உங்களது தொழில் எந்த (உற்பத்தி, சேவை , வர்த்தகம் அல்லது ஏற்றுமதி மற்றும்
இறக்குமதி) ரீதியாக இருந்தாலும் தாங்கள் அதன் சம்பந்தமான அறிக்கையை தமிழக
அரசிடம் சமர்ப்பித்து டின் நம்பரை கண்டிப்பாக வாங்க வேண்டும்.
இதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, “வணிகவரித்துறை” அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
உங்களது தொழிலை வேறு ஒரு மாநிலத்தில் தொடங்குவதாக இருந்தால், தாங்கள் அந்த மாநிலத்திடமிருந்தே டின் நம்பரை பெறவேண்டும்.
தங்களது தொழிலானது நமது மாநிலத்தைத் தாண்டி, வேறு மாநிலத்திலும் நடைபெறுகிறது என்றால், அதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்து, மத்திய விற்பனை வரி எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த எண் மொத்தம் 11 இலக்கங்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறியீடு உள்ளது.
இந்த எண்ணானது, மதிப்புக் கூட்டு வரி விதிப்பு (Value added tax) எனப்படும் வாட் கணக்கோடு தொடர்புடையதாகும். இந்த எண்ணைப் பெற்று தொழில் நடத்தும் ஒருவர், முறையாக அரசுக்கு வரியை செலுத்திவிட்டுத்தான் தொழில் செய்றார்! என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த எண்ணைப் பெறுவதற்காக Form-F, Form-A விண்ணப்பிக்கும் போது, அதனுடன்
1. தொழில் செய்பவரது புகைப்படம் 2
2. குடும்ப அட்டை நகல்
3. பான் கார்டு நகல்
4. சொத்து தொடர்பான ஆவணங்கள் நகல்
5. வாடகை ஒப்பந்த பத்திரத்தின் நகல்
6. செய்யும் தொழிலுக்கு ஏற்ப வங்கி வரைவோலை (Demand Draft)
இது வணிக வரித்துறையின் பெயருக்கு எடுக்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருக்கும் இருவரது பரிந்துரை கடிதத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
ஆவணங்களை சரிபார்த்தபின் விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு வணிகவரித்துறையில் இருந்து, சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.
இந்த டின் நம்பரை வைத்து ஒருவர், பல தொழில்களை தொடங்கிக் கொள்ளலாம். ஆனால் எந்த ஒரு தொழிலை தொடங்கினாலும் வணிகவரித்துறை அலுவலகத்தில் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டு தொடங்க வேண்டும்.
யார் பெயரில் டின் நம்பர் பெறப்பட்டுள்ளதோ, அவர் பெயரில்தான் தொழில்களை தொடங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment