மனித உடலின் மகத்துவம்
இனப்பெருக்க மண்டலம்
========================
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் பிறப்பும், அவர்களுக்குக் குழந்தை பிறந்த பிறகுதான் முழுமை அடைகிறது.
சந்ததியைப் பெருக்கும் முக்கியப் பணியைச் செய்யும் இந்த இனப்பெருக்க மண்டலத்தில் சுரக்கும் நான்கு முக்கிய பாலியல் ஹார்மோன்கள் ஆக்சிடோசின், நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன்(FSH), ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆன்ட்ரோஜன் ஆகும்.
ஆக்ஸிடோசின் காதல் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது. இது உடலுறவின் உச்ச நிலையின் போது ஆண் மற்றும் பெண் ஆகிய இருவராலும் வெளியிடப்படுகிறது. இரு ஆக்சிடோசின்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக நம்பப்படுகிறது.
புரோலாக்டிக் மற்றும் ஆக்சிடோசின் ஆகிய இரண்டும் பெண்களின் பால் உற்பத்தியைத் தூண்டுகிறது. நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன் (FSH) முட்டை முதிர்ச்சியைத் தூண்டி பெண்களின் அண்ட விடுபடல் மற்றும் ஆண்களின் விந்து உற்பத்தியையும் தூண்டுகிறது. மேலும், ஒரு முதிர்ந்த முட்டை வெளியீட்டில் இது அண்டவிடுப்பினைத் தூண்டுகிறது.
பெண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை
==========================================
பெண்கள் இனப்பெருக்க மண்டலம் உள், வெளி (பிறப்புறுப்பு) இனப்பெருக்க உறுப்புகள் என இருவகைப்படும். பெண்கள் புற இனப்பெருக்க உறுப்பு (பிறப்புறுப்பு) கூட்டாக பெண்ணின் கருவாய் என அழைக்கப்படுகிறது. பெண்ணின் கருவாய், மேல் உதடு, சிறிய உதடு, பெண்குறிமூலம், யோனி, சிறுநீர்வடிகுழாயின் தொடக்கம் ஆகியவை அடங்கும். பிறப்புறுப்பைத்தூண்டல் பாலுணர்வின் அங்கமாகும். மகளிர் பிறப்புறுப்பு நபருக்கு நபர் அளவு, வடிவம், நிறம் ஆகியனவற்றில் மாறுபடுகின்றன.
புற பெண் உடற்கூறியல்
*********************************
பெண்குறி மூலம்
மேலுதடு
பெண்குறிக் காம்பு
பார்த்தோலின் சுரப்பி
புணர் புழை (யோனி)
யோனி முகம் அல்லது வெளி இதழ்
.
உள் பெண் உடற்கூறியல்
***********************************
சூலகம்
கருப்பை
கருப்பை வாய் (செர்விக்ஸ்)
பாலோப்பியன் குழாய்
இனச்சேர்க்கைத் தடம்
ஆண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை
=========================================
ஆண் இனப்பெருக்க உறுப்பு உள்/வெளி என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. பெண் மாதவிடாய் சுழற்சி போலல்லாமல், ஆண் இனப்பெருக்கச் சுழற்சியில் அவர்களின் விந்துசுரப்பி தொடர்ந்து தினமும் மில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது.
புற ஆண் உடற்கூறியல்
********************************
ஆண்குறி
லிங்கம்
விந்தகப்பை
முகதுவாரம்
அண்டை சுரப்பி
தண்டுப்பகுதி
உள் ஆண் உடற்கூறியல்
**********************************
விதைமேற்றிணிவு (எபிடெடிமிஸ்)
துணை சுரப்பிகள் (வாஸ் டெஃபெரன்ஸ்)
விந்து சேகரிப்புப்பை (அக்செசரி சுரப்பி)
விந்துகூழ்ச் சுரப்பி (புராஸ்டேட் சுரப்பி)
சிறுநீர்க்குழாய் மொட்டு சுரப்பிகள் (பல்போயுரித்ரல் சுரப்பி)
பாலியல் பிரச்சினைகள்
=====================
ஆண்மைக்குறைவு
விரைப்புத்திறன்
விந்தணுக்கள் குறைவு
விருப்பமின்மை
பாலியல் விழிப்புணர்வின்மை
பாலியல் வழிக் கோளாறுகள்
பாலியல் அடிமையாதல்
பாலுறவு வலி
நீண்ட விறைப்புத்தன்மை
பிறப்புறுப்பு வலி
நாம் மிக முக்கியமான கட்டத்திற்கு வந்திருக்கிறோம். இந்த உலகத்தில் இருக்கக்கூடிய சாதாரண ஓருயிர் இனத்திலிருந்து ஆறறிவு படைத்த மனிதன் வரையிலும் இனப்பெருக்கம் என்பது எப்பொழுதுமே ஒரு சுழற்சிக்கு உட்பட்டது.
