Tuesday, 2 June 2015

அதி நவீன காற்றாலை

அதி நவீன காற்றாலை


அதி நவீன காற்றாலை !!!

காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழி மிகவும் சுற்று சூழலுக்கு உகந்தது என்றாலும் அதிகப்படியான காற்றோ ( சூறாவளி / புயல் ) அல்லது குறைந்த காற்றோ இருக்கும் போது அவைகளின் இயக்கம் நிறுத்தப்படுகிறது . இந்த சூழ்நிலையில் தான் அதிநவீன காற்றாலை ஒன்றை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர் .

70 அடி உயரமுள்ள இந்த காற்றாலைகள் 21 அடி விட்டமுள்ள நவீன வட்ட வடிவ இ
றக்கையை தாங்கி நிற்கிறது . அதி வேக காற்று வீசும் போது இந்த வடிவமைப்பு தானாகவே செங்குத்தான நிலையில் இருந்து காற்றின் போக்கில் மாறி விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . மணிக்கு 118 மைல் வேகத்தில் காற்று வீசினாலும் இந்த காற்றாலைகள் தாங்கும் சக்தி கொண்டது


குறைந்த பட்சமாக மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றிலும் இது இயங்கும் . வருடத்திற்கு கிட்டத்தட்ட 18000 கிலோ வாட் ( 18 மெகா வாட் ) லிருந்து 30000 கிலோ வாட் ( 30 மெகா வாட் ) வரைக்கும் மின்சாரம் தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது பசுமையான மின்சாரம் கொடுக்கும் பசுமையான திட்டம் வருக ... வெல்க

தமிழகத்திலும் நிறைய முயற்ச்சிகள் எடுக்கபடுகிறது .
காற்றாலைகளை நிறுவுகிறது பாரத் ஸ்டேட் வங்கி (SBI).
நாட்டில் முதல் முறையாக பொதுத் துறை வங்கியான பாரத்ஸ்டேட் வங்கி சொந்தப் பயன்பாட்டிற்காக தமிழகம் ,ஜதராபாத் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காற்றாலைகளை நிறுவுகிறது. தமிழகம் , மகராஷ்டிரா ,குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கான மின்சாரத்தை தயாரிக்கும் நோக்கில் இம்மூன்று மாநிலங்களிலும் காற்றாலைகளை நிறுவ SBI திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கோயம்பத்தூரில் சமீபத்தில் காற்றாலைகளைஇவ்வங்கி நிறுவியது. மற்ற மாநிலங்களில் இன்னும் நான்குமாதங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டுவிடும்.

இதேபோல் அனைத்து தொழிற்ச்சாலைகள் மற்றும் தனியார்நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையான மின்சக்தியைதயாரிக்க அவைகளே முன்வந்தால் தமிழகத்தில் மட்டுமல்ல உலகநாடுகள் அனைத்திலும் மின்சக்தி தட்டுப்பாடேஏற்ப்படாது

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...