Wednesday, 10 February 2016

மனித உடலின் மகத்துவம்

                                   மனித உடலின் மகத்துவம் 
  எலும்பு மண்டலம்:
==================
மனித உடலுக்கு ஆதாரமாகவும் , அஸ்திவாரமாகவும், இருப்பவை எலும்புகளே உடலில் உள்ள எல்லா எலும்புகளும் அதனை இணைக்கும் மூட்டுகளும் சேர்ந்ததே எலும்பு மண்டலம் .
உடலுக்கு ஒரு ஒழுங்கான வடிவமைப்பிற்கு காரணமாகவும் தன் சீரான செயல்பாட்டிற்கு துணை புரிபவையும் எலும்புகளே.
உடலில் உள்ள 7 தாதுக்களிலும் மிகக் கெட்டியானதாகவும் , பலம் உடையதாக இருப்பவை எலும்புகளே. எலும்புகளால்தான் நாம் நேராக நிற்கவும், உருவத்தை பெறவும், வலிமையை பெறவும், இயக்கம் பெறவும் முடிகிறது.
நமது எலும்புக்கூடு பல்வேறுபட்ட எலும்புகளாலும், எலும்புகளின் இணைப்புகளாலும் உருவானதாகும். இணைக்கும் திசுக்களிலேயே கடினமாக அமைந்து இருப்பது எலும்பு ஆகும். எலும்புகளானது 50 சதவீதம் தண்ணீரும், 25 சதவீதம் கால்சியம் எனப்படும் சுண்ணாம்பும், 25 சதவீதம் செல்களாலும் ஆனவை.
ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு 206 ஆகும். (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும்.
எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு, இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம். மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றெலும்புகளைத் தவிர) உள்ளன; இவை 8 மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன.
மனித எலும்புக்கூடு
****************************
மண்டையறை எலும்புகள் (8)
----------------------------------------------------
நுதலெலும்பு (frontal bone) (1)
சுவரெலும்பு (parietal bone) (2)
கடைநுதலெலும்பு (temporal bone) (2)
பிடர் எலும்பு (occipital bone) (1)
ஆப்புரு எலும்பு (sphenoid bone) (1)
நெய்யரியெலும்பு (ethmoid bone) (1)
முக எலும்புகள் (14)
-----------------------------------
கீழ்த்தாடை எலும்பு (mandible)(1)
மேற்றாடை எலும்பு (maxilla) (2)
அண்ணவெலும்பு (palatine bone) (2)
கன்ன எலும்பு (zygomatic bone) (2)
நாசி எலும்பு (nasal bone) (2)
கண்ணீர் எலும்பு (lacrimal bone) (2)
மூக்குச் சுவர் எலும்பு (vomer)
கீழ் மூக்குத் தடுப்பெலும்பு (inferior nasal conchae) (2)
நடுக்காதுகளில் (6):
----------------------------------
சம்மட்டியுரு (malleus) (2)
பட்டையுரு (incus) (2)
ஏந்தியுரு (stapes) (2)
தொண்டையில் (1):
--------------------------------
தொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid)
தோள் பட்டையில் (4):
---------------------------------------
காறை எலும்பு (clavicle) (2)
தோள் எலும்பு (scapula) (2)
மார்புக்கூட்டில் thorax(25):
------------------------------------------
மார்பெலும்பு (sternum) (1)
மேலும் மூன்று எலும்புகளாகக் கருதப்படலாம்: பிடியுரு (manubrium), உடல் மார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process)
விலா எலும்புகள் (rib) (24)
முதுகெலும்புத் தூண் (vertebral column) (33):
கழுத்து முள்ளெலும்புகள் (cervical vertebra) (7)
மார்பு முள்ளெலும்புகள் (thoracic vertebra) (12)
நாரிமுள்ளெலும்புகள் (lumbar vertebra) (5)
திரிகம் (திருவெலும்பு) (sacrum)
வால் எலும்பு (குயிலலகு) (coccyx)
மேற்கைகளில் (arm) (1):
