Wednesday, 11 August 2021

வேள் ஆய்வு

 வேள் ஆய்வு

    இறை (ஒரு குழு தலைவர் ),ஊராளி (ஒரு ஊரை ஆள்பவன் ), வேள்(குறு நில பரப்பை ஆள்பவன் ), வேந்து (பெரு நில பரப்பை ஆள்பவன் ) ஆகிய சொற்கள் வேட்டுவ குடியினரின் அரசியல் அதிகாரத்தின் ஏணிப்படிகள் ஆகும் .
கோ என்ற சொல் வேளிரையும் ,வேந்தரையும் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டது .கிழார் என்ற சொல் உரியவர் ,உரிமையுடையவர் என்ற பொருளில் பயன்படுத்த பட்டது .(மனை கிழத்தி -மனைக்கு உரியவள் ,காம கிழத்தி -காமத்துக்கு உரியவள் .கிழார் என்ற சொல் அரசியல் அதிகாரத்தின் தொடக்கம் கிடையாது ). அரசியல் அதிகாரத்தின் தொடக்கம் இறை (ஒரு குல தலைவன் ) நிலையில் இருந்து ஆரம்பிக்கிறது .ஊரையும் ,நாட்டையையும் உருவாக்குபவன் (ஆக்குதல் =மன்) மன்னன் என்றழைக்க பட்டான்.
சாளுக்கியரை ‘வேள் குலத்தார்’ என்றும், சாளுக்கிய நாட்டை ’வேள் புலம்’ என்றும் கி.பி. 11ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.(South Indian Inscriptions, Vol. V, no. 633; Vol. III, no. 160 ) .சாளுக்கியரை(தெலுங்கு வேள் ) ' நிஷாத ராஜன்'(வேட்டுவ மன்னன் ) பல்லவர் கால செப்பேடுகள் கூறுகிறது .
செங்கம் பகுதிகளை வேணாடு (வேள் +நாடு ) என்றழைக்க பட்டதை கல்வெட்டுகள் கூறுகிறது .இப்பகுதிகளை தமிழ் வேட்டுவ குடியினர் ஆண்டார்கள் என்பதை கல்வெட்டுகள் மற்றும் சங்க இலக்கியங்கள் (மலை படுகடாம்) உறுதி படுத்துகிறது .
செங்கோட்டை பகுதிகளை ஆண்ட ஆய் வேள் நாட்டை வேணாடு என்று அழைக்க பட்டது .ஆய் வேளை எயினர் (வேட்டுவர் ) என்றழைக்க பட்டத்தை வேள்வி குடி செப்பேடுகள் உறுதிப்படுத்துகிறது .
இருங்கோ வேள் ஊரில் வேட்டுவ குடியினர் வாழ்ந்தார்கள் என்று சங்க இலக்கியங்கள் கூறுகிறது .இருக்கு வேள் குடுமி வேட்டுவ குடியை சேர்ந்தவன் என்பதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .கிபி 11 ஆம் நூற்றாண்டுகளில் இருக்கு வேள் வம்சாவளியினரை நிஷாத ராஜன் (வேட்டுவ மன்னன் ) என்றழைக்க பட்டத்தை கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .
ஆதித்த சோழன் தெலுங்கு வேளுக்கு 'செம்பியன் தமிழவேள் என்னுங் குலப் பெயரும்' (S.I.I. III,no 221).என்ற பட்டத்தை கொடுத்தான் .
ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப் பெயர்
ஆவயின் வருஉம் கிழவரும் உளரே
(தொல்,அகம் 21 )
அருஞ்சொற்பொருள்:
ஆடுஉத் =ஆண் பால் பெயர் ;திணைப் பெயர் =குடிப்பெயர் ;ஆவயின்=முற்கூறிய ;வருஉம்=வரும் ;உளரே =இருக்கிறார்கள்
கிழவர்=உரியவர்
உரை :
ஆயர் குடியை சேர்ந்த ஆண் பெயர் ஆயர் .வேட்டுவ குடியை சேர்ந்த ஆண் பெயர் வேட்டுவர் .ஆயரிலும், வேட்டுவரிலும் உரியவர்கள்( ஆட்சிக்கு உரியவர்கள் (வேட்டுவர் ), முல்லை நிலத்துக்கு உரியவர்கள் (ஆயர் ) இருக்கிறார்கள்.
தொல்காப்பியத்தில் வேட்டுவ குடியினர் ஆட்சிக்கு உரியவர்களாக தொல்காப்பியர் கூறுகிறார்.
சங்க காலத்தில் வெளியன் (ஒளியன்) என்ற சொல் இயர்பெயர் . இச் சொல்லை புலவர்களும் ,வேளிர்களும் ,கூலிப்படை தலைவர்களும் இயர்பெய ராக வைத்து கொண்டார்கள் . ஆதன் (கிரேக்க சொல் ), கீரன் ,சாத்தன் ,அந்துவன் ,வெளியன்,அந்தை,கொற்றன் போன்ற பெயர்கள் சங்க கால மக்கள் இயர்பெய ராக வைத்து கொண்டார்கள்
வேள் ஆரம்பத்தில் வேட்டுவ குடிக்கு உரிய அரச பதவியாக இருந்தது.கால போக்கில் வேட்டுவ குடியை சேர்ந்த மன்னர்களின் அரசு அதிகாரிக்கு வேள் (வேளான்,வில்லவன் மூவேந்த வேளான்,மீனவன் மூவேந்த வேளான்,செம்பியன் மூவேந்த வேளான், மூவேந்த வேளான்) பட்ட பெயராக கொடுக்க பட்டத்தை கல்வெட்டுகள் கூறுகிறது .
எனவே, வேட்டுவ குலத்தவர்க்குரிய ‘வேள்’ அரசு பதவியுடன் தொடர்புடையதே தவிர, ஒளி,வேளாண்மை,விருந்தோம்பல் ,கொடை,உதவி,வேளாண் என்ற கருத்தோட்டத்துடன் தொடர்புடையதன்று.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...