Thursday, 10 March 2016

நீதிமன்றம் மூலம் பிறப்பு ,இறப்பு சான்றிதழ் வாங்க வழிமுறை

நீதிமன்றம் மூலம் பிறப்பு ,இறப்பு சான்றிதழ் வாங்க வழிமுறை
Mohandass Samuel's photo. 



நீதிமன்றம் மூலம் பிறப்பு ,இறப்பு சான்றிதழ் வாங்க வழிமுறை
பிறப்பு இறப்பை பொறுத்த வரை ஓராண்டு கழிந்த பின்பு நீதிமன்ற உத்திரவு இல்லாமல் பிறப்பு-இறப்பு பதிவாளரால் பதிவு செய்ய இயலாது
பிறப்பு-இறப்பு எங்கு நடைபெற்றதோ அந்த பகுதியின் அதிகார வரம்பு கொண்ட காவல் நிலைய தொடருடைய குற்றவியல் நீதி துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும்
தேவைப்படும் ஆவணங்கள்
1. பிறப்பு-இறப்பு பதிவு இல்லாமைக்கு சான்று
2. பிறப்பு-இறப்புக்கு ஆதாரம்
பிறப்பு எனில் பிறந்த தேதி அடங்கிய ஆவணம் பள்ளி எகா மாற்று சான்றிதழ் மதிப்பென் சான்றிதழ் எதாவது
இறப்பு எனில் கிராம நிர்வாக அலுவலர் சான்று
3. காலதாமத கட்டணம் செலுத்தியமைக்கு கருவூல செலுத்து சீட்டு (சலான்)
மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் மனு கோப்பிற்க்கு எடுக்கப்பட்டு பிறப்பு-இறப்பு பதிவாளருக்கு அழைப்பானை அனுப்புவார்கள்
நாளிதழில் பொது அறிவிப்பு விளம்பரம் செய்ய நீதிமன்றம் உத்திரவு செய்யும்
மனுதாரர் மற்றும் மனுதாரர் தரப்பு சாட்சிகள் விசாரனை செய்த பிறகு பிறப்பு-இறப்பு பதிவு செய்ய பிறப்பு-இறப்பு பதிவாளருக்கு நீதிமன்றம் உத்திரவு செய்யும்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...