கம்யூட்டா் அதிகம் பயன்படுத்துவோா் கவனத்திற்கு
20 நிமிடம் தொடர்ந்து கம்யூட்டரை பார்க்கும் நீங்கள் கண்ணை வேறுப்பக்கம் திருப்பி 20 அடி தூரத்தில் உள்ள வேறு ஒரு பொருளைப் 20 நொடி (அரை நிமிடம்) பாருங்கள். அல்லது கம்ப்யூட்டரைப் பார்க்காமல் 30 நொடி அமைதியாய் இருங்கள். மீண்டும் கம்ப்யூட்டரைப் பாருங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிட நேரம் எழுந்து சற்று தூரம் நடந்து பின் மீண்டும் அமர்ந்து வேலை செய்யுங்கள். தொடர்ந்து பலமணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது பல நோய்களை உருவாக்கும்.
பப்பாளி, மாதுளை, வாழைப்பழம், காலிப்பிளவர், பொன்னாங்கன்னி கீரை, மீன் இவற்றைத் தவறாது சாப்பிடுங்கள். ஆட்டுக்கறி அளவோடு வாரம் ஒருமுறை சாப்பிடுங்கள் கோழிகறி அறவே சாப்பிடாதீர்கள்.
மோரில் ஊறவைத்த வெள்ளறிப்பிஞ்சு தினம் சாப்பிடுங்கள்.
சோற்றுக்கற்றாழை சோற்றை எடுத்து அதை ஏழுமுறை அலசி, அதனுடன் தேன் சேர்த்து வாரம் மூன்றுமுறை சாப்பிடுங்கள்.
இவற்றைச் செய்தால் கண் கெடாது; மூல நோய் வராது. உடல் நலம் காப்பாற்றப்படும்.
ஒருநாளைக்கு 7மணி நேரம் கட்டாயம் உறங்க வேண்டும். எண்ணெய்த் தேக்கும் பழக்கம் இருப்பின் வாரம் ஒருமுறை விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தலைக்குத் தேய்த்து சிகைக்காய்தூள் தேய்த்து குளியுங்கள்!
உங்கள் உடல் நல்ம் காப்பாற்றப்படும்!
No comments:
Post a Comment