ஒரு ஆணும் பெண்ணும் முழுமையாகக்கூடி இனப்பெருக்கம் என்று சொல்லக்கூடிய, குடும்ப அமைப்பில் நிகழக்கூடிய, செயலை செய்கின்றனர்.
இந்த இனப்பெருக்க மண்டலம் என்பது மனிதனுடைய உடலில் முத்தாய்ப்பாய் இருக்கக்கூடிய அற்புதமான மண்டலம் என்று நாம் சொல்லலாம்.
நீண்ட ஆயுளை விரும்புகிறவன் பதினாறு வயதுக்கு முன்பும், எழுபது வயதுக்கு பின்பும் பெண்களை புணரக்கூடாது. இளமை வயதில் வளமையில்லாத விந்தினை இரைப்பதில் கேடுண்டு. அதேபோல் முதுமையில் வறண்டுபோன விந்தினை இரைப்பதில் மிக்கக்கேடுண்டு என்று சித்தர்கள் சொல்லிய பதார்த்தகுண சிந்தாமணியில் புணர்ச்சி குறித்த வரிகள் உண்டு.
அதாவது நல்ல ஆயுளை விரும்புகிறவன் பதினாறு வயதுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் உடலுறவில் ஈடுபடுவது தவறானது, அதனால் ஏற்படக்கூடிய உடல் விளைவுகள் பல்வேறு வகைகளில் அந்த உடலை அழிக்கக்கூடியதாக இருக்கும் என்று சித்தர்கள் சொல்கிறார்கள். அதேபோல் ஒரு ஆண் எழுபது வயதுக்கு பின்பு பெண்களுடன் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்று சொல்வார்கள்.
இந்த மனித தேகத்தில் சுக்கிலம் எனப்படும் விந்து மிகவும் அருமையானது. சுக்கிலம் என்பது ஒரு ஆணுக்கு உண்டாகக்கூடிய விந்து. ஒருவருடைய முகப்பொலிவு போன்றவற்றை நிர்ணயிப்பதும் இந்த சுக்கிலம்தான்.
“விந்துவிட்டான் நொந்துகெட்டான்”
என்று தமிழில் ஒரு பழமொழியை சொல்வோம். அதுபோலவே ஈஸ்வர வருசம் பிறப்பதேன் தாது போயின் சாவதேன் என்றும் ஒரு பழமொழி உண்டு. ஈஸ்வரவருடத்திற்கு பின்பு தமிழில் வரக்கூடிய வருடத்தின் பெயர் தாது.
தாது ஒரு மனிதனுக்கு போய்விட்டது என்றால் ஈஸ்வரனிடம் சென்று சேரவேண்டும் என்பதை இந்த ஈஸ்வர வருடத்தையும் தாது வருடத்தையும் வைத்து நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதிலிருந்து விந்து என்பது மிகச்சிறந்த ஒரு உயிர்ப்பொருள். அதை வீணாக்கக்கூடாது, விரயம் பண்ணக்கூடாது என்பது தெரிகின்றது.
சமூக சுழற்சிக்கு, பரிணாம சுழற்சிக்கு தன்னுடைய வித்துக்களை இந்த உலகத்திற்கு பரிசாகக் கொடுத்து இந்த உலகத்தை மேன்மையடைய, சமூகத்தை மேன்மையடைய செய்யக்கூடிய ஒரு அற்புதமான பொருள் ஒரு ஆணின் விந்து ஆகும்.
அந்த விந்தை ஒவ்வொரு ஆணும் திருமணத்திற்கு முன்பு பேணிப் பாதுகாக்கவேண்டும். அந்த விந்து என்பது மட்டுமே ஒரு ஆணுக்கு நல்ல முகப்பொலிவைக் கொடுக்கும், காந்த சக்தியைக் கொடுக்கும், வசீகரத்தன்மையைக் கொடுக்கும், ஜனவசியத்தைக் உண்டாக்கும்.
எந்த ஒரு ஆண் விந்து வளமையோடு இருக்கிறானோ அவனால் மட்டுமே யாராலும் செய்யமுடியாத காரியங்களைக்கூட செய்யமுடியும், நிர்வகிக்க முடியும், நிர்வாகத் திறனை மேம்படுத்த முடியும்.
“நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும்”
என்று நாம் சொல்லுவோம். அதே மாதிரி விந்துவில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் ஒரு மனிதன் அந்தந்த வயதிற்கேற்ற கவர்ச்சியுடனும், காந்தத்துடனும், ஈர்ப்புடனும் நல்ல வசீகரத்துடன் இருப்பான்.
அந்த விந்துவின் வளம் குறைகிற பொழுது ஒரு மனிதனுடைய கண்கள் உள்வாங்கி கன்னம்; குழிவிழுந்து முகம் கலையிழந்து இருபது வயதில் கூட முப்பது வயது இளைஞன் போல் தெரியக்கூடிய ஒரு தன்மை வரும். ஆக இந்த விந்தை போசிப்பது இனப்பெருக்க மண்டலத்தைப் போசிப்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம் இது ஆண்களுக்கு பொருந்தும்.
அதே மாதிரி பெண்கள், பெண்களுக்கு உண்டாவதை நாதம் என்று சொல்லுவோம். விந்தும், நாதமும் ஒன்றிணைகிற பொழுது அந்த கலவியில் விந்தும் நாதமும் ஒன்றாய் சேரக்கூடிய அந்த நேரத்தில்தான் ஒரு மிகச்சிறந்த குழந்தை என்பது உருவாகும்.
சித்தர்கள் எழுதிய "பதார்த்த குண சிந்தாமணி" என்ற நூலில் ஒரு வளமையான குழந்தை எப்பொழுது பிறக்கும் என்றால் ஒரு ஆணும் பெண்ணும் சேருகிற பொழுது வெளிப்படும் பரிசுத்தமான விந்தும், சுத்தமான நாதமும் சேர்ந்து உருவாகக்கூடிய அந்த சிசுவானது வளமையாகவும், பொலிவாகவும், சமூகத்தில் பொறுப்புள்ளதாகவும் திகழும் என்று அந்தப் பாடலில் சித்தர்கள் சொல்வார்கள்.
இன்றைக்கு குறைபாடுகளோடு குழந்தைகள் பிறக்கிறது என்றால் அதற்குக் காரணம் ஆணும் பெண்ணும்தானே தவிர மரபைக் குறை சொல்லி தப்பிக்க இயலாது. சிலர் நெருங்கிய உறவில் திருமணம் செய்ததால்தான் இந்தக் குழந்தை ஊனமாகப் பிறந்தது என்று சொல்வார்கள். அவ்வாறு இல்லை, அப்படிப் பார்த்தால் நெருங்கிய சொந்தத்தில் பல லட்சம் திருமணங்கள் நடக்கிறது. குழந்தைகள் நன்றாக ஆரோக்கியமாகவே பிறக்கின்றன.
ஒரு சிலருக்கு மட்டும் ஏன் குழந்தை ஊனமாகப் பிறக்கிறது என்று பார்க்கும் பொழுது சில நேரங்களில் அந்த ஆணின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் மிகக்குறைவாக இருந்திருக்கலாம், தகுதியில்லாத உயிரணுவும் – தகுதியில்லாத நாதமும் ஒன்று சேருகிற பொழுது உடல் தகுதியில்லாத குழந்தைகள் பிறப்பது இயல்பான விசயமாக இருக்கும்.
ஒரு ஆண் விந்தை வளப்படுத்த வேண்டும், ஒரு பெண் நாதத்தை வளப்படுத்த வேண்டும். அந்த மாதிரி வளப்படுத்துகிற பொழுதுதான் சமூக மேன்மைக்கு உரிய வகையில் மிகச்சிறந்த குழந்தைகளை உருவாக்க இயலும். விந்து ஒரு ஆண்மகனுக்கு மிகச்சிறந்த உன்னதமான பொக்கிசம். அந்த விந்தில் ஏதாவது குறை இருந்தது என்றால் அதற்கும் சித்தர்கள் ஒரு பாடலை சொல்லியிருக்கிறார்கள்.
கானடா தாதுகெட்டால் மனிதனல்ல
காரிகையர் தங்களுக்கு புருசனல்ல
வீனடா தாதுகெட்டால் தேகம் போச்சு
வெறுவாயை மெல்லாதே மின்னாராசை
பூனடா வென்றாலும் பூனப்போமோ
புத்தியினால் தாதுவகை அறிந்து நீயும்
தானடா தாமகி உண்டாகத்தான்
தன்மையுடன் அவ்வகையை தகவாய் பாரேன்
விந்து கெட்டால் தேகம் போச்சு என்பதை வலியுறுத்தும் பாடலிது.
