கஞ்சமலை
------------
கஞ்சமலை, இதன் அமைவிடம் இந்தியாவின்
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் சேலம்
நகரில் இருந்து சுமார் 15 கி.மீ , தொலைவில்
அமைந்துள்ளது .இங்கு அருள்மிகு கஞ்சமலை
சித்தேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது ,
சேலம் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து 68 ஏ,
68 பி, 29 ஏ ஆகிய தடம் எண் கொண்ட பஸ்கள்
கிளம்புகின்றன..
இக் கோவிலின் மூலவர்= அருள்மிகு
சித்தேஸ்வரர் ஆவார் . இக் கோவில் தீர்த்தம் =
காந்ததீர்த்த குளம் ஆகும் ,
இக் கோவில் சுமார் 1000-2000 வருடங்கள்
பழமை வாய்ந்தது ஆகும் . இக் கோவிலில்
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில்
விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன
.சித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது
இக் கோவிலின் தல சிறப்பம்சமாகும்..இக்
கோவில் காலை 6.30 மணி முதல் 1 மணி
வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி
வரை திறந்திருக்கும். இக் கஞ்சமலையில்
அழகிய விமானத்துடன் கூடிய சிறிய கோயில்
உள்ளது. காலாங்கிசித்தரும், திருமூலரும்
மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை
இருக்கிறது.
இங்கு நடந்து தான் செல்ல முடியும்.
கோயிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர
விநாயகர், சுப்பிரமணியர் மட்டுமே உள்ளனர்.
கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது.
மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம்
நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன்
கோயில் உள்ளது. "ஞானசற்குரு பால முருகன்'
என இவரை அழைக்கின்றனர்.
ஞானசற்குரு பால முருகன்'
நாரதர், சிவனுக்கு உபதேசிக்கும் முருகன்
சிலைகள் சிறப்பாக இருக்கின்றன.வியாதிகள்
குணமாகவும், முகத்தில் உள்ள பரு நீங்கவும்
பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.பி
ரார்த்தனை நிறைவேறியதும் உப்பு, மிளகு
வாங்கி போட்டு நேர்த்திக்கடன்
நிறைவேற்றுகின்றனர்.
நாரதர்
இங்குள்ள மலையில் ஏராளமான மூலிகைகள்
இருப்பதால், இங்கு கிரிவலம் வந்தால் தீராத
நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
இக் கோவிலின் தலபெருமை மிகவும்
விசேசமாகும் இந்த கோயில் அருகே ஓடும்
பொன்னி ஓடை எக்காலமும் வற்றுவதில்லை.
பக்தர்கள் இதில் நீராடுகின்றனர். கோயிலுக்குள்
இருக்கும் காந்ததீர்த்த குளத்து நீர் கொண்டு
சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இக்குளத்து நீரை தலையில் தெளித்தாலே
வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை. முகத்தில்
பரு உள்ளவர்கள் உப்பு, மிளகு வாங்கிப்
போட்டு இந்த குளத்து நீரால் முகம்
கழுவினால் பரு வருவதில்லை என்கிறார்கள்.
சில டாக்டர்களும் இங்கு போகச் சொல்லி
நோயாளிகளை பரிந்துரை செய்வதாக
சொல்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.
இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான்
பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்."அமாவாசை
கோயில்' என்ற பெயர் கூட இதற்கு உண்டு.
தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை
வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை
தலையில் தெளித்து நலம் பெற வேண்டலாம்.
பவுர்ணமியன்று பக்தர்கள் மாலை 5 மணியில்
இருந்து கிரிவலம் துவங்குகிறார்கள். 18 கி.மீ.,
சுற்றளவுள்ள மலையை சித்தேஸ்வரர் நாமம்
சொல்லி சுற்றி வருகின்றனர். இரவு
வேளையில், சுற்றுச்சூழல் மாசில்லாத
இம்மலையைச் சுற்றி வருவதன் மூலம்
மூலிகை காற்று பட்டு, பல நோய்கள் தீர்வதாக
நம்புகின்றனர். மேலும் காலங்கி சித்தர்
என்பவர் பழநியில் நவபாஷாண முருகன்
சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு
ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின்
மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது
உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு
மடங்களை ஸ்தாபித்தவர்.
அடுத்து வரும் பதிவுகளில் .......
கஞ்சம்' என்றால் "தாமரை' எனப் பொருள்.
மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற
தோற்றமுடையதால் இப்பெயர்
ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி
மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும்
வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த
அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே
கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர்.
