Friday 12 June 2015

மது


மது

ஒருவர் மது அருந்தியிருந்தார்
என்பதற்கு, அவரது 100 மில்லி
கிராம் ரத்தத்தில் 30 மில்லி
கிராம் மது இருக்க வேண்டும்.
புதிய மசோதா இந்த அளவை,
100 மில்லி கிராம் ரத்தத்தில் 20 மில்லி கிராமுக்கு அதிகமாக
இருந்தாலும் அவர் மீது மது
அருந்தி வாகனம் ஓட்டியதாக
வழக்குப் பதிவு செய்ய வகை
செய்கிறது. தண்டனையும்
கடுமையாக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டுநர்
என்றால், முதல்முறை
குற்றத்துக்கு ரூ.5,000
அபராதம், 50 மணி நேர சமூக
சேவை அல்லது 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும்,
தொடர்ந்து அதே குற்றத்தைச்
செய்தால் ரூ.10,000 அபராதம்,
ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு
ரத்து என்றும்
மாற்றப்பட்டிருக்கிறது.
இதுவே கார், பேருந்து போன்ற
நான்கு சக்கர வாகன
ஓட்டுநர்கள் முதல் முறையாகப்
பிடிபட்டால், ரூ.10,000
அபராதம், 6 மாதங்களுக்கு
ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும்,
தொடர்ந்து அதே தவறைச் செய்து பிடிபட்டால் ரூ.20,000
அபராதம், 6 மாதங்கள் வரை
சிறைத் தண்டனை,
ஓராண்டுக்கு ஓட்டுநர் உரிமம்
ரத்து என்றும்
மாற்றப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...