----------------------------------------
புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus)
புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus)
முன்கைகளில் (forearm) (4):
---------------------------------------------
அரந்தி (ulna) (2)
ஆரை எலும்பு (radius) (2)
ஆரை எலும்புத் தலை (head of radius)
கைகளில் (hand) (54):
-----------------------------------
மணிக்கட்டுகள் (carpal):
-----------------------------------------
படகெலும்பு (scaphoid) (2)
பிறைக்குழி எலும்பு (lunate) (2)
முப்பட்டை எலும்புtriquetrum) (2)
பட்டாணி எலும்பு (pisiform) (2)
சரிவக எலும்பு (trapezium) (2)
நாற்புறவுரு எலும்பு (trapezoid) (2)
தலையுரு எலும்பு (capitate) (2)
கொக்கி எலும்பு (hamate) (2)
அங்கை முன்னெலும்புகள் (அனுமணிக்கட்டு எலும்புகள்) (metacarpal): (5 × 2)
விரலெலும்புகள் (phalange):
-------------------------------------------------
அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2)
நடு விரலெலும்புகள் (Intermediate phalanges) (4 × 2)
தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2)
இடுப்புக்கூடு (pelvis) (2):
--------------------------------------
இடுப்பெலும்பு (ilium) மற்றும் கீழ் இடுப்பெலும்பு (ischium
கால்கள் (leg) (8):
------------------------------
தொடையெலும்பு (femur) (2)
இடுப்பு மூட்டு (hip joint) (மூட்டு, எலும்பல்ல)
பெரிய தொடையெலும்புக் கொண்டை (greater trochanter of femur)
தொடையெலும்புப் புடைப்பு (condyles of femur)
சில்லெலும்பு (patella) (2)
கால் முன்னெலும்பு (கணைக்காலலுள்ளெலும்பு) (tibia) (2)
சிம்பு எலும்பு (கணைக்கால்வெளியெலும்பு) (fibula) (2)
காலடிகளில் (52):
----------------------------
கணுக்காலெலும்புகள் (tarsal):
-------------------------------------------------
குதிகால் (calcaneus) (2)
முட்டி (talus) (2)
படகுரு எலும்பு (navicular bone) (2)
உள் ஆப்புவடிவ எலும்பு (2)
இடை ஆப்புவடிவ எலும்பு (2)
வெளி ஆப்புவடிவ எலும்பு (2)
கனசதுர எலும்பு (cuboidal bone) (2)
அனுகணுக்காலெலும்புகள் (metatarsal) (5 × 2)
விரலெலும்புகள் (phalange):
---------------------------------------------
அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2)
நடு விரலெலும்புகள் (intermediate phalanges) (4 × 2)
தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2)
எலும்பின் உட்கூறுகள் யாவை?
எலும்பானது இருவகை எலும்புத் திசுக்களால் ஆனது. அதன் வெளிப்புறத்தில் எலும்புச் சவ்வு (periosteum) எனப்படும் ஒரு வகைத் தோல் பகுதி அமைந்துள்ளது. இதன் கீழே தடிமனான, அடர்த்தி மிக்க, ‘திடவடிவிலான எலும்பு’ எனப்படுகிற மெல்லிய அடுக்கு (layer) ஒன்று அமைந்துள்ளது. இதுவே கடினமான அல்லது உறுதியான எலும்புத் திசுவாகும்.
இதற்கு உட்புறம் எலும்பின் நடுப்பகுதியான வேறொரு எலும்புத் திசு பஞ்சு அல்லது தேன்கூடு அமைப்பில் அமைந்துள்ளது. இதில் இடைவெளிகளும், துளைகளும் உள்ளன; இதனை பஞ்சு அமைப்பிலுள்ள அல்லது குழிவுகளைக் கொண்ட எலும்புத் திசு என அழைப்பர். இது வெளிப்புறம் இருக்கும் எலும்புத் திசுவை விட மிகவும் மென்மையானது; இதன் இடைவெளிகளில் புதிய இரத்த அணுக்களை உருவாக்கும் நாளங்களும், பாகு போன்ற எலும்புச் சோறும் (marrow) அமைந்துள்ளன.