குறைந்து விழுந்ததால் "கஞ்சம்' என்ற
பொருளிலும் இந்த மலைக்கு கஞ்சமலை என
பெயர் வந்திருக்கலாம்.
சித்தர் வந்த கதை : காலாங்கி சித்தரும்,
அவருடைய குரு திருமூலரும்
மலைப்பகுதிகளில் மூலிகை தேடி
அலைந்தனர்.அவ்வாறு மூலிகை தேடி
அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர்.
திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை
சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி
காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து
கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு
அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள
ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக்
கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி
விட்டது.
""ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே,'' என்ற
பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர்
சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு
விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில்
பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில்
இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி
விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய
பாடு தான்.
காட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி
வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு
இளைஞர் நின்று கொண்டிருந்தார்.
""அடேய்! இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான்
பார்த்தாயா? பசிக்கிறது. சாப்பாடு போடாமல்
எங்கே போய் விட்டான்?'' என்றார்.
இளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார்.
""குருவே! நான் தான் காலாங்கி,'' என்றவர்
நடந்ததை எல்லாம் சொன்னார்.
திருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு,
""அடேய்! நான் வருவதற்குள் சாப்பிட்டு
விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து
கொள்,'' என்றார்.
காலாங்கி வேறு வழியின்றி கை விரலைக்
தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை
எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர்
அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச்
சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி
விட்டார்.
இருவரும் இனைஞர்களான இடம், தற்போது
கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே "இளம்
பிள்ளை'. கஞ்சமலை அருகில் இந்த ஊர்
இருக்கிறது. பின்னர் காலாங்கிக்கு சித்தர் என்ற
அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின்
நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க
உத்தரவிட்டார். காலாங்கியும் அங்கேயே தங்கி
விட்டார்.
மக்கள் அவரை "காலாங்கி சித்தர்' என்
அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர்
இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே
அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து
ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும்,
இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு
ஈஸ்வரபட்டம் கொடுத்து "சித்தேஸ்வரர்" என
பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு
கூறுகிறது. இதனால் லிங்கவடிவிலேயே
சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.
கஞ்சமலை என்னும் இத்தலத்தில் எழுந்தருளி
தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு
அருள்பாலிக்கும் சித்தேஸ்வர சுவாமியாகிய
திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்று
அழைக்கப்படும் காலங்கி நாதர் என்று
சொல்கிறார்கள்.
சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும்
தன்மை பெற்றவர் எனவும் . சித்து நிலையில்
தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி
இக்கஞ்சமலையில் பொதிந்து , காந்த நீர்
சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில்
மின்காந்த சக்தியாக இன்றும்
இக்கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று
நம்பபடுகிறது .
சுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு
கொண்டசித்தேஸ்வர சுவாமி கோவில்
அமைந்துள்ள
இந்த மலைப்பகுதியின் சுற்றுபுறத்தில் எங்கு
தோண்டினாலும் நீர் வளம் நிறைந்து
காணப்படுகிறது.அவை பொதுவாக
ஊற்றுகளாகவே காணபடுகின்றன.எக
காலத்திலும் வற்றாத இவ் ஊற்றுகள் மிகுந்த
தாதுவளம் ' கொண்டவை .
இத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத்
தீர்த்தக் குளங்கள் நிறைய உள்ளன. நாம்
முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு
தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை
ராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம்
என்று சொல்கிறார்கள்.
இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி
ஒன்றினை 5 ரூபாய்க்கு வாடகைக்குத்
தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய
அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள்
பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித
நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக்
காலத்திலும் வற்றுவதில்லையாம்.
மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர்
வருகிறது என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சி
அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப்
படுகிறது.
இக்கோவிலின் கருவறைக்குப் பின்
படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு
உள்ளது. படிக்கட்டுக்கு அருகில்
சுதையாலான பெரிய நந்தி ஒன்றும் உள்ளது.
இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படு
கின்றன. அங்கு விற்கப்படும் உப்புப்
பொட்டலங் களை வாங்கி நம் தலையில்
வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி
இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப்
பார்க்காமல் வரவேண்டும்.
ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி
நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது
கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு
கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை
உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல்
தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த
ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள்
உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும்
ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம்
நீர் எடுத்துக் குளிக்கிறார்கள்.
இத்தலத்தில் அருள் புரியும் சித்தேஸ்வரரைப்
பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.
