழ்க்கையை பற்றி போதனைகளையும்,வழிமுறைகளையும் கூறப்பட்டிருக்கிறதை ஒழிய இப்படி நடக்கவேண்டும் இதை பின் பற்றியே ஆக‌வேண்டும் என்று பொதுவான எந்த கடுமையான சட்டமும் இல்லை,இந்துக்களின் தொடக்கத்தை பற்றியோ,அல்லது தொடக்கியவர் பற்றியோ எந்த விதமான வரலாறும் கிடையாது அந்த அளவிற்கு பழமையானது,தலைவர் என்று ஒருவர் இருந்து அவரை தெரிந்து இருந்தால் தான் அவருடைய குணத்தை பொருத்து அவர் கூறும் சட்டத்தை பின்பற்ற முடியும்!தொடக்கமே தெரியதபொது எந்த சட்டத்தை பின்பற்றுவது?
இப்படி ஆதியே தெரியாமல் முன்னொர்கள் கூறிவிட்டு சென்ற நல்ல கருத்துக்களையும்,நீதியயையும் கடைபிடித்து வரும் இந்துக்களுக்கு எந்த வித கோட்பாடுகளும் கட்டுபாடுகளும் கிடையாது!இதற்கு உதாராணம்..
ஒருவர் கிருத்துவராக மாற‌ என்ன செய்யவேண்டும்....
"ஞானஸ்த்தானம்" பெற வேண்டும் சட்டம் இருக்கிறது.
ஒருவர் முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும்?....
"சுன்னத் கல்யாணம்" செய்ய வேண்டும் சட்டம் இருக்கிறது.
ஒருவர் இந்துவாக மாற என்ன செய்ய வேண்டும்?....
முதலில் அவன் மனிதனாக பிறக்கவேண்டும்!!!

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...