சாதாரண மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் சிலரிடம் 12 இணை விலா எலும்புகளுக்குப் (Ribs) பதிலாக 13 இணைகள் இருப்பதுண்டு; இதனால் அத்தகையோர்க்கு மொத்தத்தில் 208 எலும்புகள் இருக்கும்.
நமது உடலை ஒரு கட்டிடமாக உருவகப்படுத்திப் பாருங்கள்.
எலும்பின் முக்கியமான மூலப்பொருள் (சத்து) கால்சியம் எனப்படும் சுண்ணாம்பு. பழங்கால வீடுகளுக்கு சுண்ணாம்பு எனப்படும் வெந்த கற்களை (இன்றைய சிமெண்டுக்கு மாற்று) பாலில் நீர்த்து, அத்துடன் கடுக்காய், பனை வெல்லம் சேர்த்து குழைத்துக் கட்டடம் எழுப்புவர்.
வேகவைத்த சுண்ணாம்புக் கற்களை பால், இளநீர் சேர்த்து கரைப்பதால், பாலில் உள்ள சுண்ணாம்புச் சத்தும் (CALCIUM), இளநீர் உள்ள சுண்ணாம்புச் சத்து சேர்த்து சுண்ணாம்புக் கற்களுக்கு மேலும் வலுசேர்க்கின்றன. இத்துடன் நின்று விடவில்லை. கடுக்காய் சேர்க்கப்படுகிறது. அந்தக் கடுக்காயில் என்ன இருக்கிறது?.
சுண்ணாம்புச் சத்தை இரும்பைப்போல் இறுத்தும் தன்மை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காயின் துவர்ப்புத்தன்மை, சுண்னாம்புச் சத்துடன் சேரும் போது கட்டடத்தின் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது. எல்லாம் சரி, பனை வெல்லம் சேர்ப்பது ஏன்?.
பனை மரத்தின் சீவிய பாளையில் இருந்து கிடைக்கும் பதநீருடன் தக்க அளவில் சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சிக் கிடைப்பதுதான் பனை வெல்லம். பனை வெல்லத்தில் உள்ள இனிப்புத்தன்மைக்குப் பதநீரும், சுண்ணாம்பும் தான் காரணம். பதநீரின் துவர்ப்பு, சுண்ணாம்பு இரண்டும் பனை வெல்லத்தில் இருப்பதால், இதைக் கடுக்காயுடன் சேர்த்து தூளாக்கி, சுண்ணாம்புடன் கலந்து வீடு அல்லது கட்டடம் கட்டும்போது அது உறுதியாக, பல நூறு ஆண்டுகள் நிலைத்திருக்கும்.
சுண்ணாம்பு (இயற்கைதாது) +பால் (இயற்கை) +இளநீர் (இயற்கை) +கடுக்காய் (இயற்கை) +பனை வெல்லம் (இயற்கை) என, இயற்கை மூலகங்களால் உண்டான கட்டடங்களே பல நூறு ஆண்டுகள் உறுதியுடன் இருக்கும் போது, இயற்கை மூலகங்களில் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தை நாம் உணவாகவோ, மருந்தாகவோ சாப்பிடும்போது நமது எலும்புகள் பலம் பெற்று, உறுதியாகி, உடல் வலிமையோடு நூறு ஆண்டுகள் வாழ முடியும் இல்லையா?.
ஆக, எலும்புகள் உறுதி பெற, இயற்கை மூலகங்களில் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ள மூலிகைகள் மற்றும் உணவுகளைத் தொடந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளில் உண்டாகும் கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் நீங்கும்.
சித்தர்களின் குரல்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...