Tuesday 2 June 2015

கண்ணிவெடி

கண்ணிவெடி


கண்ணிவெடி பயங்கரம் !!!

போரைவிட கொடுமையானது கண்ணிவெடி. போர் கூட ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்துவிடும். ஆனால், கண்ணிவெடிகள் தாக்குதல் வருடக்கணக்கில் மக்களை தொடர்ந்து பழிவாங்கிக்கொண்டே இருக்கும். யார் எங்கே கண்ணிவெடிகளை புதைத்து வைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. விளைவு... எந்த வகையிலும் போருடன் சிறிதும் சம்பந்தம் இல்லாத சாமானிய மக்கள் உயிடையும் உடல் உறுப்புக்களையும் இழக்கிறார்கள்.

கண்ணிவெடிய
ில் கதிகலங்கி போய் இருக்கும் ஒரு நாடு எகிப்து. சுமார் 2 கோடியே 30 லட்சம் கண்ணிவெடிகள் அந்த நாடு முழுக்க உள்ளதாம். 1956, 1967 மற்றும் 1973களில் நடந்த எகிப்து - இஸ்ரேல் போர்தான் நாட்டை இப்படி கண்ணிவெடி தேசமாக மாற்றிவிட்டது. எதிரி நாட்டு டாங்கிகள் முன்னேறி வந்தால் அவைகள் சின்னாப்பின்னமாக வேண்டும் என்று வைத்த கண்ணிவெடிகள் அவ்வப்போது வெடித்து மக்களை கொன்று கொண்டே இருப்பதுதான் வேதனை. அன்று இஸ்ரேல் வைத்த கண்ணிவெடியே

அகற்றுவதற்காக 15 வருடங்கள் கடுமையாக போராடிய எகிப்து, கடைசியில் மேற்கு பாலைவனத்தில் 70 லட்சம் கண்ணிவெடிகளையும் சீனாய் பாலைவனத்தில் 30 லட்சம் கண்ணி வெடிகள் மண்ணுக்குள் புதைந்தபடி வெடிக்க காத்திருக்கின்றன. தொட்ட இடமெல்லாம் கண்ணிவெடியாக காட்சி தருவதால் இதை சாத்தானின் தோட்டம் என்கிறார்கள்.

இதைப்போலவே தென்மேற்கு ஈரானும் கண்ணிவெடிகளால் சூழப்பட்டு இருக்கிறது. ஈரான், ஈராக் போரே இந்த கண்ணிவெடி புதைப்புக்கு காரணம். 1980களில் ஈரான் அரசு புதைத்து வைத்த கண்ணிவெடிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 60 லட்சம். எல்லைப்பகுதியில் சுமார் 42 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இவை புதைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியே எந்த வளர்ச்சியும் இல்லாமல் கட்டாந்தரையாக கிடக்கிறது.

அங்கோலாவின் மொத்த மக்கள் தொகையைவிட அங்கு புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளின் எண்ணிக்கை அதிகம். விவசாயம் செய்ய நிலத்தை தோண்டினால் வெடிக்கிறது. ரோடுபோட குழிதோன்டினால் வெடிக்கிறது. இந்த வெடிக்கு மறைந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 70 ஆயிரம் என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை. இரண்டு கோடி கண்ணிவெடிகள் இங்கு புதைக்கப்பட்டுள்ளன. இதை எப்படி அகற்றுவது என்று விழி பிதுங்கி நிற்கிறது அங்கோலா அரசு.

ஆப்கானிஸ்தானில் தினமும் 10 முதல் 12 பேர் வரை கண்ணிவெடியை மிதித்து காலியாகிறார்கள். 1979 முதல் 1992 வரை அங்கு புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேல். ஈராக்கிலும் அதே அளவுக்கு கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. எதிரிக்கு வைத்த கண்ணிவெடியில், அவற்றை வைத்தவர்களே சிக்கிக்கொள்கிறார்கள். நாட்டில் சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் கண்ணிவெடிகளினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றனர். ஈராக்கில் 3,500 இடங்கள் இப்படி கண்ணிவெடிகளினால் நிரம்பி வழிகின்றன. உலகம் முழுவதும் கண்ணிவெடியால் ஒரு காலை இழந்தவர்கள் மட்டும் 2 .5 கோடிக்கும் அதிகம்.

இந்த கொடுமையின் தொடர்ச்சியாக இன்று ஈழ மண்ணிலும் கண்ணிவெடி பயங்கரம் அரங்கேறிவிட்ட கொடுமையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் முடிவு எப்போது வருமென்று சர்வேதேச சமூகம் கலங்கி கொண்டிருக்கிறது.
இலங்கை::இலங்கையில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், கண்ணிவெடி அபாயம் முழுமையாக நீங்குவதற்கு நீண்டகாலம் செல்லும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் இன்னும் சுமார் 5 லட்சம் மீட்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவற்றினை மீட்க பத்தாண்டு காலம் தேவைப்படலாம் எனவும் நாட்டில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் சுவிஸ் நாட்டு கண்ணிவெடி அகற்றல் பிரிவின் தலைவர் நிகல் ரொபின்ஷன் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...