Friday 12 June 2015

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்கள்பெறுவது எப்படி




உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்கள்பெறுவது எப்படி?

                 ****************************************************************
இணையத்தில் தீர்ப்புத்தகவல் அமைப்பு, (JUDIS) என்பது பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் தன்னகத்தே அடக்கியுள்ளது. இந்த தீர்ப்புகளை (Judgment Information System (JUDIS)) (http://judis.nic.in/supremecourt/chejudis.asp) என்ற இணையதள முகவரியில் நாம் காணலாம். உச்சநீதிமன்றத்தீர்ப்புகளை பின்வரும் முறையில் நாம் விண்ணப்பித்துக் காணலாம்.
• வாதி/பிரதிவாதி வாரியாக
• நீதிபதி பெயர் வாரியாக
• வழக்கு எண் வாரியாக• தீர்ப்புத் தேதி வாரியாக.
• அரசியலமைப்புக் குழு வாரியாக
• அகரவரிசைப்படுத்தப்பட்ட வழக்குப்பட்டியல் வாரியாக
• தீர்ப்பு வாரியாக (Held wise)
• பொருள்/சொற்றொடர் வாரியாக (Text/phrase wise)
• சட்ட வாரியாக (Act wise)
போன்றன.
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துப்பட்டியல்களும் இணையதளத்தின் இடது பக்கவாட்டில் இருக்கும். நமக்கு தேவைப்படும் தீர்ப்பினைக் குறித்து அறிய உரிய பட்டியலை கீழ்க்காணும் முறையில் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
வாதி/பிரதிவாதி வாரியாக (Petitioner/Respondent wise)
• வாதி அல்லது பிரதிவாதி பெயரைப்பதிவு செய்யவும்
• கீழிறங்குப் பெட்டி (drop drown box) யில் இருந்து ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்யவும். அதாவது, 'தெரியாது' அல்லது வாதி அல்லது பிரதிவாதி.
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை) இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்க வேண்டும்.
• கடைசியாக அறிக்கையின் நிலையை அறிய Reportable status ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.
நீதிபதி வாரியாக (Judge name wise)
• நீதிபதியின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை) இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்க வேண்டும்
• இறுதியாக அறிக்கையின் நிலையை அறிய status ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்
வழக்கு எண் வாரியாக (Case number wise)
• கீழிறங்குப்பெட்டி (drop drown box) யிலிருந்து வழக்கின் வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
• வழக்கின் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
• கீழிறங்குப்பெட்டியிலிருந்தது வருடத்தைத் தெரிவு செய்ய வேண்டும்.
• இறுதியாக, (drop drown box) ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்
தீர்ப்பு வழங்கிய நாள் வாரியாக (Date of judgment wise)
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை) இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்க வேண்டும்
• இறுதியாக அறிக்கையின் நிலையை அறிய Reportable status ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்
அரசியலமைப்புக் குழு வாரியாக (Constitutional bench wise)
• கீழிறங்குப்பெட்டியில் (drop drown box) இருந்து (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை) இரண்டு தேதிகளையும் From – To) தேர்ந்தெடுக்க வேண்டும்
• இறுதியாக, Reportable status ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவேண்டும்.
அகர வரிசைப்படுத்தப்பட்ட வழக்குப்பட்டியல் வாரியாக
(Alphabetical case indexing wise)
• வாதி அல்லது பிரதி வாதியின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக (Amar)
• கீழிறங்குப் பெட்டியில் (drop drown box) இருந்து (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை) இரண்டு தேதிகளையும் தேர்வு செய்யவேண்டும்.
• இறுதியாக, Reportable status ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவேண்டும்.
தீர்ப்பு வாரியாகவும். பொருள்/சொற்றொடர் வாரியாகவும் சட்டம் வாரியாகவும், தற்குறிப்பு வாரியாகவும் தீர்ப்பு நகல்களை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...