மனித உடலின் மகத்துவம்
மண்டலம்
===============
நமது உடல் அசைவுகளையும், இயக்கத்தையும் பெற்றது. இந்த அசைவு மற்றும் இயக்கத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது தசைகளே. செல்கள் ஒன்று கூடி கூட்டமாக சேர்ந்து திசுக்கள் ஆகின்றன. திசுக்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து தசைகளாக மாறுகின்றன.
மனித உடலில் 600 க்கும் மேற்பட்ட தசைகள் உடலின் 206 க்கும் மேற்பட்ட எலும்புகளுடன் சேர்ந்து உடல் இயக்கம் பெற உதவுகிறது.
தசைகள் மூன்று வகைகள் ஆகும்.
அவை;-
(1) இயக்கு தசை அல்லது எலும்பு தசை,
(2) இயங்கு தசை,
(3) இதயத்தசை ஆகியன.
(1)இயக்கு தசைகள் அல்லது எலும்பு தசைகள்
**************************************************************
நமது விருப்பத்திற்கேற்ப இயக்கப்படுகின்றன. இவை எலும்புகளுடன் சேர்ந்து இருப்பதால் எலும்பு தசை என்றும், இந்த தசைகளில் வரி போன்ற அமைப்பு உள்ளதால் வரித்தசை என்றும் கூறுகிறோம்.
உதாரணம் தலை, நடு உடல், கை, கால் தசைகள்.
(2) இயங்கு தசைகள்
****************************
இவை தாமாக அதாவது தன்னிச்சையாக இயங்குகின்றன. இந்த தசைகளில் வரி எதுவும் இல்லாமல் மழுமழுப்பாக இருக்கும். அதனால் வரியற்ற தசைகள் என்றும் கூறுவர். உதாரணம் வயிறு, குடல்கள், இருதயம், மற்ற உறுப்புகள் ஆகியன.
(3) இதயத்தசை
*********************
இந்த தசையும் நமது விருப்பத்திற்கும், இயக்கத்திற்கும் கட்டுப்படாது. இதன் சிறப்பம்சம் இயக்கு தசைகள் போன்று காணப்பட்டாலும் செயல்பாட்டில் இயங்குதசைகளாகும். மற்றும் சிறப்பு அமைப்பு கொண்ட வரி இருக்கும்.
ஒவ்வொரு எலும்பு தசையிலும் தசை இழைகள் உண்டு. இணைப்பு திசுக்கள், இரத்த நாளங்கள், நரம்புகள் உள்ளன. இந்த தசைகள் இரத்த நாளங்களிலிருந்து இரத்தத்தை பெற்றுக்கொண்டு, தங்களிடமுள்ள கழிவுகளை வெளியே அனுப்பிவிடும். தசைகளுக்கும் மத்திய நரம்பு மண்டலத்திற்கும் நேரடியான இணைப்பு உண்டு.
ஒவ்வொரு தசையிலும் இயக்க நரம்பு இழை மற்றும் உணர்வு நரம்பு இழை என இரண்டு வித நரம்பு தொடர்கள் உள்ளன. அதேபோல ஒவ்வொரு தசைக்கும் தொடக்கம் மற்றும் முடிவு என இரண்டு நிலைகள் உள்ளன. தொடக்க நிலைத்தசை அசையாமல் நிலையாக இருக்கும். முடிவுத்தசை அசையும் அதாவது இயங்கும். ஒரு தசை இயங்குகின்றபோது அதற்கு எதிராக இன்னொரு தசை செயல்படும்.
மடக்கு தசைகள் சுருங்கினால் நீட்டு தசைகள் நீளும். நீட்டு தசைகள் சுருங்கினால் மடக்கு தசைகள் நீட்டும். இவ்வாறு பலதரப்பட்ட, பலதிறப்பட்ட தசைப்பகுதிகள் சுருங்கி விரிகன்ற இயக்கங்கள், ஒரு குறிப்பிட்டமுறையில், ஒரு குறிப்பிட்ட வேகத்துடன் நரம்பு மண்டலத்தின் உதவியால் நடத்தப்படுகின்றன. இந்த தசை இயக்கத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
அவைகள்
(1) நிலையான நீளாத இயக்கம்,
(2) நீள்கின்ற இயக்கம்,
(3) குவிகின்ற இயக்கம் ஆகியன.
இவ்வாறு தசைகள் செயல்புரியும்போது தசைகளுக்கு உள்ளே இருக்கும் உயிர்க்காற்று ஆக்சிகரணம் அடைந்து எரிந்து விடுகிறது அதனால் கரியமிலவாயுவும், லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகளும் உண்டாகின்றன. மேலும் நமது உடலின் வெப்ப நிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ள தேவையான வெப்பத்தினை உற்பத்தி செய்பவை தசை மண்டலம் ஆகும்.
நமது உடலை ஒரு கட்டிடமாகப் பார்த்தால், ஒரு கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகும், அதில் உடனே குடியேறிவிட முடியாது. அதில் சில மேற்பூச்சுகள், வண்ணங்கள் தீட்டுதல் போன்ற வேலைப்பாடுகளைச் செய்த பிறகுதான் வீட்டுக்குள் குடிபுக முடியும்.
லட்சக்கணக்கில் செலவழித்து வீட்டைக் கட்டி முடித்து, அதில் வெளிப்பூச்சு, உள்பூச்சு போன்றவற்றைச் செய்யவில்லை என்றால், அந்தக் கட்டடத்தில், மழைக்காலத்தில் நீர்க்கழிவு, கட்டிடம் செதில், செதிலாக உரிவது, கட்டடத்தில் வெடிப்பு போன்றவை ஏற்படும். மேலும், கட்டடத்தின் ஆயுளும் குறையும்.
இதேபோல்தான், உடலானது என்னதான் எலும்பு, நரம்பு, ரத்தம், இவற்றால் முக்கியத்துவம் பெற்றாலும், இவற்றுக்கு ஓர் உருவம் கொடுப்பது தோலும், தசைகளும் தான். உடலை ஒழுங்காக இயக்குவது இந்தத் தசைகள்தான். இதயத்தைச் சீராக இயக்கி, நமக்காக வாழ்நாள் முழுவதும் செயலாற்றுவதும் இந்தத் தசைகள் தான்.
ஆக, பூசப்படாத கட்டிடத்தில் உண்டாகும் குறைகளைப்போல், தசைகளின் செயல்பாடு குறையும்போது, படை, அரிப்பு, சொரி, சிரங்கு, பரு, அரையாப்புக் கட்டிகள், பித்த வெடிப்பு, குஷ்டம் (LEPROSY), காயங்கள், புண்கள், போன்ற குறைகள் உண்டாகும்.
இயற்கைத் தீர்வு :
-------------------------------
தினசரி காலையில் பப்பாளிப்பழம் 300 கிராம், பேரீச்சம்பழம் 6 பழம், அத்திப்பழம் 4 பழம், தேங்காய் துருவல் 50 கிராம் இதனுடன் தினசரி ஒரு டம்ளர் பால், இதனை காலை உணவாக யார் ஒருவர் சாப்பிட்டு வருகிறார்களோ, அவர்களுக்கு எலும்பு, நரம்பு, தசை மண்டலக் கோளாறுகள் அனைத்தும் முழுமையாக தீரும்.

No comments:
Post a Comment