Friday, 12 June 2015

இந்திய ஊழல் தடுப்புச் சட்டம்


                                            இந்திய ஊழல் தடுப்புச் சட்டம்

இந்திய ஊழல் தடுப்புச்
சட்டம், 1988
இந்தியக் குடியரசில் ஊழலைத்
தடுக்க 1988ம் ஆண்டு
ஊழல் தடுப்புச் சட்டம்
இயற்றப்பட்டது.
வரையறை
இச்சட்டத்தின்படி லஞ்சத்தின்
வரையறை:
1. பொது ஊழியர் தன்னால்
செய்யப்பட வேண்டிய
அதிகாரப் பூர்வமான
வேலைக்கு சட்டப்படி பெற
வேண்டிய ஊதியத்தை தவிர
கைகூலி பெறுவது.
2. பொது ஊழியம் செய்பவர்
மறுபயன் இல்லாமல் விலை
மதிப்புள்ள பொருட்களை
தன்னுடைய அலுவல்
நடவடிக்கையில் ஈடுபட்டு
ஒருவரிடம் வாங்குவது.
இதன்படி லஞ்சம் வாங்குவது
குற்றம் என கருதப்பட
கீழ்கண்ட அம்சங்கள் தேவை:
1. அதில் சம்பந்தப்பட்டவர்
பொது ஊழியராக இருத்தல்
வேண்டும்.
2. அவர் செய்யும் வேலை
அதிகாரப் பூர்வமாக இருக்க
வேண்டும்.
3. பொது ஊழியர் தான் செய்ய
வேண்டிய வேலையை
செய்வதற்கோ அல்லது
செய்யாமல் இருப்பதற்க்கோ
சட்டத்திற்குப் புறம்பாக பணம்
கோருதல் அல்லது பெறுதல்.
4. பொது ஊழியரின்
அதிகாரத்தைத்
துஷ்பிரயோகித்துப் பண
மதிப்புள்ள அனுகூலம் பெறத்
தகாத சலுகை அளித்தல்.
5. ஒரு குடிமகனிடமிருந்து
பொது ஊழியர் அதிகாரப்
பூர்வமான கடமையைச்
செய்வதற்காக மறுபயனின்றி
விலை மதிப்புள்ள பொருளைப்
பெறுவதும் லஞ்சமே.
6. அந்த பொது ஊழியர்
நேரடியாகவோ அல்லது முகவர்
மூலமாகவோ லஞ்சம்
பெற்றால் அவரும் அவருக்கு
லஞ்சம் வழங்குபவர்களும்
குற்றவாளிகள்.
7. பொது ஊழியர் தனது
வருமான வழிவகைகளுக்குப்
பொருந்தாத விதத்தில்
சொத்துக்களைக் சேர்த்தலும்
சட்டத்தின் படி குற்றம் என
வரையறுக்கப் பட்டிருக்கிறது.
தண்டனை
லஞ்ச ஊழலை சட்டத்தின்படி
தவறு இழைத்த ஒரு
நபருக்குத் குறைந்த பட்சம்
ஆறு மாதம் - ஐந்து ஆண்டுகள்
வரை கடுங்காவல் தண்டனை
மற்றும் அபராதம்
விதிக்கப்படலாம்.

சட்டம்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...