Tuesday, 2 June 2015

சித்தர்கள்

அனைத்துக்கும் ஆசைபடுவதா? ஆசையினை அறவே அழிப்பதா?

ஒரு நண்பர் என்னிடம் ஒரு கேள்வினைக் கேட்டார்.  சில ஆன்மிக வாதிகள் "அனைத்துக்கும் ஆசை படுங்கள்" என்று போதனை செய்கி றார்கள்.  ஆனால் சித்தர்களோ "ஆசையினை அறவே அழித்து விடுங்கள்" என்று சொல்கிறார்கள். இதில் எது உண்மை எது போய் என்று எங்களுக்கு புரிய வில்லை. அதை விளக்கு வீர்களா?  என்று கேட்டார். எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் என்ற காரணத்தினால் அதை இங்கே வெளியிடு கிறோம். 

சித்தர்கள் சொல்லுவதுதான் சரி. சித்தர்கள் ஒரே ஒரு உண்மையினை லட்ச கணக்கான பாடல்களில் திரும்ப திரும்ப அதையே வெவ்வேறு விதமாக கூறியுள்ளார்கள். அதை ஒவ்வொருவரும் அவர் அவர் அறிவுக்கு தகுந்த வாறு அதனை தவறாக  புரிந்து வெவ்வேறான விளக்கம் கூறி குருட்டு வழியில் சென்று மாண்டு போகிறார்கள்.

உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் அனைத்துக்கும் ஆசைப்பட்டவர் களாகத்தான்  இருக்கிறார்கள். யார் ஒருவராவது ஒன்ரையாவது  முழுமையாக அடைந்து அனுபவித்தவர்கள் உண்டா?  இல்லை இல்லவே இல்லை ஒருவரும் இல்லை. அப்படியிருக்க அனைத்துக்கும் ஆசைப்பட்டு ஒன்றையாவது நிறைவாக அடைந்தவர்கள் யாராவது உண்டா? யாரும் இல்லை. இல்லவே இல்லை.

அனைத்துக்கும் ஆசைப்பட்டால் அணுவளவு சந்தோசம்தான் கிடைக்கும். அணு அளவு ஆசைமட்டும் இருந்தால் உலகத்தில் உள்ள அனைத்தையும் அடையலாம், அளவற்ற ஆனந்தத்தை எப்போதும் அனுபவிக்கலாம்.    தேவை சிவயோகம்  (அ) வாசியோகம் தெரிந்து அதை தொடர்ந்து பயிற்சி செய்தால் மட்டும் போதும்.  இது வெகு சுலபம். அட்டமா சித்துக்களையும் அடையலாம்.  என்றும்  சாகாமலும் இருக்கலாம். 

அதற்காக சோம்பேரியாகம், பரிதேசியாகவும் தெரு நாய் போல் எனக்கு ஆசை இல்லை என்று சொல்லிக்கொண்டு ஊரை சுற்றிக்கொண்டு இருப்பதை காட்டிலும் எல்லாவற்க்கும் ஆசைபடுவது சிறந்தது

ஆசைகளை அறவே அழித்துவிட்டால் நாம் பரிபூர்ண நிலையினை அதாவது கடவுள் நிலையினை அடைகிறோம். அந்த நிலையிலிருந்து நாம் என்ன நினைக்கிறோமோ அனைத்தும் கிடைக்கும். அது ஒரு அட்சைய  பாத்திர நிலை  அதுதான் சொர்ர்க்கம். முயற்சி இல்லாமலே அனைத்தையும் அடையும் நிலை. அதற்கு தேவை வாசி யோகம் அல்லது  சித்தர் கலை.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...