வேர்ச்சொற்கள்
1,வேட்டு=வேள்வி;விரும்பி;விருப்பம்;வேட்டுவர் குடி
வேட்டு என்ற வேர்ச்சொல்லில் இருந்து வேட்டுவர் என்ற சொல் உருவானது .போரை விரும்பி (போர் வேட்டு ) செய்தவர்களை வேட்டுவர் என்று அழைக்க பட்டது .தொல்காப்பியர் இவர்களை வேட்டுவ குடியினர் என்று அழைத்தார் .சங்க காலத்தில் வேட்டுவ குடியினரை நாண்(வில்லில் இருக்கும் கயிறு ) உடை மாக்கள் ,வேள் மாக்கள்,வேந்து மாக்கள் அழைக்க பட்டனர் .
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு ஆங்கு - பெரும் 43
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு - பெரும் 449
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட - முல் 26
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு/வேறு பல் பூளையொடு உழிஞை சூடி - பட் 234,235
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு - நற் 111/5
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து - நற் 165/4
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர் - நற் 205/2
கொடும் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த - நற் 211/3
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் - நற் 252/10
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு/கடும் சூல் வயவொடு கானல் எய்தாது - நற் 263/4,5
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு/வயவர் மகளிர் என்றி ஆயின் - நற் 276/2,3
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட - நற் 285/6
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு - நற் 332/2
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி - குறு 154/3
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் - குறு 178/3
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி - பரி 5/41
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி - கலி 93/16
தொல்_வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல் - கலி 118/3
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை - அகம் 3/5
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை - அகம் 144/14
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர் - அகம் 157/4
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் - அகம் 187/22
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு/எயிறு தீ பிறப்ப திருகி - அகம் 217/18,19
இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த - அகம் 238/4
நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த - அகம் 249/15
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த - அகம் 276/1
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை - அகம் 285/11
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு - அகம் 361/12
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ - அகம் 387/9
வயவு_உறு மகளிர் வேட்டு உணின் அல்லது - புறம் 20/14
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு - புறம் 52/4
வழு இன்று எய்தியும் அமையாய் செரு வேட்டு/இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி - புறம் 99/8,9
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து - புறம் 190/8
கடும் தெறல் செம் தீ வேட்டு/புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே புறம் 251/6,7
மண் நாண புகழ் வேட்டு/நீர் நாண நெய் வழங்கி - புறம் 384/15,16
வேட்டும் (1)
எண் நாண பல வேட்டும்/மண் நாண புகழ் பரப்பியும் - புறம் 166/22,23
2,வேட்டம்=வேட்டை
வேட்டம்(வேட்டை ) என்ற சொல் வேட்டை தொழிலை குறிக்கும் சொல் .
வேட்டம் என்ற வேர் சொல்லில் இருந்து வேட ,வேடர் ,வேடுவர் போன்ற சொற்கள் பிறந்தது .
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு - பொரு 142
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் - பெரும் 111
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து - நெடு 129
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாது - பட் 92
வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்ப - நற் 38/1
கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து - நற் 49/5
எமரும் வேட்டம் புக்கனர் அதனால் - நற் 67/9
மாயா வேட்டம் போகிய கணவன் - நற் 103/7
வேட்டம் வாயாது எமர் வாரலரே - நற் 215/12
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் - நற் 331/7
நடுநாள் வேட்டம் போகி வைகறை - நற் 388/5
வீ அகம் புலம்ப வேட்டம் போகிய - கலி 46/1
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என - அகம் 70/1
கோட்டு_மீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் - அகம் 170/11
வேட்டம் போகிய குறவன் காட்ட - அகம் 182/6
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த - அகம் 193/3
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி - அகம் 196/4
பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய - அகம் 282/1
விசைத்த வில்லர் வேட்டம் போகி - அகம் 284/9
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே - அகம் 388/26
அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர் - அகம் 389/13
நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர் - புறம் 31/5
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் - புறம் 152/6
வேட்டல்=வேள்வி
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் - பதி 24/6
கபிலை கண்ணிய வேள்வி நிலையும் - பொருள். புறத்:35/6
No comments:
Post a Comment