------------
கஞ்சமலை, இதன் அமைவிடம் இந்தியாவின்
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் சேலம்
நகரில் இருந்து சுமார் 15 கி.மீ , தொலைவில்
அமைந்துள்ளது .இங்கு அருள்மிகு கஞ்சமலை
சித்தேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது ,
சேலம் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து 68 ஏ,
68 பி, 29 ஏ ஆகிய தடம் எண் கொண்ட பஸ்கள்
கிளம்புகின்றன..
இக் கோவிலின் மூலவர்= அருள்மிகு
சித்தேஸ்வரர் ஆவார் . இக் கோவில் தீர்த்தம் =
காந்ததீர்த்த குளம் ஆகும் ,
இக் கோவில் சுமார் 1000-2000 வருடங்கள்
பழமை வாய்ந்தது ஆகும் . இக் கோவிலில்
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில்
விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன
.சித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது
இக் கோவிலின் தல சிறப்பம்சமாகும்..இக்
கோவில் காலை 6.30 மணி முதல் 1 மணி
வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி
வரை திறந்திருக்கும். இக் கஞ்சமலையில்
அழகிய விமானத்துடன் கூடிய சிறிய கோயில்
உள்ளது. காலாங்கிசித்தரும், திருமூலரும்
மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை
இருக்கிறது.
இங்கு நடந்து தான் செல்ல முடியும்.
கோயிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர
விநாயகர், சுப்பிரமணியர் மட்டுமே உள்ளனர்.
கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது.
மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம்
நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன்
கோயில் உள்ளது. "ஞானசற்குரு பால முருகன்'
என இவரை அழைக்கின்றனர்.
ஞானசற்குரு பால முருகன்'
நாரதர், சிவனுக்கு உபதேசிக்கும் முருகன்
சிலைகள் சிறப்பாக இருக்கின்றன.வியாதிகள்
குணமாகவும், முகத்தில் உள்ள பரு நீங்கவும்
பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.பி
ரார்த்தனை நிறைவேறியதும் உப்பு, மிளகு
வாங்கி போட்டு நேர்த்திக்கடன்
நிறைவேற்றுகின்றனர்.
நாரதர்
இங்குள்ள மலையில் ஏராளமான மூலிகைகள்
இருப்பதால், இங்கு கிரிவலம் வந்தால் தீராத
நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
இக் கோவிலின் தலபெருமை மிகவும்
விசேசமாகும் இந்த கோயில் அருகே ஓடும்
பொன்னி ஓடை எக்காலமும் வற்றுவதில்லை.
பக்தர்கள் இதில் நீராடுகின்றனர். கோயிலுக்குள்
இருக்கும் காந்ததீர்த்த குளத்து நீர் கொண்டு
சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இக்குளத்து நீரை தலையில் தெளித்தாலே
வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை. முகத்தில்
பரு உள்ளவர்கள் உப்பு, மிளகு வாங்கிப்
போட்டு இந்த குளத்து நீரால் முகம்
கழுவினால் பரு வருவதில்லை என்கிறார்கள்.
சில டாக்டர்களும் இங்கு போகச் சொல்லி
நோயாளிகளை பரிந்துரை செய்வதாக
சொல்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.
இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான்
பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்."அமாவாசை
கோயில்' என்ற பெயர் கூட இதற்கு உண்டு.
தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை
வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை
தலையில் தெளித்து நலம் பெற வேண்டலாம்.
பவுர்ணமியன்று பக்தர்கள் மாலை 5 மணியில்
இருந்து கிரிவலம் துவங்குகிறார்கள். 18 கி.மீ.,
சுற்றளவுள்ள மலையை சித்தேஸ்வரர் நாமம்
சொல்லி சுற்றி வருகின்றனர். இரவு
வேளையில், சுற்றுச்சூழல் மாசில்லாத
இம்மலையைச் சுற்றி வருவதன் மூலம்
மூலிகை காற்று பட்டு, பல நோய்கள் தீர்வதாக
நம்புகின்றனர். மேலும் காலங்கி சித்தர்
என்பவர் பழநியில் நவபாஷாண முருகன்
சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு
ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின்
மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது
உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு
மடங்களை ஸ்தாபித்தவர்.
அடுத்து வரும் பதிவுகளில் .......
கஞ்சம்' என்றால் "தாமரை' எனப் பொருள்.
மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற
தோற்றமுடையதால் இப்பெயர்
ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி
மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும்
வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த
அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே
கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர்.
