Wednesday, 10 February 2016

                                      தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

தஞ்சையை ஆண்ட மரட்டிய மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் தஞ்சை சரசுவதி மகால் நூலகம் .
இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது .
இங்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலை சுவடிகள், தஞ்சாவூர் ஓவியங்கள், கையெழுத்து படிகள், பழமையான நூல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
1627 அச்சிடப்பட்ட பழமையான் அச்சு புத்தகம் இங்கு பாதுகாக்கப் பட்டு வருகிறது.
தமிழர் நாட்டில் உள்ள பண்டைய ஓலை சுவடிகளில் 50 மட்டுமே இது வரை படித்து அறியப்பட்டுள்ளன.
அதற்குள் அடங்கியவை தான் திருக்குறள், சிலப்பதிகாரம்,மணிமேகலை, அகநானூற, புறநானூறு, பதிற்று பத்து, எட்டு தொகை, நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறு சீவக சிந்தாமணி, பரி பாடல் போன்றவை.
இதில் சில இலக்கியங்களின் செழுமையும் தொன்மையையும் கண்டு உலகமே வியந்து நிற்கிறது.
மூன்று லட்சம் ஓலை சுவடிகளையும் படித்தறிந்தால் தமிழனின் வாழ்க்கை முறையும் தமிழ் மொழியின் செழுமையும் பற்றி நாம் அறிந்து கொள்ள எதுவாக இருக்கும் .
உலகில் தோன்றிய மொழிகளில், மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழினம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்க இந்த ஓலை சுவடிகள் உதவும்.
செம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையான இலக்கியங்களை கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டியகடமை நமக்கு உண்டுஇதற்கு வெறும் நூறு கோடி ரூபாய் ஒதுக்கினால் போதுமானது.
தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.
Satheesh Kumar's photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...