Wednesday, 10 February 2016

                                                   மனித உடலின் மகத்துவம்


  நரம்பு மண்டலம்
=================
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.
மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருந்து 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.
காட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு (Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.
மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.
இந்த தன்னியக்க நரம்பு மண்டலத்தில் இரு பிரிவுகள் உள்ளன
• பரிவு நரம்பு மண்டலம் (Sympathetic Nervous System)
• அனுபரிவு நரம்பு மண்டலம் (Parasympathetic Nervous System)
இவை இரண்டும் எதிரெதிர் செயல்களை செய்ய கூடியவை
உதாரணமாக பரிவு நரம்பு மண்டலம் தூண்டப்பட்டால் கண்களின் பாப்பா விரிவடையும். அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் கண்களின் பாப்பா சுருங்கும்.
பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் இதய துடிப்பு அதிகரிக்கும். அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் இதய துடிப்பு குறையும்.
பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் உணவு பாதை மற்றும் குடலுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும், அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் உணவு பாதை மற்றும் குடலுக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் வியர்வை அதிகரிக்கும். அனுபரிவு நரம்பு மண்டலம் இயங்கினால் உமிழ்நீர் மற்றும் உணவு பாதை, குடல் ஆகியவற்றிலுள்ள உணவை செறிக்கும் திரவங்கள் அதிகம் சுரக்கும்.
பரிவு நரம்பு மண்டலம் தூண்டப்பட்டால் வாய் உலர்ந்து விடும். அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் நாக்கில் எச்சில் ஊறும்.
அனுபரிவு நரம்பு மண்டலத்தின் நரம்புகள் மூளையில் பொது உடலுள்ளுறுப்புக்குரிய அகல் நரம்பு மையம் என்று அழைக்கப்படும் நரம்பு மையங்களில் (Nuclei) இருந்து துவங்குகின்றன.
மனித உடலில் இந்த பொது உடலுள்ளுறுப்புக்குரிய அகல் நரம்பு மண்டலத்தில் கீழ்க்காணும் நரம்பு மையங்கள் இருக்கின்றன.
எடிங்கர் வெஸ்ட்பால் நரம்பு மையம் (Edinger Westphal Nucleus) அல்லது உதவி விழியிக்க நரம்பு மையம் (accessory oculomotor nucleus).
இதிலிருந்து வரும் நரம்பு கண்களில் உள்ள பாப்பாவிற்கு சென்று இந்த மையம் தூண்டப்பட்டால் பாப்பா சுருங்கும்.
மேலுள்ள உமிழ்நீர் (Superior Salivatory) நரம்பு மையம்
இதிலுள்ள நரம்பு மேண்டிபிலுக்கு அடியில் உள்ள உமிழ்நீர் சுரப்பி (Submandibular Salivary Gland) மற்றும் நாக்கின்கீழுள்ள (Sublingual) உமிழ்நீர் சுரப்பி ஆகியவற்றிற்கு செல்கிறது. இந்த நரம்பு மையம் தூண்டப்பட்டால் இவ்விரு சுரப்பிகளிலிருந்தும் உமிழ்நீர் சுரக்கிறது.
கீழுள்ள உமிழ்நீர் (Inferior) நரம்பு மையம்
இதிலுள்ள நரம்பு பரோட்டிட் உமிழ்நீர் சுரப்பி சென்று இந்த நரம்பு மையம் தூண்டப்பட்டால் பரோட்டிட் சுரப்பியிலிருந்தும் உமிழ்நீர் சுரக்கிறது.
கண்ணீர் (Lacrimatory) நரம்பு மையம்
இந்த மையத்திலிருந்து நரம்பு கண்ணீர் சுரப்பி செல்கிறது.
வேகஸ் நரம்பின் பின் (இயக்க) மையம் Dorsal (Motor) Nucleus of Vagus
இதிலிருந்து தான் இதயம் முதல் உணவு பாதையில் பெருபகுதி உட்பட நரம்புகள் செல்கின்றன.
இதில் முக்கிய விஷயங்கள்
1. இந்த ஐந்து மையங்களும் ஒரே வகை செல்களிலிருந்து தோன்றியவை.
2. கண்ணீர் நரம்பு மையம் உமிழ்நீர் நரம்பு மையத்திற்கு வெகு அருகில் இருக்கிறது.
தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை.
தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன.
இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.
நரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.
நரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும்.
இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.
இந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.
நமது உடலை ஒரு கட்டிடமாக உருவகப்படுத்திப் பாருங்கள்.
சுண்ணாம்பு சேர்த்து கட்டப்படும் கட்டடம் மேலும் உறுதியுடன் இருக்க, வைரம் பாய்ந்த மரங்களைப் பயன்படுத்துவார்கள். இன்றைய காலகட்டத்தில், வீடுகள் கட்டுவதற்கு, செங்கல், சிமெண்ட், இரும்புச் சத்து உள்ள மருந்துகளும் வழங்கப்படுவதைக் கருத்தில்கொள்ளலாம்.
இதில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், இரும்புச் சத்தின் மூலம் நமது உடல் நரம்புகளை முறுக்கேற்றலாம் என்பதுதான். இதனால்தான், சித்த மருந்துகளில் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களுக்கு, இயற்கை மூலகங்களில் இரும்புச் சத்து அதிகம் உள்ள மூலிகைகளை வகைப்படுத்தியும், இரும்பு போன்ற இயற்கைத் தாதுக்களை முறைப்படி பஸ்பமாக செய்தும் வழங்கி வருகிறார்கள்.
வைரம் பாய்ந்த மரக்கட்டைக்கும் இரும்புக்கும் என்ன தொடர்பு?.
சந்தேகம் எழலாம்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் மரங்கள் சில உண்டு. கருங்காலி, கருவேங்கை, தேக்கு பொன்ற மரங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. இந்த மரங்களை அவ்வளவு எளிதாக, சாதாரான மரங்களை வெட்டும் கோடாரியால் வெட்ட முடியாது. அந்த அளவுக்கு மரத்தின் அடிப்பாகம், கிளைகள் எல்லாம் இரும்பைப் போன்று வலுவோடும் உறுதியோடும் இருக்கும்.
அத்தகைய மரக்கட்டைகளை உடைத்து துண்டுகளாக்கி, கஷாயம் செய்து, அதைப் பல மடங்குகளாகச் சுண்டச் செய்து, அந்த மரத்தின் இரும்புத்தன்மையை மருந்தாக மாற்றுவது சித்தர்களின் மரபு. இப்படி மருந்துகளைத் தயார் செய்து சாப்பிட்டால், நமது உடலில் நரம்புகள் இறுகி நன்கு முறுகேறும். எலும்பும், நரம்பும் இறுகிய உடலில் ரத்தக் குழாய்கள் தங்களுடைய பணியைச் செவ்வனே செய்யும்.
இடன் அடிப்படையில்தான், நரம்புகளைப் பலப்படுத்தும் மருந்துகளும், உணவுகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தொடரும்.........
சித்தர்களின் குரல்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...