Saturday 12 March 2016

அசல் தேன் எது? கலப்பட தேன் எது?

                        
                                அசல் தேன் எது? கலப்பட தேன் எது?


அசல் தேன் எது? கலப்பட தேன் எது? என்பதை எளிமையான முறையில் கண்டறியலாம்.

1) ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விடுங்கள், அந்த தேனை,
தேன் ஊற்ற‍ப்பட்ட‍ காகிதம் உறிஞ்சாம லும் மேற்கொண்டு அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம்.

ஒரு வேளை, அந்த காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்ல‍து பரவ விட்டாலோ அந்த தேன் கலப்படத் தேன் என்பதை அறியலாம்

2) ஒரு டம்ளர் நிறைய‌ தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒருதுளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன், தண்ணீரோடு கரையாம ல் நேராக கீழே சென்று விழுந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம்.

ஒருவேளை அந்த ஒரு துளி தேன் தண்ணீரோடு கலந்துவிட்டால், அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.

3) ஒரு தீக்குச்சியின் மருந்து பகுதியில் ஒரு துளி தேனை விட்டு, அந்த தீக்குச்சியை, தீப்பெட்டியின் பக்க‍ வாட்டில் உள்ள‍ மருந்து பட்டையில் உரசுங்கள், உடனே தீப்ப‍ற்றி எறிந்தால், அது அசல்தேன் என்பதை அறியலாம்.

ஒருவேளை அந்த தீக்குச்சி எறியாமல் போனால் அது கலப்படம் தேன் என்பதை அறியலாம்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...