மனித உடலின் மகத்துவம்
இரத்த ஓட்ட மண்டலம்
=======================
நமது உடலில் ஓடும் ரத்தம்தான் உயிரோட்டமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம். ஒருவனுடைய உடலில் வளமையான ரத்தம் தேவையான அளவில் சுழன்று கொண்டிருந்தால், அவன் அபார தன்னம்பிக்கை கொண்டவனாகவும், எதற்கும் பயப்படாதவனாகவும் இருப்பான்.
இளமைப் பருவம் என்பது வளரும் பருவங்களில் மிக முக்கியமானது. வளர்ந்து வாலிப வயதை அடையும் போது , நமது உடலில் ரத்தம் மிகவும் வன்மையுடன் இருக்கும். இளமையில் உண்டாகும் அற்புதமான ரத்த ஓட்டத்தினால், மனமகிழ்ச்சி, மனக்களிப்பு, எதிர்பால் ஈர்ப்பு போன்றவை ஏற்படுகின்றன. இதயம், அன்பு, காதல் போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் உதடுகளுக்குச் சொந்தமான உடலில் ரத்த ஓட்டம் ஒரு பகுதி கூடுதலாகவே இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆக, நமது உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்துவது ரத்தம்தான்.
இரத்த ஓட்ட மண்டலம் மூன்று பகுதிகளாக செயல்படுகின்றன. அவைகள் இதயம், நுரையீரல், மற்றும் கல்லீரல் இரத்த ஓட்டம் ஆகும்.
இருதயம்;-
==========
இருதயம் மூன்று நிலைகளில் இயங்குகிறது.இதயம் சுருங்குவது சிஸ்டோலி என்று பெயர்.இதனால் இரத்தம் அழுத்தப்பட்டு தமனிகள் வழியாக உயிர்க்காற்றையும்,உணவுச்சத்துக்களையும் அனைத்து உறுப்புகளுக்கும் செலுத்தப்படுகிறது. இதயம் விரிவடைவதற்கு டயஸ்டோலி என்று பெயர்.இதனால் அனைத்து உறுப்புகளிலிருந்தும் கழிவுகளானஅசுத்த இரத்தங்கள் சிரைகள் வழியாக இருதயத்திற்கு வருகிறது. மூன்றாவது நிலை ஓய்வு நிலை ஆகும். ஒவ்வொரு முறை இதயம் சுருங்கும்போது 60cc இரத்தம் இறைக்கப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு சுமார் நான்கு லிட்டர் இரத்தம் இறைக்கப்படுகிறது.
நுரையீரல் இரத்த ஓட்டம்;-
========================
உடலின் மேற்பாகத்தில் இருந்து மேல் பெருஞ்சிரையின் மூலமாகவும்,உடலின் கீழ்ப்பாகத்திலிருந்து கீழ் பெருஞ்சிரையின் மூலமாகவும் வரும் அசுத்த இரத்தம் இதயத்தின் வலது ஏட்ரியத்திற்குள் கொண்டு வரப்பட்டு வலது ஏட்ரியம் சுருங்கி வலது வெண்டிரிக்கிள் க்குள் இரத்தத்தை செலுத்துகிறது. பிறகு வலது வெண்டிரிக்கிள் சுருங்கி அசுத்த இரத்தத்தை நுரையீரல் தமனி வழியாக நுரையீரலுக்குள் செலுத்தப்படுகிறது. நுரையீரலின் செயல்பாட்டால் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு நுரையீரல் சிரை வழியாக மீண்டும் இதயத்தின் இடது ஏட்ரியம் பகுதிக்குள் செலுத்தப்படுகிறது. இடது ஏட்ரியம் சுருங்கி இடது வெண்டிரிக்கிள் பகுதிக்கு செலுத்தப்படும் இரத்தம் வெண்டிரிக்கிள் சுருங்குவதால் இதய தமனி வழியாக சுத்தம் செய்த இரத்தம் உடலின் பிற பாகங்களுக்கு செல்கிறது. இவ்வாறாக நுரையீரலில் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. இங்கு ஒரு வேறுபாட்டினை அறிந்து கொள்ள வேண்டும். இதய தமனிக்குழாய்களில் தூய்மையான இரத்தம் ஓடும். ஆனால் நூரையீரல் தமனிக்குழாய்களில் மட்டும் அசுத்த இரத்தம் ஓடும். அதேபோல இதய சிரை குழாய்களின் வழியாக அசுத்த ரத்தம் இதயத்திற்கு திரும்ப பெறப்படும். ஆனால் நுரையீரல் சிரை குழாய்களில் மட்டுமே சுத்தமான இரத்தம் ஓடும்.
கல்லீரல் இரத்த ஓட்டம்;-
======================
இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், பித்த நீர் பைகளில் இருந்து பெறப்படும் அசுத்த இரத்தம் போர்ட்டல் சிரை வழியாக கல்லீரலுக்கு செல்கிறது. இந்த போர்ட்டல் சிரையானது சிறிய கிளைகளாக பிரிந்து மேலும் பல தந்துகிகளாக பிரிந்து கல்லீரலுக்குள் நுழைந்து அங்குள்ள கழிவுப்பொருட்களை பெற்றுக்கொண்டு கீழ்ப்பெருஞ்சிரை குழாயுடன் சேர்ந்து கொள்கிறது. அதாவது சிரை குழாய் வழியாக செல்லும் இரத்தம் கல்லீரல் வழியாக சென்றுதான் பொது இரத்த மண்டலத்திற்குள் செல்கிறது. இந்த இரத்த ஓட்டத்தின் மூலமாக கல்லீரல் தனது பாதுகாப்பு பணிகளையும், வளர்சிதை மாற்றத்தில் மேற்கொள்ளும் பணிகளையும் நிறைவேற்றிக்கொள்கிறது.
ரத்தம், தன்னம்பிக்கையின் தாரக மந்திரம். நமது உடலை ஒரு கட்டிடமாகப் பார்த்தால், சுண்ணாம்பையும், மரக்கட்டைகளையும் இணைக்கப்பயன்பட்ட தண்ணீர்தான் ரத்தம். இதன் அடிப்படையில்தான், இயற்கை மூலகங்களில் ரத்தத்தைப் பெருக்கும் உணவுகள் மற்றும் மருந்துகள் வகைப் படுத்தப்பட்டுள்ளன.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. அதனால் உணவில் வாழைப்பூவை அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது.
வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடுகிறோம். துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. அதனால் கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம் என்பதால் அதனை சேர்க்காமல் தனியாக வாழைப்பூவை பொறியல் செய்து சாப்பிடுவது சிறப்பு.
ஆகவே, நாம் நமது உணவில் அன்றாடம் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

No comments:
Post a Comment