இன்றைய இளைஞர்கள் கண் போன போக்கில், கால் போன போக்கில் மது, புகை, போதைக்கு அடிமையாகி அளவில்லாத சொத்தாக பொக்கிசமாக இருக்கக்கூடிய விந்தை வீணடிக்கக்கூடிய செயல்களில் இறங்குகிறார்கள். அவர்களுக்கு விந்தின் மகிமை என்பது புரியவில்லை. இனியாவது இதைப்படித்தாவது புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.
அன்றாட வாழ்வின் ஒழுக்க நியதிகளைச் சித்தர்கள் வரையறுத்துள்ளனர். நமது தினசரி வாழ்வியல் நெறிமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது “பதார்த்த குண சிந்தாமணி” என்ற பழம்பெரும் நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
“திண்னமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்
பெண்ணின்பால் ஒன்றை பெருக்காமல் - உண்ணுங்கால்
நீர்சுருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம்
பேருரைக்கில் போமே பிணி”
இது தேரையர் என்ற சித்தர் எழுதிய பாடல். மலம், சிறுநீர் போன்ற உபாதைகளை அடக்காமல், அவ்வப்போது கழித்துவிட வேண்டும். பெண்களிடம் புணர்ச்சியில் மிகுதியாக ஈடுபட்டு உயிர்த்துளி எனப்படும் விந்தை வீணாக்கக் கூடாது. நீரைக் காய்ச்சியே பருக வேண்டும். தினசரி ஆகாரத்தில் ,நெய்யைச் சேர்த்து, நிறைய மோர் குடிக்க வேண்டும். இப்படிப்பட்ட வாழ்வியல் நெறிமுறைகளோடு வாழ்பவரின் பெயரைச் சொன்னாலே நோய்கள் நீங்கிவிடும் என்பதுதான் மேற்கண்ட பாடலின் கருத்து.
இவை தவிர , மேலும் பல விஷயங்களைச் சித்தர்கள் தங்கள் பாடல்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆணும், பெண்ணும் உடலில் மறைப்புகள் இல்லாத நிலையில், ஆசை, அன்பு, அரவணைப்பு, அதற்குப் பிறகு உடலுறவு என்று நிகழ்ந்தால் அப்படி உருவாகும் கருவானது, தாய், தந்தைக்கு உரிய சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்”
என்பது சித்தர் மொழி. இந்த உலகில் உள்ளது தான் நம் உடலிலும் இருக்கிறது. நம்முடைய உடலில் உள்ளது தான் இந்த உலகிலும் இருக்கிறது என்று அர்த்தம்.
எனவே, உடலுக்கு ஏதாவது கேடு ஏற்பட்டால், உலகில் காணும் தாவர வர்க்கங்களை, ஜீவ வர்க்கங்களை மருந்தாக்கித் தேகம் நிலைக்கச் செய்ய வேண்டும் என்பது சித்தர்களின் வாக்காகும்.
பல கோடி ஆண்டுகளாக இந்த உலகமும், மனித வர்க்கமும் இருந்து வருகின்றன. மனித வாழ்க்கை என்பது சமூகப் பரிணாம வளர்ச்சிக்காக, இறைவன் தந்த படிப்பினை. எனவே, பிறந்த மனிதன், வளர்ந்து, வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு மடிவதற்காகவா?
நோயால் இடையில் மடிவதை, அதாவது இலக்கு அடையும் முன் மடிவதை இறைவன் விரும்பமாட்டான்.
இந்த உலகில் மனிதன் தோன்றியதன் நோக்கத்தைச் சாதிக்கும் பொருட்டு, நம் உடலுக்குச் சக்தி தேவை. அத்தகைய உயிர்ச்சக்தியை வளப்படுத்திக்கொள்ள சித்தர்கள் அருளிய மூலிகைகள், யோகங்கள் நமக்கு உதவுகின்றன.
எனவே, இறைவன் நமக்கு அளித்த அரிய வரம், இந்த உடல், நல்ல பழக்க வழக்கங்களால் இந்த உடலை இந்த உலகில் நிலைநிறுத்தி, காரியமாற்றி, நாம் எதற்காக இவ்வுலகிற்கு வந்தோம் என்பதனை அறிந்து சரியான இலக்கை அடைவோம் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன்.

No comments:
Post a Comment