குறைந்து விழுந்ததால் "கஞ்சம்' என்ற
பொருளிலும் இந்த மலைக்கு கஞ்சமலை என
பெயர் வந்திருக்கலாம்.
சித்தர் வந்த கதை : காலாங்கி சித்தரும்,
அவருடைய குரு திருமூலரும்
மலைப்பகுதிகளில் மூலிகை தேடி
அலைந்தனர்.அவ்வாறு மூலிகை தேடி
அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர்.
திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை
சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி
காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து
கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு
அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள
ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக்
கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி
விட்டது.
""ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே,'' என்ற
பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர்
சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு
விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில்
பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில்
இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி
விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய
பாடு தான்.
காட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி
வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு
இளைஞர் நின்று கொண்டிருந்தார்.
""அடேய்! இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான்
பார்த்தாயா? பசிக்கிறது. சாப்பாடு போடாமல்
எங்கே போய் விட்டான்?'' என்றார்.
இளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார்.
""குருவே! நான் தான் காலாங்கி,'' என்றவர்
நடந்ததை எல்லாம் சொன்னார்.
திருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு,
""அடேய்! நான் வருவதற்குள் சாப்பிட்டு
விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து
கொள்,'' என்றார்.
காலாங்கி வேறு வழியின்றி கை விரலைக்
தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை
எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர்
அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச்
சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி
விட்டார்.
இருவரும் இனைஞர்களான இடம், தற்போது
கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே "இளம்
பிள்ளை'. கஞ்சமலை அருகில் இந்த ஊர்
இருக்கிறது. பின்னர் காலாங்கிக்கு சித்தர் என்ற
அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின்
நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க
உத்தரவிட்டார். காலாங்கியும் அங்கேயே தங்கி
விட்டார்.
மக்கள் அவரை "காலாங்கி சித்தர்' என்
அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர்
இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே
அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து
ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும்,
இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு
ஈஸ்வரபட்டம் கொடுத்து "சித்தேஸ்வரர்" என
பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு
கூறுகிறது. இதனால் லிங்கவடிவிலேயே
சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.
கஞ்சமலை என்னும் இத்தலத்தில் எழுந்தருளி
தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு
அருள்பாலிக்கும் சித்தேஸ்வர சுவாமியாகிய
திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்று
அழைக்கப்படும் காலங்கி நாதர் என்று
சொல்கிறார்கள்.
சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும்
தன்மை பெற்றவர் எனவும் . சித்து நிலையில்
தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி
இக்கஞ்சமலையில் பொதிந்து , காந்த நீர்
சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில்
மின்காந்த சக்தியாக இன்றும்
இக்கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று
நம்பபடுகிறது .
சுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு
கொண்டசித்தேஸ்வர சுவாமி கோவில்
அமைந்துள்ள
இந்த மலைப்பகுதியின் சுற்றுபுறத்தில் எங்கு
தோண்டினாலும் நீர் வளம் நிறைந்து
காணப்படுகிறது.அவை பொதுவாக
ஊற்றுகளாகவே காணபடுகின்றன.எக
காலத்திலும் வற்றாத இவ் ஊற்றுகள் மிகுந்த
தாதுவளம் ' கொண்டவை .
இத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத்
தீர்த்தக் குளங்கள் நிறைய உள்ளன. நாம்
முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு
தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை
ராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம்
என்று சொல்கிறார்கள்.
இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி
ஒன்றினை 5 ரூபாய்க்கு வாடகைக்குத்
தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய
அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள்
பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித
நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக்
காலத்திலும் வற்றுவதில்லையாம்.
மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர்
வருகிறது என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சி
அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப்
படுகிறது.
இக்கோவிலின் கருவறைக்குப் பின்
படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு
உள்ளது. படிக்கட்டுக்கு அருகில்
சுதையாலான பெரிய நந்தி ஒன்றும் உள்ளது.
இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படு
கின்றன. அங்கு விற்கப்படும் உப்புப்
பொட்டலங் களை வாங்கி நம் தலையில்
வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி
இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப்
பார்க்காமல் வரவேண்டும்.
ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி
நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது
கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு
கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை
உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல்
தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த
ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள்
உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும்
ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம்
நீர் எடுத்துக் குளிக்கிறார்கள்.
இத்தலத்தில் அருள் புரியும் சித்தேஸ்வரரைப்
பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.
No comments:
Post a Comment